வெள்ளி, 14 டிசம்பர், 2018

பசு + பணமதிப்பிழப்பு = வெற்றிகரமான தோல்வி!

தோல்வி என்பதன் அர்த்தம், தோல்வி மட்டுமே. வெற்றிகரமான தோல்வி, மதிப்பிற்குரிய தோல்வி, கவுரவமான தோல்வி, தோல்வி மாதிரியே இல்லாத தோல்வி என்றெல்லாம் டிசைன் டிசைனாகக் கூறி மனதை ஆறுதல் / திடப்படுத்திக் கொள்ளலாமே தவிர்த்து... தோல்வி என்பதன் அர்த்தம், தோல்வி மட்டுமே.

வியாழன், 6 டிசம்பர், 2018

மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன் - 5.0

‘‘இப்ப என்ன பண்றது டாடி? இவன் இந்த 2048ல இருந்து தப்பிக்கவே முடியாதா...? இவனை இங்க இருந்து எப்படியாவது அனுப்பிடணும்...’’

‘‘இங்க இருந்து அனுப்பறதா...?’’ சில வினாடி மவுனத்துக்குப் பிறகு டாக்டர் சி பேசினார்... ‘‘அவனுக்கும் பிரச்னை இல்லாம, நமக்கும் தொந்தரவு வராம இருக்கணும்னா... ஒரே ஒரு வழிதான் இருக்கு எல்...’’

‘‘என்ன அது?’’

‘‘அவன் கதையை முடிச்சிடலாம்!’’


(தொடரின் முதல் பாகத்தை படிக்க: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 1)

(தொடரின் இரண்டாம் பாகத்தை படிக்க: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 2)

(தொடரின் மூன்றாம் பாகத்தை படிக்க: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 3.0)





ஞாயிறு, 2 டிசம்பர், 2018

மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன் - 4.0

‘‘டைம் மெஷின் மூலமா, திரும்பவும் நீ 201க்கு போகணும். உன் கூட எல் வருவா. மாறவர்மபாண்டியனோட பயோ கிளாக் ஓலைச்சுவடியை எடுத்துகிட்டு திரும்பிடுங்க. வர்ற வழியில உன்னை 2018ல பத்திரமா இறக்கி விட்டுட்டு, எல் இங்க 2048க்கு வந்திடுவா. இதுக்கு ஓ.கே.ன்னா உனக்கு உதவி பண்றோம். இல்லைனா...’’

‘‘இல்லைனா...?’’

‘‘உன்னோட மூளையை ப்ளு ரெய்ஸ் மூலமா லேட்டஸ்ட் வர்ஷனுக்கு அப்டேட் பண்ணி விட்டுருவோம். நீ 2018யை மறந்துட்டு, இந்த 2048ல் திரிய வேண்டியதுதான்...’’

(தொடரின் முதல் பாகத்தை படிக்க: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 1)

(தொடரின் இரண்டாம் பாகத்தை படிக்க: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 2)

(தொடரின் மூன்றாம் பாகத்தை படிக்க: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 3.0)


திங்கள், 26 நவம்பர், 2018

மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன் - 3.0

(குங்குமம் வார இதழில் கடந்த 2017 தீபாவளி நேரத்திலும், நமது http://poonaikutti.blogspot.com வலைத்தளத்தில் இந்த 2018 தீபாவளி நேரத்திலும் இரு வார தொடராக வெளியாகி ‘டபுள் ஷாட்’ அதிர்வுகளை (!!??) ஏற்படுத்தியது ‘மாறவர்மபாண்டியன்’ இரு வார சிறுகதை. படித்த நண்பர்கள் பலர் அன்பாகவும், சிலர் ரிக்வஸ்ட் அனுப்பியும், இன்னும் சிலர் கொலை மிரட்டல் விடுத்தும் கதையை மேலும் தொடர வற்புறுத்தியதால்... (வேறுவழியேயின்றி!!!) மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன் - 3.0 - இன்னும் கூடுதல் பிரமாண்டமாக இங்கே...)

(தொடரின் முதல் பாகத்தை படிக்க: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 1)

(தொடரின் இரண்டாம் பாகத்தை படிக்க: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 2)

செவ்வாய், 6 நவம்பர், 2018

மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 2

 ‘‘ஜஸ்ட் அரைமணிநேரத் தூரம் டைகர். கி.பி 201க்கு போகணும்!’’
 எனக்கு மாஸிவ் ஹார்ட் அட்டாக் வருவதற்கான அறிகுறிகள் போல முகம் வியர்த்து, தோள்பட்டைகளில் வலி பரவியது.

 ஒரு கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த தண்ணீர் எடுத்துக் கொடுத்தார். குடித்தேன். வலி சற்றுக் குறைந்தார்போல இருந்தது.

(தொடரின் முதல் பாகத்தை படிக்க: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 1)

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 1

கால இயந்திரம் என்று சொல்வார்களே... டைம் மெஷின்; அதெல்லாம் உண்மையாக இருக்கும் என நான் கற்பனையில் கூட நினைத்ததில்லை - கடந்த வினாடி வரை! ஓரிரண்டு ஆங்கில சினிமாக்களில் பார்த்து ரசித்ததுடன் சரி. ஆனால் கால இயந்திரம் என்பதும் நிஜமே என உணர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்றால் நம்புவீர்களா...?

சனி, 6 அக்டோபர், 2018

இப்பாலே வா... சாத்தானே!

‘‘அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம். அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது....’’ - திருக்குர்ஆன், சூரத்துல் அன்ஆம் (ஆறாவது) அத்தியாயத்தின் 108வது வசனம் இப்படி உபதேசிக்கிறது. நாலுமாவடி மோகன் சி லாசரஸ் உள்ளிட்ட, இன்றைக்கு மத போதகம் செய்கிற அத்தனை பிரசங்கிகளுக்கும் இந்த வசனத்தில் இருக்கிறது அடிப்படை பாடம்.

சனி, 18 ஆகஸ்ட், 2018

இடுக்கி: 750 மெகாவாட்...

ருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுவது, தண்ணீர் தர மறுப்பது, நதிகள் இணைப்புக்கு திட்டவட்டமான மறுப்பு என்று கடவுளின் தேசத்தின் மீது சில - பல மனக்கசப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும்... மழை வௌ்ளத்தில் தத்தளிக்கிற இந்த இக்கட்டான தருணத்தில் வேறெந்த மாநிலங்களை விடவும் தன்னார்வ உதவிகளை மிக, மிகவும் அதிகளவில் கேரளத்துக்கு தாமாக முன்வந்து வழங்கிக் கொண்டிருப்பது தமிழகம் என்பதை மறுக்கமுடியாது. இந்தச் சிறு தகவலுடன் இந்தக்  கட்டுரையை ஆரம்பிக்கலாம்.

புதன், 11 ஏப்ரல், 2018

ஐபிஎல் புறக்கணிப்பால் காவிரி பிரச்னை தீருமா?

‘‘ஐபிஎல் போட்டிகளை புறக்கணித்தால்...? காவிரியில் தண்ணீர் வந்து விடுமா? என்னடா இது காட்டுமிராண்டித்தனமான போராட்டம்?’’ என்று அறிவுத்திறன் அதிகம் வாய்க்கப் பெற்றவர்கள் முகநூல்களில் கேள்வி எழுப்புகிறார்கள். படித்தவர்கள் எழுப்புகிற கேள்வி இல்லையா...? கேட்பதற்கு நியாயம் போலவே இருக்கிறது. ‘‘தமிழர்கள் கிரிக்கெட் பார்க்காமல் இருந்தால் கர்நாடகாவுக்கோ, மத்திய அரசுக்கோ என்ன நஷ்டம்? நமது மகிழ்ச்சிதானே கெடுகிறது... இதெல்லாம் ஒரு போராட்டமா?’’ என்று கேவலமான எண்ணம் உள்ளுக்குள் தோன்றலாம். தோன்றினால்... உலக வரலாறு தெரியவில்லை என்றுதான் அர்த்தம். வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியுள்ள பல புரட்சிப் போராட்டங்களும், அவற்றின் விளைவாக, புறக்கணிக்கப்பட்ட மக்கள் பெற்ற உரிமைகளும் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். வரலாறு தெரியாத ஜடமாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றேதான் அர்த்தம்!

திங்கள், 9 ஏப்ரல், 2018

வழியனுப்புகிறோம் தோழர் அர்ஷியா!

துரையின் நிகழ்கால அடையாளங்களுள் ஒருவராகத் திகழ்ந்த எழுத்தாளர் அர்ஷியாவின் திடீர் மரணம், நான்மாடக்கூடல் வீதிகளை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 58 என்பது, அப்படியொன்றும் விடைபெற்றுச் செல்வதற்கான வயதல்ல. தவிர, அவரது செயல்பாடுகள், ஒரு நாளும் அவரது வயதைச் சார்ந்ததாக இருந்ததில்லை. கல்லூரி மாணவருக்குரிய ஆற்றலுடன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு இரங்கல் சொல்வதற்கான காலம் இத்தனை துரிதத்தில் வந்து சேரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

புதன், 21 பிப்ரவரி, 2018

காவிரி... கைவிரி...!

ர்நாடக நிலப்பரப்பில் சிறிதும், பெரிதுமாக ஓடிக் கொண்டிருக்கிற ஏராளமான நதிகளில், காவிரியும் ஒன்றாக இருக்கலாம். தமிழகத்தில் அப்படி அல்ல. தமிழகத்தைப் பொறுத்த வரை, நிலப்பரப்பின் மீது மட்டுமல்ல... மக்களின் உணர்வுப்பரப்பிற்குள்ளும் எந்த அணைத்தடுப்புகளுமின்றி அது ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் வாழ்க்கையோடும், ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான அவர்களது வரலாற்றோடும் பின்னிப் பிணைந்து பயணிக்கிற நதி அது. இனி, நீராலன்றி... மணலால் மட்டுமே அறியப்படுமோ பொன்னி வள நதி என போற்றப்படுகிற அந்த காவிரி மகாநதி?

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

சப்தபேதி பாண்

 ட்பு... மனித உயிர்களுக்கு மட்டுமானதல்ல. உலகில் பிறந்த அத்தனை உயிர்களுக்குமான பொது அம்சம். சாலையில் குறும்பு பண்ணித் திரிகிற நாய்க்குட்டிகள், கரைந்து வருகிற காகங்கள், கோழிகள் என அனைத்து உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் நட்பை நீங்கள் பார்க்கலாம். பிற உயிர்களிடத்தில் பிரச்னை இருக்குமா, இல்லையா என்று தெரியவில்லை. மனித உயிர்களிடத்தில் நட்பு என்கிற வார்த்தை நாள்தோறும் களங்கப்படுத்தப் பட்டுக் கொண்டிருப்பதை காணமுடியும். ‘கழுத்தறுத்திட்டான், காலை வாரிட்டான், முதுகுல குத்திட்டான், கூடவே இருந்து குழி பறிச்சிட்டான்....’ - நட்பின் துரோக முடிவுகளை அடையாளம் காட்டுகிற வார்த்தைகள் இவை.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...