திங்கள், 9 டிசம்பர், 2019

ஆனியனும், ஒரு கேக் துண்டும்!

ரித்திர சினிமாக்களில் நீங்கள் கண்டிருப்பதைப் போன்றதொரு பிரமாண்ட அரண்மனை அது. ஆரவாரமும், கூக்குரலும் அன்றுகாலை அதிகமிருப்பது அறிந்து, மன்னனும், மகாராணியும் அரண்மனை மாடத்துக்கு வந்து, அங்கிருந்து வெளியே கவனிக்கின்றனர். கீழே ஏராளமான மனிதர்கள். முகங்களில் பசியும், உடல்களில் வறுமையும் மிகுந்திருக்கிறது. ‘‘மன்னா... சாப்பிட்டு நாளாகிறது. பசி வாட்டுகிறது. எங்கள் குழந்தைகளுக்குக் கூட சரியான உணவு இல்லை. முதியவர்கள் பசி தாங்காமல் வீதிகளில் செத்து விழுகின்றனர். எங்கள் பசி தீர, ரொட்டித் துண்டுகளுக்கு வழி சொல்லுங்கள் மன்னா...’’ - மாடத்தில் தெரிந்த மன்னன் - மகாராணியின் முகங்களில் தீர்வை எதிர்பார்த்து, இடுங்கிய கண்களுடன் அந்த ஜனத்திரள் கூக்குரல் எழுப்புகிறது. அவர்களை நிதானித்து கவனித்தப் பின் மகாராணி இப்படிச் சொல்கிறாள்... ‘‘ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன...? கேக் சாப்பிடுங்கள்!’’.

வெள்ளி, 17 மே, 2019

கோட்சே: கொலையாளியா, தீவிரவாதியா?

நாதுராம் கோட்சே யார்? தீவிரவாதியா அல்லது வெறும் கொலையாளி தானா? இந்திய அரசியலில் ‘மய்யம்’ கொண்டு சுழல்கிற இந்தக் கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ளவேண்டுமானால், அதற்கு முன்பாக வேறு சில கேள்விகளுக்கான பதிலை நாம் அறிந்திருப்பது அவசியம். தீவிரவாதிக்கும், கொலையாளிக்கும் என்ன வித்தியாசம்? யார் ரொம்ப ஆபத்து? இந்தக் கேள்விகளுக்கான பதில்களின் வாயிலாக, நாதுராம் கோட்சேவுக்கு ‘தீவிரவாதி - கொலையாளி - இரண்டில் எந்தப் பட்டம் பொருத்தமாக இருக்கும் என்று நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

இது, டெல்லி கணக்கு!

ந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுங்க... அந்தக் கட்சிக்கு போடாதீங்க... என்று உங்களிடம் கருத்துத் திணிப்பு செய்வது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. பின்னே எதுக்காம் இது...? ஏப்ரல் 11 துவங்கி, மே 19 வரைக்கும் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடக்கிற மெகா தேர்தல் போட்டியில், சாம்பியன் டிராபி யாருக்கு? வாக்கு எண்ணிக்கை நடக்கிற மே 23ம் தேதி நண்பகலில், எந்தக் கட்சி அலுவலகங்களின் முன்பாக பட்டாசு சத்தமும், இனிப்பு வினியோகமும் இருக்கும்? இந்தக் கேள்விகளுக்கான விடை தேடி, கூடுமான அளவில், நடுநிலையான அல்லது நடுநிலைக்கு சற்று நெருக்கமான ஒரு அலசலே, இது. போலாம் ரைட்!

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...