ஞாயிறு, 29 ஜனவரி, 2017

டைம் மெஷின்... பயணம் போலாமா?

குறிஞ்சி நிலத்தில் துவங்கிய நமது திணை வழிப்பயணம் முல்லை கடந்து இப்போது மருதம் வந்தடைகிறது. ஒரு வகையில் பார்த்தால் இது டைம் மெஷின் எனப்படுகிற கால இயந்திர வழிப்பயணத்துக்கு ஒப்பானது. குறிஞ்சி என்பது ஆதம், ஏவாள் காலத்து ஆதி நிலம். எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத ஒரு வாழ்க்கையை மனிதனுக்கு அந்த நிலம் வழங்கியது. மனிதன் தன்னை மனிதனாக உணர்ந்தது முல்லை நிலத்தில். வாழ்க்கை வாழ சில சமரசங்கள் தேவை என்பதை முல்லை அவனுக்கு கற்றுக் கொடுத்தது. மருதம் இன்னும் நமக்கு நெருக்கமானது. கருப்பு வெள்ளையில் இருக்கிற பழைய குடும்பப் புகைப்படங்களை பார்க்கிற உணர்வு, இந்த நிலத்தைக் கடக்கையில் மனதுக்குள் வந்து போவதைத் தவிர்க்க முடியாது. நமக்கு நெருக்கமான ஒரு நிலத்தை நெருங்கியிருக்கிறோம். வாருங்கள்... சுங்கச்சாவடிகள் எதுவுமில்லை. சுதந்திரமாக உள் நுழையலாம்!

வெள்ளி, 27 ஜனவரி, 2017

பிதாவே... பீட்டாவை மன்னியும்!

‘போராட்டம்... போராட்டம்....’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தெருமுனையில் உரத்த குரலில் பெட்ரோல், டீசலுக்காக நடத்துகிற போராட்டமே... இந்த வாட்ஸ்அப் காலத்து இளைஞர்கள் பார்த்திருக்க சாத்தியமுள்ள மிகப் பெரிய போராட்டம். ‘இந்தி எதிர்ப்பு போராட்டத்துல கலந்துகிட்டவராம் எங்க தாத்தா...’ என்று சிலர் பழம் பெருமை பேசலாம். ‘அதெல்லாம் இன்னா போராட்டம். இந்தா புடி, செம்ம போராட்டம்....’ என்று ஜல்லிக்கட்டுக்காக மெரினா துவங்கி, திருச்சி மார்க்கமாக, மதுரையில் மையம் கொண்டு, கன்னியாகுமரி சன்ரைஸ் கடற்கரை வரைக்கும் சிறுவர் - சிறுமியர், மாணவர் - மாணவியர், இளைஞர் - இளைஞிகள், இல்லத்தரசிகள் - அரசர்கள், பெரியவர்கள்... அத்தனை பேரும் போராட்டம் நடத்தி ஹாலிவுட் ரேஞ்சுக்கு பிரம்ம்ம்ம்ம்ம்மாண்டமாக மிரட்டி, சாதித்து விட்டார்கள் (டிராஜடி கிளைமாக்ஸ் தான் சங்கடம்). சும்மா இருக்குமா ‘பூனைக்குட்டி’? ‘பேசும் படம்’ பகுதிக்காக, கிளம்பி விட்டது கேமரா வலம்.

ல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தேவாலயத்தின் முன் மண்டியிட்டு... மனதார வேண்டுகிறது (??!!) இந்த ‘கரும்புள்ளி - செம்புள்ளி’ காளை. இடம்: சாணார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.

வெள்ளி, 20 ஜனவரி, 2017

வினைகள் தீர்ப்பவர் யாரு?

ரண்டு காட்சிகளை இப்போது கற்பனை செய்து கொள்ளுங்கள்.
காட்சி 1:
‘முகூர்த்தத்துக்கு நேரமாச்சு. மண்டபத்துக்கு இப்ப கிளம்புனாத்தான் சரியா இருக்கும். கிளம்புங்க... கிளம்புங்க...’ என்று வீட்டில் இருக்கும் பெரிய மனிதர்கள் குரல் கொடுக்கிறார்கள். நண்பர்கள், உறவினர்கள் புடை சூழ, பட்டு வேட்டி சட்டை பளபளக்க, பலப்பல கனவுகளுடன்  மாப்பிள்ளை சார் மண்டபம் செல்வதற்காக வீட்டில் இருந்து காலெடுத்து வெளியே வைக்கிறார். ‘‘போடா.. உம்மூஞ்சில எம் பீச்சாங்கைய வெக்க! நீயெல்லாம் என்னத்த கிழிக்கப் போற? இனிமே உனக்கு ஏழரைதாண்டி...’’ - டாஸ்மாக் அரவணைப்பில் இருந்து இன்னும் விடுபடாத ‘குடிமகன்’ யாருடனோ செல்போனில் பேசியபடி போகிறார். இந்த வார்த்தைகளை கேட்டால்... மாப்பிள்ளை சாருக்கு மனதுக்கு எப்படி இருக்கும்?
காட்சி 2:
‘‘சபாஷ். வாழ்த்துகள். எல்லாமே நல்லபடியா இருக்கும்பா. உன் கஷ்டமெல்லாம் இனி ஐஸா கரைஞ்சி போகும்டா...’’ என்று செல்போனில் பேசியபடியே ஒருவர் கிராஸாகிறார். இந்த வார்த்தைகளை கேட்கும்போது மாப்பிள்ளை சாருக்கு எப்படி இருக்கும்?

வியாழன், 12 ஜனவரி, 2017

நானும்... ரவுடிதான்!

லையில் வசிப்பதை விடவும், மலையடிவாரத்தில் வசிப்பது இன்னும் சொகுசானது. நாகர்கோவில், கோயம்புத்தூர், தேனி மாவட்டத்து மக்களைக் கேட்டால், அடடா... அனுபவித்துச் சொல்லுவார்கள். காம்பவுண்டு சுவர் கட்டி வைத்தது போல மலைத்தொடர், அருவிகள், காட்டாறுகள், வீட்டு வாசலுக்கே தேடி வரும் கால்வாய் நீர், உறைக்காத வெயில், மென் குளிர்காற்று, டென்ஷன் போக்கி, மனதை இலகுவாக்குகிற வல்லமை கொண்ட பசும் புல்வெளிகள்... அடடா, அழகுதான் போங்க! சினிமா கேமராக்களுக்கு செம தீனி இங்கிருக்கிறது. குறிஞ்சி போல நடுக்குகிற குளிர் இல்லை. மிரட்டுகிற விலங்குகள் இல்லை. இயற்கை அழகு நிறைத்து பதுக்கி வைத்திருக்கிற முல்லை நிலப்பரப்புக்குள் இப்போது நாம் நுழையப் போகிறோம்.

வெள்ளி, 6 ஜனவரி, 2017

விரு விரு மாண்டி... விருமாண்டி!

ல்லிக்கட்டு கூடவே கூடாது என்று நாட்டின் வடபுலத்தில் இருந்து நிறைய, நிறைய குரல்கள் பெரும் பெரும் புள்ளிகளிடம் இருந்து வருகின்றன. காளைகளுக்காக கண்ணீர் வடிப்பவர்கள் எண்ணிக்கை ஒரே இரவில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இவர்களது திடீர் பாசம், அலங்காநல்லூர் பக்கம் மேய்ந்து கொண்டிருக்கிற பொலி காளைகளுக்கு தீராத விக்கலை ஏற்படுத்தியிருக்கலாம். எதனால் இந்தப் பாசம்? எலி ‘ஏதோ மாதிரி’ ஓடுகிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கும்தானே? இவர்களது காளைப் பாசத்துக்கு பின்னணியில் என்னதான் இருக்கிறது? ‘ஸார்... முல்லைத் திணை பற்றி பேசிகிட்டிருந்தோம். ஜல்லிக்கட்டுக்கு டிராக் மாறுதே...’ - கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான காமயக்கவுண்டன்பட்டியில் இருந்து வாசகி தொடர்பில் வந்தார். ‘‘ஜல்லிக்கட்டு என்று இன்றைக்கும், ஏறுதழுவுதல் என்று அன்றைக்கும் அழைக்கப்பட்ட இந்த வீர விளையாட்டு பிறந்து, வளர்ந்து, திசைகளெங்கும் புகழ் சேர்த்த இடம், இந்த முல்லை நிலப்பரப்பு சகோதரி. இன்றைக்கு சதியின் பிடியில் சிக்கி நிற்கிற அந்த முல்லை விளைச்சலை... இங்கு பேசாது மவுனித்துக் கடந்தால்... உலகம் வியக்கிற நம் முல்லை பண்பாடு பாலையாக திரிந்து விடாதா...?

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

நாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது


‘‘அடப்பாவிகளா... கொஞ்சமா கண்ணசந்த நேரமா பார்த்து, கோவணக் கொடி கட்டின மாதிரி, உங்கக் கட்சிக் கொடியக் கொண்டு வந்து கட்டிட்டீங்களேடா...? இன்னும் கொஞ்சம் அசந்திருந்தா... முதுகுல பெயிண்ட் அடிச்சி, உங்க சின்னத்தையும் வரைஞ்சு விட்டுட்டுப் போயிருப்பீங்களேடா! ஊர், உலகத்துல எத்தனையோ இடம் இருக்க... போயும், போயும் இங்க வந்து பிறந்தேன் பாருங்க... எல்லாம் என் தலையெழுத்துடா...’’ - ‘நாய்ப் பொழப்பு பொழைக்க வேண்டியிருக்கிறதே...’ என எண்ணி நடுரோட்டில் நின்றபடி Feel பண்ணுகிறது இந்த தென் தமிழக நகரத்து நாய் (ஊர் வேணாம் சார்... வம்பு!).

பக்கம், பக்கமாக எழுதித் தள்ளியும் கொண்ட வர முடியாத feelingஐ, செல்போன் கேமராவில் எடுத்த ஒரு சிங்கிள் போட்டோ கூட்டிக் கொண்டு வந்து விடுகிறதில்லையா? போட்டோவுக்கு இருக்கிற மகத்துவம் அது. ‘பூனைக்குட்டி’யின் இந்த ‘பேசும்படம்’ முழுக்க, முழுக்க அனிமல் ஸ்பெஷல்!

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...