ஒரு வினாடி திடுக்கிட்டு, தடுமாறி... மூடப் போன வேகத்தில் மீண்டும் கதவைத் திறந்து உள்ளே வர.... மேஜை இப்போது காலியாக இருந்தது. நான் பார்த்தது உண்மையா... இல்லை, காலையில் இருந்து அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பதால்... மூளை குழப்பமடைந்து பொய் தோற்றங்களை காட்டுகிறதா? நாற்காலியில் குழப்பமாய் அமர்ந்தவன், அடுத்த வினாடியே புதிய முடிவுடன் எழுந்தேன். வாட்ச் பார்த்தேன். மணி 5.30. இது மலைப்பகுதி. அதிகப்பட்சம் அரை மணிநேரத்திற்குள் இருட்டி விடலாம். ஆனாலும் பரவாயில்லை. ரிஸ்க் எடுக்க முடிவு செய்தேன். ஸ்டேஷனில் இரவுப்பணி காவலர்கள் தவிர யாரும் இல்லை. அதனால் என்ன? எனக்கு பேய், பிசாசுகளில் நம்பிக்கை இல்லை. அந்த பங்களாவுக்கு தனியாகவே சென்று சோதனை செய்வது என்று முடிவு செய்தேன்.
(தினகரன் தீபாவளி மலர் - 2026ல் சுருக்கமாக பிரசுரமான Q சிறுகதையின் முழுமையான வடிவம்)



