திங்கள், 28 நவம்பர், 2016

ஊட்டியில் ஒரு டூயட்!

‘ஊ... லலால்லா... ஓஹூ... லலலால்லா...’ என்று தமிழ் சினிமாவின் கனவுக்காட்சிகளில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து டூயட் பாடுவார்களே...? இளையராஜாவின் படு அருமையான பாடலுக்கு அவர்கள் ஆடுகிற அந்த இடம், எந்த இடமாக இருக்கும்? ராமநாதபுரம்? விருதுநகர்? சிவகாசி? பரமக்குடி? நோ. நிச்சயமாக இருக்காது. படத்தின் பட்ஜெட்டைப் பொறுத்து ஊட்டியோ, கொடைக்கானலோ, மூணாறோ... அல்லது சுவிஸ் தேசமாகவோ அந்த கட்டிப்பிடி லொகேஷன் இருக்கும். சரிதானே? லொகேஷன் எதுவாகவும் இருக்கட்டும். அதில் இருக்கிற ஒரு பொதுவான ஒற்றுமையை கவனித்ததுண்டா? ஹீரோவும், ஹீரோயினும் காதல் செய்து பாட்டுப்பாடுகிற காரியத்துக்கு தேர்ந்தெடுக்கிற இந்த இடம் 89.99 சதவீதம் மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பரப்பாகவே இருக்கிறதே... ஏன் மக்கா ஏன்?

ஞாயிறு, 20 நவம்பர், 2016

ரம்பம்பம்... ஆரம்பம்!

யாமம், நாழிகை... இந்த வார்த்தைகளெல்லாம் கேள்விப் பட்டதுண்டா? சாண்டில்யன் கதை படித்தவர்கள் ‘ஓ... யெஸ்’ என்று கை உயர்த்துவார்கள். ‘புரவியில் புயலெனச் சீறிப் பறந்த மந்திரிகுமாரி, இரு நாழிகைப் பொழுதில் அரச விதானத்தையடைந்தாள்...’ - என்றெல்லாம் வரிகளைப் போட்டு எழுதினால் தான், சரித்திரக் கதைக்கு, சரித்திர எஃபெக்ட் கிடைக்கும். இல்லையா? இந்த யாமம், நாழிகை என்பவை வெற்று அலங்கார வார்த்தைகளல்ல. அதற்குப் பின்புலத்தில் இருக்கிறது நேர அறிவியல்.

புதன், 16 நவம்பர், 2016

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ - இதுதாங்க சூழல் அறிவியல்!

காட்டுக்குள் புகுந்த காதல்ஜோடி யானைகளை, காவல் காத்த இளவட்டப் பையன், கவண் கல்லை வீசி அடித்து விரட்டிய குறிஞ்சி சாகசத்தை கடந்தவாரம் படித்து விட்டு நிறைய நண்பர்கள் ஆச்சர்யப்பட்டிருந்தார்கள்.


‘‘பள்ளிக்கூடத்தில படிக்கும் போது... குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை...ன்னு மொட்டை மனப்பாடம் பண்ணி பாஸ் பண்ணிட்டோம் சார். அர்த்தம் புரியலை. திணையியல் என்பது இவ்வளவு பெரிய சூழல் அறிவியல்னு (Environmental Science) தெரியாம போயிடுச்சே. நம்ம தமிழ் இலக்கியங்கள் சொல்லியிருக்கிறதை ஃபாலோ பண்ணுனாலே போதும். உலகம் தப்பிச்சிடும் சார்...’’ என்று மூணாறில் இருந்து கடிதம் வந்திருந்தது.


குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த கடிதம்!

ஞாயிறு, 6 நவம்பர், 2016

என் மேல் விழுந்த மழைத்துளியே!

திருக்குறளில் இருந்து இந்த வாரத்தை ஆரம்பிக்கலாம்.
‘நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி 
தான்நல்கா தாகி விடின்’
- பள்ளிக்கூடத்தில் விளக்கம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். மறந்து போனவர்களுக்காக... ‘‘பெய்ய வேண்டிய நேரத்தில் ஒழுங்காக மழை பெய்யவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்... அது, எவ்வளவு பெரிய கடலானாலும் சரி. தனது தன்மை மாறி கெட்டு விடும்,’’ - இது வள்ளுவர் வாய்ஸ். இன்றைய சயின்ஸ் இதை ‘அப்சல்யூட்லி ரைட்’ என்று உறுதி செய்கிறது. ஒழுங்காக மழை பெய்து, மழை நீர் கடலைச் சென்று சேர்ந்தால் மட்டுமே நிலத்தில் உள்ள தாதுக்கள் கடலில் கலக்கும். கடல்வாழ் உயிரினங்களுக்கு போதிய போஷாக்கு கிடைக்கும். மழை குறைந்தால்... கடல் வளம் குறைந்து, மீன்வளம் குறையும். இயற்கை ஒன்றுக்கொன்று கண்ணி கோர்த்து வைத்திருக்கிறது. ஒரு கண்ணி விலகினாலும் எல்லாம் போச்சு.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...