வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

‘ஓடு’ம் போது... உரசக்கூடாது!

ரே ஒரு ‘இச்’ நிறைய... நிறைய மாற்றங்கள் செய்யும் என்று தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். பைக்கில் நண்பர்களுடன் ‘டிரிபுள்ஸ்’ வரும் போது போலீஸ் மடக்கி விடுகிறது. ‘ஒரு பைக்கில மூணு பேர் போகலாமா?’ என்று சாவியை பிடுங்க தயாராகிறார் காக்கிச்சட்டைக்காரர். ‘‘சார்.. சார்... கூடப் படிக்கிற பையன், மருந்தைக் குடிச்சிட்டான் சார் (இருமல் மருந்து?!). ஹாஸ்பிடல் போய்கிட்டு இருக்கோம் சார்....’’ என்று வடகிழக்கு பருவமழை போல கண்களில் கண்ணீர் சிதற பரிதாபமாகச் சொல்கிறீர்கள். போலீஸ்காரர் சர்வீசுக்கு புதிதாக இருக்கவேண்டும். ‘பாத்துப் போங்கப்பா...’ என்று கண்ணீரைத் துடைத்து, அனுப்பி வைக்கிறார். நமட்டுச் சிரிப்புடன் கியரை மாற்றி பைக்கை கிளப்புகிறீர்கள். ரைட்டா? இனி தமிழுக்கு வருவோம்.

சனி, 21 பிப்ரவரி, 2015

மண்டை ஓடு மாந்த்ரீகமா ஏவல் வினை...?

ந்திப்புகள், சந்திக்கிற தருணங்களில் ‘இச்.. இச்...’ கொடுப்பதா / கூடாதா என்பதான சமாச்சாரங்கள் எவ்வ்வ்வ்வளவு முக்கியமானவை என்பதற்கு நமது நம்மொழி செம்மொழி தொடர் சிறந்த உதாரணம். பாருங்கள்... எல்லாவற்றையும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சொல்கிற இந்தத் தொடரில், ‘சந்தி’ மேட்டர் மட்டும் கிட்டத்தட்ட ஆறு வாரங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருப்பதால், வேறு வழியின்றி சடன் பிரேக் அடித்து, வேறு ரூட்டில் வண்டியைத் திருப்ப வேண்டியிருக்கிறது. இந்த வாரம், ‘இச்’ கொடுக்கக்கூடாத இடங்கள்... அதாவது, வல்லெழுத்து மிகாத இடங்கள்.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

வால்பாறையும்... சில யானைகளும் - 6

திருநெல்வேலிக் காரர்களைப் பார்க்கிற போது நமக்கு பொறாமையாக இருக்கும். நினைத்த நேரத்தில் இருட்டுக்கடைக்குப் போய் அல்வா சாப்பிட முடிகிறது  பாருங்கள். வால்பாறைக் காரர்களும் அப்படியே. அவர்களைப் பார்த்து பொறாமைப்படவும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. இங்குள்ள பேக்கரிகளில் ஒரு  விதமான விசேஷ அல்வா கிடைக்கிறது. பட்டாக்கத்தி அல்வா என்று வேண்டுமானால் நாம் அதற்கு பெயர் வைத்துக் கொள்ளலாம். காரணம், பெரிய  கத்தியை வைத்து மட்டன் கடைகளில் இறைச்சியை வெட்டுவது போல வெட்டி எடுத்து எடைபோட்டுத் தருகிறார்கள். செம டேஸ்ட். அப்புறம் சில்லி  என்கிற ஒரு காரம். இங்கு மட்டும்தான் இது கிடைக்கிறது. வால்பாறை போகும் போது, அள்ளி வர மறக்கவேண்டாம்.

சனி, 14 பிப்ரவரி, 2015

ஆதலினால்... காதல், செய்யலாமா?

வ்வொரு பிப்ரவரி 14ன் மறுநாளிலும், நாம் இரு விதமான செய்திகளை நாளிதழ்களில் படிக்க நேரிடலாம். வாலன்டைன்ஸ் டே எனப்படுகிற (வாலன்டைன்  பாதிரியாரின் காதல் சேவை, காதலர் தினம் உருவான கதைகள் நெட்டில் ஏராளம், தாரளமாக இருக்கிறது. என்பதால், நேரடியாக மேட்டர்!) காதலர்  தினத்தை நம்மூர்களில் ஒரு கூட்டம் எதிர்க்கும். ஒரு கூட்டம் ஆதரிக்கும். எதிர்க்கிற கூட்டம் செய்கிற இம்சைகள் எழுத்தில் அடங்காது. தெருவில் மேய்ந்து  கொண்டிருக்கிற கழுதைகளை இழுத்து வந்து கழுத்தில் மாலையைப் போட்டு கல்யாணம் செய்து வைப்பது (தாங்கள் செய்வது இன்னது என்று அறியாமல்  செய்கிறார்கள் ஆண்டவரே...!), பூங்காக்களில் பொழுதுபோக்க உட்கார்ந்திருக்கிற தம்பதிகளை கூட கும்பலாய் சென்று மிரட்டுவது என்று... அவர்களது நாகரீகமான சில செயல்களை மட்டுமே இங்கே பட்டியலிட முடிகிறது.

புதன், 11 பிப்ரவரி, 2015

மோடியை பதம் பார்த்த ‘ஏ.கே. 49!’

டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள், எஞ்சிய மாநில மக்கள் அனைவரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய புதிய ஒரு செய்தியைச் சொல்லி
யிருக்கின்றன. தேர்தல் வெற்றி என்பது உண்மையில், அரவிந்த் கெஜ்ரிவால் அல்லது அவரது ஆம் ஆத்மி கட்சிக்கானது அல்ல. டெல்லியில்  ஜெயித்திருப்பது அந்த மாநிலத்தின் ஒரு கோடியே 30 லட்சம் மக்களே. அந்த மாநிலத்தின் ஆம் ஆத்மிக்கள் (சாமானிய மனிதர்கள்) மட்டுமல்லாது, காஷ் ஆத்மிகளின் (விசேஷ / ஸ்பெஷல் மனிதர்கள்) கைகளிலும் கூட, இப்போது ‘விளக்குமாறு’ ஸ்டெடியாக நிற்கிறது.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

வால்பாறையும்... சில யானைகளும் - 5

ன விலங்குகளில் சகலகலாவல்லவன் பட்டத்துக்கு போட்டி வைத்தால், ‘அன் அப்போஸ்டாக’ சிறுத்தை ஜெயித்து விடும். தனுஷ் போல ஸ்லிம் பாடி.  மணிக்கு சுமாராக 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய திறன். மலையோ... மரமோ, எதுவாக இருந்தாலும் ஜாக்கிசான் போல தாவிக் குதித்து பாய்ந்து  ஏறக்கூடிய வல்லமை. ‘லாங் ஜம்ப்’ ஆற்றல். மைக்கேல் பெல்ப்ஸையே திணறடிக்க வைக்கும் அளவுக்கு நீச்சல் - இப்படி, எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆ க்டிவிட்டிகளில் சிறுத்தையை... புலி என்றுதான் சொல்லவேண்டும்.
ஆனால், மக்களே... சிறுத்தைகளுக்கு இப்போது ஏழரைச் சனி காலமாக இருக்கலாம்.  கடகடவென இனம் அழிந்து வருகிறது. மீசையிலும், எலும்பிலும் மருத்துவக் குணம் இருப்பதாக யாரோ ‘கொளுத்திப் போட’ துப்பாக்கியுடன் வேட்டைக்கு  கிளம்புகிறது ஒரு கூட்டம்!

சனி, 7 பிப்ரவரி, 2015

கிளவிக்கு ‘இச்’ வேண்டாம்!

‘இதெல்லாம் தேவையே இல்லை ப்ரோ. க்கு, ச்சு போட்டு எழுதலைனா என்னா அர்த்தம் மாறிடப்போவுது? அதெல்லாம் இல்லாம அப்டியே எழுதிக்கலாம். ச்சும்மா சந்தி, வலி, வல்லெழுத்துனு டார்ச்சர் பண்றாங்க...’ என்று சில ‘இணைய’ தலைமுறையினர் கேண்டீனில் காபி குடிக்கிற போது கமெண்ட் அடித்ததாக சேதி வந்தது. ‘க்கு, ச்சு போடலைனா என்னா அர்த்தம் மாறிடப் போவுது?’ என்று அவர்கள் கேட்பது சரியாக பட்டாலும் கூட... சரியில்லை. மகா தப்பு. அர்த்தம் மாறி அனர்த்தம் ஆகி விடும். எப்படி..? இங்கே கொஞ்சம் சாம்பிள்ஸ்.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

என் உச்சி மண்டைல சுர்ருங்கிது!

காலத்தை உறைய வைத்து, கண் முன் கட்டி வைத்து விடுகிற சக்தி புகைப்படங்களுக்கு உண்டு. நான் பிறந்ததற்கும் முன்பாக வெடித்து பெரு  அழிவு ஏற்படுத்தியதாக வரலாறு குறிப்பிடுகிற அணுகுண்டு தாக்குதல்களின் கோர முகத்தை குலைநடுங்கிப் போகிற அளவுக்கு நமக்குள்  விதைத்தவை புகைப்படங்கள். என்பதால், புகைப்படங்களை பூனைக்குட்டி லேசான விஷயமாக கருதுவதில்லை. ‘பேசும் படம்’ என தலைப்பிட்டு,  நம் முன் நகர்ந்து கொண்டிருக்கும் வரலாற்றை அழுத்தம் திருத்தமாக ஆவணப்படுத்துகிற வேலையை நீண்டகாலமாக செய்து வருகிறது. சிறிய  இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேசும்படம்...

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...