ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

என் உச்சி மண்டைல சுர்ருங்கிது!

காலத்தை உறைய வைத்து, கண் முன் கட்டி வைத்து விடுகிற சக்தி புகைப்படங்களுக்கு உண்டு. நான் பிறந்ததற்கும் முன்பாக வெடித்து பெரு  அழிவு ஏற்படுத்தியதாக வரலாறு குறிப்பிடுகிற அணுகுண்டு தாக்குதல்களின் கோர முகத்தை குலைநடுங்கிப் போகிற அளவுக்கு நமக்குள்  விதைத்தவை புகைப்படங்கள். என்பதால், புகைப்படங்களை பூனைக்குட்டி லேசான விஷயமாக கருதுவதில்லை. ‘பேசும் படம்’ என தலைப்பிட்டு,  நம் முன் நகர்ந்து கொண்டிருக்கும் வரலாற்றை அழுத்தம் திருத்தமாக ஆவணப்படுத்துகிற வேலையை நீண்டகாலமாக செய்து வருகிறது. சிறிய  இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேசும்படம்...

என் உச்சி மண்டைல சுர்ருங்கிது!


னிகாலம் முடிஞ்சிடுச்சில்ல. இனி வெயில் கொளுத்துமில்ல. இலை, தளையை எடுத்து இப்டிக்கா தலையில போட்டுகிட்டத்தான், தலை தப்பிக்கும். இடம்: கடலூர் பக்கம்.

யப்பா... அடேங்கப்பா!


தெல்லாம், நம்மூர் தவிர வேற எங்கயும் சான்ஸே இல்லைங்க. எப்பிடி சரக்கை ஏத்துனாரு, எப்பிடி பேலன்ஸ் பண்ணுறாரு, எப்பிடி பறக்கறாரு,  எப்பிடி ஆக்ஸிலேட்டர் கொடுக்கிறாரு, எப்பிடி ரோட்டைப் பார்க்கறாரு... இப்பிடி, இன்னும் நிறைய எப்பிடி, எப்பிடிக்கள். சரக்கை இறக்கி வெச்சிட்டு, சார் தான், விளக்கம் சொல்லோணும்! இடம்: காரைக்குடி பக்கம்.

பொம்மை இல்ல.. பொம்மை இல்ல... உண்மை!


ல்லியைப் பார்த்தாலே பல கிலோ மீட்டர் பறக்கிற ஆசாமியா நீங்க? தம்பி படத்தை பிரேம் போட்டு மாட்டி வெச்சிக்கிட்டா, பயமெல்லாம்  பறந்தே போயிடுமாம். எம்மாம் பெரிய மலைப்பாம்பை, தம்மாத்துண்டு தம்பி எப்பிடி மடக்கிப் பிடிச்சு போஸ் கொடுக்கறார் பாத்திங்களா?  ‘வெயிட்டு ரொம்ப அதிகம்ங்க... இல்லைனா, புடிச்சிட்டுப் போயி, வீட்டுல துணி காயப்போடறதுக்கு கொடியா கட்டீருவேன்...’ என்கிறார். இடம்:  திருச்சி அருகே பிடாரம்பட்டி.

கையை வெச்சிகிட்டு சும்மா இருடா!


மிருகநேயத்தோட மின்சார வாரியம் கயறு போல வயரு கட்டி விட்டிருக்காங்க. சும்மா ஜாலியாக ஆடலாம் ஊஞ்சலு... என்று அக்கா,  அண்ணன், தங்கச்சியோடு வந்து ஆட்டம் காட்டுது இந்தக் குரங்கு. முந்தி மாதிரியில்ல. இப்ப, கரண்ட்டு அடிக்கடி கட்டாகறதில்ல என்கிற  விஷயத்தை இந்தக் குரங்கு கூட்டத்துக்கு சொல்வதாரு? இடம்: பெரம்பலூர்.

சாப்டுறா... ஜல்ப் புடிக்காது!


திகாலையில எந்திரிச்சு, வீதியுலா வரணும். பனி பட்டையக் கிளப்புது. ஜலதோஷம் புடிச்சிட்டா... இது மூக்குல விக்ஸ் தடவி கட்டுபடியாகுமா?  அதான், வரும்முன் காப்போம் திட்டம். வண்டி, வண்டியாக துளசி இலையை கொடுத்து ஜலதோஷம் வராமல் விரட்டும் பாகன். இடம்:  கும்பகோணம். துளசி சாப்பிடுவது, கும்பேஸ்வரன் கோயில் யானை.

- பூனைக்குட்டி -


3 கருத்துகள்:

  1. படங்களும் செய்திகளும் வெகு வெகு அருமை
    நல்ல தமிழ் பெயரைச் சூட்டுங்கள்
    காணொளியையும் கண்டு மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...