ஞாயிறு, 27 டிசம்பர், 2020

யூனா! (Made in Japan) 2

 ‘‘பொறு. அந்த டைம்ல ஜப்பான் ஆர்மி, பர்மாவை பிடிச்சிட்டாங்க. அடுத்த இலக்கா, இந்தியாவை தாக்குறதுக்கு திட்டம் போட்டாங்க. அந்த திட்டத்தை வெற்றிகரமா செயல்படுத்துறதுக்காக ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை படு ரகசியமா கடல் வழியாக இந்தியா அனுப்பி வைச்சாங்க. அந்தக் குழுவுல,வெப்பன் கன்ட்ரோல் ஆபீசரா எங்க அப்பாவும் இந்தியா வந்தாரு. அவர் கூட சேர்ந்து நானும் வந்தேன். 1942ல, உங்க மெட்ராஸ்.. அதான், சென்னைக்கு வந்தோம். இந்த எண்ணூர்ல தான் அப்ப எங்க ரகசிய முகாமை அமைச்சோம். அங்கயும் அப்பாவோட ஆராய்ச்சி படு தீவிரமா தொடர்ந்திச்சு. கடைசியா ஒரு நாள்... அவரோட அயராத உழைப்புக்கு பலன் கிடைச்சது...’’

தொடரின் முதல் பாகம் படிக்க: யூனா! (Made in Japan) 1

செவ்வாய், 22 டிசம்பர், 2020

யூனா! (Made in Japan) 1

 


விடிவதற்கு இன்னும் 8 மணிநேரம் இருக்கிறது. அதற்குள் எனக்குத் தேவை 10 லட்சம் ரூபாய். இப்போது என் பாக்கெட்டில் இருப்பது 120 ரூபாயும், கொஞ்சம் சில்லரை காசுகளும், இரண்டு விக்ஸ் மிட்டாய்களும். காலைக்குள் பணம் தயார் செய்யாவிட்டால் எனது தலை என்னதில்லை. எனக்கெதிரே இருந்த கடலை விடவும் அதிகமாக மனதுக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது.


சனி, 21 நவம்பர், 2020

காதுகுத்தி அம்மன்!

 


டிவி சேனல் நிருபருக்கு பிரச்னை மேல் பிரச்னை. வாழ்க்கையில் எதுவுமே சாதகமாக இல்லை. தொட்டதெல்லாம் தோல்வி. உச்சக்கட்டமாக, டிவி சேனல் நிருபர் வேலையும் காலி. எனக்கு மட்டும் ஏன் இப்டி... என்று மனம் வெறுத்து, கடவுளிடம் கேட்கிறான். சர்தான் என்று கடவுள், மனித வேடத்தில் அவன் முன்பாக வருகிறார்; வழிநடத்துகிறார். சில உண்மைகளை புரிய வைக்கிறார். - தீபாவளி ரிலீஸ் ‘மூக்குத்தி அம்மன்’ படக்கதை அல்ல இது. 2003ல் வெளியான ‘புரூஸ் அல்மைட்டி (Bruce Almighty)’ ஆங்கில சினிமாவின் கதை.

திங்கள், 9 நவம்பர், 2020

ஆன்ட்ராய்ட் குஞ்சப்பனும், சிட்டி ரோபோவும்!

 


ரு நல்ல சினிமா உருவாக்கத்துக்கு எது பிரதானம்? A) பணம் B) முன்னணி நட்சத்திரங்கள் C) கதை. இன்றைக்கு மார்க்கெட்டில் இருக்கிற இயக்குனர்களில் நிறையப் பேர் ஆப்ஷன் பி-யை தேர்வு செய்பவர்களாக இருப்பார்கள். முன்னணி நட்சத்திரங்களின் தேதி கிடைத்து விட்டால் ஓகே. பைனான்ஸ் தேடி வந்து விடும். கதை...? அது கிடக்கிறது. வில்லன் கூட்டத்தை விரட்டி, விரட்டி பழிவாங்குகிற ஹீரோ கதையை எத்தனை வடிவத்தில், எத்தனை காலத்துக்கு எடுத்தாலும் தாங்கும். ஆப்ஷன் சி-யை தேர்வு செய்கிறவர்கள் எண்ணிக்கை இந்திய திரைத்துறையில் குறைவு. மலையாள சினிமாக்கள், இந்த இடத்தில் தான் மற்ற இந்திய சினிமாக்களில் இருந்து வெகுவாக வித்தியாசப்படுகின்றன.

சனி, 17 அக்டோபர், 2020

நீங்கள் முரளிதரனா, சங்கக்கராவா?

 

முத்தையா முரளிதரன் - கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத பெயர். இலங்கை அணியின் பல்வேறு சாதனை வெற்றிகளுக்கும், அந்த அணியின் விஸ்வரூப வளர்ச்சிக்கும் முக்கியக் காரணமாக இருந்த சுழல்பந்து ஜாம்பவான். இலங்கை அணியின் ஜெர்ஸி அணிந்து விளையாடினாலும் கூட, அவரை ஒரு தமிழராகவே தமிழகம் பார்த்தது. அவரது சாதனைகளை கொண்டாடியது.

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

இரு பாட்டில்கள்...

டந்து முடிந்த விஷயங்களை வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை எப்போதாவது அசை போட்டுப் பார்க்கும் போது, ‘அந்த ஒரு தவறை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால்...’ என்கிற நம் கடந்தகால அசட்டுத்தனத்தின் மீதான கோபம் தவிர்க்கமுடியாதது. எனக்கும் அப்படி ஒரு கோபம் இருக்கிறது. என் வாழ்வின் மீது படிந்த தீரா களங்கத்துக்குக் காரணமாக இருந்தவை... இரு பாட்டில்கள். யெஸ்! நீங்கள் நினைப்பது சரிதான். இரு மது பாட்டில்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...