புதன், 27 ஜனவரி, 2021

ஐயப்பனும்... Untold ஸ்டோரியும்!



ந்த மண்டல பூஜை சீசனில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 146 கோடி ரூபாய் வருவாய் இழப்பாம். காரணம், கொரோனா. பல்வேறு தொழில்துறைகளிலும் ஏற்பட்டிருக்கிற வருவாய் இழப்பு போல, இதையும் வழக்கமான செய்தியாக கடந்து விட முடியாது. வழிபாட்டு மையங்கள், வர்த்தக மையங்களாக மாறிவிட்டதால் ஏற்பட்டிருக்கிற வருமானம் பேச்சே... வேதனை இது. மணிகண்டனை Moneyகண்டனாக மாற்றி விட்டதால், ஆண்டிறுதியில் பேலன்ஸ் ஷீட் தயார் செய்து, லாப -நஷ்டக்கணக்கு பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. 4 ஆயிரத்து 133 அடி உயரத்தில் இருந்து அருள்பாலிக்கிற சுவாமி ஐயப்பன் alias மணிகண்டன், எளியவர்களின் மனதுக்கு எப்போதும் நெருக்கமான கடவுள். எளிய மக்களின் தோழனான மணிகண்டன் எப்போது / எப்படி Moneyகண்டனாக மாறினார்? அந்த History + Geography என்ன...?

(இதையும் படிங்க: ஐயப்பா... ஏதாகிலும் செய்யப்பா!)

திங்கள், 18 ஜனவரி, 2021

MASTER - சில விளக்கங்கள்

திரைப்படங்களையோ, திரைப்பட நடிகர்களையோ பிரமித்து கட்டுரை வெளியிடுவது பூனைக்குட்டியின் வழக்கமல்ல. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் கூட்டணியின் பிரமாண்ட பொங்கல் வெளியீடான மாஸ்டர் திரைப்படத்துக்கு பூனைக்குட்டி வரவேற்பு தெரிவித்து கட்டுரை வெளியிட்டிருப்பது, சில நண்பர்களிடையே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா ஆபத்து முழுமையாக முற்றுப்பெறாத நேரத்தில், தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பதை ஊக்குவித்தல் சரியா என்று அன்பான கண்டிப்புகள் வந்தன. சில விளக்கங்கள்...

படிக்க: வெல்கம் MASTER!

வியாழன், 14 ஜனவரி, 2021

வெல்கம் MASTER!


சினிமா, மீண்டும் அதன் துள்ளலான இயல்புக்குத் திரும்புகிறது. பத்து மாதங்களுக்குப் பிறகு தியேட்டர்களை, தியேட்டர்களுக்கே உரித்தான கொண்டாட்ட மனநிலையில் காணமுடிகிறது. விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்துக்கு, அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் அளிக்கும் மிக உற்சாகமான வரவேற்பு, பல்லாயிரம் கோடிகள் புழங்கும் திரைத்துறையின் முகத்தில் வண்ணப்புன்னகையை வரைந்திருக்கிறது.

வெள்ளி, 1 ஜனவரி, 2021

யூனா! (Made in Japan) 3


 கியர் தானாக நான்கில் இருந்து இரண்டுக்கு மாற, ஸ்பீட் பிரேக்கரில் கார் ஏறி இறங்கியது. பணப்பிரச்னை தீர்ந்ததில், எனது கவலைகள் பறந்திருந்தன. மனதுக்குள் உற்சாகம் பரவியிருந்தது. யாருமற்று இருந்த டிரைவிங் சீட் பக்கம் திரும்பி கேட்டேன், ‘‘யூனா... ஒரு சந்தேகம் கேட்கலாமா?’’.

‘‘தாஷூனேரு!’’

‘‘என்னது?’’

‘‘கேளுன்னு சொன்னேன்...’’

‘‘ஓ... உன்னோட மொழியா? ரைட்டு. இப்ப எதுக்கு உன்னோட உடம்பை எரிக்கணும்னு ஆசைப்படற? வயசும் இருபதுதான் ஆகுது. சாகிற வயசா இது? வெளியில இந்த விஷயம் தெரிஞ்சா... உன்னை சூசைட் அட்டம்ப்ட், என்னை மர்டர் அட்டம்ப்ட் கேஸ்ல புக் பண்ணீடுவாங்க. கொஞ்சநாள் வாழலாமே?’’


தொடரின் முதல் பாகம் படிக்க: யூனா! (Made in Japan) 1

தொடரின் இரண்டாம் பாகம் படிக்க: யூனா! (Made in Japan) 2

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...