‘‘அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம். அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது....’’ - திருக்குர்ஆன், சூரத்துல் அன்ஆம் (ஆறாவது) அத்தியாயத்தின் 108வது வசனம் இப்படி உபதேசிக்கிறது. நாலுமாவடி மோகன் சி லாசரஸ் உள்ளிட்ட, இன்றைக்கு மத போதகம் செய்கிற அத்தனை பிரசங்கிகளுக்கும் இந்த வசனத்தில் இருக்கிறது அடிப்படை பாடம்.
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 6 அக்டோபர், 2018
திங்கள், 4 ஜூலை, 2016
சுவாதியும்... சாதியும்!
முகநூலில் நட்புக்கான கோரிக்கை அனுப்புவது. சேர்த்ததும், புரொஃபைல் போட்டோவை பார்த்து விட்டு, ‘தலையில அந்த மஞ்சக் கலர் க்ளிப் சூப்பர். பூசணிக்கா சுத்திப் போடச் சொல்லுங்க...’ என்று பனிக்கட்டி வைப்பது. நேரில் சந்திக்கிற வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு, ‘அ - நான்கு’ பேப்பரில் மடக்கி எழுதி, காதல் கடுதாசி கொடுப்பது. ‘போடா பொறுக்கி....’ என்று மறுத்துத் திட்டினால்... அரிவாளை எடுத்து ஒரே போடாக போட்டு விட்டு டிரெய்ன் பிடித்து எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்! - எம்மாம் பெரிய தப்பு? ‘இந்தக் காலிப் பயலுவல எல்லாம் சும்மா விடக்கூடாதுங்கோ...’ என்று வாட்ஸ்அப், முகநூல்களில் (மட்டும்) தமிழகம் கொந்தளிக்கிறது. தப்புத்தான். சும்மா விடக்கூடாதுதான். சும்மா விட்டால், கடையில் பேனா வாங்குகிறது போல ஆளாளுக்கு அரிவாள் வாங்கிக் கொண்டு கிளம்பி விடுவார்கள். கழுத்தறுத்தான் பையன் விவகாரத்தை ஒரு கோடிப் பேருக்கும் மேல் பேசி, எழுதி, விவாதித்து விட்டார்கள்... என்பதால், அவனை விட்டு விடலாம். அதுக்கும் மேல போலாம். ரைட்டா?
வெள்ளி, 15 ஜனவரி, 2016
திங்கள், 27 ஏப்ரல், 2015
சிலையில்லா கருப்பனும்... 328 கிடாக்களும்!
தமிழகம், திருவிழாக்களின் தேசம். வினோத, வித்தியாச திருவிழாக்களுக்கு பஞ்சமே இல்லை. சுவாமிக்கு குவார்ட்டர் பாட்டில்களை தட்சணை வைத்து (ஐஸ் வைத்து?!) அப்ளிக்கேஷன் போடுவது துவங்கி, கோயிலுக்குள் கார மிளகாயை அரைத்து அம்மனுக்குப் பூசுவது, காசை வெட்டிப் போடுவது... என நம்மூரில் நடக்கிற வித்தியாசத் திருவிழாக்கள், பி.எச்டி பண்ண மிகவும் தகுந்த சப்ஜெக்ட்.. ஒவ்வொரு திருவிழாவுக்குப் பின்னணியிலும் பலமான நம்பிக்கைகள் உண்டு. காசை வெட்டிப் போட்டால் போதும்... துரோகம் செய்தவரின் சீன் ஜிந்தாபாத் ஆகிவிடுமாம். அம்மனுக்கு மிளகாய் அரைத்துப் பூசினாலும் அதே எஃபக்ட்தான். ஒரு லட்சம் கொசுக்கள் ஒரே நேரத்தில் கடித்தது போல, தப்புத்தாண்டா பார்ட்டிகள் தலைகீழாகப் புரண்டு உருளவேண்டிய அளவுக்கு அம்மன் படுத்தி எடுத்து விடுமாம். இந்த வரிசையில்... கருப்பு நிற வெள்ளாடுகளின் ‘கதையை முடித்து’ விடிய, விடிய வெளுத்துக் கட்டுகிற வித்தியாசத் திருவிழா ஒன்று சிவகங்கைப் பக்கம் வருடம் தவறாமல் நடக்கிறது.
திங்கள், 20 ஏப்ரல், 2015
அரிவாள்களால் சாதித்ததென்ன?
வலிகளின் உச்சம், உடலில் அல்ல... மனதில் இருக்கிறது. உடல் காயங்களைக் காட்டிலும், மனக்காயங்கள் தருகிற பாதிப்பு, வலி ஒப்பீட்டளவில் அதிகம்; மிக அதிகம். காயப்பட்டவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். உடல் காயத்துக்கு மருந்து இருக்கிறது. மனக்காயங்களுக்கு..? காலம்தான் மருந்தென்பார்கள். உண்மைதான். அடித்துக் கொண்டு ஓடுகிற ஆற்று வெள்ளம், பாறையின் வடிவத்தை மாற்றி விடுகிறதைப் போல...!
சனி, 21 மார்ச், 2015
தபால் ஊழியர் போராட்டம் எதற்காக?
பஸ் ஸ்டிரைக், வங்கிகள் ஸ்டிரைக் என்றால்... ஒட்டுமொத்த தேசமும் பதறுகிறது. பேச்சுவார்த்தைக்கு கதறுகிறது. நம்மைச் சுற்றி, பத்து நாட்களையும் கடந்து ஒரு வேலைநிறுத்தப் போராட்டம் ஓசையின்றி நடந்து கொண்டிருக்கிறதே... அது (குறைந்தபட்சம்) நமது கவனத்தையாவது எட்டியிருக்கிறதா? கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் பிச்சை எடுத்தும், அரைநிர்வாணமாக நின்றும், பட்டை நாமம் போட்டும்... இன்னும் என்னென்ன வழிமுறைகள் இருக்கிறதோ, அத்தனை முறைகளிலும் போராட்டம் நடத்தித்தான் பார்க்கிறார்கள். யாரும் திரும்பிப் பார்த்தபாடில்லை. எதற்காக இவர்கள் போராடுகிறார்கள்? இவர்களது பிரச்னைகள் என்ன? கோரிக்கைகள் என்ன? அவை நியாயமான கோரிக்கைகள்தானா? போராட்டத்தின் முழுமையான பின்னணி என்ன? மிக விரிவான அலசல், பேட்டிகளுடன் உங்கள் ‘பூனைக்குட்டி’ இன்றைக்கல்ல... 2014, மார்ச் 3ம் தேதியே (திங்கள் கிழமை) ‘2.50 லட்சம் தபால் ஊழியர்களின் கண்ணீர் கதை’ என்ற தலைப்பில் கட்டுரை பதிவு செய்திருக்கிறது. கூடுதல் தகவல்களுடன் அந்தக் கட்டுரை மீண்டும் உங்கள் பார்வைக்கு...
சனி, 14 பிப்ரவரி, 2015
ஆதலினால்... காதல், செய்யலாமா?
ஒவ்வொரு பிப்ரவரி 14ன் மறுநாளிலும், நாம் இரு விதமான செய்திகளை நாளிதழ்களில் படிக்க நேரிடலாம். வாலன்டைன்ஸ் டே எனப்படுகிற (வாலன்டைன் பாதிரியாரின் காதல் சேவை, காதலர் தினம் உருவான கதைகள் நெட்டில் ஏராளம், தாரளமாக இருக்கிறது. என்பதால், நேரடியாக மேட்டர்!) காதலர் தினத்தை நம்மூர்களில் ஒரு கூட்டம் எதிர்க்கும். ஒரு கூட்டம் ஆதரிக்கும். எதிர்க்கிற கூட்டம் செய்கிற இம்சைகள் எழுத்தில் அடங்காது. தெருவில் மேய்ந்து கொண்டிருக்கிற கழுதைகளை இழுத்து வந்து கழுத்தில் மாலையைப் போட்டு கல்யாணம் செய்து வைப்பது (தாங்கள் செய்வது இன்னது என்று அறியாமல் செய்கிறார்கள் ஆண்டவரே...!), பூங்காக்களில் பொழுதுபோக்க உட்கார்ந்திருக்கிற தம்பதிகளை கூட கும்பலாய் சென்று மிரட்டுவது என்று... அவர்களது நாகரீகமான சில செயல்களை மட்டுமே இங்கே பட்டியலிட முடிகிறது.
திங்கள், 3 மார்ச், 2014
2.50 லட்சம் தபால் ஊழியர்களின் கண்ணீர் கதை!
ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியாக ஓரிரு நாட்கள் தாமதம் ஆனாலும் கூட போர்க்கொடி தூக்கி, போராட்டக் குரல் எழுப்புகிற அமைப்புகள் தெரிந்து கொள்ளவேண்டிய சேதி இது. பணியில் சேர்கிற முதல் மாதத்தில் வாங்குகிற அந்த சொற்ப ஊதியத்தில், அதற்குப் பிறகு பெரிய அளவில் உயர்வேதும் இருக்காது. பணிகாலத்தின் கடைசி மாதம் வரை அதையே வாங்கி கஷ்ட ஜீவனம் நடத்தி விட்டு, ஓய்வுக்குப் பிறகு பென்ஷன், பிஎப் என எந்தச் சலுகையும் இன்றி வீட்டுக்குச் செல்கிற பரிதாபத்துக்குரியவர்களாக நடமாடிக் கொண்டி ருக்கிறார்கள் ஜிடிஎஸ் எனப்படுகிற கிராமப்புற தபால் ஊழியர்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)