ஞாயிறு, 2 டிசம்பர், 2018

மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன் - 4.0

‘‘டைம் மெஷின் மூலமா, திரும்பவும் நீ 201க்கு போகணும். உன் கூட எல் வருவா. மாறவர்மபாண்டியனோட பயோ கிளாக் ஓலைச்சுவடியை எடுத்துகிட்டு திரும்பிடுங்க. வர்ற வழியில உன்னை 2018ல பத்திரமா இறக்கி விட்டுட்டு, எல் இங்க 2048க்கு வந்திடுவா. இதுக்கு ஓ.கே.ன்னா உனக்கு உதவி பண்றோம். இல்லைனா...’’

‘‘இல்லைனா...?’’

‘‘உன்னோட மூளையை ப்ளு ரெய்ஸ் மூலமா லேட்டஸ்ட் வர்ஷனுக்கு அப்டேட் பண்ணி விட்டுருவோம். நீ 2018யை மறந்துட்டு, இந்த 2048ல் திரிய வேண்டியதுதான்...’’

(தொடரின் முதல் பாகத்தை படிக்க: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 1)

(தொடரின் இரண்டாம் பாகத்தை படிக்க: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 2)

(தொடரின் மூன்றாம் பாகத்தை படிக்க: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 3.0)
மீண்டும் 2018க்கு போக முடியுமா, எனது இயல்பான பழைய வாழ்க்கையை தொடரமுடியுமா என்ற கேள்வி அந்த நிமிடம் எனக்குள் பூதாகரமாக எழுந்து நின்றது. ஆனால், அவநம்பிக்கையை அடுத்த வினாடியே துடைத்தெறிந்தேன். கிபி 201ல் பாய்சன் அடித்து அனாதைப் பிணமாக விழுந்திருக்க வேண்டியவன், புத்திசாலித்தனத்தின் மூலமாக மட்டும்தானே உயிர்பிழைத்து இங்கே வந்திருக்கிறேன். கொஞ்சம் டீ....ப்ப்ப்ப்பாக யோசித்தால், இந்த 2048ல் இருந்தும் கூட தப்பி கரைசேர முடியும் என்று தோன்றியது. இந்த சி, எல் இருவரும் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியவில்லை. இவர்களை பகைத்துக் கொண்டு மீளமுடியாது. இவர்கள் வழியிலேயே போய், இவர்களைப் பயன்படுத்தி, இங்கிருந்து நைசாக எஸ்கேப் ஆகி விடவேண்டும்.‘‘ஓகே டாக்டர். திரும்பவும் 201க்கு போக நான் ரெடி. கடந்தமுறை செஞ்ச தப்பை திரும்ப செய்ய மாட்டேன். சிக்கனுக்கு ஆசைப்பட்டு சிக்கல்ல சிக்கமாட்டேன். ஓலைச்சுவடியை கேமராவில் படம் புடிச்ச மறுவினாடி அங்கிருந்து எஸ்கேப். ஆனால், டாக்டர்... டைம் மெஷின்...? அதுக்கு என்ன பண்றது?’’

‘‘ஒரு வழி யோசிச்சு வெச்சிருக்கேன் டி.’’

‘‘டி...யா?’’

‘‘யெஸ். டைகர்னு ஒவ்வொரு தடவையும் இவ்வளவு பெரிய பெயரை திரும்ப, திரும்ப சொல்லி எனர்ஜி வேஸ்ட் ஆகுது. இனி 2048ல இருக்கிற வரைக்கும் உன் பெயர் டி. ஓகே...?’’ என்றாள் எல்.

‘‘ஓகேடீ!’ என்றேன்.

‘‘2018ல நீ இருக்கும் போது, உன்னோட டைம் மெஷின் புரபஸர் சாமியப்பனுக்கு எத்தனை வயசிருக்கும்?’’

‘‘தலைமுடியைப் பார்த்தா 80 வயசு தோணும். ஆனா, நிஜத்துல 60 தாண்டாது,’’


‘‘குட். நமக்கு லக் இருந்தா, ஒருவேளை அவர் இன்னும் உயிரோட இருக்க வாய்ப்பு இருக்கு. அவரைப் புடிச்சம்னா, டைம்மெஷின் டிரிக்ஸ்  நிச்சயமா வெச்சிருப்பார். தப்பிச்சிடலாம். அவரோட, போன் ஐடி, அட்ரஸ் இருந்தா வா, நேர்ல போய் பார்த்து அவர்கிட்ட ஐடியா கேக்கலாம்? ரைட்?’’

ல் கொடுத்த ஐடியா ஒர்க்அவுட் ஆகும் போல தோன்றியது. ‘‘அவர் பக்கத்துல திருமங்கலம்தான் எல். அவரோட போன் நம்பர் 99425 22...’’ - நான் முடிப்பதற்குள் கிராஸ் பண்ணினாள்.

‘‘அந்த நம்பர்லாம் இப்ப கிடையாது. போன் ஐடி தான். டாடி... கம்யூனிகேஷன் மானிட்டர்ல கூப்பிட்டு, அந்த சாமியப்பன் போன் ஐடி கிடைக்குமா கேளுங்க...’’

‘‘கம்யூனிகேஷன் மானிட்டர் நம்பர் டபுள் எக்ஸ், ஓ, த்ரி, எய்ட் தானம்மா?’’ என்ற படி... அங்குமிங்கும் நடந்தவர், ‘‘ஹலோ... ஐம் டாக்டர் சி...’’ என்று தனக்குத்தானே பேச ஆரம்பித்தார்.

‘‘மேடம் எல்... இவர் என்ன பண்றார்?’’

‘‘போன் பேசுறார்.’’

‘‘ஆனா, கையில போனே இல்லையே?’’

‘‘அதெல்லாம் உன் காலம். இப்பல்லாம் போனே கிடையாது. சிம் கார்ட் சிப்பை நம்ம மெம்ப்ரைன்ல அட்டாச் பண்ணிடுவாங்க. பேசவேண்டிய நம்பரை மனசுல நெனச்சு டயல்னு கோட் கொடுத்தா போதும். லைன் கிடைச்சிடும். பேசிக்கிட வேண்டியதுதான். தண்டர்நெட் கனெக்ஷன். ட்வென்டி ஜிகா பைட் ஸ்பிட். காலை அப்படியே எனக்கு டிரான்ஸ்பர் பண்ணினா நானும் பேசலாம். கான்ஃபிரன்ஸ் போட்டும் பேசிக்கலாம். உனக்கு ஒரு சிம் வேணுமா...?’’ என்றாள்.

தற்குள் பேசி முடித்திருந்த டாக்டர் சி, எங்கள் பக்கம் திரும்பினார். ‘‘எல், சாமியப்பன் பத்தி டேட்டா டியூப்ல தகவல் தேடுறாங்க. டென் மினிட்ஸ்ல கூப்பிடுவாங்க. ஆனா, திருமங்கலம் இன்னிக்கு போறது கஷ்டம்...’’

‘‘ஏன்...?’’ என்றேன் நான்.

‘‘திருமங்கலம் போற வழியில தோப்பூர்ல எய்ம்ஸ் ஹாஸ்பிடல் கட்டறது சம்பந்தமா சென்ட்ரல் டீம் இன்னிக்கு இன்ஸ்பெக்‌ஷன் பண்ண வர்றாங்களாம்...’’‘‘என்னது... எய்ம்ஸ் ஹாஸ்பிடல் இன்ஸ்பெக்‌ஷனா? அடப்பாவிகளா, அதை இன்னுமா கட்டலை?’’ - நான் பதறியதை அவர்கள் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

‘‘அதனால என்ன டாடி. விண்ஃபீல்ட் எடுத்து போயிட்டு வந்திடலாம்.’’

‘‘அதில ரெண்டு பேர்தான போகமுடியும்? சரி. இவனை கூட்டிகிட்டு விண்ஃபீல்ட்ல நீ போயிட்டு வந்திடறியா?’’

வர்கள் பேசுவது எனக்கு புரியவில்லை. லேசாக கிராஸ் பண்ணினேன். ‘‘மேடம் எல்... விண்ஃபீல்டா? அப்படினா என்ன?’’

‘‘விண்ஃபீல்ட் தெரியாது? ராயல் விண்ஃபீல்ட். செம பைக். ஸ்டார்ட் பண்ணிட்டா ச்சும்மா பறக்குமாக்கும்...’’

‘‘அதான், எய்ம்ஸ் இன்ஸ்பெக்‌ஷனுக்காக ரோடு பிளாக்னு உங்க அப்பா சொன்னாரே, அப்புறம் எப்படி அதில போறது?’’

‘‘உஷ்ஷ்ஷ்ஷப்பா....’’ தலையைப் பிடித்துக் கொண்டாள். ‘‘பறக்கும்னா... இது நிஜமாவே பறக்கும் டி. இது ஹெலி பைக். ஸ்டார்ட் பண்ணிட்டா, ஜிவ்வ்வுனு மேலே கிளம்பி, ஸ்கைல விஷ்க்குனு போயிடலாம். அதனாலதான் இது விண்ஃபீல்ட்.’’

‘‘அடடா... காலம் தான் எவ்வளவு மாறிடுச்சி? என்ஃபீல்ட்ல பறந்திருக்கேன். இப்ப விண்ஃபீல்ட்ல நிஜமாவே பறக்கப் போறேன்... இதெல்லாம் எதுவும் தெரியாத டர்ட்டி டஞ்சன்ஸா ஒரு கூட்டம் 2018 வாழ்ந்துகிட்டு இருக்கு...’’ - எனக்கு நானே நொந்து கொண்டேன்.

‘‘அது சரி. உங்க அப்பாவுக்கு ஞாபக மறதி கொஞ்சம் அதிகம் இருக்குமோ...?’’

‘‘இல்லையே. அவர் ரொம்ப ஷார்ப். ஏன் கேட்கிற?’’

‘‘அவருக்கு வயசு எப்படியும் 45, 50 இருக்கும். 30 வருஷத்துக்கு முன்னாலயே எய்ம்ஸ் ப்ராஜக்ட் மதுரைல பிளான் பண்ணியாச்சு. ஆனா, அவருக்கு அது கூட ஞாபகத்துல இல்லையே...?’’

‘‘ஓ... அதை கேக்குறியா? உனக்கு மெமரி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் மெஷரிங் பத்தி தெரியாதில்லை...?’’

‘‘அதென்னது?’’

‘‘ஹியூமன் பாடில, இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜ் ஏரியானா, அது நம்ம மூளை தான் இல்லையா? அந்த மூளைல தான் நம்மளோட அவ்வளவு மெமரியையும் ஸ்டோர் பண்ணி வெச்சிருக்கோம். நாம குழந்தையா இருந்தப்ப கீழ விழுந்த நாள் கூட, இங்க ஸ்டோர் ஆகியிருக்கும். இப்படி நிறைய சம்பவங்களை ஸ்டோர் பண்ணும் போது, மூளையோட மெமரி ஸ்பேஸ் சீக்கிரம் காலியாகிடும் இல்லையா...?’’

‘‘எங்க காலத்தில அந்தப் பிரச்னை யாருக்கும் இருந்ததில்லை...’’


‘‘நோ. இப்ப 2048ல அதுதான் முக்கியமான பிரச்னை. ஸ்பேஸ் குறைஞ்சிடுச்சினா, மூளை அடிக்கடி ஹேங் ஆக ஆரம்பிச்சிடும். ஒரு வேலை ஓடாது. இந்தப் பிரச்னை தீர்க்கறதுக்காக, ஒவ்வொரு ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை, நம்ம மூளையை பார்ஷியல் ஃபார்மட் பண்ணுவாங்க. மூளையில நாம தேக்கி வெச்சிருக்கிற தேவையில்லாத, அன் வான்டட் மெமரிஸ் எல்லாம் க்ளீன் ஆகிடும். நிறைய ஸ்பேஸ் கிடைக்கும். புதுப்புது விஷயங்கள் ஸ்டோர் பண்ணி வெச்சிக்கலாம்...’’

‘‘கேக்கவே தலைசுத்துது எல். நல்லவேளை நானெல்லாம் 2048ல பிறக்கலை. எங்க காலத்துல செல்போன்ல தான் இன்டர்னல் ஸ்டோரேஜ், எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ்னு இருக்கும்...’’

‘‘இங்கயும் எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கு. பெரிய சயின்டிஸ்ட், டாக்டர்ஸ், ரைட்டர்ஸ், புரஃபஷனல்ஸ்... இவங்களுக்கு நிறைய மெமரி ஸ்லாட் தேவைப்பட்டதுனா, கவர்மென்ட்ல ஸ்பெஷல் ரெக்வஸ்ட் கொடுக்கணும். அவங்க கன்சிடர் பண்ணி, நம்ம பாடில எக்ஸ்டர்னல் டிரைவ் ஒண்ணு பொருத்திடுவாங்க. அதுக்கு அப்புறம், நம்மளோட முக்கியமான ஓல்ட் மெமரிஸை அந்த எக்ஸ்டர்னல் டிரைவ்ல ஸேவ் பண்ணி வெச்சிக்கலாம்... ரைட்டு. உன் கூட பேசிக்கிட்டிருந்ததுல நேரம் போனது தெரியலை. விண்ஃபீல்ட் ரெடியா இருக்கு. நாம திருமங்கலம் கிளம்பணும். க்விக்...’’

‘‘ஓகே எல். நான் ரெடி. எங்க காலத்தில என்ஃபீல்ட் ஓட்டிருக்கேன். இந்த விண்ஃபீல்ட் ஓட்டுனதில்லை. நானே ஓட்டட்டுமா?’’

‘‘அதுக்கு சான்ஸே இல்லை. இது யாருமே ஓட்டமுடியாது. ஆட்டோமேடிக். நாம ஏறி உட்கார்ந்து, மானிட்டர்ல போகவேண்டிய இடத்தை செட் பண்ணிட்டம்னா போதும். கீகுள் மேப்ல ஷார்ட்டஸ்ட் ரூட் பிக்கப் பண்ணி அதுவே போய் சேர்ந்திடும். பொறு. சோலார் சார்ஜ் இருக்கானு செக் பண்ணீடறேன்..’’

‘‘ஏன், பெட்ரோல், டீசல் எல்லாம் இப்ப புழக்கத்தில் இல்லையா?’’

‘‘இருக்கு. அதெல்லாம் ரொம்ம்ம்ம்பக் காஸ்ட்லி. அவங்க ஆட்சி நடந்தா குறையும். இவங்க ஆட்சி வந்தா கூடும். எதுக்கு வம்புனு எல்லாரும் சோலார் எனர்ஜிக்கு மாறிட்டம்.’’

‘‘விலை கூடுனா... நீங்க தட்டிக் கேட்க மாட்டீங்களா...?’’

‘‘உனக்கு ஆன்டி நேஷனல்னு அவார்ட் வாங்க ஆசையா?’’

‘‘ச்சே ச்சே... இல்லை...’’

‘‘அப்ப வாயை மூடிட்டு கிளம்பு.’’

***

‘‘உங்க திருமங்கலம் டிரிப் கேன்சல்... ஒரு ஷாக்கான தகவலும் இருக்கு. இப்பத்தான் டேட்டா டியூப்ல இருந்து தகவல் வந்தது...’’ என்றபடியே உள்ளே நுழைந்தார் டாக்டர் சி.

ல்லுடன் ஒரு ரவுண்ட் அடித்துத் திரும்பும் திட்டம் தகர்ந்து போகும் கடுப்பில், ‘‘ஷாக்கான நியூசை வந்து கேட்டுக்கறோம். முதல்ல, திருமங்கலம் போயிட்டு வந்திடறோமே,’’ என்றேன்.

‘‘திருமங்கலம் போறதே வேஸ்ட். அந்த சாமியப்பன் செத்துட்டாராம்...’’

‘‘என்னது... சாமியப்பன் செத்துட்டாரா...?’’ - 2018க்கு திரும்புவதற்கான கடைசி வாய்ப்பும் எனக்கு கைநழுவி விட்டதாகவே தோன்றியது.

‘‘யெஸ். உன்னை டைம் மெஷின்ல ஏத்தி 201க்கு அனுப்புனாரில்லையா? நீ பண்ணுன குளறுபடி அவருக்கு எப்படி தெரியும்? ஆள் திரும்பாததால, அவர் மேல போலீஸ் கம்ப்ளைன்ட் ஆகியிருக்கு. ஆராய்ச்சி, ஆராய்ச்சினு ஒரு பையனோட கதையை இந்த புரபஸர் முடிச்சிட்டார்னு கேஸ் புக் பண்ணி உள்ள தள்ளிட்டாங்க...’’

‘‘அடப்பாவமே... அப்புறம்?’’

‘‘அரும்பாடு பட்டு கண்டுபுடிச்ச டைம்மெஷினும் போச்சு. தன்னோட பேச்சை நம்பி பழைய காலத்துக்கு போன பையன் என்ன கதி ஆனான்னே தெரியலையேன்று மன உளைச்சல்ல இருந்த மனுஷன், மறுநாளே மாரடைப்பு வந்து போய்ச் சேர்ந்துட்டாராம்....’’

‘‘டாக்டர் சி... நான் வந்த டைம் மெஷின் காலாவதி ஆகிடுச்சி. அதோட சூட்சுமங்கள் தெரிஞ்ச விஞ்ஞானி சாமியப்பனுக்கு கதையே முடிஞ்சிடுச்சி. இப்ப நான் என்ன பண்ணறது? எப்படி 2018க்கு போறது? எனக்கே இப்ப ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி இருக்கு...?’’- எனது நிலைமையை யோசிக்க, எனக்கே பரிதாபமாக இருந்தது.

டாக்டர் சி நிறைய யோசித்தார். பிறகு ‘‘எல்... இங்க வா...’’ என்று அவளை தனியாக அழைத்துக் கொண்டு பக்கத்து அறைக்குச் சென்றார். ‘என்ன ரகசியம் பேசிக் கொள்வார்கள்...’ - ஆர்வம் தாளாமல், மெதுவாக அந்த அறைக்கு அருகே நெருங்கி, காதை கூர்மையாக்கினேன்.

‘‘எல், நிலைமை சிக்கலாகிடுச்சி. இவனை வெச்சி நாம, அந்த மாறவர்மபாண்டியனோட பயோ கிளாக் ஓலைச்சுவடியை எடுக்கலாம்னு பிளான் பண்ணினோம். அந்தப் பிளான் பணால். அன் லக்கி ஃபெல்லோ.... இவனோட வருஷத்துக்கே இனி இவன் திரும்பப் போகமுடியாது போல இருக்கு...’’

‘‘ஆமா டாடி. இப்ப என்ன பண்றது? இவனை 2018க்கு திரும்ப அனுப்பவே முடியாதா? பாக்க பாவமா இருக்கான் டாடி...’’

‘‘ரொம்பக் கஷ்டம்மா. 2018க்கு அனுப்ப முடியாதது மட்டுமில்லை... இவனை நாம ரொம்ப நாளைக்கு இங்க வெச்சிருக்கவும் முடியாது. இவனுக்கு அரசாங்கத்தோட உதார் கார்டு இல்லை. கண்டுபிடிச்சாங்கனா, நாம ரெண்டு பேரையும் 10 வருஷம் ஜெயில்ல தள்ளிடுவாங்க.’’

‘‘அப்ப என்ன பண்றது டாடி? 2048 மனுஷனா இவனை மாத்திட முடியாதா? இவன் மூளையோட வர்ஷனை நாம அப்டேட் பண்ணி இங்கயே வெச்சிக்கலாமா?’’

‘‘சான்ஸே இல்லை. கவர்மென்ட் பர்மிஷன் இல்லாம அதை பண்ண முடியாது. இவன் டைம் மெஷின் மூலமா இங்க வந்தான்னு சொன்னா, யாரும் நம்ப மாட்டாங்க. தவிர, இவனை யாருக்கும் தெரியாம நாம ஜி.ஹெச்.ல இருந்து கடத்திட்டு வந்திருக்கோம். நம்ம ரெண்டு பேரும் மாட்டிக்குவோம்.’’

‘‘இங்க இருக்கிற எந்த சூழலும் இவனுக்கு புரியாது. இங்க இருந்தான்னா இவன் பைத்தியம் ஆகிடுவான். இல்லை... பைத்தியம் ஆக்கிடுவான். பாவமா இருக்கு டாடி. இவன் இந்த 2048ல இருந்து தப்பிக்கவே முடியாதா...? இவனை இங்க இருந்து எப்படியாவது அனுப்பிடணும்...’’

‘‘இங்க இருந்து அனுப்பறதா...?’’ சில வினாடி மவுனத்துக்குப் பிறகு டாக்டர் சி பேசினார்... ‘‘அவனுக்கும் பிரச்னை இல்லாம, நமக்கும் தொந்தரவு வராம இருக்கணும்னா... ஒரே ஒரு வழிதான் இருக்கு எல்...’’

‘‘என்ன அது?’’

‘‘அவன் கதையை முடிச்சிடலாம்!’’

வ்வொரு அத்தியாயத்தின் கடைசி வரியிலும் வருவது போல... எனக்கு கண்கள் இருட்டி, மயக்கம் வந்தது!


(5.0... அடுத்தவாரத்தில் ‘கதையை’ முடிச்சிடலாம்!)

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

5 கருத்துகள்:

 1. சங்கரசுப்பிரமணியன், கோவைபுதூர்2 டிசம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 4:28

  ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை, நம்ம மூளையை பார்ஷியல் ஃபார்மட் பண்ணுவாங்க. - கற்பனைதான் அதுக்காக இப்படியா பாஸ்?
  அவங்க ஆட்சி நடந்தா குறையும். இவங்க ஆட்சி வந்தா கூடும். எதுக்கு வம்புனு எல்லாரும் சோலார் எனர்ஜிக்கு மாறிட்டம்
  இவனுக்கு அரசாங்கத்தோட உதார் கார்டு இல்லை.
  இது காமெடி கதையா, அரசியல் கதையா?
  எனிவே... படிக்க நன்றாக இருக்கிறது. குட்.

  பதிலளிநீக்கு
 2. கதையை முடிக்க போறீங்களா; ஏன்
  கொலை மிரட்டல் விடனுமா ?
  இன்னும் நிறைய பாய்ண் ஓ என
  வளரும். வரணும் ...

  பதிலளிநீக்கு
 3. 2048 வரை அந்த மருத்துவ ஆராய்ச்சி மையம் வருவதற்கான அறிகுறி இல்லை என்பதை கூறி.... உதார் கார்டு வைத்து ஒன்னும் செய்ய முடியாதென்பதையும் உரக்க சொல்லிய ஆசிரியருக்கு நன்றி.....

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...