திங்கள், 26 நவம்பர், 2018

மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன் - 3.0

(குங்குமம் வார இதழில் கடந்த 2017 தீபாவளி நேரத்திலும், நமது http://poonaikutti.blogspot.com வலைத்தளத்தில் இந்த 2018 தீபாவளி நேரத்திலும் இரு வார தொடராக வெளியாகி ‘டபுள் ஷாட்’ அதிர்வுகளை (!!??) ஏற்படுத்தியது ‘மாறவர்மபாண்டியன்’ இரு வார சிறுகதை. படித்த நண்பர்கள் பலர் அன்பாகவும், சிலர் ரிக்வஸ்ட் அனுப்பியும், இன்னும் சிலர் கொலை மிரட்டல் விடுத்தும் கதையை மேலும் தொடர வற்புறுத்தியதால்... (வேறுவழியேயின்றி!!!) மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன் - 3.0 - இன்னும் கூடுதல் பிரமாண்டமாக இங்கே...)

(தொடரின் முதல் பாகத்தை படிக்க: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 1)

(தொடரின் இரண்டாம் பாகத்தை படிக்க: மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 2)‘‘ஒன்றுக்கும் உதவாத இந்த ஜோதிடனோடு சேர்ந்து கொண்டு வெட்டியாக ஆராய்ச்சி, ஆராய்ச்சி என்று ஆட்சியையே கோட்டை விட்டு விட்டீர்கள் மன்னா. இனி நீங்கள் கவலைப்பட்டோ, திருந்தியோ பயனில்லை. நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இந்த அறுசுவை அசைவ விருந்தில் நஞ்சு கலக்கப்பட்டு விட்டது. எழுந்து வந்து என்னை தாக்க உங்கள் மனம் நினைத்தாலும் இனி உடல் உங்களுடன் ஒத்துழைக்காது. அப்பேர்பட்ட மிகக் கடுமையான நஞ்சு அது. இப்போதே அடிவயிறு வலித்திருக்குமே...? அடுத்த சில வினாடிகளில் நீங்கள் இருவர் மட்டுமல்ல.... புதிதாக வந்திருக்கும் இந்த அப்பாவி அரச விருந்தாளியும் சேர்ந்து மரணபுரி செல்லப் போகிறீர்கள் மன்னா. பாண்டிய தேசத்தின் புதிய மன்னனாக இன்னும் சிறிதுநேரத்தில் நான் முடிசூட்டிக் கொள்ளப்போகிறேன். வரட்டுமா...?’’ - சொல்லி விட்டு மந்திரி சுந்தரகனகேந்திரன் விருட்டென வெளியேறி, அறையின் கதவுகளை மூடி வெளிப்புறம் தாழிட... திகிலடித்து நிமிர்ந்தேன் நான்.

‘‘மோசம் போய் விட்டோம் மச்சாடனரே... மந்திரி சுந்தரகனகேந்திரன் இப்படி துரோகம் செய்வான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை...’’ முகம் வியர்த்து, லேசான விக்கலுடன் மன்னன் மாறவர்மபாண்டியன் உடல் தளர்ந்து கீழே சாய்ந்தான்.

நான் பாதி கடித்து வைத்திருந்த லெக் பீஸை தூர வீசி விட்டு துள்ளி எழுந்தேன். நிலைமையின் விபரீதம் புரிந்தது. அடிவயிறு அமிலமாய் எரிந்தது. ‘‘மன்னரே, மாறபொம்மன்...’’

‘‘மாறபொம்மன் இல்லை. என் பெயர் மாறவர்மன்...’’ - உயிர் பிரிகிற தருணத்திலும் கூட மன்னன் உஷாராய் ஸ்பெல்லிங் கரெக்‌ஷன் போட்டான்.

‘‘அதை விட்டுத் தள்ளுங்க. விருந்துல அந்த சனியன் விஷத்த கலந்துட்டதா சொல்லிட்டுப் போறானே... இப்ப என்ன பண்றது? பிழைக்க வழியே இல்லையா?’’ - பதறிய படி கேட்டேன்.

ந்த ரெண்டு கிராக்குகளும் எக்கேடும் கெடட்டும். நான் 2018ம் காலத்து ஆசாமி, 201ம் ஆண்டில், இப்படி அள்ளிப் போட ஆளில்லாமல் அனாதரவாக செத்துத் தொலைந்தால்... உலகம் ஏற்றுக் கொள்ளுமா? எப்படியாவது பிழைத்தாக வேண்டும். 2018க்கு பத்திரமாக திரும்பி விடவேண்டும்... - எனது மனம் படு வேகமாக, பல திசைகளிலும் தப்பிக்க வழி தேடியது.

‘‘நண்பரே... அந்த துரோகி நமது உணவில் கலந்திருப்பது மிகக் கொடிய விஷம். நாம் மரணதேவியை எதிர்கொள்ள சித்தமாவதைத் தவிர வேறு வழியில்லை...’’ காஷ்யேபச்சந்திர மச்சாடனன் கண்கள் சிவந்து, கண்ணீர் வடிய திக்கித் திணறிய படியே என்னைப் பார்த்து லேசான உளறலுடன் சொன்னான்.

னக்கு வயிற்றைப் பிரட்டி, பிரட்டி வலித்தது. டைம் மெஷினை சட்டென ‘ஆன்’ பண்ணி கிளம்பி விடவேண்டியதுதான். செத்தாலும், பாடி 2018ல் போய் விழட்டும். முடிந்தால் இந்த இருவரும் டைம் மெஷினில் ஃபுட்போர்ட் அடித்த படி என்னுடன் வந்து கரை சேரட்டும். நினைத்த படியே, ‘‘நேரத்தை கடத்தாதீங்க ப்ரோ. என்ன விஷம்னு சொல்லித் தொலைங்க. எந்த விஷம்னாலும் எங்க காலத்துல அதுக்கு ஒரு முறிவு மருந்து இருக்கும். ஏதாவது ஐடியா பண்ணுவோம்...’’ என்றேன்.

மாறவர்மபாண்டியன் அரை கண்களை மட்டும் திறந்த படி, டாஸ்மாக் கடை வாசலில் கிடக்கும் கிராக்கி போல என்னைப் பார்த்த படி உளறினான்... ‘‘இது ரொம்பக் கொடூரமான விஷம் நண்பரே. பூச்சி, புழுக்கள், விஷ ஜந்துக்களை அழிப்பதற்கு எங்கள் தேசத்தில் பயன்படுத்துகிற கொடிய நஞ்சு கொண்ட ரசாயன மருந்து இது. மனித உடலுக்குள் இது போனால், அவ்வளவுதான். இதோ... மரணதேவி என் கண்களுக்குத் தெரிகிறாள். விடைபெறட்டுமா நண்பரே...?’’

அவனது பதிலில் லேசாக ஜெர்க் ஆனேன். ‘‘என்னது, பூச்சிகளை அழிக்கப் பயன்படுத்துகிற ரசாயன உரமா?’’

‘‘ஆம் நண்பரே. இனி நாம் எதுவும் செய்ய முடியாது. எல்லாம் முடிந்து விட்டது...’’


‘‘யோவ்... அது உனக்குத்தான்யா விஷம். எங்க காலத்துல, நாங்க சாப்பிடற அரிசி, பருப்பு, கத்தரிக்காய், தக்காளி, பால், மட்டன், சிக்கன்... எல்லாமே ரசாயன பூச்சி மருந்து கலந்ததுதான்யா. அதை சாப்பிட்டு, சாப்பிட்டு எங்க பாடி பழகிடுச்சி. எங்களைப் பொறுத்தவரை அது இப்ப விஷமே இல்லை. அனேகமா, நான் தப்பிச்சிடுவேன்னு நினைக்கிறேன் மாறபொம்மன்...’’ - துள்ளி எழுந்தேன். வயிறு கடுமையாக வலித்தது; கலப்படமில்லாத, சுத்தமான பூச்சி மருந்தாக இருக்கக்கூடும்! நோ பிராப்ளம். 2018க்கு போனால், ஏதாவது ஒரு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிவிடலாம். பூச்சி மருந்து குடிச்ச கேஸ் என்று நாலு பேர் தப்பாகப் பேசினாலும், பரவாயில்லை. உத்தரவாதமாக உயிர்பிழைத்து விடலாம்.

டைம் மெஷினை தோற்கடித்து விடுகிற... ஒரு அசுர வேகத்தில் நிமிர்ந்து எழுந்தேன். நான் அணிந்து வந்திருந்த பேண்ட், ஷர்ட்  அறைக்குள் இருக்கிறது. அதை எடுத்து அணிவதற்கு இப்போது நேரமில்லை. இந்த மன்னன் கொடுத்த பாவாடை போன்ற ஒரு டிரெஸ்தான் மாட்டியிருக்கிறேன். பரவாயில்லை. மானத்தை விடவும் உயிர் முக்கியம். நல்ல காலம்... டைம்மெஷின் என்னிடம்தான் இருக்கிறது. இடுப்பில் சுருட்டி மறைத்து வைத்திருந்த டைம் மெஷினை உருவி எடுத்தேன். அவசர, அவசரமாக, அதை பவர் ஆன் செய்து, டெஸ்டினேஷன் இயர் என்ற பொத்தானை அழுத்தினேன். ஒளிர்ந்ததும், அதில் 2018 என இலக்கை செட் செய்தேன். அருகில் பார்த்தேன். மாறவர்மனும், மச்சாடனனும் மட்டையாகி மயங்கிக் கிடந்தனர். அவர்களை காப்பாற்றலாமா என்ற எண்ணத்தை உடனே மாற்றிக் கொண்டேன். வரலாறு மாறி விடும்!

வ்வளவுதான். ரெடி... ஜூட். அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கண்களை இறுக்க மூடிக் கொண்டபோது... லாபரட்டரியில் புரபஸர் சாமியப்பன் அடிக்கடி என்னிடம் சொல்கிற ஒரு பழமொழி சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்தது... ‘‘அவசரத்தில விட்டா, அண்டாக்குள்ள கூட கை நுழையாதுடா டைகர்...’’ - அடச்சே, இந்தப் பழமொழி எதுக்கு இப்ப சம்பந்தமில்லாம ஞாபகம் வருது... நினைத்த படி கண்களைத் திறந்தேன். கிறுகிறுத்துப் போனேன்.


துரை தான்... ஆனால், மதுரை மாதிரியே இல்லை? டவுன்ஹால் ரோட்டில் நின்ற படி நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்தபோது, ஏதோ ஊர் மாறி வந்து இறங்கியிருப்பது போல தெரிந்தது. என்ன ஆச்சு...? பக்கத்துக் கடையில் தொங்கிய காலண்டரைப் பார்த்த போது, புரையேறியது. ஐயய்யோ... இது 2048.


தறிய படி டைம் மெஷினை எடுத்து பார்த்தபோதுதான், உயிர் பிழைக்க கிளம்புகிற அவசரத்தில் நான் செய்த மிகப் பெரிய தவறு தெரிந்தது. டைம் மெஷினில் டெஸ்டினேஷன் இயர் 2018 என செட் பண்ணுவதற்குப் பதில், பதற்றத்தில் ஒரு பட்டனை மாற்றி அழுத்தி 2048 என டைப் செய்திருக்கிறேன்.

‘‘டைகர் ரொம்பக் கவனம். இந்த டைம் மெஷின் இன்னும் ப்ராசஸ் முழுமையடையலை. சோதனை அடிப்படையில் தான் இதை டிரெயல் பண்றோம். இதை வெச்சி, குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு போகலாம். அங்கயிருந்து திரும்ப வரலாம். அவ்வளவுதான். அப் அண்ட் டவுன் இரண்டு தடவைதான் இது இயங்கும். ஸோ... ரொம்ப கவனமாக இதை ஹேண்டில் பண்ணனும். சரியா...?’’ - கிளம்புவதற்கு முன், புரபஸர் என்னிடம் சொன்னதும், அது புரிந்தும் புரியாமலும் நான் தலையாட்டியதும் ஞாபகம் வர... எனக்கு கண்கள் இருட்டியது. கால்களுக்குக் கீழே பூமி குலுங்குவது போல இருந்தது. கிறுகிறுத்துக் கீழே சரிந்தேன்.

ண் விழித்துப் பார்த்த போது, சூழல் மிக வித்தியாசமாக இருந்தது. தலைக்கு மேலே வித்தியாசமான வடிவமைப்புடன் சில கருவிகள் இருந்தன. அந்தக் கருவிகளில் இருந்து நீண்ட ரப்பர் குழாய்கள் எனது மார்பிலும், தலையிலும் பொருத்தப்பட்டிருந்தன. அறை ஜிலுஜிலுவென இருந்தது. இளையராஜாவின் மென்மையான இசை ஒன்று மிக மெல்லிய ஓசையில் அறையை நிரப்பிக் கொண்டிருந்தது. ‘‘இது எந்த இடம்... நான் இப்போது எங்கே இருக்கிறேன்? இது என்ன ஆண்டு?’’ - யோசித்துக் கொண்டிருந்த போதே, ‘‘டாடி... ஆள் முழிச்சிட்டான்...’’ ஒரு பெண்ணின் கிரீச் குரல் கேட்டது. குரலை சற்று நுணுக்கமாக ஆராய்ந்தபோது, அது ஒரு இளம்பெண்ணிற்கு சொந்தமான குரலாக இருக்கலாம் என்று தோன்றியது.

ன் கணிப்பு தவறாக இருக்கவில்லை. அடுத்த சில வினாடிகளில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபரும், அவருக்கு அருகே ‘‘டாடி... ஆள் முழிச்சிட்டான்...’’ குரலுக்குச் சொந்தமான இளம்பெண்ணும் என்னருகே வந்தனர். மலைக்கு போகும் சாமியார்கள் போல கழுத்தில் நிறைய பாசிமாலை, காவி வேட்டி, சட்டை போல ஒரு வித்தியாச டிரெஸ் அணிந்திருந்தாள். ‘‘நான் டாக்டர் சி. இவ, என்னோட மகள் + ஜூனியர் ரிசர்ச் ஸ்காலர் டாக்டர் எல். உடம்பு எப்படி இருக்கு? எப்படி ஃபீல் பண்ற?’’ - அந்த நபர் என்னை நெருங்கி நின்றபடி கேட்டார்.

சில நிமிட யோசனைக்குப் பிறகு கேட்டேன்... ‘‘டாக்டர் இது என்ன வருஷம்?’’

‘‘உடம்பு எப்படி இருக்கு? எப்படி ஃபீல் பண்ற?’’ - என் கேள்விக்கு பதில் வரவில்லை.


‘‘நல்லா இருக்கு டாக்டர். நார்மலா இருக்கேன். இது என்ன வருஷம், என்ன தேதி,  ப்ளீஸ்...’’

‘‘2048, டெலிவரி, 9.’’

‘‘டெலிவரியா?’’

‘‘யெஸ்.’’

‘‘டெலிவரி...? இப்படி ஒரு மாசமா? என்ன சார், நான் கேள்விப்படாத பெயரா இருக்கு?’’

‘‘ரெண்டு வருஷம் முன்னால, புதுசா சேர்த்திருக்காங்க. ஜனவரி, பிப்ரவரி, டெலிவரி, மார்ச். சோலார் போலரைஸேஷன் மாடியூல் நிறைய மாறிடுச்சி. அதை பேலன்ஸ் பண்ணறதுக்காக, மாதத்தோட எண்ணிக்கை ஒண்ணு கூடியிருக்கு. இப்ப மொத்தம் 13 மாசம்...’’

‘அய்யய்யோ... இதுக்கு 201 எவ்வளவோ தேவலை போலிருக்கே...’ மனது குழம்பியது. ‘‘டாக்டர், ப்ளிஸ். நான் சொல்றதை நம்புங்க. நான் 2018ல இருந்து வர்றேன். டைம் டிராவல். கிபி 201ல இருந்து 2018க்கு போறதுக்குப் பதில் அவசரத்தில ஸ்டாப் மாறி, 2048க்கு வந்து சேர்ந்திட்டேன். ப்ளீஸ், உங்களையும், உங்க அழகான பொண்ணையும் பார்த்தா நல்லவங்க மாதிரி தெரியுது. என்னை திரும்பவும் 2018க்கு அனுப்ப முடியுமா?’’


னக்கருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தார் டாக்டர் சி. ‘‘எங்களுக்கு எல்லாம் தெரியும். நீ, ஜி.ஹெச்ல அட்மிட் ஆகி மயக்க நிலையில இருந்த. கொஞ்சம் ஃபுட் பாய்சன். அதுக்கு ட்ரீட் பண்ணும் போது, நீ கொஞ்சம் வித்தியாசமான ஆள்னு தெரிஞ்சது. உன்னோட மூளையை மேப்பிங் செஞ்சு பார்த்தோம்...’’

‘‘மேப்பிங்கா? அப்டினா?’’

‘‘உன்னோட மூளையில இருக்கிற நியூரான்ஸை ஸ்டடி பண்ணுற விஷயம் அது. மெஸ்மரைஸ்ட் கண்டிஷன்ல உன்னோட மூளைய ரீட் பண்ணதும், நீ டைம் டிராவல் பண்ணி இங்க லேண்ட் ஆகியிருக்கிறது தெரிஞ்சது. ஆக்சுவலி, டைம் டிராவல் இந்த 2048ல கூட இன்னும் சோதனை லெவல்ல தான் இருக்கு...’’

‘‘மூளையை எப்படி ரீட் பண்ணுனீங்க...?’’

‘‘பிரைன் மேப்பிங்...? சிம்பிள். விஷூவ்லைசேஷன் மானிட்டர்ல உன்னோட மெமரீஸை கனெக்ட் பண்ணமுடியும். அப்டி பண்ணிட்டா, உன்னோட ஞாபக அடுக்குகள் எல்லாம் இங்க மானிட்டர்ல, சினிமா மாதிரி அப்படியே தெரியும். 2018ல நீ புரபஸர் சாமியப்பன்கிட்ட பேசுனது, பயோ கிளாக் ரகசியம் தெரிஞ்சுக்கிறதுக்காக 201ம் வருஷத்துக்கு போனது... அங்கயிருந்து உயிர் பிழைச்சு ஓடி வந்தது... எல்லாம் டிவி சீரியல் போல செம இன்ட்ரஸ்டிங்கா இந்த மானிட்டர்ல பாத்தோம்...’’


‘அடப்பாவிகளா... மனசுக்குள்ள இருக்கிறத, டிவியில கனெக்ட் பண்ணி படமாவே பார்க்குற அளவுக்கு டெக்னாலஜி இவ்வளவு தூரத்துக்கு இம்ப்ரூவ் ஆயிடுச்சா?’’

‘‘யெஸ். உன்னோட மூளையை மேப்பிங் பண்ணிப் பார்த்தப்ப, அது ஆட்டோ அப்டேட் ஆகாம, 30 வருஷம் பின்தங்கி ஓல்ட் வர்ஷனில் இருந்ததை கண்டுபிடிச்சோம். நீ ஒரு பெக்கூலியர் கேஸ். அதான், ஜி.ஹெச்.ல இருந்து உன்னை கிளப்பி, எங்க லேபுக்கு கொண்டு வந்திட்டோம். உன்னை வெச்சு எங்களுக்கு சில வேலைகள் ஆக வேண்டியிருக்கு...’’

‘‘இல்ல டாக்டர். நான் அதுக்கெல்லாம் வொர்த் இல்லை. என்னை 2018க்கு அனுப்பி வெச்சிடுங்க ப்ளீஸ். நான் வந்த டைம் மெஷின் வேற காலாவதி ஆகிடுச்சி. எப்படி 2018க்கு போறதுனே தெரில. உங்க நவீன டெக்னாலஜி வெச்சி, என்னை மட்டும் பத்திரமா அனுப்பி வெச்சிட்டிங்கனா, பாண்டிகோவில்ல உங்க பேரையும், இந்த எல் பெயரையும் சொல்லி கெடா வெட்டுறேன்...’’

ல் நெருங்கி என்னருகே வந்தாள். ‘‘பயப்படாத டைகர். உன்னை 2018க்கு அனுப்ப நாங்க உதவி பண்றோம்...’’

‘‘ரொம்ப நன்றி எல் மேடம்...’’ இப்போது எனது மனது கொஞ்சம் நார்மலுக்கு திரும்பியிருந்தது. ‘‘ஆமா, அதென்ன கழுத்தில பாசி மாலை? காவி வேட்டி, சட்டை மாதிரி வித்தியாச டிரெஸ் போட்டிருக்கீங்க?’’

‘‘இதுவா...?’’ அவள் டிஜிட்டலில் சிரித்தாள். ‘‘நான்... மலைக்கு மாலை போட்டிருக்கேன்.’’


‘‘மலைக்கு மாலை போடறதா...?’’ நான் பெட்டில் இருந்து ஏறக்குறைய எழுந்து உட்கார்ந்தேன். ‘‘அதெல்லாம் ஆண்கள் மட்டும்தானே பண்ண முடியும்? லேடீஸ் மாலை போடமுடியாதே? போடக்கூடாதே. பெரிய பிரச்னை ஆகிடுமே...?’’

ல் கையை ஓங்கிக் கொண்டு என்னை குத்த வந்தாள். ‘‘நீ எந்தக் காலத்தில இருக்க டைகர்?’’

வளை தடுத்து விட்டு டாக்டர் சி என்னிடம் வந்தார். ‘‘அந்தக் காலம் எல்லாம் மலையேறிடுச்சிப்பா. மலை மேல இருக்கிற அந்த சாமி, இந்த பொண்ணுங்க கனவில ஒரு நாள் வந்திருக்கார். ஆயிரக்கணக்கான வருஷமாக ஆம்பளை சாமிங்க மட்டும்தான் மலைக்கு வந்து என்னை பார்த்துட்டு போறாங்க. இனி ஒரு சேஞ்சுக்கு, பொம்பளை சாமிங்க மட்டும்தான் மாலையணிஞ்சு, விரதம் இருந்து என்னைப் பார்க்க வரணும். எனக்கு எல்லாரும் ஒண்ணுதான்னு சொல்லி உத்தரவு போட்டுட்டாராம். நான் எல்லாம் சரணம் சொல்லி, மலைக்குப் போய் பத்து வருஷமாச்சு. இப்பல்லாம் நாங்க நினைச்சாக் கூட மலையேற முடியாது. இது இவங்க காலம்...’’

‘‘மலைக்கு பொம்பளைங்க வந்தா புலி வந்து அடிச்சிடும்னு சொன்னாங்களே...’’


‘‘நோ.. நோ. அந்த சாமி கனவில வந்து உத்தரவு கொடுத்தப்ப, பக்கத்துல அவரோட புலியும் இருந்துச்சாம். சாமி உத்தரவு தந்தப்ப, தலையை ஆட்டி அதுவும் சம்மதம் கொடுத்திருக்கு. அதனால, ஒரு பயமுமில்ல...’’

னக்கு தலையைச் சுற்றியது. ‘‘ரைட்டு. எனக்காகவும் வேண்டிக்கோங்க. என்னை எப்ப 2018க்கு அனுப்பப் போறீங்க?’’

‘‘அதான் சொன்னம்ல. நீ எங்களுக்கு ஒரு வேலை பண்ணனும். அதை செஞ்சு முடிச்சா, நீ உன்னோட வருஷத்துக்கு திரும்பிப் போக நாங்க உதவி பண்றோம். அதுக்கு முதல்ல, உன்னோட டைம் மெஷினை பழைய கண்டிஷனுக்கு கொண்டு வர்ற வழியைப் பார்க்கணும். ’

‘‘வேலையா? நான் என்ன வேலை பண்ணனும்?’’


ல் சிரித்தபடியே பேசினாள். ‘‘சொல்றேன் டைகர். வருஷம் ஆக, ஆக மனுஷனோட ஆயுள் குறைஞ்சுகிட்டே போகுது. இப்ப மனிதனோட சராசரி ஆயுள் என்ன தெரியுமா...? ஜஸ்ட் 45. இதை சரி பண்ணி, ஆயுளை கூட்டுற ஆராய்ச்சியை என்னோட டாடியும், நானும் பண்ணிகிட்டு இருக்கோம்...’’

‘‘ரொம்ப சந்தோஷம். இதில, என்னோட பார்ட் என்ன?’’

‘‘கரெக்டா புரிஞ்சுகிட்ட...’’ டாக்டர் சி என்னை தட்டிக் கொடுத்தார். ‘‘உன்னோட மூளையை மேப்பிங் பண்ணி மானிட்டர்ல பார்த்தப்போ,  மாறவர்மபாண்டியனோட பயோ கிளாக் ஓலைச்சுவடி பத்தி தெரிஞ்சுகிட்டோம். இன்ட்ரஸ்டிங். அந்த ஓலைச்சுவடி மட்டும் கிடைச்சா, எங்க ஆராய்ச்சி கிட்டத்தட்ட சக்ஸஸ் ஆகிடும். அதனால...’’

‘‘அதனால...’’ எனக்குள் லேசாக குளிர் ஜூரமடிக்க ஆரம்பித்தது.

‘‘அதனால, டைம் மெஷின் மூலமா, திரும்பவும் நீ 201க்கு போகணும். உன் கூட எல் வருவா. மாறவர்மபாண்டியனோட அந்த பயோ கிளாக் ஓலைச்சுவடியை எடுத்துகிட்டு திரும்பிடுங்க. வர்ற வழியில உன்னை 2018ல பத்திரமா இறக்கி விட்டுட்டு, எல் இங்க 2048க்கு வந்திடுவா. இதுக்கு ஓ.கே.ன்னா உனக்கு உதவி பண்றோம். இல்லைனா...’’

‘‘இல்லைனா...?’’‘‘உன்னோட மூளையை ப்ளு ரெய்ஸ் மூலமா லேட்டஸ்ட் வர்ஷனுக்கு அப்டேட் பண்ணி விட்டுருவோம். நீ 2018யை மறந்துட்டு, இந்த 2048ல் திரிய வேண்டியதுதான்...’’

னக்கு கண்கள் இருட்டி மீண்டும் மயக்கம் வந்தது.

(அடுத்தவாரம்... 4.0)

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

7 கருத்துகள்:

 1. அட்டகாசம்... விரைவில் முடித்து விடாதீர்கள்...

  பதிலளிநீக்கு
 2. எல்லா வகையிலும் மிக முக்கியமான குறிப்புகளையும் ஆணித்தரமாக தந்ததற்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. செம ஜாலி கதை சார். 3.0 என்ற தலைப்பில் ஆரம்பித்து, கடைசியில் சபரிமலை விவகாரம் வரை சமகாலத்து செய்திகளை கையில் எடுத்துக் கொண்டு, காமெடியுடன் கதையை செம ஸ்பீடாக நகர்த்தி விட்டீர்கள். உண்மையாகவே 4.0 க்காக காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. மலைக்கு மாலை மூலம் பெண்களின் உரிமையை கூறியது அருமை....

  பதிலளிநீக்கு
 5. ஸாரி....ஸாரி....ஸாரி என்று பத்து பக்கத்திற்கு ஸ்ரீராமஜெயம் போல அடித்துவிட்டுத்தான் எழுதவே துவங்க வேண்டும் போலிருக்கிறது. அந்தஅளவிற்கு தாமதம். ஆனாலும் ஸாரிகளைப் பார்த்து சலித்துப் போய் ஸாரி என்று சொல்லிவிட்டு கணினியின் விழியை மூடிவிடுவீர்களோ என்ற பயத்தில் அந்த பத்து பக்க டைப்பிங்கை டெலிட் செய்து விடுகிறேன்.
  நாவல் என்று முடிவு செய்த பிறகு அதற்கேற்ப அத்யாயங்களை, காட்சிகளை திட்டமிட்டு அமைத்து... (சில நேரங்களில் இழுத்து) நிர்ணயித்த அளவிற்கு கொண்டு வந்து நிறுத்த முடிகிறது.
  ஆனால் இது சிறுகதை. ஆழமாய் முற்றுப்புள்ளி வைத்து தூக்கிப் போட்ட ஒரு கதையை தூக்கி வந்து நாவலாக்குவது என்பது மகா ரிஸ்க்கான விஷயம். லாவகமாக கையாண்டிருக்கிறீர்கள் சார். அதுவும் எந்த வித்தியாசம் தெரியாமல் பயணிக்கிறது தொடர்.
  குறிப்பாக... செத்தாலும் பாடி 2018ல் விழட்டும். புட்போர்ட் அடித்தபடி கரைசேரட்டும். டாஸ்மாக்கடை கிராக்கி போல அரைகண் திறந்தபடி, டெலிவரி, சாமி உத்தரவு தந்தப்போ தலையை ஆட்டி அதுவும் சம்மதம் கொடுத்திருக்கு. என்று வரிக்கு வரி வந்து விழுந்த ஹாஸ்யம் படிப்பவர்களை ரொம்பவேவே ஈர்க்கிறது.
  அறிவியல் கதை என்றாலே அநியாயத்திற்கு சீரியசாக இருக்கும். ஆனால் நகைச்சுவையும் கலந்ததில் அம்சமாக வந்திருக்கிறது.
  ஒரு காட்சியில் நிறைய யுக்திகள் இருப்பது அந்த அத்தியாயத்தை சுவாரஸ்யப்படுத்தும். 2048க்கு வந்ததை வெறும் காட்சிகளிலும், பேச்சுகளிலும் விவரித்துவிட்டுச் செல்லாமல் டெலிவரி, சபரிமலை என்று ஹாஸ்யத்தை வாரி இறைத்திருப்பது நன்றாக இருக்கிறது சார்.
  இயல்பான நடை.. வாசகர்களை நம்ப வைக்கும் வகையில் ஆங்காங்கே ஆங்கில அறிவியல் பதங்கள் என்று கச்சிதமாகவே அமைந்திருக்கிறது.
  தவிர ஒவ்வொரு தொடர் முடிவும், துவக்கமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. நாவலாக முழுவடிவம் பெறுகையில் எழுத்துலகில் சின்னதாய் ஒரு அதிர்வை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது.
  இரண்டாவது தொடரில் கூட சின்னதாய் திருத்தம் செய்ய தோன்றியது. ஆனால் 3ல் மாற்று கருத்து எதுவும் சொல்ல முடியாத அளவிற்கு உச்சத்தில் போய் நின்று கொண்டுள்ளது.
  ஒவ்வொரு படைப்பாளிக்கும் டாப் 5 கதைகள் இருக்கும். வெகுகாலத்திற்குப்பிறகே அந்த டாப்கள் பக்குவப்படும். ஆனால் குறுகிய காலத்திலே உங்கள் வாழ்நாளில் சிறந்த படைப்பைத் தொட்டு விட்டீர்களோ என்று தோன்றுகிறது சார்.
  அருமையான நடை. வழிநெடுகிலும் நகைச்சுவை. எதிர்பார்க்காத திருப்பம். அள்ளுகிறது சார் தொடர்....
  நானும் பூனைக்குட்டிக்காக தினமும் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. உங்க மூளைய ஸ்கேன் பண்ணி படமா பாக்கனும்
  யப்ப்பா என்னமா யோசிக்கீறீங்க

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (https://bookmarking.tamilbm.com/register/) திரட்டியிலும் இணையுங்கள்.

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...