‘‘ஐபிஎல் போட்டிகளை புறக்கணித்தால்...? காவிரியில் தண்ணீர் வந்து விடுமா? என்னடா இது காட்டுமிராண்டித்தனமான போராட்டம்?’’ என்று அறிவுத்திறன் அதிகம் வாய்க்கப் பெற்றவர்கள் முகநூல்களில் கேள்வி எழுப்புகிறார்கள். படித்தவர்கள் எழுப்புகிற கேள்வி இல்லையா...? கேட்பதற்கு நியாயம் போலவே இருக்கிறது. ‘‘தமிழர்கள் கிரிக்கெட் பார்க்காமல் இருந்தால் கர்நாடகாவுக்கோ, மத்திய அரசுக்கோ என்ன நஷ்டம்? நமது மகிழ்ச்சிதானே கெடுகிறது... இதெல்லாம் ஒரு போராட்டமா?’’ என்று கேவலமான எண்ணம் உள்ளுக்குள் தோன்றலாம். தோன்றினால்... உலக வரலாறு தெரியவில்லை என்றுதான் அர்த்தம். வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியுள்ள பல புரட்சிப் போராட்டங்களும், அவற்றின் விளைவாக, புறக்கணிக்கப்பட்ட மக்கள் பெற்ற உரிமைகளும் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். வரலாறு தெரியாத ஜடமாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றேதான் அர்த்தம்!
‘வேலை கிடைச்சா... அங்க கிடைக்கணும்; செட்டில் ஆகணும்...’ என்று இன்றைக்கு நிறைய இளைஞர்கள் லட்சியம் கொண்டிருக்கும் அமெரிக்க தேசத்தின் நிலைமை, ஒரு எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்போது போல இல்லை. அதாவது, 1956ம் ஆண்டுக்கு முன்பு வரை, அங்கு பஸ் பயணம் என்பது கூட பாகுபாடுகள் நிரம்பியதாகவே இருந்தது. அப்படி என்ன பாகுபாடு?
பஸ்களின் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்ய, வெள்ளை இனத்தவருக்கு மட்டுமே அங்கு உரிமை. பஸ்களின் முன்பாதி இருக்கைகள் வெள்ளையர்களுக்கானவை. பின்பாதியில் கறுப்பு இனத்தவர்கள் அமர்ந்து கொள்ளலாம். ஆனால், அதுவும் கன்ஃபார்ம் சீட் இல்லை. ‘அப்பாடா... சீட் கிடைச்சாச்சு...’ என்று நிம்மதியாக கண்ணை மூடி தூக்கம் போட்டு விடமுடியாது. முன்பாதி வெள்ளையர் இருக்கைகள் நிரம்பி விட்டால், அடுத்த ஸ்டாப்பில் பஸ் நிற்கும் போது, வெள்ளை அண்ணாச்சிகள், அக்காகள் ஏறி விட்டால், பின்பாதியில் அமர்ந்திருக்கிற கறுப்பு இனத்தவர்கள் ஒழுங்கு மரியாதையாக எழுந்து அவர்களுக்கு இடம் கொடுக்கவேண்டும்.
‘என் காசுல, நான் டிக்கெட் எடுக்கிறேன். எதுக்கு கொடுக்கணும் அவனுக்கு இடம்?’ என்றெல்லாம் வீ.பா.க.பொம்மன் மாதிரி உரிமை முழக்கம் எழுப்ப முடியாது. எழுப்பினால், வேறு மாதிரி ‘கவனிப்பு’ கிடைக்கும். அதேசமயம், வெள்ளையர்களுக்கான இருக்கைகள் காலியாக இருந்தாலும் கூட, கறுப்பு இனத்தவர்கள் அங்கே போய் அமர்ந்து விடமுடியாது. கூடவும் கூடாது. காலியாக இருக்கும் இருக்கைகளை பார்த்த படியே, கம்பியைப் பிடித்த படி நின்று கொண்டு போகவேண்டுமே தவிர, அந்த முன்னிருக்கைகளுக்கு மட்டும் ஆசைப்படவே கூடாது.
இப்படியாக நிலைமை போய்க் கொண்டிருந்த போது, 1955, டிசம்பர் 1ம் தேதி அந்த சம்பவம் நடக்கிறது. என்ன சம்பவம்...?
அலபாமா மாகாணத்தின் மான்ட்கோமரி நகரத்தின் மாலை நேரம் அது. அலுவலக பணியை முடித்து விட்டு, வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏறினார் கறுப்பு இனப் பெண்ணான ரோசா பார்க்ஸ் (Rosa Parks 1913, பிப்ரவரி 4 - 2005, அக்டோபர் 24). கர்ப்பிணி பெண் வேறு. களைப்பாக இருந்தவர், கறுப்பு இனத்தவர்களுக்கான பின் வரிசையில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து பயணித்தார். அவரது போதாதநேரம்... இரண்டாவது ஸ்டாப்பில், ஏழெட்டு வெள்ளைக்கார பாசஞ்சர்ஸ் பஸ்சில் ஏறினார்கள். முன்பக்கம் இடம் ஃபுல். வழக்கம் போல, கறுப்பு இன அன்பர்கள், இடத்தை காலி செய்து கொடுத்து எழுந்து நின்றார்கள்.
ஒரு வெள்ளைக்காரர், ரோசா பார்க்ஸ் அமர்ந்திருந்த இருக்கைக்கு வந்தார். இடத்தைக் காலி செய்யுமாறு அன்புக் கட்டளை பிறப்பித்தார். கர்ப்ப கால களைப்புடன் இருந்த பார்க்ஸ், அவரது கோரிக்கையை நிராகரித்தார். அதன்பிறகு நடந்தது வரலாறு. என்ன வரலாறு?
கர்ப்பிணி பெண்ணான ரோசா பார்க்ஸ், பஸ்சில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டார். அத்தோடு முடியவில்லை. சட்ட திட்டங்களை மீறி விட்டதாகக் குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் காரணமாக, அவரது அலுவலகப் பணி பறிக்கப்பட்டது. மட்டுமல்ல... வேறெந்த நிறுவனமும் அவருக்கு வேலை வழங்க தயாராக இல்லை. வறுமை கழுத்தை நெரிக்கிறது. இருக்கையை காலி செய்ய மறுத்த பார்க்ஸ், அதன் காரணமாக குடும்பத்துடன் ஊரையே காலி செய்து கொண்டு டெட்ராய்ட் நகருக்கு இடம் பெயர்ந்தாக வேண்டிய பரிதாப நிலைமை.
மாபெரும் மனிதத் துயரமான இந்தச் சம்பவத்தை எதிர்த்து போராட்டம் அறிவித்தார் அமெரிக்காவின் மாபெரும் சமூக உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் (Martin Luther King, Jr. 1929, ஜனவரி 15 - 1968, ஏப்ரல் 4). போராட்டம் என்றால்... இது வேற மாதிரி. பேருந்து இருக்கைகளில் தங்களுக்கும் சரிசமமான உரிமை வழங்கும் வரை, கறுப்பு இன மக்கள், பேருந்து பயணங்களை அடியோடு புறக்கணிக்க வேண்டும் என்று பகிரங்க அழைப்பு விடுத்தார்.
நம்ம ஊர் படித்த மேதாவிகள் போல, ‘பஸ் பயணத்தை புறக்கணிச்சா, நமக்குத்தான நஷ்டம்? நாமதான கெடந்து நடந்து சாகணும்? புத்தி கெட்டுப் போச்சா? இதெல்லாம் ஒரு போராட்டமா?’ என்று மீம்ஸ் போடவில்லை. மாறாக, ஒட்டுமொத்த கறுப்பு இன மக்களும், விளைவுகள் குறித்து யோசிக்காமல் மார்ட்டின் லூதரின் குரலுக்கு கட்டுப்பட்டனர்.
துவங்கியது வரலாற்றில் மறக்க முடியாத அந்த பஸ் புறக்கணிப்புப் போராட்டம் (Montgomery Bus Boycott 1955 -1956). ஒரு கறுப்பு இனத்தவரும் பஸ்சில் பயணம் செய்யவில்லை. வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே சென்றனர். சில கிலோமீட்டர் தொலைவில் அலுவலகம் வாய்க்கப் பெற்றவர்கள், ஒரு மணிநேரம் முன்னதாகவே டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினார்கள். ஆரம்பத்தில் இந்த நடை போராட்டத்தை அமெரிக்கா கேலியாக பார்த்தது. சிரித்தது. கிண்டல் செய்தது. ‘நடந்து சாகுங்க...’ என்று பஸ் ஜன்னல்களின் வழியே டாட்டா காட்டி மகிழ்ந்தது. ஆனால், கறுப்பு இன மக்கள் துளி சோர்வடைய வில்லை.
ஒரு மாலைப்பொழுதில், புறநகரின் தனிமைச் சாலையில் கறுப்பின மூதாட்டி கையில் பைகளுடன் வியர்க்க, விறுவிறுக்க நடந்து கொண்டிருந்தார். அந்தப் பக்கமாக வந்த நகர பஸ்சின் டிரைவர் பரிதாபப்பட்டு, பஸ்சை நிறுத்தினார். ‘‘ஏன் பாட்டி, வயசான காலத்தில இந்த வீம்பு? முடியாத உடம்போட இப்படி நடந்து சாகணுமா? இடம் காலியா இருக்கு. வந்து பஸ்சில ஏறு...’’ என்று அழைக்கிறார். அதற்கு அந்த கறுப்புப் பாட்டி இப்படி பதிலளிக்கிறார். ‘‘நான் எனக்காக நடக்கவில்லை மகனே. எனது அடுத்த தலைமுறைக்காக நடக்கிறேன்...’’ - தமிழகத்தில் இன்று நடக்கிற போராட்டங்களை கேலி செய்கிற படித்த மேதாவிகளுக்கு, அந்தக் கறுப்புப் பாட்டியின் பதிலில் இருக்கிறது சேதி.
ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதத்துடன் முடிவதாக இல்லை நடை போராட்டம். ஆரம்பத்தில் கேலி செய்த அமெரிக்க நிர்வாகம், நாளாக ஆக லேசாக திணறத் தொடங்கியது. பஸ்களில் அதிகப்படியாக பயணம் செய்பவர்கள் கறுப்பு இன மக்களே. அவர்கள் அடியோடு பஸ் பயணத்தை புறக்கணித்து விட்டதால், வருமானம் ரிவர்ஸ் கியரில் செல்லத் துவங்கியது. பஸ்கள் கலெக்ஷன் இல்லாமல் காத்தாடின. ஆறே மாதத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டு போக்குவரத்து நிர்வாகங்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தன. ‘‘போராட்டம் போதும். மீண்டும் பஸ்சில் பயணம் செய்யலாம்... வாங்க...’’ என்று கறுப்பு இன மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தன.
அப்போதும் அவர்கள் அசைந்து கொடுப்பதாக இல்லை. ‘‘பஸ் பயணங்களில் கறுப்பு இன மக்கள், தாங்கள் விரும்பிய எந்த இருக்கையில் வேண்டுமானாலும் அமரலாம். வெள்ளையின மக்களுக்கு சரி்க்கு சமமான உரிமைகளுடன் பயணப்படலாம் என்று சட்டம் கொண்டு வருகிற வரைக்கும் எங்கள் போராட்டம் தொடரும்,’’ என்று அறிவித்தார் மார்ட்டின் லூதர் கிங். இறங்கி வந்து பேசி பயனில்லாததால் அடுத்தகட்டமாக அச்சுறுத்தும் வேலைகள் துவங்கின. மார்ட்டின் லூதர் கிங் கைது செய்யப்பட்டார். அவரது வீடு குண்டு வீசி தகர்க்கப்பட்டது. என்ன மிரட்டியும், கறுப்பு இன மக்கள் துளி அசைவதாக இல்லை. ‘பயமா... எனக்கா... ஹா ஹா ஹா...’ என கபாலி ரஜினி போல, கண்டுகொள்ளாமல் நடையைப் போட்டனர்.
நடை போராட்டம் ஒரு வருடத்தைக் கடந்தது. இனியும் தொடர்ந்தால் வெட்கக்கேடு என்ற முடிவுக்கு வந்தது அமெரிக்க அரசாங்கம். ஏறத்தாழ 380 நாட்களைக் கடந்தப் பிறகு, 1956ல் ‘‘பஸ் பயணங்களில் இன பாகுபாடு காட்டுவது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது,’’என அமெரிக்க உச்சநீதிமன்றம் அறிவித்தது. வெள்ளையர்களுக்கு இணையான சுதந்திரம், அந்த நீண்ட, நெடிய போராட்டத்துக்குப் பிறகே அமெரிக்க கறுப்பின மக்களுக்குக் கிடைத்தது.
யோசித்துப் பாருங்கள். உட்கார இடம் தரவில்லை என்பதற்காக, பஸ்சை விட்டு இறங்கி நடந்து போகிறேன் என்று போராட்டம் அறிவித்தால்... இந்த உலகம் கேலி பேசாதா, என்ன? எழுபது வருடங்களுக்குப் பிறகு, இன்றைக்கு ‘‘கிரிக்கெட் பார்க்காமல் புறக்கணித்தால், காவிரி தண்ணீர் வந்து விடுமா, என்ன?’’ என்று உலகம் கேலி பேசுகிறது. ஐபிஎல் போட்டிகளை புறக்கணித்தால் என்ன நடக்கும்?
முதலில் ஐபிஎல் போட்டிகளைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். ஐபிஎல் என்பது ஏதோ உண்மையான, நேர்மையான உணர்வுடன் நடக்கிற கிரிக்கெட் விளையாட்டு அல்ல. இன்றைக்கு சர்வதேச அளவில் நடக்கிற கிரிக்கெட் போட்டிகளே உண்மையான, நேர்மையான உணர்வுகளுடன் விளையாடப்படாத போது, வெறும் வர்த்தக நோக்கங்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிற ஐபிஎல் பற்றி நாம் சொல்லத் தேவையே இல்லை. ஜியோ அம்பானிகளுக்கும், மல்லையாக்களுக்கும் சொந்தமான அணிகளே இங்கு விளையாடுகின்றன. அவர்கள் தருகிற கோடி கரன்ஸிகளுக்குக் கட்டுப்பட்டு, கைகைட்டிக் கொண்டு உள்ளூர் துவங்கி சர்வதேச அளவிலான அடிமைகள் விளையாடி மகிழ்விக்கிறார்கள். களத்தில் ஆட்டம் முடிந்ததும், இரவில் இந்த அடிமைகளைக் கொண்டு பார்ட்டி நடத்தி அதற்கும் டிக்கெட் போட்டு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் போட்டிகள் புறக்கணிக்கப்பட்டால், நிராகரிக்கப்பட்டால்... அம்பானிகளும், இந்திய அரசை வழிநடத்தும் இன்னபிற பெருந்தொழில் முதலைகளும் சும்மா இருக்க மாட்டார்கள். ராணுவத்தைக் கொண்டு வந்து நிறுத்தியாவது போட்டியை நடத்தித் தருமாறு அரசாங்கத்துக்கு நெருக்கடி தருவார்கள். முடியாத பட்சத்தில், வேறு நாட்டில் நடத்திக் கொள்கிறோம் என்று அதிரடியாக அறிவிப்பார்கள். அதற்கான பண / அதிகார பலம் அவர்களிடம் இருக்கிறது. நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, மத்திய அரசாங்கம் பாதுகாப்புக் காரணங்கள் சொல்லிய போது, ‘எங்களுக்கு இந்தியாவே தேவையில்லை...’ என்று அறிவி்த்து விட்டு, போட்டிகளை தென் ஆப்ரிக்காவில் நடத்திக் காட்டினார்கள் ஐபிஎல் முதலாளிகள்.
தேசத்துக்கு இது மாபெரும் அவமானம். தலைக்குனிவு. விவசாயிகள் ஆடைகளற்று டில்லித் தெருக்களில் திரிவதைக் காட்டிலும் மிகப்பெரிய சர்வதேச அவமானம் இது. அப்படி எதுவும் இம்முறை நடந்து விடக்கூடாது என்பதற்காகவாகிலும், ஒருவேளை காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board) அமைக்கலாம் என மத்தியில் ஆட்சிபுரிகிறவர்கள் யோசிக்கலாம். இல்லையா? மாநிலத்தின் சகல உரிமைகளும் புறக்கணிக்கப்படுகிற போது, நமது எதிர்ப்பை அவர்களுக்கு எப்படித்தான் காட்டுவது?
அதற்காகவே நடக்கிறது இந்த கிரிக்கெட் புறக்கணிப்புப் போராட்டம். ‘‘குடிக்கிற நீருக்கும் உரிமை இழந்து தவிக்கிற தேசத்துக்கு, கிரிக்கெட் ஒரு கேடா...?’’ என்று யாராவது ஆவேசமாக கேள்வி எழுப்புகிறபோது, இனி கேலி செய்யாதீர்கள். அந்தக் கேள்விகளுக்குப் பின்புலத்தில் உள்ள வரலாற்று நியாயங்களை ஒரு நிமிடம் அவர்களுக்கு நினைவூட்டுங்கள். ஒரு மாநிலத்தின் சகல திசைகளும் பற்றிக் கொண்டு எரிகிறது. வடக்கே காவிரி போராட்டம். தெற்கே ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம். மேற்கே நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டம். இந்த லட்சணத்தில் நாமெல்லாம் கிரிக்கெட் பார்த்து விசில் போட்டுக் கொண்டிருந்தால்... ‘சுய மரியாதையற்ற கேடுகெட்ட ஜென்மங்கள்...’ என்று பக்கத்து மாநிலத்துக்காரர்கள் நம்மைப் பார்த்து காரித் துப்பி விடமாட்டார்கள்?
உரிமைகள் புறக்கணிக்கப்படுகிற ஒரு தேசம், தான் புறக்கணிக்கப்படுவது கூடத் தெரியாமல், வீண் கேளிக்கைகளில் மூழ்கித் திளைக்கிறது என்றால்.... அந்தத் தேசத்தின் மக்கள் தங்கள் ஆறாவது அறிவாகிய, சுய சிந்தனை உணர்வை அடியோடு தொலைத்து முழுகி விட்டார்கள் என்பதாகவே வரலாறு நம்மை பதிவு செய்து கொள்ளும்.
பஸ் பாகுபாடு...

எதுக்கு கொடுக்கணும் இடம்?

ரோசா பார்க்ஸ்!

மார்ட்டின் லூதர் கிங்!

நடந்து சாகுங்க...
துவங்கியது வரலாற்றில் மறக்க முடியாத அந்த பஸ் புறக்கணிப்புப் போராட்டம் (Montgomery Bus Boycott 1955 -1956). ஒரு கறுப்பு இனத்தவரும் பஸ்சில் பயணம் செய்யவில்லை. வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே சென்றனர். சில கிலோமீட்டர் தொலைவில் அலுவலகம் வாய்க்கப் பெற்றவர்கள், ஒரு மணிநேரம் முன்னதாகவே டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினார்கள். ஆரம்பத்தில் இந்த நடை போராட்டத்தை அமெரிக்கா கேலியாக பார்த்தது. சிரித்தது. கிண்டல் செய்தது. ‘நடந்து சாகுங்க...’ என்று பஸ் ஜன்னல்களின் வழியே டாட்டா காட்டி மகிழ்ந்தது. ஆனால், கறுப்பு இன மக்கள் துளி சோர்வடைய வில்லை.
நடப்பதெல்லாம் நன்மைக்கே!
ஒரு மாலைப்பொழுதில், புறநகரின் தனிமைச் சாலையில் கறுப்பின மூதாட்டி கையில் பைகளுடன் வியர்க்க, விறுவிறுக்க நடந்து கொண்டிருந்தார். அந்தப் பக்கமாக வந்த நகர பஸ்சின் டிரைவர் பரிதாபப்பட்டு, பஸ்சை நிறுத்தினார். ‘‘ஏன் பாட்டி, வயசான காலத்தில இந்த வீம்பு? முடியாத உடம்போட இப்படி நடந்து சாகணுமா? இடம் காலியா இருக்கு. வந்து பஸ்சில ஏறு...’’ என்று அழைக்கிறார். அதற்கு அந்த கறுப்புப் பாட்டி இப்படி பதிலளிக்கிறார். ‘‘நான் எனக்காக நடக்கவில்லை மகனே. எனது அடுத்த தலைமுறைக்காக நடக்கிறேன்...’’ - தமிழகத்தில் இன்று நடக்கிற போராட்டங்களை கேலி செய்கிற படித்த மேதாவிகளுக்கு, அந்தக் கறுப்புப் பாட்டியின் பதிலில் இருக்கிறது சேதி.
ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதத்துடன் முடிவதாக இல்லை நடை போராட்டம். ஆரம்பத்தில் கேலி செய்த அமெரிக்க நிர்வாகம், நாளாக ஆக லேசாக திணறத் தொடங்கியது. பஸ்களில் அதிகப்படியாக பயணம் செய்பவர்கள் கறுப்பு இன மக்களே. அவர்கள் அடியோடு பஸ் பயணத்தை புறக்கணித்து விட்டதால், வருமானம் ரிவர்ஸ் கியரில் செல்லத் துவங்கியது. பஸ்கள் கலெக்ஷன் இல்லாமல் காத்தாடின. ஆறே மாதத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டு போக்குவரத்து நிர்வாகங்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தன. ‘‘போராட்டம் போதும். மீண்டும் பஸ்சில் பயணம் செய்யலாம்... வாங்க...’’ என்று கறுப்பு இன மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தன.
பயமா... எனக்கா...?
அப்போதும் அவர்கள் அசைந்து கொடுப்பதாக இல்லை. ‘‘பஸ் பயணங்களில் கறுப்பு இன மக்கள், தாங்கள் விரும்பிய எந்த இருக்கையில் வேண்டுமானாலும் அமரலாம். வெள்ளையின மக்களுக்கு சரி்க்கு சமமான உரிமைகளுடன் பயணப்படலாம் என்று சட்டம் கொண்டு வருகிற வரைக்கும் எங்கள் போராட்டம் தொடரும்,’’ என்று அறிவித்தார் மார்ட்டின் லூதர் கிங். இறங்கி வந்து பேசி பயனில்லாததால் அடுத்தகட்டமாக அச்சுறுத்தும் வேலைகள் துவங்கின. மார்ட்டின் லூதர் கிங் கைது செய்யப்பட்டார். அவரது வீடு குண்டு வீசி தகர்க்கப்பட்டது. என்ன மிரட்டியும், கறுப்பு இன மக்கள் துளி அசைவதாக இல்லை. ‘பயமா... எனக்கா... ஹா ஹா ஹா...’ என கபாலி ரஜினி போல, கண்டுகொள்ளாமல் நடையைப் போட்டனர்.
நடை போராட்டம் ஒரு வருடத்தைக் கடந்தது. இனியும் தொடர்ந்தால் வெட்கக்கேடு என்ற முடிவுக்கு வந்தது அமெரிக்க அரசாங்கம். ஏறத்தாழ 380 நாட்களைக் கடந்தப் பிறகு, 1956ல் ‘‘பஸ் பயணங்களில் இன பாகுபாடு காட்டுவது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது,’’என அமெரிக்க உச்சநீதிமன்றம் அறிவித்தது. வெள்ளையர்களுக்கு இணையான சுதந்திரம், அந்த நீண்ட, நெடிய போராட்டத்துக்குப் பிறகே அமெரிக்க கறுப்பின மக்களுக்குக் கிடைத்தது.
அடிமை ஆட்டம்!
யோசித்துப் பாருங்கள். உட்கார இடம் தரவில்லை என்பதற்காக, பஸ்சை விட்டு இறங்கி நடந்து போகிறேன் என்று போராட்டம் அறிவித்தால்... இந்த உலகம் கேலி பேசாதா, என்ன? எழுபது வருடங்களுக்குப் பிறகு, இன்றைக்கு ‘‘கிரிக்கெட் பார்க்காமல் புறக்கணித்தால், காவிரி தண்ணீர் வந்து விடுமா, என்ன?’’ என்று உலகம் கேலி பேசுகிறது. ஐபிஎல் போட்டிகளை புறக்கணித்தால் என்ன நடக்கும்?
முதலில் ஐபிஎல் போட்டிகளைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். ஐபிஎல் என்பது ஏதோ உண்மையான, நேர்மையான உணர்வுடன் நடக்கிற கிரிக்கெட் விளையாட்டு அல்ல. இன்றைக்கு சர்வதேச அளவில் நடக்கிற கிரிக்கெட் போட்டிகளே உண்மையான, நேர்மையான உணர்வுகளுடன் விளையாடப்படாத போது, வெறும் வர்த்தக நோக்கங்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிற ஐபிஎல் பற்றி நாம் சொல்லத் தேவையே இல்லை. ஜியோ அம்பானிகளுக்கும், மல்லையாக்களுக்கும் சொந்தமான அணிகளே இங்கு விளையாடுகின்றன. அவர்கள் தருகிற கோடி கரன்ஸிகளுக்குக் கட்டுப்பட்டு, கைகைட்டிக் கொண்டு உள்ளூர் துவங்கி சர்வதேச அளவிலான அடிமைகள் விளையாடி மகிழ்விக்கிறார்கள். களத்தில் ஆட்டம் முடிந்ததும், இரவில் இந்த அடிமைகளைக் கொண்டு பார்ட்டி நடத்தி அதற்கும் டிக்கெட் போட்டு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சர்வதேச அவமானம்!?
இந்தப் போட்டிகள் புறக்கணிக்கப்பட்டால், நிராகரிக்கப்பட்டால்... அம்பானிகளும், இந்திய அரசை வழிநடத்தும் இன்னபிற பெருந்தொழில் முதலைகளும் சும்மா இருக்க மாட்டார்கள். ராணுவத்தைக் கொண்டு வந்து நிறுத்தியாவது போட்டியை நடத்தித் தருமாறு அரசாங்கத்துக்கு நெருக்கடி தருவார்கள். முடியாத பட்சத்தில், வேறு நாட்டில் நடத்திக் கொள்கிறோம் என்று அதிரடியாக அறிவிப்பார்கள். அதற்கான பண / அதிகார பலம் அவர்களிடம் இருக்கிறது. நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, மத்திய அரசாங்கம் பாதுகாப்புக் காரணங்கள் சொல்லிய போது, ‘எங்களுக்கு இந்தியாவே தேவையில்லை...’ என்று அறிவி்த்து விட்டு, போட்டிகளை தென் ஆப்ரிக்காவில் நடத்திக் காட்டினார்கள் ஐபிஎல் முதலாளிகள்.
தேசத்துக்கு இது மாபெரும் அவமானம். தலைக்குனிவு. விவசாயிகள் ஆடைகளற்று டில்லித் தெருக்களில் திரிவதைக் காட்டிலும் மிகப்பெரிய சர்வதேச அவமானம் இது. அப்படி எதுவும் இம்முறை நடந்து விடக்கூடாது என்பதற்காகவாகிலும், ஒருவேளை காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board) அமைக்கலாம் என மத்தியில் ஆட்சிபுரிகிறவர்கள் யோசிக்கலாம். இல்லையா? மாநிலத்தின் சகல உரிமைகளும் புறக்கணிக்கப்படுகிற போது, நமது எதிர்ப்பை அவர்களுக்கு எப்படித்தான் காட்டுவது?
விசில் போட்டால் தப்பா?
அதற்காகவே நடக்கிறது இந்த கிரிக்கெட் புறக்கணிப்புப் போராட்டம். ‘‘குடிக்கிற நீருக்கும் உரிமை இழந்து தவிக்கிற தேசத்துக்கு, கிரிக்கெட் ஒரு கேடா...?’’ என்று யாராவது ஆவேசமாக கேள்வி எழுப்புகிறபோது, இனி கேலி செய்யாதீர்கள். அந்தக் கேள்விகளுக்குப் பின்புலத்தில் உள்ள வரலாற்று நியாயங்களை ஒரு நிமிடம் அவர்களுக்கு நினைவூட்டுங்கள். ஒரு மாநிலத்தின் சகல திசைகளும் பற்றிக் கொண்டு எரிகிறது. வடக்கே காவிரி போராட்டம். தெற்கே ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம். மேற்கே நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டம். இந்த லட்சணத்தில் நாமெல்லாம் கிரிக்கெட் பார்த்து விசில் போட்டுக் கொண்டிருந்தால்... ‘சுய மரியாதையற்ற கேடுகெட்ட ஜென்மங்கள்...’ என்று பக்கத்து மாநிலத்துக்காரர்கள் நம்மைப் பார்த்து காரித் துப்பி விடமாட்டார்கள்?
உரிமைகள் புறக்கணிக்கப்படுகிற ஒரு தேசம், தான் புறக்கணிக்கப்படுவது கூடத் தெரியாமல், வீண் கேளிக்கைகளில் மூழ்கித் திளைக்கிறது என்றால்.... அந்தத் தேசத்தின் மக்கள் தங்கள் ஆறாவது அறிவாகிய, சுய சிந்தனை உணர்வை அடியோடு தொலைத்து முழுகி விட்டார்கள் என்பதாகவே வரலாறு நம்மை பதிவு செய்து கொள்ளும்.
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
வரலாறு அறிந்து பிரமிப்பாக இருக்கிறது நண்பரே...
பதிலளிநீக்குகொள்கையில் பிடிப்பு வேண்டும் இது நம்மிடம் குறைவே...
மீண்டும் form க்கு வந்த கிரிக்கெட் player போல் தொடர்ந்து அடித்து ஆடுகிறீர்கள் குமார். கட்டுரை அருமை.
பதிலளிநீக்குஉறைக்கும்படி சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி. நன்றி.
வரலாற்றை திருப்பினால்தான் புரிந்துக்கொள்ள முடியும்
பதிலளிநீக்குசாட்டையடி பதிவு...
பதிலளிநீக்குஎளிமையான மொழிநடையில் வலிமையான வாதங்கள். கட்டுரையை படித்தப் பிறகு ஐபிஎல்போட்டி பார்க்க யாருக்கும மனம் வராது.
பதிலளிநீக்குஐபிஎல் சென்னையில் இருந்து மாற்றப்பட்டு விட்டது. நமது கூட்டு போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. உணர்வுகளை தட்டி எழுப்பிய கட்டுரை. வாழ்த்துகள் சகோ.
பதிலளிநீக்குகட்டுக் கதைகளை அள்ளித்தரும் ஊடக உலகத்தில் தேவை இது போல் ஆயிரம் வலைப்பதிவுகள்.
பதிலளிநீக்குபஸ் புறக்கணிப்புப் போராட்டம் ஒரு சிறந்த முன்னுதாரணம். அனால் அவர்கள் பஸ் புறக்கணிப்பு செய்தது பஸ்ஸில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக. அதற்காக அவர்கள் வேறெதையும் அந்த பிரச்சனையில் இழுக்கவில்லை.
பதிலளிநீக்குஆனால் இங்கு நடப்பது அதுவல்ல. உண்மையில் நாம் புறக்கணிப்பு போராட்டம் செய்வதாக இருந்தால், கர்நாடகா தன் விருப்பப்படி தரும் நீரை தமிழக எல்லையில் அணை காட்டி தடுத்து புறக்கணிக்க வேண்டும். அப்போது அவர்கள் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்படும்போது வழிக்கு வருவார்கள்.
தற்போதய போராட்டத்தால் சென்னைக்கு பதில் புனேவில் போட்டிகள் நடைபெறப்போகின்றன. அதனால் அணி முதலாளிகளுக்கு எந்த நஷ்டமும் இல்லை. சென்னை மைதானத்தின் அருகில் இருக்கும் சிறுவணிகர்களுக்கும் ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் கிடைத்திருக்கவேண்டிய சொற்ப கூடுதல் வருமானம் பறிபோனதுதான் மிச்சம்.
உண்மையில் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்றால் போராட்டக்காரர்கள் தஞ்சையில் தொடங்கி டெல்லி வரை நடை பயணம் சென்று வழியில் உள்ள ஊர்களின் மக்களுக்கு நம் பிரச்சனையை புரியவைக்க வேண்டும். அப்போது நமக்கு நாடு தழுவிய ஆதரவு கிடைக்கும்.
ரமேஷ்
பதிலளிநீக்குhttps://ennizhalbimbam.blogspot.com/
"நம்ம ஊர் படித்த மேதாவிகள் போல, ‘பஸ் பயணத்தை புறக்கணிச்சா, நமக்குத்தான நஷ்டம்? நாமதான கெடந்து நடந்து சாகணும்? புத்தி கெட்டுப் போச்சா? இதெல்லாம் ஒரு போராட்டமா?’ என்று மீம்ஸ் போடவில்லை."
அருமை !!
தங்க வரிகள் -- ‘‘நான் எனக்காக நடக்கவில்லை மகனே. எனது அடுத்த தலைமுறைக்காக நடக்கிறேன்...’’
பதிலளிநீக்குவரலாற்றை மிகச் சிறப்பாகத் தொகுத்து அளித்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஉரிமை போராட்டம் என்பது நாட்டுக்கு நாடு அன்று மட்டுமல்ல இன்றும் தொடர் கதையாக தான் உள்ளது. மக்கள் பங்களிப்பு உணர்வு பூர்வாக இருந்தால் வெல்லலாம் என்பதை துடிப்புடன் செயல்படுத்த நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்
பதிலளிநீக்குஉங்களுக்கே உரித்தான எளிய நடையில்
பதிலளிநீக்குநமக்கான உரிமையை பெற நாம் செய்ய வேண்டியதை கருப்பு சரித்திரம் வழியாக தமிழ் மண்ணில் விதைக்கும் விதை......
What's the biggest sports toto in 2021? - Sporting 100
பதிலளிநீக்குThe biggest 카지노사이트luckclub sports 코인카지노 조작 toto in 2021? 제왕카지노 코드 toto for all your NFL predictions, 토토 사이트 추천 with หารายได้เสริม the help of the BetMGM Sportsbook and FOX Bet.