காலத்திற்கேற்ப அப்டேட் ஆகிக் கொள்வதில், தொழில்நுட்பக்காரர்களை விடவும், திருடர்கள் வல்லவர்கள். செல்போன் சாப்ட்வேர் அப்டேட் செய்வது போல, தொழில் சூட்சுமங்களை உடனுக்குடன் அப்டேட் செய்து, கலங்கடிப்பார்கள். மற்ற திருடர்கள் எப்படியோ... சினிமாத் திருடர்கள் செம! ஒரு காலத்தில் மலையாளத்தில் இருந்தும், ஹிந்தியில் இருந்தும் ‘சுட்டார்கள்’. குட்டு வெளியாகி கேவலப்படுகிற நிலைமை வந்ததும், வெளிமாநிலங்களில் கைவைக்கிற வேலையை விட்டு உகாண்டா, எத்தியோப்பியா நாடுகளில் இருந்து கதை, இசை ‘சுட்டார்கள்’. முகேஷ் நான்காவது தலைமுறையை அறிமுகப்படுத்தி விட்ட இந்தக்காலத்தில், திருடர்கள் துளியாவது மனக்கிலேசம் அடைந்திருக்கிறார்களா என்று பார்த்தால்... நெவர்!
சினிமா எடுக்கிறவர்களுக்கு திருட்டு விசிடி / டிவிடி பெரும் தலைவலியாக இருந்தது ஒரு காலம். சினிமா நடிகர்களும், தயாரிப்பாளர்களும் அதை ஒழித்துக் கட்டவேண்டும் என்று ஊர்வலம் போனார்கள். இன்றைக்கு அதெல்லாம் மேட்டரே இல்லை என்று ஆகி விட்டது. படம் எடுத்துக் கொண்டிருக்கு போதே இணையத்தில் ரிலீஸ் செய்து விடுகிறார்கள் இணையதள ஹேக்கர்கள். கபாலி சினிமா தியேட்டரில் ரிலீஸ் ஆன அதே நேரத்தில் இணையத்திலும் ரிலீஸ் செய்து சினிமாக்காரர்களை திகைத்துத் திக்குமுக்காட வைத்தார்கள்... ஞாபகம் இருக்கும்.
தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் இந்த விஷயத்தில் ரொம்பப் பிரபலம். சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர், ‘தமிழ் ராக்கர்ஸ் டீமை ஒழித்துக் கட்டுவேன்’ என்று திரைப்பட விழாவில் உணர்ச்சி வசப்பட்டார். அடுத்த சில நிமிடங்களில் ராக்கர்ஸ்களிடம் இருந்து பதில் வந்தது. ‘‘மிஸ்டர். தேதியை குறித்துக் கொள்ளுங்கள். இந்தத் தேதியில், இந்த நிமிடத்தில்... உங்கள் படத்தை எங்கள் இணையத்தில் ரிலீஸ் செய்கிறோம்...’’ என்று. சொன்ன மாதிரி செய்தும் காட்டினார்கள்.
டோரண்ட் (Torrent) என்கிற நவீன தொழில்நுட்ப சமாச்சாரம், இந்த திருட்டு வேலையை ரொம்ப சுலபமாக்கி விடுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் சேமித்து, பாதுகாத்து வைக்க ஒரு சர்வர் (Web Server) கண்டிப்பாக தேவை. சர்வரில் சேமித்து வைத்திருக்கிற தரவுகளை, யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர்கள், தளத்தின் முகவரியை கூகுளில் அடித்து தேடிப் பிடித்து தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். நமது பூனைக்குட்டி தளத்துக்கு நீங்கள் வந்து இந்தக் கட்டுரையை படிப்பது போல.
டோரண்ட் தொழில்நுட்பம் அப்படியானது அல்ல. இங்கு, தரவுகள் குறிப்பிட்ட ஒரு சர்வரில் சேமித்து வைக்கப்படுவதில்லை. இது ரொம்பவே நவீனம். ஒரு தகவல் தேவை என்று நீங்கள் கூகுளடித்தால்... அந்த நேரத்தில் இணையத்தில் இருக்கிற வேறு பல கம்ப்யூட்டர்களை தேடி அலசுகிறது. எந்தக் கம்ப்யூட்டரில் உங்களுக்குத் தேவையான தகவல் இருக்கிறதோ. அதில் இருந்து உங்கள் கம்ப்யூட்டருக்கு தகவல் டவுன்லோட் ஆகிறது. உங்களுக்கே தெரியாமல், உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து மற்றவர்களுக்கும் தகவல் போகலாம். இது, டோரண்ட் தொழில்நுட்பம். திருடியவர் யார், எங்கிருக்கிறார், எந்த நாடு, எந்த ஊர், எந்தத் தெரு... எதுவும் கண்டுபிடிப்பது கஷ்டம். முதுகுக்கு பின்னால் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டு, உங்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டலாம். கண்டுபிடிப்பது கடவுளாலும் முடிகிற காரியமாக இப்போதைக்கு தெரியவில்லை.
சரி. தலைப்புக்கும் இந்த டோரண்ட் மேட்டருக்கும் என்ன சம்பந்தம்? பாகுபலி 2ம் பாகம் டிரெய்லர் இந்த மாதம் 16ம் தேதி மாலை பிரமாண்ட விழாவில் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். மும்பை, ஹைதராபாத் நகரங்களில் டிரெய்லர் ரிலீஸ் செய்வதற்கென்றே பிரமாண்ட ஏற்பாடுகளையும் தயார் செய்திருந்தனர். நம்மாட்கள் சும்மா இருப்பார்களா...? பில் கேட்ஸையும் மிஞ்சியவர்களாயிற்றே? 16ம் தேதி காலையிலேயே இணையத்தில் டிரெய்லர் ரிலீஸ் செய்து தெறிக்க விட்டிருக்கிறார்கள். பாகுபலி குரூப் செம ஷாக். வேறுவழியின்றி உடனடியாக அவர்களும் டிரெய்லரை அவசர, அவசரமாக ரிலீஸ் செய்து முடித்திருக்கிறார்கள். ஆனாலும், கோடிக்கணக்கான கூட்டம் இணையத்தில் பாகுபலி 2 டிரெய்லர் பார்த்து சாதனை படைக்க வைத்திருக்கிறது. அந்தளவில் ராஜமவுலி சந்தோஷப்படலாம்.
கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது ராஜமவுலிக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கலாம். இன்றைய தேதிக்கு அவரே தெரிந்து கொள்ள விரும்புகிற ரகசியம்... ‘பாகுபலி 2’ டிரெய்லரை ‘சுட்டது’ யார்?

பாகுபலி பற்றி கூடுதலாக படிக்க...
பாகுபலி 2 டிரெய்லர் பார்க்கணுமா?
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
வியக்க வைக்கும் தகவல்கள்.
பதிலளிநீக்குஎன்னவொரு ஏமாத்து வேலை...!!!!
பதிலளிநீக்குANGATHAM UCHAM KUMAR SAAB
பதிலளிநீக்கு