ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

நான் வந்துட்டேன்னு சொல்லு...

‘‘ச்சே... ச்சே... என்னங்க இது காட்டுமிராண்டித்தனம்? வாயில்லா பிராணியைப் போய் இந்தப் பாடு படுத்திகிட்டு...’’ என்று, ஏசி அறைக்குள் பத்திரமாக உட்கார்ந்து சதுரங்கம் விளையாடுகிற மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் பீட்டாக்களுக்கு தெரியாது... இது எத்தனை ரிஸ்க்கான விளையாட்டு என்று! ஆனால், நம்மாட்களுக்கு ரிஸ்க் எடுக்கறது... ரஸ்க் எடுக்கிற மாதிரித்தான? அத்தனை தடையும் உடைத்து, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... என்கிறது ஜல்லியாட்டம். அவனியாபுரம் (பிப்ரவரி 5), பாலமேடு (பிப்ரவரி 9), அலங்காநல்லூர் (பிப்ரவரி 10) என்று வரிசை கட்டி அடித்த ஜல்.. ஜல்... ஜல்... ஜல்லிக்கட்டு களத்தில் இருந்து, காளைகளின் வாய்ஸ். ‘பேசும் படம்’ பகுதிக்காக... உங்கள் பூனைக்குட்டீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

மொறைக்குதுடா... மாமூ!

அட! போட்டி ஆரம்பிச்சிருச்சு. எவ்ளோ நேரம்தான் அங்க ஏறி உட்கார்ந்திருப்பீங்க? யாராவது ஒருத்தர் இறங்கி வாங்கப்பா. நேரம் ஆவுதுல்ல...?  (அவனியாபுரம்)


ஏய் காளை... ஆட்டாத வாலை!

நேருக்கு நேராக வர்ற. நல்ல துணிச்சல்தான். ஆனா, இது கபடி விளையாட்டு இல்ல கண்ணா. கிட்ட வந்த... முட்டிப்புடுவேன். குறுக்க வந்த... குத்திப்புடுவேன். (அவனியாபுரம்)


பச்சபுள்ளடா... பாத்து, பத்திரம்!

கண்ணுங்களா... நான் ஜல்லிக்கட்டுக்கு புதுசுடா. மொத்தமா வந்து விழுந்து அமுக்கி, மூச்சை நிறுத்திடாதீங்க. கொஞ்சம் பிராக்டீஸ் எடுத்துகிட்டு, அடுத்த தபா வந்து அசத்துறேன். இப்ப, நான் வர்ட்டா...? (அவனியாபுரம்)


அட, எறங்கி வாங்கப்பு... ஒண்ணும் பண்ணமாட்டேன்!

பனை மரத்துல வவ்வால் தொங்குற மாதிரி அது மேலே எவ்வளவு நேரம்பா தொங்குவீங்க? நீங்க புடிக்கிற மாதிரி புடிப்பீங்களாம்... நான், குத்துற மாதிரி... ஒர்ர்ர்ர்ரே குத்தா நங்குனு குத்துவனாம்! கம்மான் ராசாக்களா... கம்மான்! (பாலமேடு)


அடக்குனா... அடங்குற மாடா, நான்..?

இங்க என்ன ஒலிம்பிக் கேமா நடக்குது? மேலே பாஞ்சு அடக்குடான்னா... திமிலைப் புடிச்சிகிட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் பண்ணிகிட்டிருக்க... படவா ராஸ்கல்...? (பாலமேடு)


நெருப்புடா... நெருங்குடா...!

காளைனா... கழுத்துல சலங்கை கட்டிகிட்டு, நெத்தியில குங்குமம் வெச்சிகிட்டு, ப்பா... ப்பா...ன்னு நீ கூப்பிட்டா... கௌம்பலாமா எசமான்னு ஓடி வந்து நிற்கிற வண்டி இழுக்கிற மாடுனு நெனச்சயா...? காாாா....................ளைடா! (பாலமேடு)


யேய் செண்பகம்... நான் அவன் இல்ல...

வேடிக்கைதான பாக்க வந்தேன்...? யார்றா பின்னால இருந்து புடிச்சி உள்ள தள்ளி விட்டது? (பாலமேடு)


சிதற விடலாமா...?

ஹரி படத்துல சுமோ பறக்கிற மாதிரி சீன் ஞாபகத்துக்கு வருதா...? மேல கைய வெச்சா... சும்மா.... பறக்க விடுவோம்ல? (அலங்காநல்லூர்)


கையால கர்ணம் அடிச்சாலும் விடமாட்டேன்!

தாவிக் குதிச்சு, தலை கீழா நடந்து போனாலும்... மவனே விடமாட்டேன்டா. குத்துற குத்துல, நேரா ஜிஹெச் பெட்டுல போய் விழணும்! (அலங்காநல்லூர்)


போய் வேடிக்கை பாரு கண்ணு!

அப்டியே, அலேக்கா தூக்கி விடுறேன். மேலே கேலரில உட்கார்ந்து வேடிக்கை பாக்கணும். சரியா? இனி, இந்தப் பக்கம் பாத்தேன்... கொன்டேபுட்டேன். ஆமா! (அலங்காநல்லூர்)

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

  1. ஹஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ஐயோ சிரிச்சு தாங்கலப்பா....இன்னா கமென்ட்பா....ஜல் ஜல் ஜல் ஜல்லுனு ஜல்லிக்கட்டு விளையாண்டுட்டீங்க...எங்களையும் புரண்டு புரண்டு ???!!! சிரிக்க வைச்சுட்டீங்கபா..
    கீதா

    பதிலளிநீக்கு
  2. பூனைக்குட்டியின் தயவில் கமெண்ட்ரியுடன் சல்லிக்கட்டை பார்த்துவிட்டேன் :-)

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு படத்திற்கும் உங்களின் கருத்துக்களை மிகவும் ரசித்தேன்...

    அட்டகாசம்...!

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...