ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

அப்பாலே போ சாத்தானே...

ங்களுக்கு கற்பனை செய்யப் பிடிக்கும்தானே? இப்போது நான் விளக்குகிற காட்சியை மனதில் பிரமாண்டமாக... பாகுபலி கிராபிக்ஸ் போல படு பிரமாண்டமாக கற்பனை செய்து பாருங்கள். அலையடிக்கிற நீலக்கடல். அந்தி சாய்கிற மாலைப்பொழுது. காற்றுக்கு படபடக்கிற பாய்மரங்களில் இருந்து எழுகிற சடசடப்புச் சத்தம். பொங்கி எழுந்து தாழ்கிற கடல் நீரில் நிலை கொண்டு நிற்க இயலாது, மேலும் கீழுமாகவும், இடதும், வலதுமாகவும் தள்ளாடும் மரக்கலங்கள். அதிலிருந்து சரக்கு பெட்டகங்களை இறக்கவும், ஏற்றவுமாக இருக்கிற பல ஆயிரம் உழைப்புக்காரர்கள். கரையில் இருந்து கண்காணிக்கிற பெருமுதல் காரர்கள். அக்கம்பக்கம் இருக்கிற அத்தனை கடல்பறவைகளும் விதவிதமாக ஒலி எழுப்பியவாறே சுற்றி வருகிற ஒரு இடம்... கடல் வணிகம் நடக்கிற பண்டை தமிழ் நகரம். ஜனவரி என்றும், பிப்ரவரி என்றும் காலத்தை பகுத்தறியப் பழகாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நாள்....

புரையேறுமோ?



ப்படி ஒரு காலத்தில் எழுதப்பட்ட கணக்கதிகாரத்துக்கு இப்போது மீண்டும் நாம் போகப்போகிறோம்.

‘‘எட்டெடை செம்பி லிரெண்டை யீயமிடில்
திட்டமாய் வெண்கலமாஞ் சேர்ந்துருக்கி - லிட்டமுடன்
ஓரேழு செம்பி லொருமூன் றுதுத்தமிடில்
பாரறியப் பித்தளையாம் யார்...’’ (கணக்கதிகாரம் 63)

ணக்கதிகாரம் பற்றி, அதை எழுதிய காரி நாயனாருக்கு புரையேறுகிற அளவுக்கு எக்கச்சக்கமாக ஏற்கனவே பேசி விட்டோம். என்பதால், அதற்கு எட்டெடை செம்பி லிரெண்டை’ பாடல்.
மீண்டும் ஒரு அறிமுகம் தேவையில்லை. கடல் வாணிகம் செய்ய கப்பல் கட்டிக் கொண்டு நம்மூருக்கு வந்த யவன, சுமேரிய, எகிப்திய, அசீரியக்காரர்கள் இங்கிருந்து முத்து, பவளம் மட்டும் ஏற்றிச் சென்றார்களில்லை. உன்னதமான அறிவியல், கணிதக் கட்டுமானங்களையும் கற்றறிந்து சென்றிருக்கிறார்கள். இன்றைய ஆய்வுகள் உறுதிப்படுத்துகிற விஷயம் இது. அதற்கு உதாரணம், மேலே பார்த்த ‘

டெக்னாலஜி காரன்யா!

ருப்பு வெள்ளை கால தமிழர்களின் உலோக அறிவியல் அறிவைக் கேட்டால், முதல் மரியாதை சிவாஜி போல சிலிர்த்துப் போவீர்கள். வெண்கலமும், பித்தளையும் தயாரிப்பது எப்பிடி என்று இந்தப் பாடல் ‘டெமோ’ கொடுக்கிறது. பாருங்களேன்...
ரு எடை என்பது ஒரு பலம். ஒரு பலம் என்பது 40.8 கிராம் (சிலர் 41 கிராம் என்று சிலர் ‘ரவுண்டாக’ எழுதுவார்கள்). ஆக, ஒரு பலம் செம்பில் 2 பலம் ஈயத்தை ‘மிக்சிங்’ போட்டு உருக்கினால் வெண்கலம் வந்தாச்சு. இன்னும் எளிமையாக சொல்வதானால், 3 கிலோ 40 கிராம் எடை செம்பில் 816 கிராம் ஈயத்தை சேர்த்து ஒரு கலக்க்க்கு கலக்கினால், கையில் வெண்கலம். போலவே, ஏழரை பலம் செம்பில் (3 கிலோ) 3 பலம் (1 கிலோ 224 கிராம்) துத்தத்தைச் சேர்த்து உருக்கினால்... மக்களே, பித்தளை ரெடி!

ங்கமோ, வெள்ளியோ செய்கிற மெத்தட் என்றால், டபுள் ஓகே. கற்றுக் கொண்டு சுயதொழில் ஆரம்பித்து விடலாம். வெண்கலமும், பித்தளையும் எதற்காகவாம்? அந்தக்காலத்தில் ராஜா சவாரி செய்ய பல்லக்கு, அந்தப்புரத்தை அலங்கரிக்க மெட்டல் பர்னிச்சர்ஸ், படை பரிவாரங்களுக்கான கவசங்கள், ஆயுதங்கள் செய்ய நிறைய உலோகம் தேவைப்படும். இதற்கு எங்கே போவது? காய்ச்சி, கலக்கி தயாரித்திருக்கிறார்கள் நம்மாட்கள். என்னா டெக்னாலஜிக்காரர்கள் பார்த்தீர்களா?

கதுவாலினா... யாரு?


‘காடை, கவுதாரி’ என்ற பெயர்களெல்லாம், இந்தக் காலத்து யூத்ஸ்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முனியாண்டி விலாஸ்களில் இன்றைக்கும் கிடைக்கிற காடை பிரை மட்டும் இல்லாது போனால், இந்தப் பறவையின் பெயர் ஞாபக அடுக்குகளில் இருந்து அழிந்தே போயிருக்கும். குருவி சைஸில் இருக்கிற இந்தப் பறவைகளுக்கு தமிழில் அழகான பெயர்கள் இருக்கிறது. குறும்பூழ் என்று காடையையும், கதுவாலி, சிரவம், கோரசம், புல், இதல் என்று கவுதாரியையும் தமிழ் பெயர் சூட்டி அழைக்கிறது.

ஆதாரம் இருக்கா பாஸ்?

நேற்றைக்கு ஆரம்பித்தது போல இருக்கிறது. ஆச்சு, இன்றோடு 92 வாரம். இந்தத் தொடரின் முக்கியமான சில விஷயங்களை பார்க்க வேண்டிய இடத்துக்கு இப்போது வந்திருக்கிறோம் சகோஸ். நாமெல்லாம் தமிழை உயர்தனி செம்மொழி என்கிறோம். மொழிகளின் தாய் என்கிறோம். இந்தியத் துணைக்கண்டத்தின் மிக மூத்த மொழி என்கிறோம். என்ன ஆதாரம் வைத்திருக்கிறோம்? யாராவது நிரூபித்திருக்கிறார்களா? உலகம் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறதா?

- கேள்விகள் நிறைய இருக்கின்றன. அதற்கான பதில்களை பார்க்கப் போவதற்கு முன்....

‘‘மொகஞ்சதாரோவில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழியின் கூறுகள் இன்றைக்கு தமிழில் மட்டுமே காணப்படுகின்றன. அதனால், இன்றைக்கு உலகில் பேசப்படுகின்ற மொழிகளில் மிகவும் பழமையானது தமிழ் மொழியாகத்தான் இருக்கமுடியும். ஐரோப்பிய மொழிகளில் உள்ள சொற்கள் பலவற்றின் மூலங்கள் தமிழ் மொழியில், காணப்படுகின்றன....’’
- நம்மாள் யாராவது இப்படிச் சொல்லியிருந்தால், புத்தகத்தை மடக்கி வைத்து விட்டு, வேறு வேலைக்கு போயிருப்பீர்கள். ஆனால், மிக நீண்ட, நெடிய ஆய்வுகளுக்குப் பிறகு இப்படி எழுதி வைத்திருப்பவர் ஹீராஸ் பாதிரியார் (Fr. Henry Heras). ஸ்பெயின் தேசத்துக்காரர். சுவிசேஷம் பண்ண நம்மூருக்கு வந்தவர். எழுப்புதல் கூட்டங்கள் நடத்தி, ‘அப்பாலே போ சாத்தானே....’ என்று ஆசீர்வாதம் பண்ணவதுதான் வேலை என்று நின்றாரில்லை. தொல்லியல் டிபார்ட்மென்ட்டில் நிறைய ஆர்வம் கொண்ட ஹீராஸ் ஃபாதர், சிந்து சமவெளி நாகரிகம் குறித்து ஆய்வு செய்து ஏராளமான அறிக்கைகள் வெளியிட்டார். அந்த அறிக்கைகள்... தமிழ், தமிழர் பற்றி உலகம் அதுவரை அறிந்திராத பிரமிப்பான மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஹென்றி ஹீராஸ் பாதிரியாருக்காக காத்திருக்கலாமா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...