‘‘மச்சான்... உனக்கு ஒரு ஆபத்துனு கேள்விப்பட்டதும், மனசு துடிச்சுப் போயிருச்சுடா. விஷயம் கேட்டதும், வேலைய அப்டியே போட்டுட்டு ஓடி வந்திட்டேன். எப்டிரா ஆச்சு. சொல்றா... சும்மா விடக்கூடாது, தூக்கிடலாம்...!’’ என்று துக்கம் விசாரிக்க வந்த ‘திடீர்’ நண்பர் (!?) துடிக்கிறாரா? உஷார். அவரது ‘துடிப்பு’ முதலைக் கண்ணீராகவும் இருக்கலாம்.
நமது மனித வகையறாக்கள் ஒரு காலத்தில் பல நூறு ஆண்டு காலம் வாழ்ந்ததாக சரித்திரங்கள் இருக்கிறது. இப்போது அப்படி இல்லை. வாட்ஸ்அப்பை கவனிக்கிற அளவுக்குக் கூட உடலை ஒழுங்காக பேணாத காரணத்தால், அதிகப்பட்சம் ஆஃப் செஞ்சுரி அடித்தாலே பெரிய விஷயம். ஊர்வன (Reptile) பிரிவில் முதலை இருக்கிறதே, அதற்கும் கொஞ்சம் ஆயுள் கெட்டி. சராசரியாக 70- 80 ஆண்டுகள் இருந்து பேரன், பேத்திகளை மடியில் உட்கார்த்தி கொஞ்சி விட்டுத்தான் போகும். சின்ன வயதில் இருந்தே ஒழுங்காக உடம்பை கவனித்துக் கொள்கிற சில ‘ஜிம் பாடி’ முதலைகள் செஞ்சுரி அடிப்பதும் உண்டு. நம்மால் முதலை என்று அழைக்கப்படுகிற முதலைகளுக்கு தமிழில் வேறு என்னென்ன பெயர்கள் இருக்கிறதாம்? இலக்கியங்களைப் புரட்டிப் பார்த்தபோது...
வள் மீன், கராம், சிஞ்சுமாரம், இடங்கர், கடு, கரவு, கோதிகை, முசலி என்றெல்லாம் பெயர்களைச் சூட்டி அவற்றை தமிழ் அழைத்திருக்கிறது. தண்ணீரில் கிடக்கிற முதலையை ஆண் என்று உங்களால் உறுதியாக ஐடென்டிபை பண்ண முடிந்தால், சாரம் என்று கூப்பிடலாம். காலைக் கவ்வி ஆளைக் கபளிகரம் செய்கிற கொலைகார கூட்டத்தை ஆட்பிடியன் என்றும், யாருக்கும் ஒரு தீங்கும் இளைக்காத அப்பாவிகளை சாணாக முதலை என்றும் அழைக்கலாமாம்!
சரி. அந்த முதல் பாராவில் பார்த்தோமே... முதலைக் கண்ணீர். ஆற்றில் கிடக்கிற இந்தப் பிராணியின் பெயரை வைத்திருக்கிறார்களே... அதற்கு என்ன அர்த்தம்? அடுத்தவர் வருத்தத்தில் இருக்கும் போது, அதைப் பார்த்து மனதுக்குள் மத்தாப்பாக மகிழ்ச்சி பொங்க, ஆனால் வெளியே முகத்தில் டன் டன்னாக சோகத்தை வழிய விட்டு டயலாக் அடிப்பதை முதலைக் கண்ணீர் (crocodile tears: hypocritical show of sorrow) என்கிறோம். சரி. இந்த சப்ஜெக்ட்டுக்குள் எதற்காக முதலை வருகிறது? பொதுவாக, முதலைகள் தங்களுக்கு பிடித்த உணவை சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிடும் போது, அதன் கண்களில் இருந்து கண்ணீர் வரும். ‘அடடா... மேடம் செஞ்சு வெச்ச சாப்பாட்டை சாப்பிட முடியாம திணறுது போல...’ என்று நீங்கள் வருத்தப்பட்டு விடக்கூடாது. கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது என்றால், அந்த உணவு ரொம்ப பிடித்திருக்கிறது என்று அர்த்தம். ஆக, முதலை கண்ணீரை நம்பக்கூடாது ரைட்டா?
தமிழ் மொழியின் இலக்கிய / இலக்கண வளம் கண்டு மெய் மறந்து, இதன் பெருமையை மேற்குலக நாடுகளுக்கு கொண்டு சென்ற வெளிநாட்டு அறிஞர்கள் பற்றி நாம் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். இந்த வாரம் ஜூலியன் வின்ஸன் (Julien Vinson 1843 - 1926). பிரான்ஸ் காரர். இவரது அப்பா, பிரெஞ்ச் ஆட்சிகாலத்தில் காரைக்காலில் நீதிபதியாக பணியாற்றினார். பாண்டிச்சேரியில் இவரது குடும்பம் வசித்தபோது பிறந்தார் வின்ஸன். என்பதனால், சிறு வயதிலேயே தமிழ் படிக்கிற வாய்ப்பு இவருக்கு இயல்பாகவே அமைந்து விட்டது. பின்னாளில் பிரான்ஸ் தேசத்துக்கே சென்று செட்டிலாகி விட்ட போதிலும் தமிழை மறந்தாரில்லை. சீவக சிந்தாமணி, திருக்குறள் ஆகியவற்றை பிரெஞ்ச்க்கு மொழி பெயர்க்கும் பணியை துவக்கி, பெரும்பகுதியை முடித்தார். தொன்மையும், பெருமையும் கொண்ட தமிழ் இலக்கணத்தை பிரெஞ்ச் மொழிக்கு இவர் மொழி பெயர்த்த போதுதான், நமது மொழியின் ஆற்றிலறிந்து பிரான்ஸ் தேசம் பிரமித்தது.
பாரிஸ் நகரில் உள்ள நூலகத்தில் ஆயிரக்கணக்கான (அந்தக் காலத்திலேயே ஆயிரக்கணக்கான!) தமிழ் நூல்கள் இடம் பெறச் செய்தார். அவற்றில் பெரும்பங்கு கையெழுத்து பிரதிகள். பாரிஸில் வசித்தாலும், தமிழகத்தில் உள்ள தமிழறிஞர்களுடன் தாமாக கடிதத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு இங்கிருக்கிற ஏட்டுச் சுவடிகளை சேகரிக்கும் பணியை தனது வாழ்நாள் முழுவதும் செய்திருக்கிறார். தமிழறிஞர் உ.வே.ச. இவரைப் பற்றியும், இவரது தமிழ் ஆர்வத்தைப் பற்றியும் தனது ‘நினைவு மஞ்சரிகள்’ கட்டுரைத் தொகுப்பில் விரிவாகவே எழுதியிருக்கிறார்.
(‘‘ஜுலியன் வின்ஸோனென்பவரை முன்பு நான் அறியேன். அவராக வலிந்து பாராட்டி எழுதினார். அவருடைய கடிதத்தில் உள்ள அன்புரைகள் என் உள்ளத்தைக் குளிர்வித்தன. பாரிஸிலும் தமிழ்ச் சுவடிகள் உள்ளன என்பதை அதிற் கண்டேன். உடனே அவருடைய கடிதத்திற்குப் பதில் எழுதினேன். அவர் எழுதிய மற்றொரு கடிதத்தால் பாரிஸ் நகரத்திலுள்ள பெரிய புத்தகசாலையில் தமிழ்க் கையெழுத்துப் பிரதிகள் ஆயிரம் இருப்பதாகத் தெரிய வந்தது. தமிழானது கடல் கடந்து சென்று அங்கும் அன்பர்களைப் பெற்றிருப்பதை நினைந்து மகிழ்ச்சியுற்றேன்....’’ - உ.வே.சாமிநாதய்யரின் நினைவு மஞ்சரி கட்டுரைத் தொகுப்பு - முதல் பாகம்).
கணக்கதிகாரம் பார்த்து நாளாச்சு என்று பெரியகுளத்தில் இருந்து கடிதம் வந்திருக்கிறது. படித்ததும் திகைக்க வைக்கிற ஒரு அறிவியல் மேட்டர்... அடுத்தவாரம்!
‘ஜிம் பாடி’ முதலைகள்?

சாப்பாடு பிடிக்கலையா?

தமிழை மறக்கமுடியுமா?

திகைக்கப் போறீங்க!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக