சனி, 30 ஏப்ரல், 2016

ஒரு அகராதியும், சில யானைகளும்!

த்து நாள் குளிக்காமல், பவுடர் மட்டுமே பூசிக் கொண்டு திரிகிற ஆட்களை நாம் அடிக்கடி கிராஸ் பண்ணியிருப்போம். பல நேரம் அவர்களிடம் பவுடர் வாசனை பரிதாபமாக தோற்றுப் போயிருக்கும். அப்படிப்பட்ட ஆசாமிகள் கற்றுக் கொள்ள, பூனைகள் சில பாடங்கள் வைத்திருக்கின்றன. விலங்கு வகையறாக்களில் ‘சுத்தம் சோறு போடும்’ பழமொழியை மிகச் சரியாக பின்பற்றுபவை பூனைகள். ஒரு நிமிடம் சும்மா இருக்காது, நாக்கு கொண்டு உடல் முழுக்க திரும்பத் திரும்ப நக்கி சுத்தம் செய்யும் அழகை நீங்களே பார்த்திருக்கலாம்.


யெஸ் பாஸ்...!

போனவாரம் எலி பற்றி பார்த்தாச்சு. இந்த வாரம் பூனை. மனிதனுடன் இணைந்து வாழ்கிற விலங்குகளில் காலத்தால் மிகவும் பழமையானது பூனை. உரசிக் கொண்டே திரிந்ததால், நமது கோபம், மகிழ்ச்சி, கண்டிப்பை சட்டென்று புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. பெயர் சொல்லி அழைத்தால், பரணில் பதுங்கியிருந்தாலும் பாய்ந்து வந்து ‘யெஸ் பாஸ்...’ என்று ஆஜராகும்.

சங்க இலக்கியங்களி்ல் பூனைகள் பற்றி பல குறிப்புகள் வருகின்றன. எட்டுத்தொகை நூல்களான பரிபாடல் (பூசை),  புறநானூற்றில்  (வெருகு) பூனைகள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. ஆனால், பூனையைத்தான் அந்தப்பாடல்கள் குறிக்கின்றனவா என நீங்கள் தெரிந்து கொள்ள, பூனைக்கான தமிழ் பெயர்கள் பற்றி தெரிந்திருத்தல் அவசியம். பூனைக்கு தமிழில் இற்புலி, பூசை, வெருகு, மார்ச்சாலம், அலவன், ஓதி, பாக்கன், விடாரகம், விலாளம் என பெயர்கள் இருக்கின்றன. பொதுவாக, காட்டுப்பூனைகளை வெருகு என்று அழைத்திருக்கிறார்கள்.

ஆன்ட்ராய்ட் அகராதி!

ந்து வருடங்களுக்கு முன்பு வரை, டிக்‌ஷனரி எனப்படுகிற அகராதியை சுமந்து செல்வது மாணவர்களுக்கு ஏறக்குறைய தண்டனை மாதிரித்தான். இளவட்டக்கல் சைஸூக்கு பிரமாண்டமாக இருந்த டிக்‌ஷனரிகள், இன்றைக்கு ஆன்ட்ராய்ட் ஆப்ஸாக வந்து, பட்டனைத் தட்டிய உடன் அர்த்தம் சொல்கின்றன.

 கடினமான ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் என்ன, உச்சரிப்பு எப்படி என்று தெரிந்து கொள்ள இன்றைக்கும் அகராதிகள் பெரும் பங்களிக்கின்றன. அகராதிகள் அத்தனை சுலபத்தில் வந்து விடவில்லை. அவற்றை தயாரித்து, இன்றைய வடிவத்துக்கு மாற்றியவர்களை நாம் நினைவுகூர்ந்து நன்றி சொல்லவேண்டாமா?

கராதியை புரட்டும் போது மறக்கக்கூடாத பெயர் மிரோன் வின்ஸ்லோ (Rev. Miron Winslow 1789-1864). அமெரிக்கா காரர். சுவிசேஷம் செய்வதற்காக 1819ல் கொல்கத்தா வந்தவர், அங்கிருந்து இலங்கை சென்றார். அங்கு 14 வருடப்பணிக்குப் பிறகு, 1836ல் சென்னை வந்தார். மிஷனரி பணிகளுக்காக அமெரிக்க மெட்ராஸ் மிஷன் அமைப்பை துவக்கி, பைபிளை தமிழுக்கு மொழி பெயர்க்கிற பணிகளை செய்தார். அது மட்டுமே செய்ததோடு நின்றிருந்தால், இந்தப் பக்கத்துக்கு அவர் வந்திருக்க மாட்டார். அதையும் கடந்து ஒரு மெகா பணியை மிக நீண்ட காலமாகவே செய்து வந்தார். ஏறத்தாழ, 30 ஆண்டுகள். ஒரு நாளில் கட்டாயமாக 4 மணிநேரமாவது ஒதுக்கி அவர் செய்து வந்தது, தமிழ் - ஆங்கில அகராதி தயாரிக்கும் பணி.

வின்ஸ்லோ மற்றும் அவரது சகாக்களின் மிகக் கடும் உழைப்புக்குப் பிறகு 1862ல் தமிழ் - ஆங்கில அகராதியை (A Comprehensive Tamil and English Dictionary of High and Low Tamil) வெளியிட்டார். 976 பக்கங்களில் 68 ஆயிரம் தமிழ் சொற்களுக்கு இதில் விளக்கம் இருந்தது.

இலக்கிய மேற்கோள்களுடன் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது இந்த அகராதியில் இன்னும் சிறப்பு. பின்னாட்களில், தமிழில் வெளிவந்த பல அகராதிகளுக்கு இதுவே ஆதிமூலம். அவருக்கு நன்றி சொல்வதற்காக வாரம் இது. ரைட்டா?

நீங்க கிரேட்டா...?

ணக்கதிகாரத்தை புரட்டி ரொம்ப நாளாச்சு. அதில் இருந்து ஒரு புதிர் பாடலுடன் இந்த வாரத்தை முடிக்கலாம். கீழே இருக்கிற பாடலை ரொம்பக் கவனமாக படிங்க. கடைசியாக ஒரு கேள்வி இருக்கு. கரெக்ட்டா பதில் சொன்னா... நீங்க ரியல்லி கிரேட். சரியா?

‘‘புனம் மூன்றில் மேய்ந்து, வழி ஐந்தில் சென்று,
இனமான ஏழ் குள நீர் உண்டு, கனமான
கா ஒன்பதில் சென்று, காடவர்கோன் பட்டணத்தில்
போவது வாசல் பத்தில் புக்கு...’’

பாடலுக்கான விளக்கம்:
ஒரு காட்டில் நிறைய யானைகள் இருக்கின்றன. பொழுதுபோகாத ஒரு நாளில் அவை அத்தனையும் மொத்தமாகக் கிளம்பி வயலில் (புனம்) மேயச் சென்றன. அங்கிருந்தவை மூன்று வயல்கள். யானைகள் சரி சமமாகப் பிரிந்து மூன்று வயல்களிலும் மேய்ந்தன. ஆச்சா? பிறகு அங்கிருந்து கிளம்பி வெளியே வந்ததும், ஐந்து பாதைகள் பிரிந்தன.
யானைகள் சரி சமமாக பிரிந்து ஐந்து பாதைகள் வழியாகச் சென்றன. இந்த ஐந்து பாதைகளும் ஏழு குளங்களை சென்றடைந்தன. இங்கேயும் அதே மேட்டர்தான். ஏழு குளங்களிலும் சரி சமமான எண்ணிக்கையில் பிரிந்து குளித்து, கும்மாளமடித்தன. அப்புறம், 9 சோலைகள் (கா) இருந்தன. சரிசமமாக பிரிந்து அதன் வழியாகச் சென்ற யானைகள், கட்டக்கடைசியாக காடவர்கோன் பட்டணத்துக்கு வந்து சேர்கின்றன. பட்டணத்துக்கு பத்து வாசல். இங்கேயும் சரி சமமான எண்ணிக்கையில் பிரிந்து ஊருக்குள் சென்று சேர்கின்றன.

கணக்கு பண்ணலாமா?


ப்பாடி... யானை கதை முடிந்தது. இப்போது கேள்வி. மொத்தம் எத்தனை யானைகள்? இதுதான் புதிர். யோசித்துப் பாருங்கள். அந்தக்காலத்தில் (காரிநாயனார் காலத்தில்) வாசலில் தாயக்கட்டை உருட்டிய படியே, நமது பாட்டிகள் புதிர் போட்டு விளையாடிய கணக்கு இது. உங்களால் முடிகிறதா? முடியாவிட்டால், நன்றாக கணிதம் தெரிந்தவர்களிடம் கேட்டு வைத்திருங்கள். உங்கள் விடை சரிதானா என அடுத்தவாரம் (விளக்கமாக) பார்க்கலாம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

  1. பூனைக்குட்டி விளக்கம் நன்று, kavithaigal0510.blogspot.com-தளத்திற்கு வருகை தர அன்புடன் அழைக்கும்...

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...