ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

சுசுந்தரி... கண்ணால் ஒரு சேதி...!

லியுடன், பூனைக்கு என்னதான் பிரச்னை? வாய்க்கால், வரப்பு தகராறா; குடுக்கல், வாங்கலில் குளறுபடியா... இல்லை, ‘கவுரவக் காதல்’ மேட்டர் ஏதேனும் இருக்கிறதா? எலியை கண்ணில் பார்த்து விட்டால், பசி இல்லாவிட்டாலும் கூட மீசை துடிக்க பாய்ந்து வருகிற பூனை, கவ்விக் கபளிகரம் செய்வது ஏன்? டிவியில் மட்டும்தான் டாம் தோற்று, ஜெர்ரி ஜெயிக்கிறதே தவிர, நிஜத்தில் இல்லை. ஆனாலும், எலி மேல் நமக்கு அத்தனை இரக்கம் வருவதில்லை. ஏன்? வீட்டில் செம டார்ச்சர் செய்து விடுகிறதில்லையா? ஒரு பொருளை வெளியில் வைக்க விடுகிறதா என்ன? புதினா இலைகளை கொஞ்சம் பிய்த்துப் போட்டால், முன்னங்கால்களை தலைக்கு மேலாக உயர்த்தி, அந்த திசைக்கே எலி ஒரு கும்பிடு போடும் என்று பாட்டி மருத்துவம் சொல்கிறது. எல்லாம் சரி. எலியை பற்றி தமிழ் என்ன சொல்கிறது?


‘சுந்தரி’யை மடக்கியாச்சா?

நாம் வெறுத்து ஒதுக்குவது போல தமிழ் ஒதுக்கவில்லை. எலிக்கு, அதன் வகைக்கு ஏற்ப நிறைய பெயர் சூடி அழகு பார்க்கிறது நம்மொழி. நம் வீட்டில் டார்ச்சர் பண்ணுகிற லோக்கல் எலிகளுக்கு இரும்பன், ஆகு, சிகரி என்று தமிழில் பெயர் இருக்கிறதாம். சின்னதாக ஒரு ஆட்டுக்குட்டி சைஸில் திமுதிமுவென ஓடி வந்து, ‘ஷாக்’ கொடுக்குமே... பெருச்சாளி. அதற்கும் கூட தமிழில் பெயர் இருக்கிறது என்றால், ஆச்சர்யப்படுவீர்கள். உந்துரு, மூடுடிகம், களதம், துந்துளம் - இதெல்லாம் மிஸ்டர்.பெருச்சாளியின் தமிழ் பெயர்கள்.

லி குடும்பத்தில் மூஞ்சூறு என்று ஒரு வகையறா இருக்கிறது. யானைமுகக் கடவுளின் வாகனம் (!?) இது. இதற்கு தமிழில் சுண்டன், சுவ்வு, சுசுந்தரி என்று பெயர் இருக்கிறதாக்கும். பொறியில் இது சிக்கிய சத்தம் கேட்டால், தமிழில் சொல்வதாக நினைத்துக் கொண்டு ‘சிக்கிருச்சிடா.... சுந்தரி!’ என்று கத்தி விடக்கூடாது. பக்கத்து வீட்டுக்காரர்கள் தவறாக நினைத்து விடக்கூடும். சுசுந்தரி என்று தெளிவாகச் சொல்லவேண்டும். சரியா?

நன்றி சொல்ல உனக்கு...

மிழ் புத்தகப் பிரியர்கள் மறக்கக்கூடாத பெயர், ஜான் முர்டாக் (John Murdoch 1819 - 1904). ஸ்காட்லாந்து காரர். இலங்கையிலும், தமிழகத்திலும் சமயப்பணியுடன், தமிழ்ப்பணியும் சேர்த்து செய்தவர். வந்தோமா... சமய வேலைகள் செய்தோமா என்று குறுகிய வட்டத்துக்குள் நின்று விடாமல், தமிழுக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்திருக்கிறார். அதுவரை தமிழில் வந்துள்ள இலக்கியங்கள், நூல்களின் பட்டியலைத் தொகுத்து தொகுப்பாக (Classified catalogue of Tamil printed books) 1865ல் வெளியிட்டார். அதைப் பார்த்தப் பிறகுதான் நம்மாட்களே, ‘அட... தமிழில் இத்தனை இலக்கிய பொஷ்தகங்கள் இருக்கா’ என்று வாய் திறந்து பிரமித்திருக்கின்றனர்.

நூலாசிரியர் பெயர், நூலின் உள்ளடக்கம், அந்த நூல் எழுதி வெளியிடப்பட்ட ஆண்டு என்று எக்கச்சக்கத் தகவல்கள் இவரது தொகுப்பில் இருந்தன. பிறகு வந்த தமிழ் ஆய்வாளர்கள், இவரது இந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழ் இலக்கியம் குறித்த தங்களது விரிவான தேடலைத் துவக்கினர். இவர் எழுதிய அந்த தொகுப்பு, பிற்காலத்தில் தமிழக அரசின் முயற்சியால், கூடுதல் விபரங்களுடன் வெளியிடப்பட்டது என்கிற தகவல், ஜான் முர்டாக்கின் உழைப்பு எத்தகையது என்பதை விளக்கும். அவருக்கு நன்றி சொல்ல மறக்கலாமா?

அப்டேட் அப்பாடக்கர்ஸ்?


டலில் இருக்கிற நீர் ஆவியாக மேலே போய், மேகமாக மாறி, மழையாகப் பொழிந்து மீண்டும் கடலிலேயே சேர்கிற அந்த நீர் சுழற்சி அறிவியல் குறித்து இப்போது நமக்கெல்லாம் ரொம்ப நல்லாவே தெரியும். இந்த நீர்சுழற்சி அறிவியல் பற்றி, உலக மொழிகளில் தமிழில் மட்டுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாகவே மிக விரிவாக, விளக்கமாக கூறியிருக்கிறது. அதற்கு உதாரணமாக பட்டினப்பாலையில் (கி.மு. 2ம் நூற்றாண்டு) இருந்து “வான்முகந்த நீர் மழை பொழியவும் / மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்...’’ என்ற பாடலை 69வது வாரத்தில் எடுத்துக் காட்டியிருந்தோம்.
நிறைய தமிழ் அறிஞர்கள் தொடர்பில் வந்து விட்டனர். ‘‘நீர்சுழற்சி பற்றி பட்டினப்பாலை மட்டுமல்ல, இன்னும் நிறைய தமிழ் இலக்கியங்களிலும் குறிப்புகள் இருக்கின்றன. எல்லாம் சொல்ல வேண்டாமா?’’ என்று அன்பாக கோபித்துக் கொண்டனர்.
‘‘மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை / பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்...’’ என்று நற்றிணையும், ‘‘மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி / பெயல் பெய்து கழிந்த பூநாறு வைகறை...’’ என்று அகநானூறும் நீர்சுழற்சி குறித்து தெளிவாக பாடி வைத்திருக்கின்றன. இன்னும் நிறைய சங்க இலக்கியங்களிலும் இருக்கிறது. ஒரு பானைச் சோற்றுக்கு, இந்த சில பருக்கைகள் பதம்! ரைட்டா?
ன்பதால், ‘நாங்கல்லாம்... அந்தக்காலத்திலேயே அறிவியல்ல அப்டேட் அப்பாடக்கர்களாக்கும்...’ என்று நீங்கள் காலரை உயர்த்தி விட்டாலும் கூட... தப்பில்லை மக்காஸ்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...