லைக் கொடுங்க!
யதார்த்த வாழ்க்கையில் நாம் கடந்து செல்கிற சோகத்தை, பாசத்தை, நட்பை, நகைச்சுவையை காட்சிப்படுத்தி, சுவை கூட்டுகிற வல்லமை புகைப்படங்களுக்கு மிக அதிகம் உண்டு. அன்றாடம் கண்ணில் படுகிற விஷயங்கள்தான். ஆனால், அதுவே புகைப்பட பதிவாக பார்க்கையில்... உள்ளூரப் புதைந்திருக்கும் புதிய பரிமாணங்கள் புரிய வருகிறது. ‘பூனைக்குட்டி’யின் பேசும்படம் - 3ஐ பாருங்கள். குறைந்தபட்சம், ‘வா...வ்’ என்றோ... ‘ஆ...வ்’ என்றோ ஒற்றை வார்த்தையிலாவது உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
இந்த பைக்குக்கு லைக் கொடுங்க!
பெட்ரோல் விலையைப் பார்த்து பதற வேண்டியதில்லை. ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்கவில்லையே... என்று புலம்பத் தேவையில்லை. மைலேஜ், பிக்கப் குறைகிறதே என்ற வருத்தமே வேண்டாம். அவ்வப்போது ‘வாட்டர் சர்வீஸ்’ மட்டும் செய்தால் போதும். செலவே வைக்காமல், அத்தனை பேரிடமும் ‘லைக்’ வாங்கும் நம்ம நாலு கால் பைக் எப்பூடி...?
இடம்: தேனியில் இருந்து கம்பம் செல்கிற சாலை.
‘சின்ன’ டிசைன்
தேர்தலை திருவிழா என்று சும்மா ஒன்றும் சொல்லவில்லை. நாட்டு நடப்பைப் பாருங்கள்... என்னென்ன கூத்து நடக்கிறது என்று. அம்மா முடி சூடவேண்டும் என்பதற்காக, தனது முடியை ‘சின்ன’ டிசைன் செய்திருக்கிறார் இந்த பிளட்டின் பிளட் (ரத்தத்தின் ரத்தம்!!). நல்லவேளை... அம்மாவின் சின்னம், ஆம் ஆத்மி மாதிரியாக இல்லை.
காணக்கிடைக்காத இந்தக் காட்சி கிடைத்த இடம்: கடலூர்.
ஆக்சிலேட்டர அழுத்தி மிதிப்பா!
டவுன்பஸ்களில், - டிரைவர் சீட் உள்பட - அத்தனை சீட்டும் காலியாக இருந்தாலும் கூட ஃபுட் போர்டில் நின்று பயணம் செய்ய நம்மூரில் ஒரு கூட்டம் இருக்கிறது. ‘படியில் பயணம்... நொடியில் மரணம்’ என்ற பஞ்ச் டயலாக் எல்லாம், இவர்களிடம் வேலைக்கு ஆகாது. பஸ் பயணங்களில் கிடைத்த பல வருட அனுபவம் கைகொடுக்க... ஷேர் ஆட்டோவிலும் ஜோர் ஃபுட் போர்ட் பயணம்.
இடம்: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ரங்கசமுத்திரம்.
ரோட்டை சரி பண்ணுங்க மக்கா!
‘வாழ்க்கை மேடு, பள்ளமாக இருக்கலாம்; ரோடுமா அப்பிடி இருக்கணும்? பைக்குல போகும் போது, முகத்துல காத்தடிக்கும். லேசா... கண்ணசந்தா, கபால மோட்சம்தான். ஓட்டை போட்ட மக்களுக்கு ரோட்டை ஒழுங்கா போடுங்கப்பா... இன்னாடாது, நாய் அட்வைஸ் பண்ணுதேன்னு பாக்காதீங்க. பூனைக்குட்டி வலைப்பூவுல நாய்க்குட்டி என்ன... நரிக்குட்டி கூட நாட்டாம பண்ணும்!’
இடம்: மதுரை, அய்யர்பங்களா.
பிரெண்ட்ஷிப்... ஸ்ட்ராங்கு!
மனசிருந்தா போதும் மச்சான்... டயர்ல கூட ஒக்காந்து சவாரி போலாம். இடம்: கலெக்டர் அலுவலகம் அருகே, மதுரை.
சூசைட் அட்டம்ட்னு நெனச்சுடாதீங்க!
இந்த சின்ன வயசில, குட்டிப்பையனுக்கு என்ன பிராப்ளம்? அருவியில குதிக்க டிரை பண்றானே... என்று பதறவேண்டாம். ‘கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்...’ என்று ஒரு பழைய பாட்டு கேட்டிருக்கிறீர்களா? இந்தப் படத்துக்காகவே பாடி வைத்த பாட்டு அது. சிங்காரச் சென்னை நகரின் வெற்றுச் சுவர்களில் எல்லாம், வித விதமாக படம் வரைந்து தள்ளியிருக்கிறார்கள். சுவரில் அருவி படம் இருக்க... அதன் அருகே உள்ள கம்பியில் ஏறி என்ஜாய் செய்கிறான் சிறுவன். அவ்வளவே!
- பூனைக்குட்டி -
பூனைக்குட்டியின் பேசும் படங்கள் அருமை.... இவை பேசும் படங்கள் மட்டும் அல்ல...
பதிலளிநீக்குபேசப்படவேண்டிய படங்கள்......