சனி, 29 நவம்பர், 2014

கேரளாவும்... பெரியாறு அணை கப்சாக்களும்!

* பெரியாறு அணை இடிந்து விடும்; தகர்ந்து விடும்.
* ஐந்து மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி விடும்.
* 30 லட்சம் மக்கள் ஜலசமாதி ஆகி விடுவார்கள்.
* 132 அடி நீர்மட்டத்தை 106 அடியாக குறைக்க வேண்டும்...

- ஒன்றா, இரண்டா... கேரளாவின் / கேரள அரசியல்வாதிகளின் பொய், புரட்டுக்கள். இன்றைக்கு அத்தனை பேரும் கப்-சிப். 142 அடிக்கு மேல்  தேங்கியும் கொஞ்சமும் அசராமல் ‘நான் ரெடி... நீங்க ரெடியா?’ என 152 அடிக்கு தயாராக நிற்கிறது பென்னிகுக் கட்டிய பெரியாறு அணை.



காம்ரேட் - காங்.ரேட்


டுக்கி அணைக்கு தண்ணீரை கொண்டு வந்து சேர்க்கவேண்டும் என்ற ஒரே மறைமுக அஜெண்டாவுடன், கேரள அரசு அள்ளித் தெளித்த பொய் பித்தலாட்டங்களை கடந்த சில வருடங்களாக தமிழகமும், பொறுமை குணம் மிக்க அதன் மக்களும் பார்த்துக் கொண்டேதான் இருந்தார்கள்.  காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் மற்ற விஷயங்களில் அடித்துக் கொள்வார்கள். ஒருவர் மீது ஒருவர் கொள்கை, கோட்பாட்டுப் பிரகடனப் போர்  புரிவார்கள். ஆனால், பெரியாறு அணை விவகாரம் என்று வந்து விட்டால் மட்டும் அச்சுதானந்தன்களும், உம்மன் சாண்டிகளும் அடையாள  வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாத படிக்கு ஒன்றோடு ஒன்றாகக் கலந்து விடுவார்கள். காம்ரேடுகளையும், ‘காங்.ரேடு’களையும் சேர்த்து வைக்கிற  மையப்புள்ளி பெரியாறு அணை.

பெரியாறு அணையை உடைக்கவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு கடந்த சில வருடங்களாக அங்குள்ள சில அறிவுஜீவிகளை துணைக்கு  அழைத்துக் கொண்டு அவர்கள் நடத்திய அழிச்சாட்டியம்... அப்பப்பா. பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும், டிவி சானல்களில், உச்ச க்கட்டமாக பெரிய திரை சினிமாவாகவும் (டேம் 999) கற்பனை கொரில்லாக்களை தட்டிப் பறக்கவிட்டார்கள். 136 அடி நீர்மட்டத்தையும் 106  அடியாகக் குறைக்கவேண்டும் என்று கோஷம் எழுப்பி மத்திய அரசின் கதவுகளைக் தட்டினார்கள்.

டெட் ஸ்டோரேஜ் என்ன?


ண்மையில், பெரியாறு அணையில் 104 அடி என்பது டெட் ஸ்டோரேஜ் லெவல். அதாவது, 104 அடி வரை உள்ள தண்ணீரில் ஒரு சொட்டுக்  கூட தமிழகத்துக்கு கொண்டு வரமுடியாது. அங்கேயே சும்மாதான் தேங்கிக் கிடக்கும். படகு விட்டு பணம் சம்பாதிக்கலாம். அவ்வளவுதான்.  104க்கு மேலே உயர்கிற தண்ணீரை மட்டுமே திறந்து விட்டு, தமிழகத்துக்கு சுரங்கப் பாதை வழியாக கொண்டு வரமுடியும். பெரியாறு அணை  நீர்மட்ட உயரத்தை 106 அடியாகக் குறைத்து விட்டால், வெறும் 2 அடி தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்குக் கிடைக்கும். அந்த 2 அடி தண்ணீரால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அதற்குப் பிறகு அந்த அணை எதற்கு என்று தமிழகம் உறங்கி விடும். ஒட்டுமொத்தமாக வாரிச் சுருட்டி விடலாம் என்பது கேரளாவின் திட்டம்.


நீதியை எத்தனை காலம்தான் இயற்கை பொறுக்கும்? பருவமழை துவங்கியது. நாளுக்கு நாள் வலுத்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.  ‘ஐயோ... ஐந்து மாவட்டங்கள் அழியப் போகின்றன’ என கேரளா அலறியது. உலகின் தலைசிறந்த கட்டுமான நிபுணர்கள், நீரியல் துறை  வல்லுனர்கள், பொறியியல் ஜாம்பவான்கள் அணைக்கு அவசர, அவசரமாக வந்தனர். பரிசோதித்துப் பார்த்தனர். 152 அடி வரைக்கும் கூட தாராளமாகத் தேக்கலாம். உம்மன்சாண்டி, அச்சுதானந்தன் வகையறாக்களின் அடுத்த ஈரேழு தலைமுறைக்கும் கூட அணை அசையாது. பலமாக  நிற்கும் என்று சர்டிபிகேட் கொடுத்து விட்டார்கள்.

அச்சுதானந்தன் அட்ரஸ் தெரியுமா?

142 அடியை கடந்தது பெரியாறு அணை. அதன்பிறகு உச்சநீதிமன்றம் நியமித்த நாதன் குழுவினர் அணையைப் பார்வையிட்டார்கள். ‘இத்தனை  பலமான ஒரு அணையை பார்த்ததில்லை. 152 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கலாம்’ என்று அறிவித்து விட்டனர். இப்போது  கேரளா தரப்பில் பேச்சு மூச்சு காணோம். அச்சுதானந்தன் ஆள் அட்ரசே தெரியவில்லை. சரி, அதை விடுங்க. கடந்த சில வருடங்களில் எப்படி  எப்படியெல்லாம் கற்பனையை தட்டி விட்டு மிரட்டியிருக்கிறார்கள் தெரியுமா நமது கேரள சேட்டன்மார்களும், சேச்சிமார்களும் ("காம்ரேட்" பிஜூமோள்  சேச்சியை மறக்கலாமா?). நோவாவின் பேழை போல ஒரு கப்பல் தயாரித்து மக்களை அழைக்கிற (அணை உடைந்தால், தப்பிக்கவாம்!) படத்தை  மேலே பார்த்தீர்கள். கேரளாவின் இன்னும் மேலதிகமான புரட்டுத்தனங்களை, இந்தத் தருணத்தில் உலகின் முன் வைக்கிறது பூனைக்குட்டி!



* ‘சேவ் முல்லைப் பெரியாறு டேம்’ என்ற இயக்கம் துவக்கி இணையதளங்கள் மூலம் ஆள் பிடிக்கிற விளம்பரத்தைப் பாருங்களேன். அணை  உடைந்து இடுக்கி மாவட்டம் மூழ்கி விடும் என்று ஒரு கற்பனை கிராபிக்ஸ் வேறு.




* அணை உடைந்தால் என்ன நடக்கும்? இப்படித்தானாம். சின்னக்குழந்தைகளை தண்ணீர் இழுத்துச் செல்கிறது. கேரள அரசு பஸ்கள் தண்ணீரில்  மிதக்கின்றன. பெரும் பிரவாகமாக தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. கழுத்தை மட்டும் நீட்டிக் கொண்டு தண்ணீருக்குள் இருந்து கதறுகிறது  ஒரு குழந்தை... அடடா என்ன கற்பனை? நீங்கள்லாம்... எங்கயோ இருக்கவேண்டியவனுங்கப்பா!




* 1945ல் வெடித்த நாகசாகி அணுகுண்டை விடவும் டேஞ்சராம் பெரியாறு அணை. அடுத்து பாருங்க, மனித உயிர் மட்டுமில்லையாம்... கலாச்சாரமும் அழிந்து விடுமாம் (நல்ல கலாச்சாரம்டா!). போங்கப்பா... போய் புள்ளகுட்டிகளை படிக்க வையுங்க.




* விளம்பரங்களில் இது கொடூரம். முல்லைப் பெரியாறு அணை உடைந்து 33 லட்சம் மக்கள் பலி என்று முதல்பக்கம் பேனர் போட்டு விட்டார்கள். பொய் சொல்வது என்று முடிவெடுத்து விட்டால், அதில் அதிகப்பட்சம் எதுவோ, அதை அடைந்து விடுவார்கள் போலிருக்கிறது பக்கத்து  மாநிலத்துக்காரர்கள்.




* உலகத்தை அழிக்க வரும் அந்தி கிறிஸ்து லெவலுக்கு பெரியாறு அணையைப் பற்றி எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் பாருங்கள். அணு குண்டை விட, 180 மடங்கு சக்தி வாய்ந்ததாம். இந்த மூளையை வெச்சு ஆக்கபூர்வமா எப்போ சிந்திக்கப் போறீங்க?




* அணைக்காக போராடுகிற நம்ம அரசியல்வாதிகளை எப்படியெல்லாம் கேலிச்சித்திரம் வரைந்து கிண்டலடித்திருக்கிறார்கள் தெரிகிறதா?

- எல்லாவற்றுக்கும் சேர்த்து நெத்தியடியாக பதில் கொடுத்து விட்டு, படு அமைதியாக... அதேசமயம், கம்பீரமாக நிற்கிறது பெரியாறு அணை!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

7 கருத்துகள்:

  1. விரிவான தகவல்கள் அரிய படங்கள் என அசத்தியிருக்கிறீர்கள். வேறு யாரும் இதுவரை இதை எல்லாம் எழுதவில்லை. படங்களை தேடி எடுத்திருப்பதில் கடினமான உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    வரதராஜன், சென்னை

    பதிலளிநீக்கு
  2. அருமையான தகவல் சகோ......

    இலவச 150 உடனடி ரீசார்ஜ் :- http://naveensite.blogspot.in/2014/11/earntalktime.html

    பதிலளிநீக்கு
  3. பொய்களும் புரட்டும் கொண்டு மோதும் மலையாள சேட்டன் களுக்கு சரியான பதிலடி. பூனையாரின் பணி மகத்தானது.

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு அண்ணா.. கால காலத்திற்கும் கேரள அரசையும் ஆட்சியாளர்களையும் பற்றிய முக்கியமான பதிவாக முல்லை பெரியாறு அணை போல பலமாக இருக்கும்..

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அருமையான பதிவு சார் அசத்தல்

    பதிலளிநீக்கு
  6. நாகராஜன், கரூர்3 டிசம்பர், 2017 அன்று 4:59 PM

    முல்லைப் பெரியாறு அணை வரலாற்றில் மிக முக்கியமான பதிவு இது. நாளைய நமது தலைமுறைகளுக்கு இந்தப் பதிவு ஒரு பாடம். மலையாள சேட்டன்மார்கள், எப்படியயெல்லாம் நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள் என்று விரிவாக ஆவணப்படுத்தி விட்டீர்கள். மிகக் கடினமான உங்கள் உழைப்புக்கும், தகவல் சேகரிப்புக்கும் ஒரு தமிழனாக நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  7. அருமை.இக்கருத்தையே உச்சநீதிமன்றத்தில்நாம்தாக்கல்செய்யலாம்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...