பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தை ஆளுகிற மிகப்பெரிய ஒரு கட்சி... அடுத்து நடக்கிற ஒரு இடைத்தேர்தலில் நிற்க முடியாத அவமானத்தை சந்திக்க நேரிடும் என்பது... ஆற்காடு பஞ்சாங்க கணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட ஆச்சர்யமே. இரட்டை இலை... இல்லை. மட்டுமல்ல. அதிமுக என்கிற கட்சியே இந்த இடைத்தேர்தலில் இருக்காது. ஆம். ‘அதிமுக’ என்கிற தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அந்தப் பெயரை பயன்படுத்தவும் கூட தேர்தல் கமிஷன் தடை விதித்திருக்கிறது. தமிழக அரசியல் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது??
திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ. பார்ட்டி துவங்கி, சனா.மனா.கனா வரை சகல கட்சிகளும் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கிற இடமாக, ஆர்கே நகரை பார்க்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு, அவர்களது எதிர்காலம். தமிழகத்துக்கும், பரிதாபப்பட்ட தமிழக மக்களுக்குமான எதிர்காலம், நிஜத்தில் இன்னதென்று தீர்மானிக்கமுடியாத இக்கட்டான நிலைமையில் இருக்கிறது.
இந்தியாவின் 29 மாநிலங்களில், இன்றைய தேதியில் தமிழகம் அளவுக்கு பிரச்னைகளால் சூழப்பட்ட மாநிலம் வேறெதுவும் இராது. மீனவர் பிரச்னையில் என்ன மாதிரியான அரசியல் நடந்து கொண்டிருக்கிறது கவனியுங்கள்!
ஒரு கேரள மீனவர் சுடப்பட்ட சம்பவம் நாடு முழுமைக்கும் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட மாநிலத்தில் இருந்து ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின் தலைவர் அத்தனை பேரும் கிளம்பிச் சென்று டெல்லியில் கலகக்குரல் எழுப்பினார்கள். மத்திய அரசு தனது வெளியுறவு கொள்கைகளை ஓரமாக வைத்து விட்டு, சுட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இத்தாலி கடற்படை காரர்களை கைது செய்து சிறையில் தள்ளியது. சுடப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு அன்றைய தேதியிலேயே ஒரு கோடி ரூபாய், அரசு வேலை, குடியிருக்க இடம்... இன்னபிற சலுகைகள் வழங்கப்பட்டன. இதைத் தவறெனச் சொல்லவில்லை.
21 வயது ராமேஸ்வரம் மீனவன் பிரிட்ஜோ ஆழ்கடலுக்குள் இருந்து குண்டடி பட்ட பிணமாக கரையில் இறக்கப்பட்ட சம்பவத்தை, கேரள மீனவர் சம்பவத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். தமிழக அரசியல் எத்தனை கேடுகெட்ட கதியில் இருக்கிறது என்பதை முகத்தில் அறைபட்டது போல சுளீரெனப் புரிந்து கொள்ளமுடியும். ‘‘இலங்கை அரசிடம் பேசிவிட்டோம். இனி இதுமாதிரி நடக்காது,’’ என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், நிர்மலா சீதாராமனும் உறுதிமொழி கொடுத்த தினத்துக்கு மறுநாள்... பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்ட அதே கடற்பரப்பில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள். அதற்கு இரு நாள் கழித்து, ஒரு படகுடன் சேர்த்து பத்து மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள். அதற்கு மறுநாள்... மேலும் 16 பேர் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
எனில்... ‘இனி இலங்கை தாக்காது’ என்ற அமைச்சர்களின் வார்த்தைகள், இந்திய அரசாங்கத்தின் வார்த்தைகள் இல்லையா? இந்திய அரசாங்கத்தின் வார்த்தைகள்தான் எனில், இலங்கை அரசுக்கு, இந்தியா மீது யாதொரு மரியாதையும் இல்லையா? தெற்காசிய நிலப்பரப்பில் இந்திய வல்லரசின் நிலைமை என்ன? மீனவ சமூகத்தின் வலியை மத்திய அரசின் பொறுப்புகளில் உள்ளவர்களிடம், சமாதியில் அடித்தது போல ஓங்கி, ஓங்கி அடித்துச் சொல்லி ஏன் வலியுறுத்த முடியவில்லை.
மீனவனை விடுங்கள். சபிக்கப்பட்ட தமிழ் சமூகம் அது. ஆனால், மக்களே... கடற்கரை பகுதியுடன் முடிந்து விடவில்லை பிரச்னை. இந்தியாவின் பிற மாநில மக்களால் அடித்து விரட்டப்பட்ட ஹைட்ரோ கார்பன், கெய்ல், அணு உலை, நியூட்ரினோ... எல்லாமே கடைசியில் வந்து சேருவது இங்குதான்.
ஒவ்வொரு முறை பட்ஜெட் போடும் போதும் கவனித்துப் பாருங்கள். குறைந்த பட்சம் ஒரு பாசஞ்சர் ரயில் கூட உருப்படியாக தமிழகத்துக்குக் கிடைக்காது. கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு நேரடி ரயில் என்று அறிவிப்பார்கள். அகமகிழ்ந்து விடக்கூடாது. கன்னியாகுமரியில் கிளம்பி திருவனந்தபுரம் வழியாக கேரளாவுக்குள் நுழைந்து... அந்த மாநிலத்தின் அத்தனை நகரங்களையும் இணைத்து டெல்லி செல்லும். தமிழகத்துக்கான அந்த ரயிலால் தமிழகத்து மக்களுக்கு துளி பயன் இராது. ரயில் ஒதுக்கீடு மட்டுமல்ல... தமிழகத்துக்கு மக்கள் கேட்கிற தொழில் வளர்ச்சிக்கான எந்த ஒரு திட்டமும் கிடைக்காது. ஆனால், கேட்காமலேயே அணு உலையும், நியூட்ரினோவும், ஹைட்ரோ கார்பனும் தமிழகம் தேடி வரும்.
டெல்லியின் பொறுப்புகளில் உள்ளவர்களிடம், சமாதியில் அடித்தது போல ஓங்கி, ஓங்கி அடித்துச் சொல்லி ஏன் உரிமை பெற்றுத் திரும்ப முடியவில்லை? பிரச்னை இன்னும் முடிந்து விடவில்லை மக்களே.
நாட்டின் உயர்ந்த பட்ச நீதி பரிபாலன அமைப்பான உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட, காவிரியில் தண்ணீர் திறக்கமுடியாது. முடியவே முடியாது என்று மறுத்து விட்டது கர்நாடகம். சோமாலியா மாதிரியான வறுமை தேசங்களுடன் போட்டி போடுவது போல கொத்துக் கொத்தாய் விவசாயிகள் இங்கு செத்து மடிந்த சோகத்தை... மத்தியில் ஆட்சி செய்கிறவர்களிடம் சமாதியில் அடித்தது போல ஓங்கி, ஓங்கி அடித்துச் சொல்லி ஏன் தண்ணீர் வாங்கித் தர ஏன் முடியவில்லை?
சொட்டுத் தண்ணீர் கூட ஓடாத ஆறுகளிலும் கூட தடுப்பணை கட்டிக் கொண்டிருக்கிறது கேரள அரசாங்கம். மழை காலங்களில் கூட, உபரி நீர் இந்தப் பக்கம் ஓடி வந்து விடக்கூடாதாம். யார் கேட்பது? யார் தடுப்பது? கிருஷ்ணாவில் இருந்து வருகிற தண்ணீரை ஆந்திரம் நிறுத்தி விட்டது. தாகம் தணிக்க, டாஸ்மாக் பானங்களை வாங்கிக் குடித்து, ஆற்றிக் கொள்ள பழகிக் கொள்ளவேண்டியதுதான்.
சுற்றி இருக்கிற அத்தனை மாநிலங்களும் ஏறி மிதித்து, உமிழ்கிற ஒரு அவல நிலையில் இருப்பது கூட தெரியாமல், ‘எந்திரன் டூ பாயிண்ட் ஜீரோ எப்போது ரிலீஸ்’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் உலகின் மிக மூத்த நாகரிகத்தை தனது பெருமையாகக் கொண்ட தமிழன்.
இப்படியான ஒரு சூழலில், ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு போட்டியிடுகிற ஒவ்வொரு கட்சிக்கும், அதனதன் எதிர்காலம் முக்கியம். இரட்டை இலையை மீட்டெடுப்பேன் என்று சிங்கப்பூர் காரரும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மரங்கள் இல்லாமல் செய்தவரும் சபதம் செய்கிறார்கள். திமுக தனது அடுத்தகட்ட அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகி விட்டது. நடக்கிற அத்தனை சம்பவங்களும் அந்தக் கட்சிக்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்குகின்றன. உத்தரப்பிரதேச வெற்றி தந்த உற்சாகத்தில், தமிழகத்தையும் தனது பிடிக்குள் கொண்டு வருகிற முனைப்பில் இறங்கியிருக்கிறது பாரதிய ஜனதா. ஒவ்வொரு கட்சிக்கும், அதனதன் எதிர்காலம்.
தனது எதிர்காலம் என்னதெனத் தெரியாமல் தமிழகமும், அதன் மக்களும் திகைத்து நிற்கிறார்கள்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
தெளிவான அலசல் நண்பரே முடிவில் சொன்னீர்களே தமிழன் திகைத்து நிற்கிறான்.
பதிலளிநீக்குஏன் எல்லா மாநிலத்தான் போலத்தானே நமக்கும் மூளை ???
வினை விதைத்து வினை அறுப்போம்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு
அருமை
பதிலளிநீக்கு