செவ்வாய், 7 ஜூன், 2016

செம ஹாட்... மச்சி!

ப்பாடா... அனல் கக்கிய அக்னி இடத்தை காலி செய்து விட்டது. அடிக்கிற வெயில் உங்களையும், என்னையும் மட்டுமா வறுக்கிறது? இயற்கையையோ, சுற்றுச்சூழலையோ எந்த விதத்திலும் டிஸ்டர்ப் பண்ணாமல், தானுண்டு, தன் ஜோலியுண்டு என்று இருக்கிற மிருகங்களையும் சேர்த்தேதான் வதைக்கிறது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்குகிற மாதிரியாக இல்லை. என்னதான் செய்யும் இந்த மிருகக்காட்சி சிம்பன்ஸி..? ஜில்லுனு கூலா... குடிக்குது கோலா! இடம்: ஷென்யாங் (சீனா).

அப்பர் பெர்த்து அங்கயா இருக்கு...?



காலை நேரங்களில் நம்மூர் டவுன்பஸ்களில் காணக்கிடைக்கிற காட்சி மாதிரியே இருக்கா? இது பங்களாதேஷ். ரம்ஜான், பக்ரீத் மாதிரியான பண்டிகை விடுமுறை காலங்களில், தலைநகர் டாக்காவில் வேலைக்கு வந்திருக்கும் வெளியூர் மக்கள், பெட்டி, படுக்கையை சுருட்டி எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு கிளம்பி விடுவார்கள். அந்த மாதிரியான ஒரு நேரத்தில் எடுக்கப்பட்ட படம் இது. டிரெய்னில், மேலே... உச்சியில்... உள்ள ‘அப்பர் பெர்த்’தில் (!!??) உட்கார்ந்து செல்வதற்கே E.Q. கொடுத்தால்தான் ஆச்சு என்கிற அளவுக்கு கூட்டம் கட்டி எகிறுமாம்!

மந்தையில் இருந்து பிரிந்த... யானைக்குட்டி!



காடுகளை அழித்து, ரிசார்ட் கட்டிக் கொண்டே போனால்... யானைகள் எல்லாம் எங்கே போய் குடும்பம் நடத்துவதாம்? உணவு தேடி காட்டுக்குள் இருந்து கிளம்பி கவுஹாத்தி நகருக்குள் (அசாம் மாநிலம்) புகுந்தது ஒரு யானைக்கூட்டம். மந்தையில் இருந்து ஒன்று மட்டும் வழிதவறி, கடைத்தெருவுக்குள் புகுந்து விட்டது. மக்களை பார்த்து மிரண்டு அது ஓட... அதைப் பார்த்து மிரண்டு மக்கள் ஓட... பெரும் போராட்டமா போச்சு போங்க. காடுகளை கொஞ்சம் கம்மியா அழிங்க சகோஸ் (அழிக்காதீங்கனு சொன்னா கேக்கவா போறீங்க?!)

நக்க வெச்சிட்டானுகளே... பக்கிப் பயலுக!



ரத்தை அழிப்பதும், மலையைப் பெயர்ப்பதுமாக நாம் செய்கிற அத்தனை அத்துமீறல்களும் ஒரு நாள் ஒன்று திரண்டு ரிட்டர்ன் ஆப் தி டிராகன் போல பாய்ந்து குதறப் போகிறது. இப்போதே பாருங்கள்... வெயில் காலத்தில் நாலு மடங்கு அதிகமாக வெயில் வறுக்கிறது. மழை காலத்தில், நாலு மடங்கு குறைவாக மழை டபாய்க்கிறது. பனி காலத்தில் காற்றடிக்கிறது. காற்று காலத்தில் குளிரடிக்கிறது. காட்டுக்குள் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடிய படியே ஊருக்குள் புகுந்த இந்த மங்கி தம்பி, ஒரு காரின் மேல் சொட்டுச் சொட்டாய் உதிர்ந்து கிடக்கிற மழைத் துளிகளை நக்கி இளைப்பாறுகிறது. பாவமா இருக்கில்ல?!

இது அசலூரு...



ண்ணீரில் குதித்து விளையாடுவதைக் காட்டிலும் ஆனந்தம் தருகிற செயல் வேறெதுவும் இருக்க முடியாது. குட்டி வயதுகளில் குளத்திலும், கிணறுகளிலும் முங்கு நீச்சல் அடித்த பொழுதுகள், ஞாபக அடுக்குகளில் எப்போதும் முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும். யோசித்துப் பார்த்தால்... நேற்றைக்குப் போலிருக்கும். அசைபோடும் போதும் ஆனந்தம் தருகிற அனுபவம் அது. வெளிநாட்டுக் காரர்களுக்கு அது ஒரு விளையாட்டு. அவ்வளவே. செக் குடியரசு நாட்டின் ஹிரிமெஸ்டைஸ் நகரில் நடந்த டைவிங் போட்டியில், ஆகாய பம்பரம் போல சுழன்ற படி தண்ணீருக்குள் பாயும் 18 வயசு.

இது நம்மூரு...



கொஞ்சம் அசகு பிசகாக விழுந்தாலும்... முதுகெலும்பு டேமேஜாகி, மூன்று மாதம் படுக்க வைத்து விடுகிற அளவுக்கு ரொம்ப ஆபத்துதான். ஆனாலும், அந்த ஆனந்தம் இருக்கிறதே... அடடா! தாராளமாக ரிஸ்க் எடுக்கலாம் தம்பிகளா. மழையால் உருவான திடீர் கால்வாய்க்குள் ஆனந்த டைவ் அடிக்கிற 10 வயசு. இடம்: ஐதராபாத் அருகே ஒரு கிராமம்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

  1. ஒரு குட்டி காமிக்ஸ் கதை படித்தது போலிருந்தது பதிவு. படங்கள் வழியே தமிழர்களின் அறியப்பட்ட வரலாறு தாய் காட்டி நிலாவில் துவங்குகிறது. படங்களும், பதிவும் சூப்பர்.
    ப.கவிதா குமார், மதுரை

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...