கடந்தவாரத்தில் ஒரு நண்பர் அலைபேசியில் தொடர்புக்கு வந்தார். ‘வாக்கியங்கள் பற்றி எழுதுறீங்க. சரி. வாக்கியத்தில கமா, புல் ஸ்டாப், ஆச்சர்யக்குறி... இப்படி நிறைய பங்ச்சுவேஷன் மார்க் போடறமே... இதுபத்தி நம்ம இலக்கணம் எதாவது சொல்லுதா சார்?’ - சபாஷ். சரியான கேள்வி. வாக்கியங்கள் பற்றி பேசுகிற இந்தத் தருணத்திலேயே, இதையும் ஒரு கை பார்த்து விடுவது நல்லது. தொல்காப்பியம், நன்னூல் போன்ற மூத்த தமிழ் இலக்கண நூல்களை தலைகீழாகப் புரட்டிப் பார்த்தாலும், இந்த நிறுத்தக்குறிகள் பற்றி சிங்கிள் வார்த்தை இல்லை. அப்படியானால், நமது பாடல்களிலும், செய்யுள்களிலும் எப்படி இவை வந்தன? ‘ஓ... மானே! ஓ... தேனே!’ என்று எழுதி ஆச்சர்யக்குறி போட்டு நிறுத்துகிறோமே, இது எப்போது பழக்கத்துக்கு வந்தது?
ஆங்கில மொழி தமிழுக்குக் கொடுத்த ‘கிப்ட்’ இது. குறியீட்டு இலக்கணத்தைப் பொறுத்தவரையில், நமது மொழியாளர்கள், ஆங்கில மொழியிடம் இருந்து பெற்றே நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்துகின்றனர். தமிழ் மொழியைப் பொறுத்தளவில், தனியாக நிறுத்தக்குறிகள் தேவைப்படவில்லை. நமது வார்த்தைகளே, அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்து வந்தன. ஒரு முற்றுப்புள்ளிக்கான (Full stop) வேலையை, வினைமுற்றுகள் செய்து விட்டன. வாக்கியத்தின் கடைசிச் சொல்லாக வினைமுற்றை அமைப்பதன் மூலம், முற்றுப்புள்ளிக்கு வேலையில்லாமல் போனது. (வினைமுற்று தெரியும்தானே? முடிவு பெற்ற வினைச்சொல்லே, வினைமுற்று. படித்தான், முடித்தான், குடித்தான்... இந்தச் சொற்கள், ஒரு விஷயம் முடிந்து விட்டதை உணர்த்துகின்றன இல்லையா?).
காற்புள்ளி (Comma), அரைப்புள்ளிகள் (Semicolon) செய்கிற வேலையை ஏகார, ஓகார உம்மைகளே செம்மையாகச் செய்து விட்டன. என்பதால் தமிழுக்கு கமா, செமிகோலனும் தேவைப்படவில்லை. ரஜினியும் கமலும் என்று உம்மை (ரஜினி + உம் = ரஜினியும் - இது உம்மை) சேர்த்துச் சொல்கிற இடத்தில் கமாவுக்கு (அதாவது காற்புள்ளிக்கு) வேலை இல்லைதானே? 18ம் நூற்றாண்டுக்குப் பின் ஆங்கில மொழியின் ஆதிக்கம் புழக்கத்தில் மிகுந்த காலகட்டத்தில், தமிழ் மட்டுமல்லாது, இந்திய மொழிகள் அனைத்துமே நிறுத்தக் குறியீட்டு இலக்கணத்தை விரும்பிப் பெற்றுக் கொண்டன. இன்று தவிர்க்க முடியாத அளவுக்கு அது மொழியுடன் கலந்து விட்டது. புதியன புகுதல் தவறில்லை என்பதால், தமிழ் அறிஞர்களும் மகிழ்வுடன் அதை அங்கீகரித்தனர். நிறுத்தக்குறிகள் பற்றி நிறைய பேச வேண்டியிருக்கிறது. அதற்கு முன்பாக, கடந்தவாரத்தில் ஆரம்பித்த வாக்கியம்...
எழுவாய் (Subject), பயனிலை (Predicate), செயப்படுபொருள் (Object) பயன்படுத்தி ஒரு வாக்கியம் அமைப்பது பற்றியும், அதில் ஒன்று இல்லாமல் எழுதினாலும் தப்பில்லை என்றும் கடந்தவாரம் படித்தோம். சமயத்தில், ஒரு வாக்கியத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயப்படுபொருள் அமைவதும் உண்டு. ‘ரமேஷ் எனக்கு ரஜினி பட சிடியும், ஜாக்கிசான் சினிமா சிடியும் கொடுத்தார்’ - இந்த வாக்கியத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயப்படுபொருள் இருப்பதை கவனித்தீர்களா?
வாக்கியம் அமைக்கும் வகையும், காலத்துக்கு ஏற்ப மாறி வருகிறது. ஒரு காலத்தில் தவறாக கருதப்பட்ட வாக்கிய அமைப்பு முறை, தற்போது டிரெண்டாக இருப்பதை இலக்கணம் தெரிந்து கொண்டால் புரிந்து கொள்ளமுடியும். ‘தலைவன் படம்னாலே சூப்பரா இருக்கும், இதில சொதப்பிட்டாரு...’ என்று தியேட்டரில் இருந்து வெளியே வருகிற அதிதீவிர ரசிகர் சொல்வதை கேட்டிருக்கலாம். ‘சூப்பரா இருக்கும்...’ என்கிற இடம் வரைக்கும் இந்த வாக்கியம் சொல்கிற அர்த்தம் வேறு. ‘சொதப்பிட்டாரு..’ என்கிற கடைசிச் சொல், வாக்கியத்தின் அர்த்தத்தை அடியோடு புரட்டி போட்டு விடுகிறதில்லையா? ‘படம் குப்பை’ என்று இரண்டே வார்த்தையில் சொல்லியிருக்கலாம். ஆனால்... புகழ்வது போல கொண்டு போய், கடைசி ஒரு சொல்லில், மேட்டரை மாற்றுகிறது இந்த வாக்கியம். இதுபோன்ற வாக்கியங்களை தமிழில் ஏமாற்று வாக்கியம் அல்லது மயக்கும் வாக்கியம் என்று குறிப்பிடுகிறார்கள். இது தவறான பிரயோகம் என்று ஒரு காலத்தில் நியதி இருந்தது. ஆனால், இன்றைக்கு இப்படிப் பேசுவதுதானே டிரெண்ட்?
வாக்கியங்களின் அமைப்பைக் கொண்டு அவற்றை சில பிரிவுகளாக தமிழ் இலக்கணம் பிரித்து வைத்திருக்கிறது. அதுபற்றியும், கட்டுரையின் துவக்கத்தில் பார்த்த நிறுத்தக்குறிகள் மேட்டர் பற்றியும் அடுத்தவாரத்தில் இன்னும் விரிவாக. சரியா?
குடித்தான் என்றால் முடிந்தது!

ஜாக்கிசான் சிடி கிடைச்சதா?
எழுவாய் (Subject), பயனிலை (Predicate), செயப்படுபொருள் (Object) பயன்படுத்தி ஒரு வாக்கியம் அமைப்பது பற்றியும், அதில் ஒன்று இல்லாமல் எழுதினாலும் தப்பில்லை என்றும் கடந்தவாரம் படித்தோம். சமயத்தில், ஒரு வாக்கியத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயப்படுபொருள் அமைவதும் உண்டு. ‘ரமேஷ் எனக்கு ரஜினி பட சிடியும், ஜாக்கிசான் சினிமா சிடியும் கொடுத்தார்’ - இந்த வாக்கியத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயப்படுபொருள் இருப்பதை கவனித்தீர்களா?
தலைவன் படம் எப்பிடி?
வாக்கியம் அமைக்கும் வகையும், காலத்துக்கு ஏற்ப மாறி வருகிறது. ஒரு காலத்தில் தவறாக கருதப்பட்ட வாக்கிய அமைப்பு முறை, தற்போது டிரெண்டாக இருப்பதை இலக்கணம் தெரிந்து கொண்டால் புரிந்து கொள்ளமுடியும். ‘தலைவன் படம்னாலே சூப்பரா இருக்கும், இதில சொதப்பிட்டாரு...’ என்று தியேட்டரில் இருந்து வெளியே வருகிற அதிதீவிர ரசிகர் சொல்வதை கேட்டிருக்கலாம். ‘சூப்பரா இருக்கும்...’ என்கிற இடம் வரைக்கும் இந்த வாக்கியம் சொல்கிற அர்த்தம் வேறு. ‘சொதப்பிட்டாரு..’ என்கிற கடைசிச் சொல், வாக்கியத்தின் அர்த்தத்தை அடியோடு புரட்டி போட்டு விடுகிறதில்லையா? ‘படம் குப்பை’ என்று இரண்டே வார்த்தையில் சொல்லியிருக்கலாம். ஆனால்... புகழ்வது போல கொண்டு போய், கடைசி ஒரு சொல்லில், மேட்டரை மாற்றுகிறது இந்த வாக்கியம். இதுபோன்ற வாக்கியங்களை தமிழில் ஏமாற்று வாக்கியம் அல்லது மயக்கும் வாக்கியம் என்று குறிப்பிடுகிறார்கள். இது தவறான பிரயோகம் என்று ஒரு காலத்தில் நியதி இருந்தது. ஆனால், இன்றைக்கு இப்படிப் பேசுவதுதானே டிரெண்ட்?
வாக்கியங்களின் அமைப்பைக் கொண்டு அவற்றை சில பிரிவுகளாக தமிழ் இலக்கணம் பிரித்து வைத்திருக்கிறது. அதுபற்றியும், கட்டுரையின் துவக்கத்தில் பார்த்த நிறுத்தக்குறிகள் மேட்டர் பற்றியும் அடுத்தவாரத்தில் இன்னும் விரிவாக. சரியா?
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
எளிமையான நடையில் தமிழ் இலக்கணம் படிக்க இனிமையாக இருக்கிறது. ரஜினி, கமல், ஜாக்கிசான் என்று .நாமறிந்த உதாரணங்கள், இலக்கண புரிதலை மேலும்எளிமைப்படுத்துகிறது. கமா, புல் ஸ்டாப்தமிழ் இலக்கணத்தல் இல்லை என்பது புதுத் தகவல். தொடர்்ந்து எழுதுங்கள்.
பதிலளிநீக்குரசிக்க வைக்கும் எளிமையான விளக்கங்கள்...
பதிலளிநீக்கு