‘தாயைப் பழிச்சவனக் கூட விடுவேன்... தமிழைப் பழிச்சவன விடமாட்டேன்டா...’ என்று சினிமாவில் கதாநாயகன் பேசுகிற வசனத்தைக் கேட்டு நீ...ளமாய் கொட்டாவி விட்டிருப்பீர்கள். வேற்றுமை உருபுகளை ஒழுங்காக தெரிந்து கொண்டு, சந்திப்பிழைகளைத் தவிர்த்து விட்டாலே போதும். தமிழை அவ்வளவு சுலபத்தில் யாரும் பழித்து விடமுடியாது. வேற்றுமை உருபு என்ற பெயரைக் கேட்டதும் நாட்டு மருந்துக் கடை கசாயத்தைக் கண்டது போல முகத்தைச் சுளிக்க வேண்டாம். ரொம்ப, ரொம்ப ஈஸி.
ஒரு பெயர்ச்சொல்லின் வெவ்வேறு விதமான செயல்பாடுகளை சொல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். வாக்கியமாக வரும் போது, செயலுக்கு ஏற்ப அந்தப் பெயர் கொஞ்சம் மாறும். அதுதான் வேற்றுமை (Case). இப்படி மாறுவதற்கு ஏற்ப பெயரின் இறுதியில் புதிதாக சில எழுத்து ஒட்டிக் கொண்டு வரும். ஒட்டிக் கொண்டு வருகிற அந்த குட்டிகளை தான் உருபு (Casal ending அல்லது Casal signs) என்பார்கள். வேற்றுமையைக் காட்டுகிற உருவங்களே வேற்றுமை உருபுகள் (Case signs). ஒரு வாக்கியத்தில் வேற்றுமை உருபாக பெயர்ச்சொல் தான் வருமே தவிர, வினைச்சொல் வராது.
வேற்றுமை உருபு மேட்டரை இனி, நம்ம பாணியில் பழகிக் கொள்ளலாமா? உங்களுக்கு ஹன்சிகா தெரியுமில்லையா? கட்டாயம் தெரிந்திருக்கும். இந்த வாரம் வேற்றுமை உருபு சப்ஜெக்ட்டை அவர்தான் சொல்லிக் கொடுக்கப் போகிறார். கம் ஆன். தமிழில் வேற்றுமை உருபுகள் மொத்தம் எட்டு இருக்கின்றன. வடமொழியிலும் 8. லத்தீன் 6, கிரேக்க, ஆங்கில மொழிகளில் 5 வேற்றுமை உருபுகள் இருக்கின்றன. தமிழில் வேற்றுமை உருபுகள் ஆறுதான் என்று ஒரு சிலர் அடித்து விடுவார்கள். நம்பாதீர்கள். எட்டு இருப்பதை இப்போது ஹன்சிகா உறுதி செய்வார்.
இதை எழுவாய் வேற்றுமை என்றும் சொல்லலாம். (எழுவாய் என்றால் தெரியும்தானே? ஒரு வாக்கியத்தில், சொல்லப்படுகிற விஷயத்தை செய்தது யார், எது, எவை என கேள்வி கேளுங்கள். அந்த யார், எது, எவை தான் எழுவாய்). ஹன்சிகா பார்த்தார் - இது முதல் அல்லது எழுவாய் வேற்றுமை. இந்த வேற்றுமைக்கு தனியாக உருபு இல்லை. இங்கு வலி மிகாது. அதாவது எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் அவசிமில்லை. இந்த வேற்றுமையில் ஹன்சிகா, ஹன்சிகாவாக மட்டுமே இருப்பார். ஹன்சிகாப் பார்த்தார் என்று ப்பு போட்டால் தப்பு.
ஒரு வார்த்தை ‘ஐ’யில் முடிந்தால் அது இரண்டாம் வேற்றுமை. இங்கு வல்லெழுத்து கட்டாயம், கட்டாயமாக மிகும். ஹன்சிகாவை (ஹன்சிகா + ஐ = ஹன்சிகாவை) பார்த்தேன் என்று சொல்லக்கூடாது. ஹன்சிகாவைப் பார்த்தேன் என்று சொன்னால்தான் சந்தோஷப்படுவார். ஹன்சிகாவை, சூர்யாவை, த்ரிஷாவை, குதிரையை, வீட்டை, படகை, பள்ளியை, சூரியனை... இப்படி ஐ, ஐ, ஐ என்று முடிந்தால், வலி மிகும் பாஸ். ஒற்றெழுத்து போடவேண்டும்.
ஆல், ஓடு, ஆன் ஆகிய எழுத்துக்களில் வார்த்தை முடியுமானால், அது மூன்றாம் வேற்றுமை. இங்கு வலி மிகாது. எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் வேண்டாம். ஹன்சிகாவால் சத்தம் போட்டேன். ஹன்சிகாவோடு சண்டை போட்டேன் என்றெல்லாம் பேசும் போது, ஹன்சிகாவுக்கு பின்னால் ‘இச்’ வேண்டாம். புரியுதா?
‘கு’ இந்த உருபு வந்தால் வலி மிகும் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ். ஹன்சிகாவுக்கு பிடித்த கரடி பொம்மை என்றால் கோபப்படுவார். ஹன்சிகாவுக்குப் பிடித்த கரடி பொம்மை என்றால் ஓகே... ஓகே.
இன், இல் - இங்கு வலி மிகாது. ஹன்சிகாவின் கண்கள் அழகு. அவசரப்பட்டு ‘க்கன்னா’ போட்டால் தப்புண்ணா.
அது, ஆது, அ - வலி மிகாது. ஹன்சிகாவினது அழகு... அற்புதமானது.
கண் - வலி மிகாது. ஹன்சிகாவின்கண் சென்றேன். இப்பிடியெல்லாம் எழுத இப்ப ஆளில்லைங்ண்ணா.
எட்டாம் வேற்றுமையை விளி வேற்றுமை என்பார்கள். விளித்தல், அழைத்தலை குறிக்கிற இந்த வேற்றுமைக்கு (முதல் வேற்றுமை போலவே) தனியாக உருபு இல்லை. ஹன்சிகா... இங்கே வா என்று விளிக்கிறீர்கள் இல்லையா? அதுதான் எட்டாவது வேற்றுமை. இங்கேயும் வலி மிகாது.
எட்டு வேற்றுமை உருபுகளையும் பார்த்தாச்சு (ஹன்சிகா துணையோடு!). இந்த வேற்றுமை உருபுகளை சுலபமாக ஞாபகம் வைத்துக் கொள்ள பள்ளிக்கூடத்தில் ‘ஐ ஆல் கு இல் அது கண்’ என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள். நினைவிருக்கிறதா? படித்தால்தானே நினைவில் இருக்கப் போகிறது? இந்த ‘ஐ ஆல் கு இல் அது, கண்’ உருபுகளில் ஐ, கு இரண்டுக்கும் மட்டுமே வலி மிகும். அதாவது க், ச், ப், த் என ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் போடவேண்டும். ஜப்பானிய கவிதை வரி வடிவமான ஹைகூ போல, இந்த ஐ கு நினைவில் இருந்தால்... எங்கு ‘இச்’ வைக்கணும், எங்கு வைக்கக்கூடாது என்பது மனதில் இருக்கும்.
சரி. அடுத்தவார மேட்டருக்கு போகலாம். உங்க ஆளோடு ஹோட்டலுக்கு சாப்பிடப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சிவபூஜையில் கரெக்ட்டாக கரடி நுழைவது போல உங்கள் தோஸ்து அங்கு என்ட்டர் ஆகிறார் (என்ட்டர் தி டிராகன்?!). ‘அட... மாமு உனக்குக் கூட அமையுது பாரு... ஆமா, யார்ரா இது?’ என்று பார்வையிலேயே கொஸ்டீன் மார்க்குடன் உங்களிடம் வருகிறார். சரி தொலையுது சனியன், என்று நண்பரிடம் உங்கள் ஆளை அறிமுகம் செய்கிறீர்கள். எப்படி? ‘இது என்னுடைய லவ்வர்டா...’ - இப்படியா? உங்கள் லவ்வர் தமிழ் இலக்கணம் தெரிந்தவராகவோ அல்லது இந்தத் தொடரை வரி விடாமல் படிக்கிறவராகவோ (!!!) இருந்தால்... ஆன் தி ஸ்பாட்... உங்களுக்கு தர்ம அடி நிச்சயம். ஏன்?
ஹன்சிகா சொல்றதை கேளுங்க!
ஒரு பெயர்ச்சொல்லின் வெவ்வேறு விதமான செயல்பாடுகளை சொல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். வாக்கியமாக வரும் போது, செயலுக்கு ஏற்ப அந்தப் பெயர் கொஞ்சம் மாறும். அதுதான் வேற்றுமை (Case). இப்படி மாறுவதற்கு ஏற்ப பெயரின் இறுதியில் புதிதாக சில எழுத்து ஒட்டிக் கொண்டு வரும். ஒட்டிக் கொண்டு வருகிற அந்த குட்டிகளை தான் உருபு (Casal ending அல்லது Casal signs) என்பார்கள். வேற்றுமையைக் காட்டுகிற உருவங்களே வேற்றுமை உருபுகள் (Case signs). ஒரு வாக்கியத்தில் வேற்றுமை உருபாக பெயர்ச்சொல் தான் வருமே தவிர, வினைச்சொல் வராது.
வேற்றுமை உருபு மேட்டரை இனி, நம்ம பாணியில் பழகிக் கொள்ளலாமா? உங்களுக்கு ஹன்சிகா தெரியுமில்லையா? கட்டாயம் தெரிந்திருக்கும். இந்த வாரம் வேற்றுமை உருபு சப்ஜெக்ட்டை அவர்தான் சொல்லிக் கொடுக்கப் போகிறார். கம் ஆன். தமிழில் வேற்றுமை உருபுகள் மொத்தம் எட்டு இருக்கின்றன. வடமொழியிலும் 8. லத்தீன் 6, கிரேக்க, ஆங்கில மொழிகளில் 5 வேற்றுமை உருபுகள் இருக்கின்றன. தமிழில் வேற்றுமை உருபுகள் ஆறுதான் என்று ஒரு சிலர் அடித்து விடுவார்கள். நம்பாதீர்கள். எட்டு இருப்பதை இப்போது ஹன்சிகா உறுதி செய்வார்.
முதல் வேற்றுமை (Nominative Case):
இரண்டாம் வேற்றுமை (Objective Case):
மூன்றாம் வேற்றுமை (Instrumental Case):
நான்காம் வேற்றுமை (Dative Case):
ஐந்தாம் வேற்றுமை (Ablative Case):
ஆறாம் வேற்றுமை (Possessive Case):
ஏழாம் வேற்றுமை (Locative Case):
எட்டாம் வேற்றுமை (Vocative Case அல்லது Nominative Case of address):
எட்டாம் வேற்றுமையை விளி வேற்றுமை என்பார்கள். விளித்தல், அழைத்தலை குறிக்கிற இந்த வேற்றுமைக்கு (முதல் வேற்றுமை போலவே) தனியாக உருபு இல்லை. ஹன்சிகா... இங்கே வா என்று விளிக்கிறீர்கள் இல்லையா? அதுதான் எட்டாவது வேற்றுமை. இங்கேயும் வலி மிகாது.
எட்டு வேற்றுமை உருபுகளையும் பார்த்தாச்சு (ஹன்சிகா துணையோடு!). இந்த வேற்றுமை உருபுகளை சுலபமாக ஞாபகம் வைத்துக் கொள்ள பள்ளிக்கூடத்தில் ‘ஐ ஆல் கு இல் அது கண்’ என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள். நினைவிருக்கிறதா? படித்தால்தானே நினைவில் இருக்கப் போகிறது? இந்த ‘ஐ ஆல் கு இல் அது, கண்’ உருபுகளில் ஐ, கு இரண்டுக்கும் மட்டுமே வலி மிகும். அதாவது க், ச், ப், த் என ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் போடவேண்டும். ஜப்பானிய கவிதை வரி வடிவமான ஹைகூ போல, இந்த ஐ கு நினைவில் இருந்தால்... எங்கு ‘இச்’ வைக்கணும், எங்கு வைக்கக்கூடாது என்பது மனதில் இருக்கும்.
ஹோட்டலில் கரடி!
சரி. அடுத்தவார மேட்டருக்கு போகலாம். உங்க ஆளோடு ஹோட்டலுக்கு சாப்பிடப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சிவபூஜையில் கரெக்ட்டாக கரடி நுழைவது போல உங்கள் தோஸ்து அங்கு என்ட்டர் ஆகிறார் (என்ட்டர் தி டிராகன்?!). ‘அட... மாமு உனக்குக் கூட அமையுது பாரு... ஆமா, யார்ரா இது?’ என்று பார்வையிலேயே கொஸ்டீன் மார்க்குடன் உங்களிடம் வருகிறார். சரி தொலையுது சனியன், என்று நண்பரிடம் உங்கள் ஆளை அறிமுகம் செய்கிறீர்கள். எப்படி? ‘இது என்னுடைய லவ்வர்டா...’ - இப்படியா? உங்கள் லவ்வர் தமிழ் இலக்கணம் தெரிந்தவராகவோ அல்லது இந்தத் தொடரை வரி விடாமல் படிக்கிறவராகவோ (!!!) இருந்தால்... ஆன் தி ஸ்பாட்... உங்களுக்கு தர்ம அடி நிச்சயம். ஏன்?
காத்திருக்கலாமா ஒரு வாரம்?
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
வேற்றுமைகளை இப்படியும் விளக்க முடியுமா...? அசத்தல்...
பதிலளிநீக்கு