விலங்கில் இருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது, அவன் பேசுகிற மொழி. உலகில் உள்ள மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6809. இவற்றில் 700க்கும் குறைவான மொழிகளில் மட்டுமே பேசவும், எழுதவும் முடியும். சுமார் 100 மொழிகள் மட்டுமே சொந்த வரி வடிவத்தில் எழுதப்படுகின்றன. உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக, வேராக, மூலமாக இருப்பவை ஆறு மொழிகள். அவை ஹீப்ரு, கிரீக், லத்தீன், சமஸ்கிருதம் - இந்த நான்கும் வெகுஜன பயன்பாட்டில் இன்று இல்லை - மற்றும் தமிழ், சீனம். இவை ஆறும் செம்மொழிகள் என்ற உயர் பெருமைக்குரியன. இவற்றிலும் கூட, சீன மொழி ஏறக்குறைய மறைந்து, மான்டரீன் மொழி மட்டுமே அங்கு மக்கள் பயன்பாட்டில் இன்று நிற்கிறது என்பது கூடுதல் தகவல்.
இன்றைய ‘இணைய தலைமுறை’ இளைஞர்களுக்காக, உயர்தனி செம்மொழி... நம்மொழி குறித்த சில பகிர்தல்கள்:
* தமிழின் சிறப்பாக கருதப்படுவது ‘ழ’கரம். தமிழ் தவிர்த்து திராவிட மொழிகளில் மலையாளம், உலக மொழிகளில் பிரெஞ்ச் இரண்டிலும் மட்டுமே ‘ழ’கரம் இருக்கிறது.
* பிற திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகியவை வடமொழியின் அடிப்படையில் கட்டப்பட்டவை. வடமொழிச் சொற்களை நீக்கி விட்டால், தனித்து இயங்கமுடியாமல் தடுமாறி விடும். வடமொழி கலப்பின்றி, முழுமையாக தனித்து இயங்கக் கூடிய ஆற்றல் தமிழுக்கு மட்டுமே உண்டு. ‘சமஸ்கிருத கலப்பின்றி தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற திராவிட மொழி தமிழ் மட்டுமே’ என்கிறார் கால்ட்வெல்.
நாகரிக மாற்றமும், வளர்ச்சியும் மொழிகளையும் விட்டு வைக்கவில்லை. பட்டும் படாமலும் ‘பாலீஷாக’ பேச அவை இப்போது கற்றுத் தருகின்றன. 21ம் நூற்றாண்டுக்கு சரி. ஆனால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே, நாலு பேர் இருக்கிற இடத்தில் எப்படிப் பேசவேண்டும் / பேசக்கூடாது என்று இலக்கணம் வகுத்து நாகரிகம் கற்றுத் தந்திருக்கிறது நம் மொழி. ஒவ்வொன்றாக பார்க்கலாமா...?
‘நீங்க பேசிகிட்டு இருங்க... இதோ, பத்தே நிமிஷத்துல வந்திடறேன்...’ என்று ‘ஜமா’ ஓடிக் கொண்டிருக்கையில் உங்கள் நண்பர் ‘எஸ்கேப்’ ஆகிறாரா? இருக்கிறது மேட்டர். கூட்டம், கும்பலுக்கு முன் போட்டு உடைத்தால் நாகரிகமாக இருக்காது என்று எதையோ சொல்லாமல் மறைத்து விட்டு பத்து நிமிஷம் அவகாசம் கேட்கிறார் அவர். இதுதான் இடக்கரடக்கல். ‘‘பொதுவான இடத்தில், நான்கு பேருக்கு முன்பாக பேசுவதற்கு தகாத அல்லது தயங்குகிற ஒரு விஷயத்தை வேறு சொல் அல்லது வேறு சொற்றொடரைப் பயன்படுத்தி தெரியப்படுத்துவது.’’
இடக்கர் (சொல்லக்கூடாத சொல்) + அடக்கல் = இடக்கரடக்கல் (ஆங்கிலத்தில் euphemism).
‘வெளியே’ போயிருக்கான்; கால் கழுவிட்டியாடா... போன்ற வாக்கியங்கள் இதற்கு உதாரணம். ‘கால் கழுவிட்டு வாடா’ என்றால், கால் கழுவிட்டு வாடா என்பது அர்த்தமில்லை என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்தானே!
ஆங்கிலம் தெரியாதவர்களுக்குக் கூட தெரிந்த ஆங்கில வார்த்தை - எல் ஓ வி இ. சரிதானே...? படிக்கும் போதே இனிக்க்க்க்கிற இந்த வார்த்தை பற்றிய ஒரு சிறப்புத் தகவல் இருக்கிறது.அது, அடுத்தவாரம்.
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

‘பேச்சை மாத்து!’

இடக்கரடக்கல் (Pejeorative tendancy)

தினகரனில் வெளியான உங்களின் "நம் மொழி செம் மொழி" கட்டுரையின் முதல் பகுதியான இந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது. (அதற்காக மற்றவை சரியில்லையா தம்பி என குதர்க்கமாக கேட்க வேண்டாம். :-) ) தாய் மொழி குறித்து எழுதுகையில் அதன் சிறப்பை மட்டும் எழுதிவிடாமல் மற்ற மொழிகளின் தொன்மை குறித்தும் எழுதி துவங்கியிருக்கும் விதம் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
பதிலளிநீக்குநல்லதொரு பதிவு. தமிழ் இலக்கணத்தை எளிமையாக தொடர்ந்து எழுதுங்கள். நம் மொழியின் வளமை அனைவரும் அறியட்டும்.
பதிலளிநீக்கு