புதன், 28 ஜனவரி, 2015

சந்திப்போமா மறுபடி சந்திப்போமா?

கோயில் திருவிழாக்களில் பார்த்திருக்கலாம். பெண்களும், சிறுவர்களும், பெரியவர்களும் அப்படியே பக்திப்பழமாக பால் குடம் சுமந்து வர, அவர்களுக்கு முன்பாக ஏழெட்டு விடலைகள் போடுவார்கள் பாருங்கள் ஆட்டம்... வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு அப்படி ஒரு ஆட்டம். கெட்ட ஆட்டம். நான் சொல்வதை நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். கொஞ்சமே கொஞ்சம் அடிப்படை தெரிந்தால் போதும். தமிழ் மொழியை வைத்துக் கொண்டு பேச்சிலும், எழுத்திலும் நீங்கள் கெட்ட ஆட்டம் போட முடியும். குத்தாட்டம் போடுகிற விடலைகளை விட்டு விட்டு, உங்கள் எழுத்தையும், பேச்சையும் எல்லோரும் வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஆட்டத்துக்கு ரெடியா?

சனி, 24 ஜனவரி, 2015

வால்பாறையும்... சில யானைகளும் - 4

கோயில்களில் நீங்கள் கொடுக்கிற வாழைப்பழங்களை வாங்கி சாப்பிட்டு விட்டு, தலையைத் தொட்டு ஆசிர்வதிக்கிற யானைகளுக்கும், வால்பாறை மலைப்பகுதியில் குழந்தை, குட்டிகளுடன் வலம் வருகிற யானைகளுக்கும் குணத்தில் பெரிதாக எந்த மாறுபாடும் காணமுடியாது. வயிற்றை நிரப்புவது மட்டுமே பிரச்னை.  கோயில்யானைகளுக்கு தேடி வந்து விடுகிறது. வால்பாறை யானைகள், தேடிச் செல்கின்றன. உணவு, குடிநீருக்கான தேடல் பயணங்களின் போது, குறுக்கே  மனிதன் வந்து விடுகிறான். அப்போதும் கூட அவை சண்டைக்கெல்லாம் பாய்வதில்லை. விலகிச் செல்லவே விரும்புகின்றன. சிறுத்தைகளும் அப்படியே. இந்த  வாரம் யானைகளுடன், சிறுத்தைகளும் நம்முடன் இணைகின்றன.

வியாழன், 22 ஜனவரி, 2015

ராஜாவுக்கு கிடையாதா தமிழ் மகுடம்?

மிழ் சினிமா என்கிற மிகக் குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே அடக்கி விட முடியாத பெயர் - இளையராஜா. ஹாலிவுட் படங்களையும், அதையும் கடந்து,  ஆப்ரிக்க, அண்டார்டிக்க படங்களையும் காப்பியடித்து, வேஷம் கட்டி ‘யுனிவர்சல் ஹீரோ’க்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் மத்தியில், நிஜமாகவே  இவர் ராஜா. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த அபூர்வ ஞானி. முதல் படம் ‘அன்னக்கிளி’ துவங்கி, ஆயிரமாவது படம் ‘தாரை தப்பட்டை’ வரை, ராகத்துக்குள் தாலாட்டை மறைத்து வைத்து தட்டுப்பாடின்றி விநியோகிக்கிற ராகதேவன்.

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

காம்ரேட் அச்சுவும்... தவறி வந்த உண்மையும்!

ச்சுதானந்தன்... பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல? ஆளைப் பிழிந்தால், மார்க்சிஸ்ட் சித்தாந்தம் சாறாகக் கொட்டும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின்  முதுபெரும் தலைவர். மார்க்ஸ், ஏங்கல்ஸ் மார்க்கத்தின் வழித்தோன்றல். வயது 90 கடந்தும், இன்னும் தீவிர அரசியலில் படு தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர். இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மிக முதுபெரும் தலைவர்களில் ஒருவர். கேரளாவில் கட்சியின் வளர்ச்சியில் இவருக்கு பெரும் பங்கிருக்கிறது. இப்படியெல்லாம் அறிமுகப்படுத்துவதை விட, மொழி, இனவாத அரசியல் செய்து, பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர் என்று சொன்னால்,  சட்டெனப் புரிந்து விடும்!

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...