சனி, 18 மார்ச், 2017

பாகுபலியை ‘சுட்டது’ யார்?

காலத்திற்கேற்ப அப்டேட் ஆகிக் கொள்வதில், தொழில்நுட்பக்காரர்களை விடவும், திருடர்கள் வல்லவர்கள். செல்போன் சாப்ட்வேர் அப்டேட் செய்வது போல, தொழில் சூட்சுமங்களை உடனுக்குடன் அப்டேட் செய்து, கலங்கடிப்பார்கள். மற்ற திருடர்கள் எப்படியோ... சினிமாத் திருடர்கள் செம! ஒரு காலத்தில் மலையாளத்தில் இருந்தும், ஹிந்தியில் இருந்தும் ‘சுட்டார்கள்’. குட்டு வெளியாகி கேவலப்படுகிற நிலைமை வந்ததும், வெளிமாநிலங்களில் கைவைக்கிற வேலையை விட்டு உகாண்டா, எத்தியோப்பியா நாடுகளில் இருந்து கதை, இசை ‘சுட்டார்கள்’. முகேஷ் நான்காவது தலைமுறையை அறிமுகப்படுத்தி விட்ட இந்தக்காலத்தில், திருடர்கள் துளியாவது மனக்கிலேசம் அடைந்திருக்கிறார்களா என்று பார்த்தால்... நெவர்!

புதன், 15 மார்ச், 2017

அகநானூறும்; ஆன்ட்ராய்ட் போனும்!

கடலை காணவும், அதில் கால் நனைக்கவும் பிடிக்காதவர்களும் உண்டோ? ராமநாதபுரத்தில் இருந்து தீவு திசையில் செல்கையில், கருப்பு நிற தார்ச்சாலையின் இரு மருங்கும் திடீரென பளீர் வெள்ளை மணல் பரப்பு ஆக்கிரமிக்கும். அடுத்த சிறிது நேரத்தில் முகத்தில் மோதுகிற உப்புக்காற்றுடன் இடது, வலது இருபுறமும் நீல நிறக் கடல், அடுக்கடுக்கான அலைகளுடன் வந்து சுகம் விசாரித்து நிற்பதை வேடிக்கை பார்ப்பது எத்தனை சுகம்? இரவும், பகலும் உரசிக் கொள்கிற வேளைகளில் கடற்கரைகள்... சந்தேகமின்றி சொர்க்கங்கள். இல்லையா...? ஆனால், இந்தப் பரப்புகளில் நிலவுகிற பிரச்னைகள் அதிகம் வெளியில் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும்... கடலில் மூழ்கியிருக்கிற பனிப்பாறையின் நுனிப்பரப்பு போல சிறிதளவே அறியமுடிகிறது. நெஞ்சில் கள்ளமில்லா, வெள்ளை மனிதர்கள் நிறைந்திருக்கிற இடம் நெய்தல்.

ஞாயிறு, 5 மார்ச், 2017

பெருமணல் உலகம்!

முதல் வரியை டச்சிங் டச்சிங் செய்வதற்கு முன்பாக ஒரு கேள்வி. படகோட்டி, மீனவ நண்பன், கடல் மீன்கள், அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், சுறா - எல்லாமே தமிழ் சினிமாக்கள் என்பதை கடந்து, இந்தப் படங்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்ன? ‘What is your name?’ என்பது போல படு ஈஸியான கேள்வி. அத்தனையும் கடலும், கடல் சார்ந்த நெய்தல் நிலப்பரப்பில் உருவான சினிமாக்கள். நெய்தல் மண்ணில் படம் பிடிக்கப்பட்டிருந்தாலும் கூட, அந்த மண்ணையோ, இடர்களையும், புயல்களையும் கடந்து அங்கு வேர்பிடித்து நிற்கிற எளிய மனிதர்களின் வாழ்க்கையையோ எந்த சினிமாவும் இதுவரை நெருக்கத்தில் நமக்கு அறிமுகம் செய்ததில்லை. அதிகம் அறிந்திராத நெய்தல் மணல் பரப்பின் இன்னொரு பக்கத்துக்குள் துவங்குகிறது நமது பயணம்.

வெள்ளி, 3 மார்ச், 2017

இயற்கை மீது ஏனிந்த வன்மம் குருஜி...? - 1

உடம்பு சுகமில்லாத நண்பரைப் பார்ப்பதற்காக கடந்தவாரம் மருத்துவமனை சென்றிருந்தேன். பிரபலமான மருத்துவமனை. மிகப் பெரிய அரசியல் தலைவரை சமீபத்தில் நல்லபடியாக ‘வழியனுப்பி’ வைத்ததே... அந்த மருத்துவமனை. நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, ‘‘த்ரீ ஸ்டார் பேக்கேஜ்ல ட்ரீட்மென்ட் எடுக்கிறேன் சார்...’’ என்றார். அதென்ன த்ரீ ஸ்டார் பேக்கேஜ்? மொத்தமாக ஒரு அமவுண்ட்டை அடித்து விட்டு, உள்ளே போய் கட்டிலேறிப் படுத்துக் கொண்டால் ஆச்சு. சாப்பாடு போட்டு, காபி கொடுத்து, டிவி காண்பித்து, இடையிடையே மருந்து, மாத்திரையும் புகட்டி... (75 நாள் முடிந்ததும்) இரவில் ஏற்றி அனுப்பி வைத்து விடுவார்கள். இதுதான் *** பேக்கேஜ்! இன்றைக்கு கார்ப்பரேட் சாமியார்கள் பலரும் நடத்துகிற ஆஸ்ரமங்களுக்கும், மேற்படி மருத்துவமனைகளுக்கும் பெரிதாக யாதொரு வித்தியாசமும் என்னால் காண இயலவில்லை என்பதே... இந்த கட்டுரை உருவாகக் காரணமான சிறு பொறி!

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...