இந்த, கூகுள் இருக்கிறதே... கூகுள், அதை திறந்து உலகில் அதிக மொழிபெயர்ப்புகள் கண்ட நூல் எது என்று தட்டச்சு செய்து, தேடிப் பாருங்கள். வந்து விழுகிற பட்டியலில், உங்களுக்கு ஒரு பிரமிப்பு காத்திருக்கும். ஆச்சர்யப்படாதீர்கள் சகோஸ். பைபிள், குர்ஆன் தவிர்த்து, உலகின் அதிக மொழிகளை / மக்களை / இலக்கியக்காரர்களைச் சென்று சேர்ந்த அந்த மூன்றாவது நூல்.... நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு சொந்தமான, சமய போதனை புத்தகம் அல்ல. சிறுவர்களும், பெரியவர்களும் விரும்பி, விரும்பிப் படிக்கிற கதைப்புத்தகமும் அல்ல. அப்புறம்...? மனித வாழ்வின் சகல தரப்பினருக்குமான ஒழுக்க விழுமியங்களை விவரித்து நேர்படுத்துகிற புத்தகம். அந்தப் புத்தகம்... அலையடிக்கிற குமரிமுனை கடலின் நடுவே, ஓங்கி உயர்ந்து,கம்பீரமாக நிற்கிறாரே... அவர் எழுதிய திருக்குறளேதான்!
சமயம் பரப்பும் பணிக்காகவும், ஆட்சி அதிகாரம் செய்கிற வேலைக்காகவும் நம்மூருக்கு வந்த வெளிநாட்டு வெள்ளைக்காரர்கள், முதல் வேலையாக செய்தது, நல்ல தமிழாசிரியர் அமர்த்திக் கொண்டு ‘அனா... ஆவன்னா...’ படித்ததுதான். உள்ளூர் மொழி தெரிந்தால்தானே, மக்களோடு மக்களாக பேசிப் பழகி, தங்களது கருத்துக்களை அவர்களுக்குள் கொண்டு செல்லமுடியும்? ஆனால், ஒரு கடமையாக, ஒரு வேலையாக தமிழ் படித்த வெள்ளைக்காரத் துரைகளில் 90 சதவீதம் பேர், நமது மொழியின் வளத்தில் சிக்கி, லயித்து, உருகி, கிறங்கி, மெய்மறந்து, மனம் பறிகொடுத்து... கிடைக்கிற வெள்ளைக் காகிதங்களில் எல்லாம் கவிதை எழுதுகிற அளவுக்கு ஆளே மாறிப்போன கதையை நாம் (அவர்களே எழுதி வைத்த) சரித்திரங்களில் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறோம்.
நம்மொழி மீது, தேவதாஸ் போல காதல் பிடித்துத் திரிந்த ஒரு ஆசாமி பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis 1777-1819). பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனியில் 1796ம் ஆண்டில், சாதாரண ஊழியராக பணியில் சேர்ந்த எல்லிஸ், தனது திறமைகள் மூலம் கிடுகிடுவென புரமோஷன் மேல் புரமோஷன் பெற்று 1810ம் ஆண்டு சென்னை கலெக்டர் ஆனார். கலெக்டராகவும், அதற்கு முன்பாக வகித்த அரசுப்பணிகள் மூலமாகவும் மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகளை பிறிதொரு தருணத்தில் விரிவாகப் பேசலாம். இப்போது தமிழ்... தமிழ்.
சாருக்கு தமிழ் மேல் அப்படி ஒரு அளவுகடந்த ஈர்ப்பு (அன்பு, காதல், பாசம், பற்று, மோகம், பிரேமம், லவ்... இதில், எந்த வார்த்தையை பிரயோகப்படுத்தினாலும் தப்பில்லை). பிற இந்திய மொழிகளில் இருந்து தமிழ் வேறுபட்டிருப்பதை, நெடிய ஆய்வுகளின் வாயிலாகக் கண்டறிந்து, ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்கிற ஒரு புதிய கருத்தாக்கத்தை அவர் ஆவணப்படுத்தியபோது, அலுவலகச் சுவரில் மாட்டியிருந்த காலண்டரில் வருடம் 1816.
தமிழ் மொழியின் பிரமிக்க வைக்கிற தொன்மையை குறிப்பிட்டுக் காட்ட மொழியியல் அறிஞர்கள் இன்றைக்கு வரைக்கும் ஆதாரமாக எடுத்து வைக்கிற நூல் - திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856). ஒப்பற்ற இந்த ஆய்வு நூலை ராபர்ட் கால்ட்வெல் வெளியிட்டதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே, எல்லிஸ் திராவிட மொழிக்குடும்பம் பற்றி ஆய்வு செய்து எழுதியிருக்கிறார் என்றால்... அவரது உழைப்பு எப்பேர்பட்டது என்று நாம் புரிந்து கொள்ளமுடியும். வடமொழிச் சேர்க்கையால் தமிழ் தோன்றவில்லை என்ற கருத்தாக்கத்தை முதன்முதலில் பதிவு செய்தவரும் இந்த சார்தான்.
இப்போதெல்லாம் ஆளாளுக்கு கவிதை எழுதுகிறார்கள். ‘ஏய் மானே... ஓய் குயிலே... ஹாய் மைனாவே....’ என்று பிளந்து கட்டுகிறார்கள். எல்லிஸ் பிரதரும் கவிதை எழுதியிருக்கிறார். நிச்சயமாக மானே.. மைனாவே என்கிற மாதிரி இல்லை. நாமெல்லாம், முதலில் இருந்து தமிழ் இலக்கியத்தைப் படித்து வந்தாலும் கூட இலக்கணச் சுத்தமாக அப்படி எழுதமுடியாது. ‘‘தமிழ்ச்சங்கம் ஒன்று நிறுவி, தனக்குக் கிடைத்த சுவடிகளை அச்சிட்டு வெளியிட்டதன் மூலம், 19ம் நூற்றாண்டில் தமிழ் மொழி பிரமிக்கத் தக்க வகையில் மறுமலர்ச்சி அடைந்ததற்கான காரணகர்த்தா்களுள் எல்லிஸ் முக்கியமானவர்...’’ என்று அயோத்திதாசப் பண்டிதர் பெருமிதத்துடன் பதிவு செய்கிறார்.
தமிழுக்கு எல்லிஸ் ஆற்றிய பணிகள் எக்கச்சக்கம். திருக்குறளின் மீதும், திருவள்ளுவர் மீதும் ஆழ்ந்த பக்தியே வைத்திருந்த எல்லிஸ், தேர்ந்தெடுத்த குறள்களைத் தேர்வு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உரை எழுதி வைத்திருக்கிறார். இந்த இடத்தில் ஒரு சந்தேகத்தை தீர்க்காமல், கட்டுரையை தொடர்வது சரியாக இராது. திருக்குறளை ஆங்கிலத்தில் முதன்முதலில் மொழிபெயர்த்தவர் என்று எல்லிஸ் பெயரை நிறைய நண்பர்கள் குறிப்பிடுவதாகவும், அது உண்மையா என்று உறுதி செய்யுமாறும் மானாமதுரையில் இருந்து நண்பர் மகேஷ் சில தினங்கள் முன் போன் போட்டிருந்தார்.
திருக்குறளின் அறத்துப்பாலில் இருந்து முதல் 13 அதிகாரங்களை எல்லிஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உரை எழுதி அச்சிட்டிருக்கிறார். இந்த மகத்தான பணியை அவர் 1812ம் ஆண்டில், அதாவது சென்னை கலெக்டராக பொறுப்பேற்ற இரண்டாவது ஆண்டில் செய்து முடித்திருக்கிறார். ஆனால், அதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பாகவே, அதாவது 1810ல் கிண்டர்ஸ்லி (Kindersley) திருக்குறளின் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அச்சிட்டு வெளியிடவும் செய்திருக்கிறார் என்பதை வரலாற்று / மொழியியல் அறிஞர்கள் உறுதி செய்திருப்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் உரிய தரவுகளுடன் இதுகுறித்து விவாதிக்கலாம்.
‘எல்லாம் சரி! அந்த கோல்ட் காயின் மேட்டர்...? அதைக் காணோமே?’ என்பது உங்களது கேள்வியாக இருக்குமேயானால்... ‘ஏழே நாள் ப்ளீஸ்....’ என்பது எனது பதில்!
கவித... கவித...!
சமயம் பரப்பும் பணிக்காகவும், ஆட்சி அதிகாரம் செய்கிற வேலைக்காகவும் நம்மூருக்கு வந்த வெளிநாட்டு வெள்ளைக்காரர்கள், முதல் வேலையாக செய்தது, நல்ல தமிழாசிரியர் அமர்த்திக் கொண்டு ‘அனா... ஆவன்னா...’ படித்ததுதான். உள்ளூர் மொழி தெரிந்தால்தானே, மக்களோடு மக்களாக பேசிப் பழகி, தங்களது கருத்துக்களை அவர்களுக்குள் கொண்டு செல்லமுடியும்? ஆனால், ஒரு கடமையாக, ஒரு வேலையாக தமிழ் படித்த வெள்ளைக்காரத் துரைகளில் 90 சதவீதம் பேர், நமது மொழியின் வளத்தில் சிக்கி, லயித்து, உருகி, கிறங்கி, மெய்மறந்து, மனம் பறிகொடுத்து... கிடைக்கிற வெள்ளைக் காகிதங்களில் எல்லாம் கவிதை எழுதுகிற அளவுக்கு ஆளே மாறிப்போன கதையை நாம் (அவர்களே எழுதி வைத்த) சரித்திரங்களில் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறோம்.
வருஷம் (18)16!
சாருக்கு தமிழ் மேல் அப்படி ஒரு அளவுகடந்த ஈர்ப்பு (அன்பு, காதல், பாசம், பற்று, மோகம், பிரேமம், லவ்... இதில், எந்த வார்த்தையை பிரயோகப்படுத்தினாலும் தப்பில்லை). பிற இந்திய மொழிகளில் இருந்து தமிழ் வேறுபட்டிருப்பதை, நெடிய ஆய்வுகளின் வாயிலாகக் கண்டறிந்து, ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்கிற ஒரு புதிய கருத்தாக்கத்தை அவர் ஆவணப்படுத்தியபோது, அலுவலகச் சுவரில் மாட்டியிருந்த காலண்டரில் வருடம் 1816.
தமிழ் மொழியின் பிரமிக்க வைக்கிற தொன்மையை குறிப்பிட்டுக் காட்ட மொழியியல் அறிஞர்கள் இன்றைக்கு வரைக்கும் ஆதாரமாக எடுத்து வைக்கிற நூல் - திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856). ஒப்பற்ற இந்த ஆய்வு நூலை ராபர்ட் கால்ட்வெல் வெளியிட்டதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே, எல்லிஸ் திராவிட மொழிக்குடும்பம் பற்றி ஆய்வு செய்து எழுதியிருக்கிறார் என்றால்... அவரது உழைப்பு எப்பேர்பட்டது என்று நாம் புரிந்து கொள்ளமுடியும். வடமொழிச் சேர்க்கையால் தமிழ் தோன்றவில்லை என்ற கருத்தாக்கத்தை முதன்முதலில் பதிவு செய்தவரும் இந்த சார்தான்.
மறுபடியும் முதலில் இருந்தா?
தகவல் உறுதியா?
தமிழுக்கு எல்லிஸ் ஆற்றிய பணிகள் எக்கச்சக்கம். திருக்குறளின் மீதும், திருவள்ளுவர் மீதும் ஆழ்ந்த பக்தியே வைத்திருந்த எல்லிஸ், தேர்ந்தெடுத்த குறள்களைத் தேர்வு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உரை எழுதி வைத்திருக்கிறார். இந்த இடத்தில் ஒரு சந்தேகத்தை தீர்க்காமல், கட்டுரையை தொடர்வது சரியாக இராது. திருக்குறளை ஆங்கிலத்தில் முதன்முதலில் மொழிபெயர்த்தவர் என்று எல்லிஸ் பெயரை நிறைய நண்பர்கள் குறிப்பிடுவதாகவும், அது உண்மையா என்று உறுதி செய்யுமாறும் மானாமதுரையில் இருந்து நண்பர் மகேஷ் சில தினங்கள் முன் போன் போட்டிருந்தார்.
‘எல்லாம் சரி! அந்த கோல்ட் காயின் மேட்டர்...? அதைக் காணோமே?’ என்பது உங்களது கேள்வியாக இருக்குமேயானால்... ‘ஏழே நாள் ப்ளீஸ்....’ என்பது எனது பதில்!
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக