அழகான பெண்களைப் பற்றி கவித... கவித எழுதுகிற பொலவர்ஸ், தங்கள் கவிதைகளில் மானே, தேனே, மயிலே, குயிலேவுக்கு அடுத்தபடியாக, அதிகம் பயன்படுத்துகிற பறவையின் பெயர் - கிளி. ‘ச்சும்மா கிளி மாதிரி கொஞ்சுதுப்பா...’ என்று பேசக் கேட்டிருப்பீர்கள்; அல்லது, பேசியிருப்பீர்கள். இல்லையா? நிஜம்தான். பார்ப்பதற்கும் சரி; கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவதைக் கேட்பதற்கும் சரி... கிளி - பறவையினத்தின் ‘கிளி’யோபாட்ரா!
சரி. கிளிக்கு நம்மொழி தமிழில் என்னென்ன பெயர்கள் இருக்கிறதாம்? கிள்ளை, தத்தை, சாரு, அரி, அவந்திகை, வன்னி, சுவாகதம், கீரம், சுகம் -இதெல்லாம் சொன்னதைச் சொல்கிற, ஒபீடியன்ட் பறவையான கிளியின் தமிழ் பெயர்கள்.
‘‘தமிழ் மொழியின் அருமை, பெருமைகளை அகிலமெல்லாம் அறிந்து கொள்ளும் வகையில் அர்ப்பணிப்போடு பாடுபட்டு சேவை புரிந்த வெளிநாட்டு வெள்ளக்காரத் துரைகளைப் பற்றிய அந்த தொடரை நான்கைந்து வாரமா காணோமே சார்? சரக்கு தீந்து போச்சா...?’’ என்று வாடிப்பட்டியில் இருந்து வாசகர் ராஜா லைனில் வந்தார். சரக்கு... இருக்கு!
‘‘பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக...’’ என்று மத்தேயூ ஆறாவது அதிகாரம், ஒன்பதாவது வசனத்தைச் சொல்லி, நம்முடைய கிறிஸ்துவ சகோதரர்கள் அதிகாலையில் ஜெபம் பண்ணுகிறார்கள் இல்லையா? அந்த வசனங்களை எளிமைப்படுத்தி, இன்று பயன்படுத்துகிற வடிவத்தில் உருவாக்கித் தந்தவர் ஹென்றி பவர் (Henry Bower, 1813 - 1885). அடிப்படையில் சார் பிரான்ஸ் காரர். பிரெஞ்ச் போர் வீரரான இவரது அப்பா, இந்தியாவில் பணிபுரிந்த காலத்தில், நம்ம சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பிறந்தார் ஹென்றி. மேல் படிப்புக்காக பிரிட்டன் சென்றவர், அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு திரும்பும் போது... கிறிஸ்துவ வேதம் எடுத்துச் சொல்லும் போதகராகத் திரும்பினார்.
தமிழ் பைபிளை அப்போதெல்லாம் படிப்பது, பாடப் புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும் மிகக் கடினம். சீகன்பால்க், பப்ரிஷியஸ், ரேனியஸ், பீட்டர் பெர்ஸிவல் - இவர்கள், அந்தந்த காலகட்டத்து மேல்தட்டு மக்களின் பேச்சு மொழியில் தமிழ் வேதாகமத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள். ஆனால், அடித்தட்டு மக்களுக்கும் சென்று சேரும் வகையில் வேதத்தை இன்னும் எளிமைப்படுத்த சென்னை வேதாகமச் சங்கம் முடிவு செய்தது. ஹென்றி பவர் தலைமையில் புதிய மொழிபெயர்ப்பு குழு அமைக்கப்பட்டது. ஹென்றி தலைமையிலான குழு அர்ப்பணிப்போடு மொழி பெயர்த்து, 1867ல் வெளியிட்ட அந்த தமிழ் வேதாகமப் புத்தகமே, இன்றைக்கும் தமிழ் பேசும் ஒவ்வொரு கிறிஸ்துவ சகோதரரின் இருதயத்திலும் தினசரி பாதுகாப்பாக உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அத்தோடு விட்டாரில்லை. தமிழ் இலக்கணத்தில் ஏதாவது ஒரு சந்தேகம் என்றால், நாமெல்லாம் இன்றைக்கும் கையில் எடுத்து ரெபரன்ஸ் தேடுகிற (பவணந்தி முனிவரின்) நன்னூல் சூத்திரத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நன்னூல் இலக்கணக் குறிப்புகளைப் பார்த்து ஐரோப்பியர்கள் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். திருக்குறள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ‘இலக்கணம் என்றால், அது நன்னூல்; இலக்கியம் என்றால் திருக்குறள்’ என்று உலக மொழிகளுடன் ஒப்பிட்டு, சிலாகித்து எழுதியிருக்கிறார். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியின் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். மொழியியல் குறித்த இவரது கட்டுரைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. கிறிஸ்துவ பிரசங்க மேடைகளிலும் சரி; தன்னை காண வருபவர்களிடமும் சரி... தமிழ் மொழியில் பேசுவதில் கடைசி வரை உறுதியாக இருந்தவர் ஹென்றி பவர். அவருக்கு மரியாதை செலுத்தி விட்டு, அடுத்த மேட்டருக்குப் போகலாமா?
நீர்நிலைகள், அதைச் சார்ந்த கட்டமைப்புகளை தமிழ் சமூகம் 47 பெரும் பிரிவுகளாக பிரித்து வைத்திருப்பதைப் படித்தோம். பழங்கால தமிழ் சமூகம் கையாண்டிருந்த நீர் மேலாண்மை இன்றைக்கு இருந்திருந்தால்... சென்னை வெள்ளத்தில் சிக்கியிருக்காது. ரைட்டு! 17 பார்த்தாச்சு. இந்தவாரம் இன்னும் பத்து.
18) குட்டை (Small Pond): சிறிய குளம். ஆடு, மாடு குளிப்பாட்டுகிற நீர்நிலை.
19) குண்டம் (Small Pool): இதுவும் சிறிய குளம் மாதிரி... ஆனால், மனிதர்கள் குளிக்க, பிற தேவைகளுக்காக பயன்படுத்துகிற நீர்நிலை.
20) குண்டு (Pool): வெடிக்கிற குண்டு அல்ல. குளிக்கிற குண்டு. மக்கள் குளிக்க பயன்படுத்தும் நீர்நிலை.
21) குளம் (Bathing tank): ஊர் நடுவே இருப்பது. குளிப்பது தவிரவும், மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கு உதவியாக இருக்கிற நீர்நிலை.
22) கூவம் (Abnormal well): சென்னையில் ஓடுவது அல்ல. ஒரு ஒழுங்கில்லாத, முறையான கட்டமைப்பு இல்லாத கிணறு.
23) கேணி (Large Well): நல்ல ஆழ, அகலமான சற்றே பெரிய கிணறு.
24) குமிழி (Rock cut Well): பாறையைக் குடைந்து, ஊற்று கண்டறிந்து உருவாக்கப்படுகிற நீர்நிலை.
25) குமிழி ஊற்று (Artesian fountain): நிலத்தின் அடியாழத்தில் இருக்கிற ஊற்று, கொப்பளித்துக் கொண்டு மேலே வந்தால்... குமிழி ஊற்று.
26) கூவல் (Hollow): அதிக ஆழமில்லாத நீர்நிலை - கிணறு மாதிரி; ஆனால் கிணறு அல்ல.
27) வாளி (stream): ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறபோது, அதில் இருந்து மறுகால் மூலம் தேவைப்படுகிற பல்வேறு (பாசன) பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல உருவாக்கப்படுகிற ஒரு கட்டமைப்பு. நீரோடை என்று புரிந்து கொள்ளலாம்.
வெள்ளக்காரத் துரை!
‘‘தமிழ் மொழியின் அருமை, பெருமைகளை அகிலமெல்லாம் அறிந்து கொள்ளும் வகையில் அர்ப்பணிப்போடு பாடுபட்டு சேவை புரிந்த வெளிநாட்டு வெள்ளக்காரத் துரைகளைப் பற்றிய அந்த தொடரை நான்கைந்து வாரமா காணோமே சார்? சரக்கு தீந்து போச்சா...?’’ என்று வாடிப்பட்டியில் இருந்து வாசகர் ராஜா லைனில் வந்தார். சரக்கு... இருக்கு!
‘‘பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக...’’ என்று மத்தேயூ ஆறாவது அதிகாரம், ஒன்பதாவது வசனத்தைச் சொல்லி, நம்முடைய கிறிஸ்துவ சகோதரர்கள் அதிகாலையில் ஜெபம் பண்ணுகிறார்கள் இல்லையா? அந்த வசனங்களை எளிமைப்படுத்தி, இன்று பயன்படுத்துகிற வடிவத்தில் உருவாக்கித் தந்தவர் ஹென்றி பவர் (Henry Bower, 1813 - 1885). அடிப்படையில் சார் பிரான்ஸ் காரர். பிரெஞ்ச் போர் வீரரான இவரது அப்பா, இந்தியாவில் பணிபுரிந்த காலத்தில், நம்ம சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பிறந்தார் ஹென்றி. மேல் படிப்புக்காக பிரிட்டன் சென்றவர், அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு திரும்பும் போது... கிறிஸ்துவ வேதம் எடுத்துச் சொல்லும் போதகராகத் திரும்பினார்.
புதிய மொழிபெயர்ப்பு:
தமிழ் பைபிளை அப்போதெல்லாம் படிப்பது, பாடப் புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும் மிகக் கடினம். சீகன்பால்க், பப்ரிஷியஸ், ரேனியஸ், பீட்டர் பெர்ஸிவல் - இவர்கள், அந்தந்த காலகட்டத்து மேல்தட்டு மக்களின் பேச்சு மொழியில் தமிழ் வேதாகமத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள். ஆனால், அடித்தட்டு மக்களுக்கும் சென்று சேரும் வகையில் வேதத்தை இன்னும் எளிமைப்படுத்த சென்னை வேதாகமச் சங்கம் முடிவு செய்தது. ஹென்றி பவர் தலைமையில் புதிய மொழிபெயர்ப்பு குழு அமைக்கப்பட்டது. ஹென்றி தலைமையிலான குழு அர்ப்பணிப்போடு மொழி பெயர்த்து, 1867ல் வெளியிட்ட அந்த தமிழ் வேதாகமப் புத்தகமே, இன்றைக்கும் தமிழ் பேசும் ஒவ்வொரு கிறிஸ்துவ சகோதரரின் இருதயத்திலும் தினசரி பாதுகாப்பாக உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பவணந்தி இருக்க பயமேன்!
கூவம்னா... என்ன?
நீர்நிலைகள், அதைச் சார்ந்த கட்டமைப்புகளை தமிழ் சமூகம் 47 பெரும் பிரிவுகளாக பிரித்து வைத்திருப்பதைப் படித்தோம். பழங்கால தமிழ் சமூகம் கையாண்டிருந்த நீர் மேலாண்மை இன்றைக்கு இருந்திருந்தால்... சென்னை வெள்ளத்தில் சிக்கியிருக்காது. ரைட்டு! 17 பார்த்தாச்சு. இந்தவாரம் இன்னும் பத்து.
18) குட்டை (Small Pond): சிறிய குளம். ஆடு, மாடு குளிப்பாட்டுகிற நீர்நிலை.
19) குண்டம் (Small Pool): இதுவும் சிறிய குளம் மாதிரி... ஆனால், மனிதர்கள் குளிக்க, பிற தேவைகளுக்காக பயன்படுத்துகிற நீர்நிலை.
20) குண்டு (Pool): வெடிக்கிற குண்டு அல்ல. குளிக்கிற குண்டு. மக்கள் குளிக்க பயன்படுத்தும் நீர்நிலை.
21) குளம் (Bathing tank): ஊர் நடுவே இருப்பது. குளிப்பது தவிரவும், மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கு உதவியாக இருக்கிற நீர்நிலை.
22) கூவம் (Abnormal well): சென்னையில் ஓடுவது அல்ல. ஒரு ஒழுங்கில்லாத, முறையான கட்டமைப்பு இல்லாத கிணறு.
23) கேணி (Large Well): நல்ல ஆழ, அகலமான சற்றே பெரிய கிணறு.
24) குமிழி (Rock cut Well): பாறையைக் குடைந்து, ஊற்று கண்டறிந்து உருவாக்கப்படுகிற நீர்நிலை.
25) குமிழி ஊற்று (Artesian fountain): நிலத்தின் அடியாழத்தில் இருக்கிற ஊற்று, கொப்பளித்துக் கொண்டு மேலே வந்தால்... குமிழி ஊற்று.
26) கூவல் (Hollow): அதிக ஆழமில்லாத நீர்நிலை - கிணறு மாதிரி; ஆனால் கிணறு அல்ல.
27) வாளி (stream): ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறபோது, அதில் இருந்து மறுகால் மூலம் தேவைப்படுகிற பல்வேறு (பாசன) பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல உருவாக்கப்படுகிற ஒரு கட்டமைப்பு. நீரோடை என்று புரிந்து கொள்ளலாம்.
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக