சனி, 9 ஜூலை, 2016

வாழ வைக்கும் காதலுக்கு ஜே!

‘‘நிலத்தை பிரிச்சி வெச்சிருக்காங்க. நீர்நிலைகளை பகுத்து வெச்சிருக்காங்க. அறிவியல், வானவியல் எல்லாம் அத்துபடி. கணித சூத்திரங்கள்ல கில்லாடி. நீங்க எழுதறதை எல்லாம் படிச்சா... உலகத்துக்கே நாகரீகம் கத்துக் கொடுத்தது தமிழ் இனம் தான்னு சொல்லுவிங்க போல இருக்கே சார்...?’’ - பழநி பக்கம் உள்ள கல்லூரியில் பொறியியல் தொழில்நுட்பம் படிக்கிற வாசகி கொக்கி போட்டார். நான் சொல்ல வில்லை மேடம். ஆனால், வெளிநாட்டு தமிழறிஞர்கள் நிறையப் பேர் அப்படித்தான் சத்தியமடிக்கிறார்கள். உலக நாகரீகத்தில் பெரும்பங்கு விஷயம், இந்த மண்ணில் இருந்து... தமிழ் மண்ணில் இருந்து சுவீகரிக்கப்பட்டிருக்கலாம் என்று!


காதலன்றி வேறில்லை!

தேசமயம், அறிவியலும் தொழில்நுட்பமும் மட்டுமே எழுதிக் கொண்டு அணு விஞ்ஞானிகள் போல நான்கு சுவர்களுக்குள்ளாகவே அவர்கள் வாழ்க்கையை முடித்து விட வில்லை. அதற்கும் மேலாக, அன்பை, காதலை, அக வாழ்க்கையை அவர்கள் பார்ட், பார்ட்டாக பிரித்து எழுதி வைத்திருக்கிறார்கள். தமிழ் இலக்கியம் படித்தால் புரிந்து கொள்ளலாம்.

மது சங்க இலக்கியங்களை அகம், புறம் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அகம் என்பது காதல். காதலன்றி வேறில்லை. ஆண், பெண்ணிடையிலான அன்பு, காதல், இல்லற விஷயங்களை, வாழ்வியல் நெறிமுறைகளை விளக்குவது அகப்பாடல்கள். அரசர்கள், அவர்களது போர்கள், புலவர்களின் பஞ்ச் டயலாக் பாடல்கள்... இதெல்லாம் புறம். ஒரு விஷயம் கவனித்தால் தெரியும். சங்கப் பாடல்களில் புறம் குறித்த தகவல்களை விட, அகம் குறித்த விஷயங்களே அதிகம். இந்தத் தொடரில் வருகிற அறிவியல், கணிதம் எல்லாம் அவர்கள் தங்களது காதல் இடைவேளைகளில் சொல்லிச் சென்றவை. ஐந்து திணைகளை (நிலங்களை) விளக்கும் போது, அங்கு வசித்த மக்களின் காதல் வாழ்க்கை குறித்தும் பிரம்ம்ம்ம்மாதமாக விளக்கியிருக்கிறார்கள்.

டாடி மம்மி வீட்டில் இல்லை!

காதலை இரு பிரிவுகளாக நமது சங்க பொயட்ஸ் பிரித்திருக்கிறார்கள். வீட்டுக்கு தெரியாமல் ஊர் சுற்றுகிற களவொழுக்கம் (டாடி மம்மி வீட்டில் இல்லை...), பெற்றோர் சம்மதத்துடன் நடக்கிற கற்பொழுக்கம் (அந்தப் பையன, அவங்க அப்பா, அம்மாவோட நம்ம வீட்டுக்கு வரச் சொல்லும்மா...).

ரி. பெற்றவர்கள் ‘நோ நோ’ சொல்லி விட்டால்...? ஹீரோ, ஹீரோயினின்... அதாவது தலைவன், தலைவியின் கூடவே (நமது தமிழ் சினிமாவில் வருகிறது போல) இருக்கும் தோழி, நண்பன் (பாங்கன்) இந்த நேரத்தில் சீனில் என்ட்ரி ஆவார்களாம். இரு வீட்டாரிடமும் நல்லதாய் நாலு வார்த்தை பேசி சம்மதம் வாங்கித் தருவார்களாம். ஓகே என்றால், களவொழுக்கம், கற்பொழுக்கமாக கன்வர்ட் ஆகும். ம்ஹூம்... என்றால், இளம்ஜோடி தங்களுக்கென ஒரு வாழ்க்கை அமைத்துக் கொள்ளும். அதற்குப் பெயர், உடன்போக்கு. காலங்கள் கடக்கிற போது, சமாதானம் ஆகி, குடும்பங்கள் ஒன்று சேரும். தமிழ் இலக்கியங்களை எல்லாம் படித்தால்... இன்றைக்கு கவுரவக் கொலை செய்கிறவர்கள் எல்லாம் கட்சி மாறி நல்லவர்களாகி, ‘வாழ வைக்கும் காதலுக்கு ஜே...’ பாடுகிற சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கிறது.

டூயட் பாடல் எழுதணுமா?


காதல் பற்றி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக எழுதப்பட்ட ஒரு திருக்குறள் மட்டும் பார்த்து விட்டு மெயின் சப்ஜெக்ட்டுக்கு போயிடலாம். காமத்துப் பாலி்ல் ஆயிரத்து 128வது குறளை படித்துப் பாருங்களேன்...

‘‘நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து’’
ர்த்தம் புரியுதா? காதலி இப்படிச் சொல்கிறார். ‘‘எனது நெஞ்சுக்குள் காதலன் நிறைந்திருக்கிறான். அதனால், சூடான உணவு சாப்பிடக் கூட, பயமாக இருக்கிறது. சூடாக நான் ஏதாவது சாப்பிடப் போக, அது, எனது நெஞ்சுக்குள் இருக்கிற அவனைச் சுட்டு விட்டால்...?’’

- அடடா! அடடா!! அடடடடா!! என்னா ஒரு கற்பனை? பிச்சிட்டாரா வள்ளுவர்! சினிமாவுக்கு டூயட் பாட்டு எழுதத் திட்டமிட்டிருப்பவர்கள், திருக்குறளில் காமத்துப் பால் மட்டும் படித்தால் போதும். சப்ஜாடாக, 100 படங்களுக்கு எழுதி விடலாம்.

காதல் புறா!

ங்க காலத்து காதல் ஜோடிகள் பாவம். இந்தக் காலம் போல வாட்ஸ்ஆப், எஸ்எம்எஸ், முகநூலில் மீட்டிங் பாயிண்ட் பற்றி அவர்கள் முடிவெடுத்திருக்க முடியாது. என்ன செய்வார்கள்? புறா விடு தூதுதான். சங்க கால ஜோடிகளின் காதல் வளர்க்க உதவிய புறாக்களுக்கு, தமிழில் என்னென்ன பெயர் இருக்கிறது? தூதுணம், கபோதம், களரவம் (கலவரம் என்று எழுதிவிடப்படாது), கபோதம், பாராவதம், காளபதம், கன்மேய்வு...இதெல்லாம், புறா அண்டு பேமிலியின் பெயர்கள்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

  1. சங்க இலக்கியம் குறித்து இவ்வளவு எளிமையாக சொல்ல முடியாது. வேம்பென கசக்கும் பாடத்திட்டங்களையும் இப்படி எளிமையாக கல்விநிலையங்களில் சொல்லித்தந்தால் புரியும். மூளையிலும் ஏறும்.
    - ப.கவிதா குமார், மதுரை.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...