வியாழன், 21 ஜூலை, 2016

‘ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம்...’ - தப்பாச்சே!

‘‘சபாஷ் மச்சான். கல்யாண இன்விடேஷன் கிடைச்சது. உன் கல்யாணத்துக்கு 8 ஜிபி இன்டர்னல் மெமரி, 1 ஜிபி ரேம் ஸ்பீடோட அட்டகாசமான ஆன்ட்ராய்ட் போன் பரிசு தரப்போறேன்டா...’’ என்று ஊரில் இருந்து நண்பன் பேசினால், புளகாங்கிதம் அடைந்து விடவேண்டாம். அந்த போன், இருநூற்று ஐம்பத்தொரு ரூபாய் போனாகவும் இருக்கலாம். அது இருக்கட்டும். இந்த வாக்கியத்தில் சபாஷ், இன்விடேஷன், ஆன்ட்ராய்ட், ரேம், போன் மாதிரியான சில சொற்கள் தமிழில்லை என்று நமக்குத் தெரியும். கல்யாணம் என்பதும் கூட தமிழ் சொல் அல்ல என்று சொன்னால், ஆச்சர்யப்படுவீர்கள். திருமணம் என்பதே சரியான பதம். ‘ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்...’ என்று பாட்டு படிக்கிறீர்களே... அது தப்பு. வார்த்தை என்பது வடமொழி. சொல் என்பதே சரியான சொல். தமிழ்ச் சொல். ரைட்டா?


நெய்க்கு அலையலாமா?

மிழ் இலக்கியங்களில் இருக்கிற அறிவியல் மேட்டர்கள், அர்த்தம் புரிந்து படிக்கிற போது, மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுப்பதாக நிறைய வாசகத் தோழர்கள், தோழிகள் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். ‘ஸ்கூல் காலத்துல அர்த்தம் புரிஞ்சுக்காம இதெல்லாம் மொட்டை மனப்பாடம் பண்ணிட்டமேனு இப்ப வருத்தமா இருக்கு சார்...’ என்று காரைக்குடியில் இருந்து ராஜூ கடிதம் போட்டிருந்தார். ‘பள்ளிக்கூடத்துக்கு வெளியிலயும் கூட, படிக்கிறதுக்கு நிறைய இருக்கு சார்...’ என்ற அவருக்காக ஒரு தத்துவம் கூறி, இந்தவார மேட்டருக்குள் என்ட்டர் ஆகலாமா?
வெள்ளிக் கோளின் நகர்வு, அதனால், பூமியில் ஏற்படுகிற தட்பவெப்ப மாறுதல் குறி்த்து போனவாரம் லேசாகப் பார்த்தோம். உண்மையில், உலகின் தோற்றம் துவங்கி, அதன் இயக்கம் வரைக்குமான அத்தனை விஷயங்களையும் நமது தமிழ் முன்னோர்கள், இலக்கியங்கள் வாயிலாக பாயிண்ட், பாயிண்ட்டாக பதிவு செய்திருக்கிறார்கள். நாம்தான் கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருக்கிறோம்.

சயின்டிபிக் புகழ்ச்சி!

ங்க இலக்கியங்களில், எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து. கடைச்சங்க காலத்தைச் சேர்ந்த இந்த நூலின் காலம் கி.பி. 2ம் நூற்றாண்டு. அதில் இருந்து ஒரு பாடல்...

‘‘நிலம், நீர், வளி, விசும்பு நான்கின்
அளப்பு அரியையே;
நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்,
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை;
போர் தலைமிகுத்த ஈர் ஐம்பதின்மரொடு 
துப்புத் துறைபோகிய, துணிவுடை ஆண்மை,
அக்குரன் அனைய கைவண்மையையே; (14: 1-7)’’

- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை புகழ்ந்து பாடுகிறார் புலவர் குமட்டூர் கண்ணனார். இன்றைக்கு நமது பொலவர்ஸ் பாடுகிறது போல தெய்வமே, இமயமே, சிகரமே, மாணிக்கமே... என்றெல்லாம் ஜல்லியடிக்காமல், சயின்டிபிக்காக அவர் புகழ்ந்திருப்பதை அடுத்த பாராவில் கவனியுங்கள்.

அஸ்ட்ரானமி எக்ஸ்பர்ட்?ரசனின் பேராற்றல் திறனை உதாரணம் காட்ட அவர் நிலம், நீர், வளி (காற்று), விசும்பு (வானம்), நாள் (நட்சத்திரங்கள்), கோள் (கிரகங்கள்), திங்கள் (நிலா), ஞாயிறு (சூரியன்), கனை அழல் (பெரு நெருப்பு) ஆகியவற்றை உவமையாக இட்டிருக்கிறார். நிலம், நீர் உள்ளிட்ட ஐம்பெரும் சக்திகளின் கூட்டுச் சேர்க்கையால் ஆனது இந்த உலகம். இதன் இயக்கம் சூரியன், சந்திரன், கோள்கள் போன்றவை மூலம் நடந்து கொண்டிருக்கிறது என்பது இந்த பாடலில் இருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம். சாதாரண ஒரு பஞ்ச் டயலாக் பாடலுக்கே கோள்கள், பெரு நெருப்பு போன்ற வானவியல் விஷயங்களை  மேற்கோள் காட்டுகிறார் என்றால், Astronomyயில் குமட்டூர் காரர் எந்தளவுக்கு எக்ஸ்பர்ட்டாக இருந்திருக்க வேண்டும்?

நீராவிக் குளியல்?

நீர்நிலைகள், அதோடு தொடர்புடைய 47 பெரும் பகுப்புகளில் கடைசி பத்து இந்த வாரம்.38) நீராவி (Bigger tank with center Mantapam): இட்லி குக்கரில் இருந்து வருவது அல்ல. மைய மண்டபத்துடன் கூடிய தெப்பக்குளம். மதுரை, வண்டியூரில் பார்த்திருக்கலாம்.39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank): குளம் அல்லது ஏரிக்கு நடுவில் அமைந்திருக்கிற கிணறு.40) பொங்கு கிணறு (Well with bubbling spring): ஊற்று போல தண்ணீர் கொப்பளிக்கிற கிணறு.41) பொய்கை (Lake): இன்னும் ஓரிரு கிராமங்களுக்குள் மையமாக இவை இருக்கிறது. சிறு நீர்நிலை. நடுவில் தாமரை போன்ற நீர்ச்செடிகள் மண்டிக் கிடக்கும். இயற்கையான அமைந்த இதற்குப் பெயர்தான் பொய்கை.42) மடு (Deep place in a river): ஆற்றின் உள்ளே இருக்கிற ஆழமான பள்ளம். ஆழம் தெரியாமல் காலை வைத்தால்... டேஞ்சர்.


43) மடை (Small sluice with single venturi): தேக்கி வைக்கப்படும் நீரின் போக்கை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்படுகிற ஒற்றை திறப்பு.44) மதகு (Sluice with many venturis): நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் திறக்க / அடைக்க அமைக்கப்படுகிற திறப்புகள். பல கண் இருக்கிற ஏரி, கண்மாய்களில் இருப்பது.45) மறுகால் (Surplus water channel): நீர்நிலையில் தேங்கியிருக்கிற அதிகப்படியான / உபரி நீரை வெளியேற்றுகிற வாய்க்கால்.46) வலயம் (Round tank): காம்பஸ் வைத்து போட்டது போல வட்ட வடிவில் அழகாய் அமைந்துள்ள சிறு குளம்.47) வாய்க்கால் (Small water course): நீர்நிலையில் தேக்கி வைத்துள்ள தண்ணீரை பாசனப்பரப்புக்கு கொண்டு செல்ல பயன்படுகிற கால்வாய்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...