சனி, 26 மார்ச், 2016

அறிவு... 1, 2, 3, 4, 5, 6 !

‘அஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள் நண்பர்களை, அறிந்தவர்களை, தெரிந்தவர்களை ஆதங்கத்தோடு திட்டியிருக்கலாம். அதென்ன அஞ்சறிவு? அறிவியல் இதுபற்றி ஏதாவது சொல்கிறதா? ‘நம்மொழி’ தொடரில் இந்த சப்ஜெக்ட் எதற்காக?


மரம் ஏன் பேசவில்லை?

பொதுவாக, உலகில் உள்ள உயிரினங்களை, அவற்றின் அறிவின் செயல்திறன் கொண்டு ஆறு வகைகளாக அறிவியல் பிரிக்கிறது. ஒரு காலத்தில் மரம், மட்டையை எல்லாம் அஃறிணையாக, உயிரற்ற ஜடமாக உலகம் பார்த்தது. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று 1927ல் அறிவியல் மேதை ஜெகதீஷ் சந்திரபோஸ் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தப் பிறகுதான் நிலைமை மாறியது. தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது என்பதை உலகம் இன்று சப்ஜாடாக ஏற்றுக் கொள்கிறது. உயிர் இருக்கிறது என்றால்... நம்மைப் போல அவை ஏன் பேசவில்லை. வெட்டப் போகிறோம் என்று தெரிந்தால், இரவோடு இரவாக ஓட்டம் பிடித்து ஏன் அவை எஸ்கேப் ஆக வில்லை? கேள்விகள் நிறைய கிளம்பின.

அறிவு லிஸ்ட்:

ராய்ச்சிகள் மேலும் விரிவடைந்தன. ஆய்வின் முடிவில், உலக உயிரினங்களை அவற்றின் செயல்திறன் அடிப்படையில் ஆறு பிரிவாக பிரித்தது அறிவியல். அதாவது - கண், காது, மூக்கு, நாக்கு, உடல், மூளை ஆகிய ஆறு அறிவுகள். ஏதாவது ஒரு அறிவை மட்டும் பயன்படுத்தினால் அது ஓரறிவு உயிரினம். அத்தனையையும் பயன்படுத்தத் தெரிந்தால்... ஆறறிவு உயிரினம். ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினங்களின் பட்டியல் இருக்குதா? கீழே இருக்கிற லிஸ்ட்டை பாருங்க...

* உடலால் மட்டும் உணர்வது ஓரறிவு: மரம், செடி, கொடி, புல், பூண்டு போன்றவை இந்த ஓரறிவு லிஸ்ட்டில் இருக்கின்றன. உடலால் உணர முடியுமே தவிர, அன்பாகவோ அல்லது ஆங்காரமாகவே நம்மிடம் இவற்றால் ரியாக்‌ஷன் காட்டமுடியாது.
* உடல், நாக்கால் உணர்ந்தால் ஈரறிவு: மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் இந்த வகையறாவில் வரும்.
* உடல், நாக்கு, மூக்கு ஆகியவற்றால் உணரமுடிந்தால் மூன்றறிவு: ஊர்வன பட்டியலில் இருக்கிற எறும்பு, கரையான், அட்டை போன்றவை இந்த லிஸ்ட்டில் இருக்கின்றன.
* உடல், நாக்கு, மூக்கு, கண்ணால் உணரத் திறன் கொண்டவை நான்கறிவு: பூச்சி இனங்கள் மேற்படி குடும்ப மெம்பர்கள்.
* உடல், நாக்கு, மூக்கு, கண், காது ஆகியற்றால் உணரமுடிந்தால் ஐந்தறிவு: விலங்குகள், பறவைகளுக்கு இந்த ஐந்து டேலண்ட்ஸ் இருக்கின்றன.
உடல், நாக்கு, மூக்கு, கண், காது... அப்புறம் மூளை, இந்த ஆறு உறுப்புகளையும் பயன்படுத்தி வேலை பார்த்தால், ஆறறிவு: மனிதர்கள் இந்தப் பட்டியலில் இருப்பதாக நம்பப்படுகிறது. தலைக்குள் பத்திரமாக இருக்கிற மூளையை பயன்படுத்தினால் ரைட்டு. பத்திரமாக மட்டுமே வைத்திருந்தால்... கஷ்டம்! தென்னை மரம், கொய்யா மரம் லிஸ்ட்டில் சேர்த்து விடுவார்கள்.

தெல்லாம் மாடர்ன் சயின்ஸ் கண்டுபிடித்த மேட்டர் என்று உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், மக்களே... அடுத்த வரிகளை கொஞ்சம் அழுத்தமாக படியுங்கள்.

ரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முந்தைய, பழமையான தொல்காப்பியத்தில் இதெல்லாம் பார்ட், பார்ட்டாக பிரித்து லிஸ்ட் போட்டு கொடுத்திருக்கிறார்கள். படித்துப் பார்த்தால்... பிரமித்துப் போய் விடுவீர்கள். ஆயிரம், ஆயிரமாண்டுகளுக்கு முன்வே தமிழும், தமிழர்களும் அறிவுத்திறனில், அறிவியல் திறனில் எப்படி கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்.

‘‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே...’’ – (பொருள். 571)

நீங்கள் மேலே ஸ்டார், ஸ்டாராக வைத்து ஓரறிவு, ஈரறிவு படித்தீர்களே... அந்த விஷயம்தான். கவிதையாகவே பாடி வைத்திருக்கிறார். இத்தோடு விட்டாரில்லை. எந்தெந்த உயிரினம், எத்தனை அறிவு கொண்டது என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை. பாருங்கள்...

‘‘புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ – (பொருள். 572)


‘நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ – (பொருள். 573)

‘‘சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ – (பொருள். 574)

‘‘நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’  - (பொருள். 575)

‘‘மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ -  (பொருள். 576)

‘‘மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ -  (பொருள். 577)

மூத்த மொழி எது?

ரறிவு உயிரினம் துவங்கி, ஆறறிவு ‘விலங்குகள்’ வரை 2 ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே லிஸ்ட் போட்டு பாட்டு எழுத முடிகிறது என்றால்... ஒரு விஷயம் யோசித்துப் பாருங்கள். அதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த அறிவியல் திறன் வாய்க்கப் பெற்றிருந்தால் மட்டும்தானே இது சாத்தியப்படும்? அப்படியானால், தமிழின் தொன்மை இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது? இதை எப்படி வரையறுத்துச் சொல்வது? வெளிநாட்டு ஆய்வாளர்கள் இதெல்லாம் பார்த்தப் பிறகுதான் பிரமித்துப் போய் உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ் என்று சத்தியமடிக்கிறார்கள். உலக மொழிகள் அத்தனையையும் ஆய்வு செய்த அமெரிக்க மொழியியல் அறிஞர் நோம் சோம்ஸ்கி (Noam Chomsky) கடைசியாக, இப்படி முடிக்கிறார்... ‘‘உலக மொழிகளில், மூத்த முதல் மொழி தமிழாகத்தானிருக்க வேண்டும்...!’’

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

23 கருத்துகள்:


  1. மிகச் சிறந்த ஆய்வு கட்டுரை. ஜெகதீஸ் சந்திரபோஸ் கண்டுபிடிப்பை நவீன அறிவியல் அறிந்து கொள்கவதற்கு முன்பாகவே தமிழ் இலக்கியங்களில் இருக்கிறது என்று தன் பெருமை மறந்த தமிழர்களுக்கு எடுத்து சொல்வதற்காக வாழ்த்துக்கள். போற்றத் தகுந்த உங்கள் பணி தொடர்க.

    பதிலளிநீக்கு
  2. வண்ணத்துப் பூச்சிகள் எத்தனை அறிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடல்வாழ் உயிர்யினத்தில் டால்பின்க்கு எத்தனை அறிவு உண்டு அதை செல்ல முடியும்மா

      நீக்கு
    2. கடல்வாழ் ஊயிர் இனத்தில் டால்பின்க்கு எத்தனை அறிவு உண்டு

      நீக்கு
  3. நண்டு கடல்வாழ் உயிரினம்.வண்டு பூச்சியினம்.எவ்வாறு இரண்டிற்கும் நான்கறிவாகும்?

    பதிலளிநீக்கு
  4. தழிழன்மனமொடுவாழும்மனிதனாகயிருக்கவேண்டும்என்பதேமுன்னொர்கள்சாட்சி

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள கருத்துக்கள்..அருமை

    பதிலளிநீக்கு
  6. தலைப்பை பார்த்தவுடன் படிக்க தூண்டியது..... அதிலும் நவீன அறிவியலுக்கு மூத்தவன் தமிழன் என உங்களுக்கே உரிய பாணியில் அருமை சார்

    பதிலளிநீக்கு
  7. பாம்புக்கு எத்தனை அறிவு...?

    பதிலளிநீக்கு
  8. ஆடு மாடு மீன்களுக்கும் மூளை இருக்கிறது பாடலை கவனியுங்கள் ஆறாவது அறிவு மனம் மனது என்பது வார்த்தைகளின் தொகுப்பு மூளை என்பது உடலை கட்டுபடுத்தும் உறுப்பு

    பதிலளிநீக்கு
  9. ஆடு மாடு மீன்களுக்கும் மூளை இருக்கிறது பாடலை கவனியுங்கள் ஆறாவது அறிவு மனம் மனது என்பது வார்த்தைகளின் தொகுப்பு மூளை என்பது உடலை கட்டுபடுத்தும் உறுப்பு

    பதிலளிநீக்கு
  10. இந்தியப்புலவர்கள் தங்கள் சமகாலத்தில்
    தெரிந்தவைகளை கவிதைகளாக,செய்யுட்களாகப் புனைவார்கள்.கற்பனை வளத்தால் கண்டம் இருந்தாகச் சொல்வார்கள்.19ம் நூற்றாண்டில் அறிவியல் மேதை சொல்ல நாம் தெரிந்திருக்கவில்லை.
    தொல்காப்பியர் 2500 ஆண்டுகளுக்கு முன்பு தனது சமகாலத்தில் தெரிந்தவைகளை பாக்களாக எழுதியிருக்கலாம்.நான் இப்போது கூட Internet ஐப் படித்து தான் எனது கருத்துரையை எழுதுகின்றேன்.இதுவரையில் ஏழாம் அறிவைக்கொண்டவர் யார் என்று தெள்ளத் தெளிவாக யாரும் சொல்லவில்லை.இறைவனுக்கு உகந்த நாள் ஏழாம் நாள்.அப்படியென்றால் பிரபஞ்சத்தை ஆளும் இறைவனுக்கு ஏழறிவாக இருக்கலாம்.அதாவது அனைத்தும் உணர்தல்,படைத்தல்,காத்தல்,அழித்தல்.
    அப்படியென்றால்
    அ)பேய்,பிசாசு,சைத்தான்(Lucifer)
    ஆ)சம்மனசுகள்(Angels)
    இவைகளுக்கு எத்தனை அறிவுகள் என்று கேட்கக்கூடாது.
    சிஷ்யனும்,குருவும் மனிதர்கள் தான் என்றாலும் சிஷ்யனை விட குருவுக்கு அதிகப்பலன்,ஞானம் இருக்கும்

    பதிலளிநீக்கு
  11. எனது கருத்துரையில் ஏழாவது அறிவு உள்ளது இறைவனாக இருக்கலாம் என்று சொல்லியிருந்தேன்.
    தொல்காப்பிய பாடல்தெளிவுரை படித்து அதன்பின்பு எழுதப்பட்டது..
    ஒரு சிலர்
    1) பேய் பிசாசுகள் என்றும்
    2)சம்மனசுகள் என்றும் சொல்கிறார்கள்.
    அவைகளுக்கும் அறிவு இருக்கலாம்.
    பேய் பிசாசுகளுக்கு
    7 அறிவாக ஊகித்தால்
    சம்மனசுகளுக்கு
    8 அறிவாக ஊகித்தால்
    இறைவனுக்கு
    9 அறிவு தானே(ஊகம் )சரியாகவும் இருக்கலாம்.(ஏனெனில் நான் தமிழ் புலமை பெறவில்லை)
    ஏனேனில் இறைவன் அனைத்தும் அறிந்தவன் ஆகிறார்.பஞ்சபூதங்களின் தலைவன்.அதாவது பிரபஞ்சத்தின் ஆக்கலும்,காத்தலும், இயக்கலும் அவரே!
    S.Xavierraj.BE
    9994752581
    635703139890

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா22 மே, 2023 அன்று AM 12:44

      அனைவரும் அறிய முற்படும் உண்மை பிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் அருளிய எமபடரடு கோடாயிதக்கூர் வேதத்தில் உள்ளது.

      நீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...