திங்கள், 25 மே, 2015

எக்மோர் ஸ்டேஷனில் என்ன பிரச்னை?


வாழ்க்கைக்கு மட்டுமல்ல... வார்த்தைக்கும் கூட தேவையான நேரத்தில் இடைவெளி முக்கியம் என 26வது தொடரின் ஆரம்பத்தில் ஒரிரு பத்திகள் பார்த்தோம். ‘ஏன்... பிரித்தால் என்ன தப்பு? என்ன கெட்டுப் போகும்?’ என்று (சற்று தாமதமாக) ஒரு நண்பர் கடிதம் போட்டிருக்கிறார். இந்த வாரத்தை அவருக்கு ‘டெடிகேட்’ செய்யலாம். தவறான முறையில் பிரித்து எழுதினால், அர்த்தம் மாறி அனர்த்தம் ஆகிவிடும். மட்டுமல்ல... பக்கத்தில் இருப்பவர்கள் ‘டின்’ கட்டி விடுகிற அபாயத்தையும் நமது வார்த்தைகள் ஏற்படுத்தி விடும். ‘அறிவில்லாதவன்’ என்ற சொல் பற்றி கடந்தவாரம் பார்த்தோம். அதில் இருந்தே ஆரம்பிக்கலாம். அறிவில்லாதவன் - இந்த வார்த்தையை அறிவு + இல்லாதவன் என்று பிரிப்பதற்கும், அறிவில் + ஆதவன் என்று பிரிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே?

வெள்ளி, 22 மே, 2015

ஜஸ்ட் மிஸ்டுடா சாமீய்...!

மனநிலை பிறழ்வு, பக்குவமின்மை, வயதுக்குரிய மூளை வளர்ச்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் காரணமாக, அன்பாக பழகிய பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டித் தொலைத்து விடுகிற அப்பாவி ஆண்களை தமிழ் சினிமாக்கள் நிறையவே அறிமுகம் செய்திருக்கின்றன. சிப்பிக்குள் முத்து படத்தில் கமல்ஹாசன், சின்னத்தம்பி படத்தில் பிரபு என்று நிறையவே பார்த்து சலித்திருக்கிறோம். அறியாமல் நடக்கிற அந்த தாலி கட்டு சம்பிரதாயமே, கதையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும்.  அந்தக் காட்சிகள் எல்லாம் ஏற்படுத்தாத ஒரு வெகுஜன பிரபல தாக்கத்தை, எல்லாம் வல்ல சுப்பிரமணிய சுவாமியின் தாலி கட்டு முயற்சி உருவாக்கி சாதித்திருக்கிறது. எந்த மீடியா, டிவி, சமூக வலைத்தளங்களைத் திருப்பினாலும், தாலியும் கையுமாக மணப்பெண்ணை நெருங்கிக் கொண்டிருக்கிறார் சுவாமி!

சனி, 16 மே, 2015

கரும்பு தின்னக் கூலி வேணுமா?

‘புலி உருமுது.. புலி உருமுது...’ என்று ஒரு சினிமா பாட்டு சில காலம் முன் பட்டையைக் கிளப்பியது, கேட்டிருப்பீர்கள். ஹீரோ வர்றாராம்! இது என்ன அணி? உயர்வு நவிற்சியா அல்லது இல்பொருளா? குழப்பமே வேண்டாம். இது உருவக அணி. அதுபோல, இதுபோல என்று கம்பாரிசன் செய்தால் அது உவமை என்று பார்த்திருக்கிறோம். ‘அதுதாண்டா இது; இதுதாண்டா அது!’ என்று ஆணியடித்தது போல சத்தியமடித்துச் சொன்னால்... அது உருவகம். ஹீரோவை புலி என்று வர்ணித்திருக்கிறார்களே... அப்படியானால், இதை உயர்வு நவிற்சி அணி என்று சொல்லக்கூடாதா?

புதன், 13 மே, 2015

அம்மா வந்தாச்சு...!

மே 10ம் தேதி அன்னையர் தினம் என்று குறிப்பிடும் காலண்டர் காரர்கள் இனி, மே 11ம் தேதி அம்மா தினம் என அச்சடிக்கலாம். ஒன்றும் தப்பில்லை. கடைசி பாலில் சிக்ஸ் அடித்து ஜெயிக்க வைத்தது போல, தீர்ப்பு தந்த திகைப்பில் இருந்து பல கோடி தமிழினம் இன்னும் வெளிவந்த பாடில்லை. தீர்ப்பைக் கேட்டதும் அம்மாவுக்கு அடுத்தபடி அதிக சந்தோஷப்பட்டிருப்பார் ஓ.பி.எஸ். எவ்வளவு நாள்தான் முதலமைச்சர் மாதிரியே நடிக்க முடியும்? தீர்ப்பு வந்த சிறிதுநேரத்தில் போயஸ் கார்டனுக்கு காரில் வந்த ஓ.பி.எஸ். முகத்தில் ஒரு ‘அப்பாடா’ (அம்மாடா?!) தெரிந்தது. உலகத்திலேயே, அழுதபடி பதவியேற்று, சிரித்தபடி ராஜினாமா செய்கிற ஒரே முதல்வர் இவர்தான் என்று வந்த கமெண்ட்களில்... சத்தியம் இருக்கிறது! இனி, அணிவகுக்கின்றன அம்மா கொண்டாட்டங்கள்...

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...