வலிகளின் உச்சம், உடலில் அல்ல... மனதில் இருக்கிறது. உடல் காயங்களைக் காட்டிலும், மனக்காயங்கள் தருகிற பாதிப்பு, வலி ஒப்பீட்டளவில் அதிகம்; மிக அதிகம். காயப்பட்டவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். உடல் காயத்துக்கு மருந்து இருக்கிறது. மனக்காயங்களுக்கு..? காலம்தான் மருந்தென்பார்கள். உண்மைதான். அடித்துக் கொண்டு ஓடுகிற ஆற்று வெள்ளம், பாறையின் வடிவத்தை மாற்றி விடுகிறதைப் போல...!
திங்கள், 20 ஏப்ரல், 2015
ஞாயிறு, 19 ஏப்ரல், 2015
ஏய் நீ ரொம்ப அணியா இருக்க!
* ‘ஊர்ல மழை, தண்ணி எப்படி?’
‘போப்பா நீ வேற... மகா விஷ்ணுவைக் கூட பார்த்திடலாம்; மழையத்தான் பாக்க முடியலை!’
* ‘மாமு... தலைவன் படம் பார்த்தியே... எப்டி இருக்கு?’
‘கழுத்தில ரத்தம் வந்திருச்சி மச்சான்...!’
* ‘ஏண்டா... அந்தப் பொண்ணு அவ்வளவு அழகாடா?
‘என்னடா இப்டி கேட்டுட்ட? தேவதை மாதிரி இருப்பாடா?’
‘தேவதை மாதிரியா...?’
‘மாதிரி என்ன மாதிரி... தேவதையேதான்!’
- இதை மாதிரி லட்சக்கணக்கான / கோடிக்கணக்கான டயலாக்குகளை பேசியும், கேட்டும் வளர்ந்தவர்கள் நாம். இல்லையா? ‘ஆமாங்க... ஆமா’ என்று மேலும், கீழுமாக தலையை ஆட்டுவீர்களேயானால், நோட் தி பாயிண்ட்... இதுதான், இனி நாம் பார்க்கப் போகிற அணி இலக்கணம்.

திங்கள், 13 ஏப்ரல், 2015
அடடா... என்னா ஸ்டைலு?!
ஒரு மொழி, சொற்களால் கட்டமைக்கப்படுகிறது. என்றாலும், அதற்கு இணையான முக்கியத்துவம் வாக்கியத்துக்கும் உண்டு. சொற்கள் இணைந்து பிறக்கிற வாக்கியம்தான், மொழியை முழுமைப்படுத்துகிறது. பேச்சு, எழுத்து என தகவல் தொடர்புகளுக்கான கருவியாக மொழியை மாற்றுவதில் வாக்கியத்தின் பங்கு பிரதானமானது. பொதுவாக வாக்கியங்களை நான்கு வகைகளுக்குள் அடக்கலாம். தமிழ் இதற்கு விரிவான இலக்கணம் வகுத்து வைத்திருக்கிறது. நம்மொழி மட்டுமல்ல... ஏனைய மொழிகளிலும் கூட, இந்த நான்கு பிரிவுகள் இருக்கின்றன. இது இல்லாமல் மொழி இல்லை. வாக்கியங்களின் வகைகள் நான்கையும் ஒரு எட்டு பார்த்து விடலாம், சரியா?
சனி, 4 ஏப்ரல், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)