புதன், 16 நவம்பர், 2016

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ - இதுதாங்க சூழல் அறிவியல்!

காட்டுக்குள் புகுந்த காதல்ஜோடி யானைகளை, காவல் காத்த இளவட்டப் பையன், கவண் கல்லை வீசி அடித்து விரட்டிய குறிஞ்சி சாகசத்தை கடந்தவாரம் படித்து விட்டு நிறைய நண்பர்கள் ஆச்சர்யப்பட்டிருந்தார்கள்.


‘‘பள்ளிக்கூடத்தில படிக்கும் போது... குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை...ன்னு மொட்டை மனப்பாடம் பண்ணி பாஸ் பண்ணிட்டோம் சார். அர்த்தம் புரியலை. திணையியல் என்பது இவ்வளவு பெரிய சூழல் அறிவியல்னு (Environmental Science) தெரியாம போயிடுச்சே. நம்ம தமிழ் இலக்கியங்கள் சொல்லியிருக்கிறதை ஃபாலோ பண்ணுனாலே போதும். உலகம் தப்பிச்சிடும் சார்...’’ என்று மூணாறில் இருந்து கடிதம் வந்திருந்தது.


குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த கடிதம்!


பக்தி பெயிண்ட் அடிக்கலாமா?

ண்பர்களே, நாம் புரிந்து கொள்வதற்கு முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. நாகரிகம், பண்பாடு, இலக்கிய அறிவு மாதிரியான விஷயங்களை எந்த தனியொரு மொழியோ, இனக்குழுவோ... ‘இது என்னோடது’ என்று சப்ஜாடாக சொந்தம் கொண்டாடி விடமுடியாது. அத்தனை மொழிகளிலும், இனக்குழுக்களிலும் பண்பாடு, நாகரிகம், இலக்கியச் செழுமை இருக்கிறது. ஆனால், மற்றவற்றுக்கும், நமது இலக்கிய / நாகரிக / பண்பாட்டு அமைவுகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருந்தது.

- அது என்ன வித்தியாசம்?

கோஸ், இயற்கையை தமிழ் நாகரிகம் இயற்கையாக மட்டுமே பார்த்தது. நம்புவதற்குத் தகாத பக்தி பெயிண்ட் அடித்து பாழ்படுத்த வில்லை. ஒரே ஒரு உதாரணம்: சூரியனைப் பற்றியும், சூரியக் குடும்ப மெம்பர்களைப் பற்றியும் (புதன் துவங்கி புளூட்டோ வரை) நமது தமிழ் இலக்கியங்கள், இன்றைய NCERT சயின்ஸ்  புத்தகங்களைக் காட்டிலும் பிரமாதமாக, சிம்பிளாகச் சொல்லியிருப்பதை இந்தத் தொடரின் 80 முதல் 90 வரையிலான வாரங்களில் பார்த்தோம். அதேசமயம், உலகம் இன்றைக்கு கொண்டாடுகிற கிரேக்க இலக்கியங்கள் அப்பல்லோ, ஜீயஸ் (Zeus), லெட்டோ (Leto) என்று ஹீரோ, ஹீரோயின்களை கிரியேட் பண்ணி, மெகா சீரியல் போல கப்சா கதை விட்டிருந்ததையும் படித்திருப்பீர்கள்.

- இதுதான் வித்தியாசம்!

எப்போ வந்தது Ecology?


தொல்காப்பியமோ, திருக்குறளோ அல்லது வேறெந்த சங்க இலக்கியமோ எடுத்து புரட்டிப் பாருங்களேன்... இயற்கையை அவை இயற்கையாக, அறிவியலாக மட்டுமே பதிவு செய்திருக்கும். சாமி சத்தியமாக, சாமி கதையெல்லாம் அதில் மிக்சிங் பண்ணப் பட்டிருக்காது. கடவுளையும், சடங்கு முறைகளையும் முன்னிறுத்தி பிறமொழி இலக்கியங்கள் அமைந்திருக்கையில், நிலங்களின் வகைகளையும், காலத்தின் தன்மைகளையும் அடிப்படையாகக் கொண்டு நமது செம்மொழி இலக்கியங்கள் உருவாகியிருக்கின்றன. தமிழ் சிந்தனை மரபு என்பது சமயம் சாராதது. உலகின் தோற்றம் துவங்கி, இயற்கையின் ஒவ்வொரு சிறு அசைவையும் உள்ளது உள்ளபடி தமிழ் பதிவு செய்கிறது. பின்னணியில் இருக்கிற அறிவியல் காரணங்களை நேர்மையாக பதிவு செய்கிறது.

ன்றைக்கு Ecology... ecology என்று ஒட்டுமொத்த உலகமும் சூழல் அறிவியலை ஏதோ நேற்றைக்கு புதிதாகக் கண்டுபிடித்தது போல வலியுறுத்துகிறது. மிக நீண்ட ஆய்வுகளுக்குப் பிறகு, ‘‘the living environment as a whole has the same right to live and flourish...’’ என்கிறார் ஜேம்ஸ் லவ்லாக் (Dr. James Lovelock). அதாவது, பூமியில் வசிப்பதற்கான உரிமை மனிதனுக்கு எந்தளவுக்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும், அத்தனை உயிரினங்களுக்கும் இருக்கிறதாம் - லவ்லாக் சார் சொல்கிறார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...’ என்கிற ஒற்றை வரியில் மேட்டரை முடித்து விட்டார் திருவள்ளுவர். அதுவும், 2 ஆயிரம் பிளஸ் வருடங்களுக்கு முன்பாகவே!  ‘எல்லா உயிர்க்கும்’ என்கிற அந்த இரு சொற்களுக்குள் ஒரு செல் உயிரினம் துவங்கி, மெகா டைனஸோர் வரை அத்தனையுமே நம்ம பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என்கிற மகா கருத்து அடங்கி விடுகிறதா, இல்லையா?

உசிலம்பட்டி... ஆலம்பட்டி!

விலங்கை, பறவையை, மரத்தை, செடி கொடிகளை நேசி என்று சூழலியல் அறிவியல் சொல்லித் தருகிறது தமிழ் இலக்கியம். இன்றைக்கு நிலைமை எப்படி இருக்கிறது? சூப்பரான ஒரு மரத்தைப் பார்த்தால்... ‘‘அடடா... என்னா கம்பீரம்? என்னா அழகு? வைரம் பாய்ஞ்ச மரம்ப்பா. வெட்டிப் போட்டா, அம்பதாயிரம் ரூபாய்க்கு போகும்!’’ என்று, வேர் விட்டு கிளைகள் பரப்பிய ரூபாய் நோட்டாக அல்லவா மரங்களைப் பார்க்க நவீன உலகம் பழகிக் கொடுத்திருக்கிறது?

ருதம், இலுப்பை, வன்னி, உசில், தாண்டி, வாகை, ஆல், அரசு, அத்தி... என்று எத்தனையெத்தனை மரங்கள், இந்த மண்ணை நிறைத்திருந்தன. தமிழ் மரபோடு இணைந்து வாழ்ந்த நமது தாத்தாஸ் அண்ட் பாட்டீஸ், அந்த மரங்களை நேசித்தார்கள். வீட்டுக்கு நம்ம பெயரை வைப்பது போல, ஊருக்கு, அந்த ஏரியாவில் அதிகம் இருக்கிற மரங்களின் பெயர்களை அவர்கள் வைத்து அழகு பார்த்தார்கள். உசில் மரம் அதிகமிருந்த இடம் உசிலம்பட்டி ஆனது. இலுப்பை மரம் இருந்த இடம் இலுப்பையூர், வாகை மரம் இருந்த இடம் வாகைக்குளம், இப்படியாக... வன்னிவேலம்பட்டி, விளாத்திகுளம், ஆலம்பட்டி, அத்திபட்டி, அரசம்பட்டி, மருதங்குடி, வேப்பங்குளம், புளியங்குடி... என்று மரங்களின் பெயர்களில் அமைந்திருக்கிற ஊர்களை கணக்கெடுத்தால்... கண்ணைக் கட்டி விடுமாக்கும்.

நிலத்தை மட்டுமல்ல... காலத்தையும் நம்மாட்கள் அறிவியல் பூர்வமாக, சூரிய விசையை மையமாகக் கொண்டு பக்காவாக, பகுத்து வைத்திருக்கிறார்கள். படித்தால்... டெலஸ்கோப் மாட்டிக் கொண்டு கோள்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிற மாடர்ன் சயின்டிஸ்ட், ஷாக்கடித்தது போல ஆடிப் போவார்கள். அந்த சப்ஜெக்ட், அடுத்தவாரத்துக்கு. ரைட்டா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...