சனி, 29 மார்ச், 2014

அம்மானா சும்மா இல்லடா!


க்களவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக, முதல்வர் ஜெயலலிதா  (எனப்படுகிற அம்மா) மதுரை வந்திருந்தார். அம்மாவைப் பார்ப்பதற்கு பூனையும் போயிருந்தது. அங்கே கிடைத்த சில  வித்தியாச ‘க்ளிக்’ஸ், உங்கள் பார்வைக்காக, இங்கே.மாண்புமிகு மரியாதை!

‘மாண்பு மிகு’ நிதியமைச்சர் ஓபிஎஸ்... கீழே என்ன தேடுகிறார்? எதையும் தவற விட்டு விட்டாரா? நோ.. நோ...  அமைச்சர் பதவியை தவற விட்டு விடக்கூடாது என்பதற்காக, ஹெலிகாப்டரில் இருந்து இறங்குகிற ‘அம்மா’வுக்கு,  தூரத்தில் இருந்தே மரியாதை செய்கிறாராம்!
அப்படியே... கன்னத்தில போட்டுக்குங்க!

குலதெய்வம் கோயிலில் நிற்பது போல, அமைச்சர்கள் எதற்காக இவ்வளவு பவ்யமாக, பணிவாக நிற்கிறார்கள்?  வேறொன்றுமில்லை. ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய அம்மா, பொதுக்கூட்ட மேடைக்கு காரில் சென்று  கொண்டிருக்கிறார்.
சாமிக்கு முன்னால சப்பல் போடலாமா?


ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி, காருக்கு செல்கிறார் அம்மா. அவரை வரவேற்று அழைத்துச் செல்கிறது அமைச்சர்  படை. தெய்வம் கிள்ளிக் கொடுக்கும். அம்மா அள்ளிக் கொடுப்பார். அவருக்கு முன் செருப்புப் போடலாமா?  கழட்டி ஒரு ஓரமாக வைத்து விட்டு வரவேற்கிறார்கள் அமைச்சர்கள்.


உஷ்... அப்பாடா, கொதிக்குதே!


சிமென்ட் கலவை ஊற்றப்பட்டு, தார் கொண்டு மெழுகப்பட்ட ஹெலிபேட் தளத்தில், உச்சிவெயிலில் வெறும்  காலுடன் நடந்தால்... குளுகுளுவென்றா இருக்கும்? அம்மா கூட இருக்கிற வரை தெரியவில்லை. காரில் ஏறி அவர்  உட்கார்ந்தப் பிறகில்லையா... கால் பொசுங்குகிறது. கழட்டிப் போட்ட செருப்பைத் தேடி விறுவிறு ஓட்டம்.


அடப்பாவிகளா... அம்மா கிளம்பிட்டாங்களா?


கூட்டம் முடிந்து, ஹெலிகாப்டருக்கு அம்மா கிளம்பிச் சென்று விட்டார்.
 அமைச்சர்களும் உடன் சென்று  விட்டார்கள். வேட்பாளர் கோபாலகிருஷ்ணனுக்கு யாரும் சொல்லவில்லை போலிருக்கிறது. கட்டக்கடைசி  வினாடியில் எப்படியோ தகவல் போய்ச் சேர... அம்மாவை வழியனுப்பி வைப்பதற்காக பாய்ந்து, பதறியடித்து  ஹெலிபேடுக்குள் ஓடி வருகிறார்!

- பூனைக்குட்டி -

2 கருத்துகள்:

 1. ஒவ்வொன்றையும் நினைத்து சிரிப்பதை விட வருத்தம் தான் மேலோங்குகிறது...

  பதிலளிநீக்கு
 2. எம்.எஸ்.தண்டபாணி, மதுரை27 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 8:00

  தம்பி,
  அம்மாவும் அமைச்சர்களும் படங்கள் சூப்பர். அத்தனை பத்திரிகை போட்டோகிராபர்கள் சென்றும், அவர்களுக்கு கிடைக்காத சுவாரஸ்ய படங்கள் உங்களுக்கு கிடைத்துளளன. இங்கு தான நீங்கள் தனித்து நிற்கிறீர்கள். பா்த்தேன்... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
  –எம்.எஸ்.தண்டபாணி, மதுரை

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...