வெள்ளி, 3 ஜூலை, 2015

காரணம் இதுதானா கமல் சார்?

த்தமவில்லன் சினிமாவின் தோல்விக்கு என்ன காரணம்? ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். ‘பூனைக்குட்டி’ கூட, தோல்விக்கான காரணம் விளக்கி ஒரு விரிவான கட்டுரை (உத்தமவில்லனா... இம்சை அரசனா? படிக்க, க்ளிக் செய்யவும்:  http://poonaikutti.blogspot.com/2015/05/blog-post_12.html) எழுதி வெளியிட்டது. படம் வெளியாகி ரொம்ப, ரொம்ப நாள் கழித்து, தோல்விக்கான காரணத்தைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்திருக்கிறார் உலகநாயகன்.
 அவரது லேட்டஸ்ட் சினிமா ‘பாபநாசம்’ திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியின் போது, உ.வி. தோல்விக்கான காரணத்தை அவரே அறிவித்தார். என்னதான் காரணமாம்?


‘‘ஒரு படத்தின் வெற்றிக்கு காரணம் கதைக்கரு மட்டுமல்ல. நடிகர்கள் திறமை போக, மக்களும், விமர்சனமும், சொன்ன தேதியில் அதை வெளியிடுவதும், அதை எத்தனை திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என்பதும்தான் ஒரு படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது. உத்தமவில்லன் சொன்ன தேதியில் வெளியாகி இருந்தால், வெற்றிப்படம்தான்...’’

 - இது உலகநாயகனின் வாக்குமூலம் (ஆதாரம்: இந்து தமிழ் ஜூலை 2, 2015).

ரு சினிமாவின் வெற்றி, தோல்விக்கு வெளியாகிற நாள் கூடவா காரணமாக இருக்கமுடியும்? ஒரு ரசிகனாக எனக்குப் புரியவில்லை. ஓரிரு நாள் தாமதமாக ஒரு சினிமா, அதுவும் உலகத்தரம் வாய்ந்த சினிமா வெளியானால், அட்டர் ஃப்ளாப் ஆகி, ஆளை காலி செய்து விடும் என்று உலகநாயகன் சொல்வதில் என்ன லாஜிக் இருக்கிறது என்று தெரியவில்லை. ஓபனிங் கலெக் ஷன் ஒருவேளை குறையலாம். ஆனால், படம் நன்றாக இருக்கிற பட்சத்தில், ரிப்பீட்டட் ஆடியன்ஸ் கைகொடுக்க, ஒன்றுக்கு பத்தாக படம் வசூலை வாரிக் கொட்டி விடாதா?


த்தமவில்லன் திரைப்படம் அப்படி ஒன்றும் காலதாமதமாக வெளியாகி விடவில்லை. அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாள் தாமதமாக ரிலீஸ் ஆனது. நிச்சயமாக ஓபனிங் கலெக் ஷன் பாதிக்கப்பட்டிருக்கும். ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக மக்களிடம் நிராகரிக்கப்பட்டு திரையரங்குகளை விட்டு வெளியேறி விடாது.

படம் நன்றாக இருக்கிறது என்கிற வாய்மொழி பரப்புரை, ஊடக விமர்சனம், மக்களின் எதிர்பார்ப்பு எல்லாம் சேர்ந்து, மிகப்பெரிய வெற்றியை படத்துக்கு தேடித்தந்து விடும். பல சினிமாக்கள், ரிலீசான நேரத்தில் டல்லடித்து, பிறகு பிக்கப் ஆகி பெட்டி, பெட்டியாக கலெக் ஷன் நிரப்பியிருக்கின்றன. அவரது ‘நாயகன்’ உள்ளிட்ட படங்களும் இதற்குச் சாட்சி.

வ்வளவு ஏன்? ஐம்பது ஆண்டுகள் கழித்து கருப்பு - வெள்ளை கலரில் இப்போது ரீ ரிலீஸ் ஆன பழைய திரைப்படங்கள் கூட, சமீபத்தில் ரசிகர்களின் பெருவாரியான வரவேற்பைப் பெற்று சக்கைப்போடு போட்டிருக்கின்றன. கர்ணன் (1964), ஆயிரத்தில் ஒருவன் (1965), திருவிளையாடல் (1965), தில்லானா மோகனாம்பாள் (1968) - இதெல்லாம், இன்றைக்கு சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படங்கள். இப்போது தூசி தட்டி வெளியிட்டும் லட்சக்கணக்கில் காசு பார்த்தார்களே? ஆக, ஓரிரு நாள் தாமதமாக உத்தமவில்லன் ரிலீஸ் ஆனதுதான், படத்தின் தோல்விக்குக் காரணம் என்று உலகநாயகன் சொன்னால்... அவரது ரசிகர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

ண்மையில், நல்ல கதையும், அதைக் காட்சிப் படுத்துகிற விதமும்தான் ஒரு திரைப்படத்தை வெற்றிப்படமாக்குமே தவிர, வெற்றுப் பிரமாண்டமும், சுய தம்பட்டங்களும் அல்ல. கலைப்புலி தாணு என்கிற படு பிரமாண்ட தயாரிப்பாளர் பற்றி அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும். பணத்தை, கார்ப்பரேஷன் தண்ணீர் லாரி போல தெருவில் இறைக்கக் கூடியவர். ஒரு படம் பண்ணுவது என்று முடிவெடுத்ததும், தமிழகம் முழுவதும் அவர் அடித்து ஒட்டுகிற மெகா போஸ்டர்களுக்கு போக, மிச்சம் இருக்கிற இடத்தில்தான் நம்மாட்கள் காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா போஸ்டர்கள் ஒட்டமுடியும். அப்பேர்ப்பட்ட கலைப்புலி, நம்ம உலகநாயகனை வைத்து ஒரு படம் (ஆளவந்தான்) தயாரித்தார். படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை எப்படி படம் பிடிக்கலாம் என்று டிஸ்கஷன் நடக்கிறது.

ரு பிரமாண்ட கண்டெயினர் லாரிகளை நேருக்கு நேர் மோத விட்டு, அதில் ஹீரோ சாகசம் செய்வது போல காட்சியை விவரிக்கிறார் உலக நாயகன். பணத்தை அள்ளி எறிந்து பழக்கப்பட்ட கலைப்புலிக்கே, உலக நாயகனின் விவரிப்புகளைக் கேட்டதும் அடிவயிற்றில் லேசாக அல்சர் வலி. சமாளித்துக் கொண்டு ஓகே சொல்லி விட்டார். படப்பிடிப்பும் முடிந்து விட்டது. அதற்குப் பிறகுதான் நடந்தது ரிக்டர் அளவுகோல்களில் மதிப்பிட முடியாதபடிக்கான மெகா பூகம்பம். ‘அந்த சண்டை காட்சியை ரஷ் பார்த்தேன். திருப்தியாக இல்லை. ரீ ஷூட் பண்ணிடலாம்...’ என்கிறார் உலகநாயகன். கலைப்புலி, காட்டுப்புலி தாக்கியது போல வியர்த்து, வெலவெலத்து, மயக்கமடித்து விட்டார்.

ன்னும் ஒரு சம்பவமும் சொல்லி சிற்றுரையை முடித்து விடலாம். உலக நாயகன் தனது இன்னொரு பேட்டியில், ‘விஸ்வரூபம் 2’ படம் இன்னும் ஏன் ரிலீசாக வில்லை என்பதற்காக விளக்கம் தந்திருக்கிறார். படம் தாமதம் ஆவதற்கு, படத்தின் தயாரிப்பாளர்தான் காரணம் என்று சற்று கடுமை கலந்த வார்த்தைகளை பிரயோகித்திருந்தார். படத்தின் தயாரிப்பாளர் யாராம்? கலைப்புலி போலவே, தமிழ் சினிமாவில் கணக்கு வழக்கு பார்க்காமல், பணத்தை அள்ளி வீசக்கூடிய மற்றொரு தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். உலக நாயகனின் ‘தசாவதாரம்’ படத்தை அவர்தான் தயாரித்தார். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஜப்பானில் இருந்து ஜாக்கிசானை அழைத்து வந்தார். அப்புறம் ஷ்ஷ்ஷ்ஷங்கர் எடுத்த ‘ஐ’ படத்தையும் அவர்தான் தயாரித்தார். பாடல் வெளியீட்டு விழாவுக்கு அமெரிக்காவில் இருந்து அர்னால்ட் ஷ்வாஸ்நெகரை அழைத்து வந்தார். இருக்கிற காசை எல்லாம் இப்படியே இரைத்து விட்டு, இப்போது படு தள்ளாட்ட நிலையில் தத்தளிக்கிறார்.

லக நாயகன் நல்ல மனிதராக இருக்கும் பட்சத்தில், தனது பட தயாரிப்பாளரான ஆஸ்காரை கைதூக்கி கரை சேர்ப்பதற்கு தன்னாலான ஏதாவது ஒரு உதவியை செய்யலாம். உச்ச நட்சத்திரம் திடீரென ஒரு நல்ல காரியம் செய்து விளம்பரப்படுத்திக் கொள்வாரே... அதுபோல. அதை விடுத்து, படம் தாமதமாவதற்கு ஒரு காரணம், தோல்விக்கு ஒரு காரணம் என்று பட்டியல் போட்டுக் கொண்டிருந்தால்... ‘‘சரிச் சரி... ரிட்டையர்ட் கேஸ். அப்படித்தாம்பா புலம்பும்...’’ என்று இன்றைய, இளைய / இணைய தலைமுறை ரசிகர்கள் ஒதுக்கி வைத்து விட மாட்டார்களா...?

- பூனைக்குட்டி -

4 கருத்துகள்:

  1. புலம்பலுக்கு நல்லதொரு வழி கிடைக்குமா...? வலி கிடைக்குமா என்பது தான் தெரியவில்லை....

    பதிலளிநீக்கு
  2. மலையாளத்தில் மகள் பயத்தில் அழும் போது மோகன்லால் திடமாக நிற்பார். குடும்பத்திற்கு தைரியம் கொடுப்பார். இறுதிக் காட்சியில், இறந்த மகனின் பெற்றோரிடம் தனது குற்றத்தை ஒத்துக்கொள்ளும் போது எந்த வித குற்றவுணர்ச்சியும் முகத்தில் இருக்காது. அதற்கு ஏற்றவாறு இறந்தவனின் அம்மாவின் பார்வையில் கோபம் கலந்த இயலாமை தெரியும்.

    ஆனால், தமிழில் அப்படியில்லை.

    மகள் பயத்தில் அழும் போது கமல் கண்ணில் நீர்ப்பட ஆறுதல் கூறுவார். மகள் அழும்போது ஒரு தந்தையால் திடமாக இருக்க முடியாது என்பதை கமல் உணர்ந்து சரி செய்திருப்பார். அதேப் போல், இறந்த மகன் பெற்றோரிடம் தனது குற்றத்தை ஒத்துக் கொள்ளும் போது குற்றவுணர்வில் கூனி குறுகி பேசுகிறார்.

    பதிலளிநீக்கு
  3. வெற்றி பெற்றால் அலும்புவதும்... தோல்வி அடைந்தால் புலம்பவதும்... கமலுக்கும் (நாத்திகவாதி) - கண்ணனுக்கும் (கடவுள்) பொதுவே !!!

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...