வெள்ளி, 22 மே, 2015

ஜஸ்ட் மிஸ்டுடா சாமீய்...!

னநிலை பிறழ்வு, பக்குவமின்மை, வயதுக்குரிய மூளை வளர்ச்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் காரணமாக, அன்பாக பழகிய பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டித் தொலைத்து விடுகிற அப்பாவி ஆண்களை தமிழ் சினிமாக்கள் நிறையவே அறிமுகம் செய்திருக்கின்றன. சிப்பிக்குள் முத்து படத்தில் கமல்ஹாசன், சின்னத்தம்பி படத்தில் பிரபு என்று நிறையவே பார்த்து சலித்திருக்கிறோம். அறியாமல் நடக்கிற அந்த தாலி கட்டு சம்பிரதாயமே, கதையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும்.  அந்தக் காட்சிகள் எல்லாம் ஏற்படுத்தாத ஒரு வெகுஜன பிரபல தாக்கத்தை, எல்லாம் வல்ல சுப்பிரமணிய சுவாமியின் தாலி கட்டு முயற்சி உருவாக்கி சாதித்திருக்கிறது. எந்த மீடியா, டிவி, சமூக வலைத்தளங்களைத் திருப்பினாலும், தாலியும் கையுமாக மணப்பெண்ணை நெருங்கிக் கொண்டிருக்கிறார் சுவாமி!

‘‘தாலி கட்டவெல்லாம் நான் செல்லவில்லை. தாலியைத் தொட்டு, சில மந்திரங்கள் சொல்லி மாப்பிள்ளையிடம் கொடுக்கும் முன், அங்கிருந்த சிலர் பயத்தில் கத்தினார்கள். அதனால், சிரிப்பொலி எழுந்தது. வேறொன்றும் இல்லை...’’  - நடந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் திருவாளர் சுவாமி விளக்கம் அளித்திருக்கிறார். நடந்தது என்ன என்று ஒன் லைன் பார்த்து விடலாமா?

ன்றைய தேதியில், கூகுளில் சு - ப் - பி... இந்த மூன்று எழுத்துக்கள்  டைப் செய்தாலே போதும். சுப்பிரமணிய சுவாமி என்று கூகுளே மீதியை கரெக்ட்டாக யூகம் செய்து கண்டுபிடித்து மேற்படி தாலி மேட்டரை கொண்டு வந்து கொட்டி விடுகிறது. சார் சமீபத்தில் விராட் ஹிந்துஸ்தான் சங்கம் (வி.ஹெச்.எஸ்) என்ற புதிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார். ராமர் கோயில் கட்டுவது உள்ளிட்ட விவகாரங்களில் (பிரச்னைகளில்??) சங் பரிவார் அமைப்புகளுடன் கைகோர்த்து மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாம்.

ந்த அமைப்பின் பொதுச்செயலாளராக கடமை ஆற்றும் பாலசுப்பிரமணியனுக்கு நெல்லையில் மே 20ம் தேதி ‘டும் டும்’ நடந்தது. பொதுச்செயலாளர் கல்யாணம்... தலைவர் இல்லாமலா? சுவாமி சாரும், அவருடன் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், மேற்படி அமைப்பில் சாருடன் இணைந்து பணியாற்றுகிற சந்திரலேகாவும் கல்யாணத்துக்கு வந்து சேர்ந்தனர். மணப்பெண் வேணியுடன் மணமேடையில் நிற்கிறார் பாலசுப்பிரமணியன். ‘தாலி எடுத்துக் கொடுங்கோ...’ என்றதும் சுவாமி சார், தாலியைக் கையில் வாங்கிக் கொண்டு மேடை ஏறுகிறார்.கண்களை மூடி சில வினாடிகள் பிரார்த்தனை செய்கிறார். அதற்கப்புறம் நடந்ததுதான்... இத்தனை ஆண்டுகளில் சுவாமி சார் நடத்திய காமெடிகளில் உச்சக்கட்டம்.

ண்களைத் திறந்தவர், தாலியை அகல விரித்துப் பிடித்த படி மணப்பெண் வேணியின் கழுத்தை நோக்கிக் கொண்டு போகிறார். கட்டக்கடைசி வினாடியில் இதைக் கவனித்து... கதி கலங்கிப் போகிறார் சந்திரலேகா. கண்மூடி திறக்கிற நேரத்துக்குள் கட்டி முடித்து விடப் போகிற ஆபத்து. ‘ஏய்ய்ய்ய்ய்...’ என்று பதைபதைப்போடு கத்திய படி, சுவாமி சாரின் கைகளைத் தட்டி விட்டு, மாப்பிள்ளையை சுட்டிக் காட்டி, ‘தாலியை அங்க குடுங்க...’ என்று கடுகடுத்தவாறே சொல்ல... ‘ஜஸ்ட் மிஸ்டா... சாமி’ என்று நொந்த படி தாலியை பாலசுப்பிரமணியனிடம் கொடுக்கிறார் எல்லாம் வல்ல சுவாமி.

ந்திரலேகா, ஒரு வினாடியின் பாதியில் ஒரு பங்கு நேரம் தாமதித்திருந்தாலும் பாலசுப்பிரமணியன் அம்பேல். சுப்பிரமணியசுவாமி, மணமகனாகி இருப்பார். டிரெஸ் கூட மணமகன் போல சும்மா ஜம்மென்றுதான் இருந்தது. மணப்பெண் பாவம். டைவோர்ஸ் விண்ணப்பிக்க குடும்ப நல கோர்ட்டுகளில் ஏறி, இறங்கி... தாவு தீர்ந்திருக்கும். சுவாமி சார் சாதாரணமானவரா? அவர் லெவலுக்கு சர்வதேச கோர்ட்டில் மனு தாக்கல் செய்தால்தான் வேலை ஆகும்!

கேஸ் போடுவேன்.. கேஸ் போடுவேன்... என்று மிரட்டியே அரசியல் செய்து வருகிற சுவாமி, அப்படி எல்லாம் ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று இப்போது ட்விட் செய்கிறார். அவர் பாணியிலேயே பதில் சொல்வதானால்... தாலியுடன் அவரது பாய்ச்சலுக்கான வலுவான ஆதாரம் இருக்கிறது. ஆதாரத்தை அப்போ வெளியிடுவேன்... இப்போ வெளியிடுவேன் என்றெல்லாம் அவர் பாணியில் உதார் விட விருப்பமில்லை. இப்போதே வெளியிடுகிறோம். இங்கே இருக்கிற வீடியோவை பாருங்கள். சந்திரலேகாவின் முகத்தில் தெறிக்கிற டென்ஷன், கடுகடுப்பைப் பாருங்கள். உறுதி செய்து கொண்டு, கருத்துச் சொல்லுங்கள். சரியா?

லங்கை தமிழர் பிரச்னை, ராமேஸ்வரம் மீனவர் துயரம், காவிரி சிக்கல் (மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவது சரிதானாம் - சாரோட வாய்ஸ்), இலங்கை தமிழர் இன்னல்... என தமிழகம், தமிழர் நலன் சார்ந்த அத்தனை விஷயத்திலும் முரண்பாடான, விரோதமான கருத்துக்களை உளப்பூர்வமாக தெரிவிப்பவர் இந்த சுவாமி. அவரது கருத்துக்களை யாரும் சீரியசாக எடுத்துக் கொண்டதில்லை. நாட்டில் நடக்கிற டென்ஷன் அரசியலில் இருந்து தப்பிக்க அவரது நையாண்டி தர்பாரை ஒரு வடிகாலாகவே மக்களும், அரசியல்வாதிகளும் நினைத்தார்கள் / நினைக்கிறார்கள். ஆக, அவரது காமெடியில் மேலும் ஒன்று கூடியிருக்கிறது. அவ்ளோதான்!

- பூனைக்குட்டி -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...