வெள்ளி, 3 மார்ச், 2017

இயற்கை மீது ஏனிந்த வன்மம் குருஜி...? - 1

டம்பு சுகமில்லாத நண்பரைப் பார்ப்பதற்காக கடந்தவாரம் மருத்துவமனை சென்றிருந்தேன். பிரபலமான மருத்துவமனை. மிகப் பெரிய அரசியல் தலைவரை சமீபத்தில் நல்லபடியாக ‘வழியனுப்பி’ வைத்ததே... அந்த மருத்துவமனை. நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, ‘‘த்ரீ ஸ்டார் பேக்கேஜ்ல ட்ரீட்மென்ட் எடுக்கிறேன் சார்...’’ என்றார். அதென்ன த்ரீ ஸ்டார் பேக்கேஜ்? மொத்தமாக ஒரு அமவுண்ட்டை அடித்து விட்டு, உள்ளே போய் கட்டிலேறிப் படுத்துக் கொண்டால் ஆச்சு. சாப்பாடு போட்டு, காபி கொடுத்து, டிவி காண்பித்து, இடையிடையே மருந்து, மாத்திரையும் புகட்டி... (75 நாள் முடிந்ததும்) இரவில் ஏற்றி அனுப்பி வைத்து விடுவார்கள். இதுதான் *** பேக்கேஜ்! இன்றைக்கு கார்ப்பரேட் சாமியார்கள் பலரும் நடத்துகிற ஆஸ்ரமங்களுக்கும், மேற்படி மருத்துவமனைகளுக்கும் பெரிதாக யாதொரு வித்தியாசமும் என்னால் காண இயலவில்லை என்பதே... இந்த கட்டுரை உருவாகக் காரணமான சிறு பொறி!


காடு அழைக்குதா?


னைவி தொந்தரவு தாங்காமலோ... மற்றெந்தக் காரணங்களாலோ, சன்னியாசம் போகிறேன் என்று காவி கட்டிக் கொண்டு காட்டுப்பக்கம் போனதாக வரலாற்றுப் புத்தகங்களில் நிறையப் படித்திருக்கிறோம். சன்னியாசம் போக உகந்த இடம் காடும், காடு சார்ந்த முல்லை நிலம் என்று யாரும் சட்டம் போட்டிருக்கிறார்களா... தெரியவில்லை. ஆள் நடமாட்டம் இராது. முற்றும் துறந்த மோன நிலையில் ஏகாந்தமாகத் திரிவதற்கு - விலங்குகள் தவிர - வேறெந்த இடைஞ்சலும் இல்லை என்பதால் காட்டை சன்னியாசத்துக்கு தேர்வு செய்திருக்கலாம். அது அந்தக்காலம்.

லாப்-டாப்பும், கையுமாக சாப்ட்வேரே கதியாகக் கிடக்கிறது இளைஞர் பட்டாளம். மித மிஞ்சிய வருமானத்தில், சகலமும் பார்த்து, கடைசியாக வாழ்க்கை வெறுத்து, ‘எங்கே நிம்மதி...?’ என்று புதிய பறவை சிவாஜி கணேசன் நிலைக்கு திரும்புகிற தருணத்தில், காவி வேட்டி கண்ணுக்குத் தெரிகிறது. இந்த இடத்தில் தான் பெயருக்குப் பின்னால் ‘ஆனந்தா’ என்கிற Suffix சேர்த்துக் கொண்டு, ஹஸ்கி வாய்சில் கும்மாளமடிக்கிற மாடர்ன் கார்ப்பரேட் சாமியார்கள் என்ட்ரி கொடுக்கிறார்கள்.

4ஜி போன் வேணாமே!


த்தனை பேரும் பேசி வைத்தது போல, ஆஸ்ரமங்கள் அமைக்க தேர்வு செய்கிற இடம் - மலையும், தரையும் உரசிக் கொள்கிற முல்லை நிலம். நியாயமாக இது, ஒன்று முதல் ஐந்து வரையிலான அறிவுத்திறன் கொண்ட பிராணிகள் ஜீவிதம் செய்கிற நிலப்பரப்பு. அவை தவிர்த்து, அங்கு வசிக்கிற உரிமை என்று பார்த்தால், கானக நிலத்தை கடவுளாக மதிக்கிற / கருதுகிற ஆதிவாசி மக்களுக்கு மட்டுமே அந்த இடம் சந்தேகத்திற்கிடமின்றி சொந்தம்.


ன்றைக்கு நீங்கள் வாகனம் அமர்த்திக் கொண்டு வால்பாறையோ, கொடைக்கானலோ, மூணாறோ  போகிற வழியில்... ஃபோர் ஜி போனில் இருந்து பார்வையை விலக்கி, மலைச்சாலையின் இரு பக்கமும் சற்றுக் கவனித்துப் பாருங்களேன். டொனால்ட் டிரம்ப் குடும்பத்துக் காரர்களுக்கு சொந்தமானது போல மிகப் பிரமாண்டமாக பங்களாக்களும், ரிசார்ட்டுகளும் கட்டப்பட்டிருக்கிறதே... அவையெல்லாம் அந்த வனத்தில் பிறந்து, வளரும் ஆதிவாசி மக்களா கட்டி வைத்து குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்?

ன மைந்தர்களின் அரவணைப்பில் இருந்த காலம் வரை அது காடாக இருந்தது. பின்னர், அது சுடுகாடாகிப் போனது.மேகங்களை உரசிய மரங்கள் இறந்தன. அது புதைக்கப்பட்ட இடத்தை மூன்றடி வளரும் தேயிலை ஆக்கிரமித்துக் கொண்டது. காப்புக்காடுகள் எனப்படுகிற Reserved forest இறந்தது. அது மரணித்து, மக்கிக் கிடந்த இடத்தில் கட்டிடங்கள் எழுந்தன. வனமே வீடாகக் கொண்ட யானைகளும், புலிகளும், சிறுத்தைகளும்... இன்னபிற நேஷனல் ஜியாக்ரபி, அனிமல் பிளானட் விலங்குகளும் உண்ண உணவுக்கும், குடிக்கத் தண்ணீருக்கும் திருவோடு தூக்கி தெருவோடு அலைகிற அவலத்துக்குத் தள்ளப்பட்டன.

மெரினாவில் புரட்சி?

ருக்குள் யானை நுழைந்து விட்டது... சிறுத்தை கவ்வி விட்டது என்கிற செய்திகளைப் படித்து விட்டு யானைகள் மீதோ, சிறுத்தைகள் மீதோ நாம் கோபப்பட்டு புண்ணியமில்லை. அவற்றின் வாழிடங்களை அழித்தொழித்து விட்டால்... அவையெல்லாம் புரட்சி செய்ய மெரினாவுக்கா கிளம்பிப் போகும்? உணவு தேடி, குடிநீர் தேடி... உணவும், குடிநீரும் எங்கே இருக்குமோ, கிடைக்குமோ, அங்கேதானே வரும்?

ழல் செய்த பணத்தை, அடுத்தவர் வயிற்றில் அடித்து பிடுங்கிய பணத்தை எங்கே வைப்பது என்று தெரியாமல், வனவாசத்துக்கு வருகிறார்கள் அரசியலை தொழிலாகச் செய்பவர்களும், தொழிலில் அரசியல் பண்ணுகிறவர்களும்.

ரி. இவர்களுக்கெல்லாம் நல்லதாக நாலு புத்திமதி கூறி, நேர்மை நியாயங்களை காப்பாற்றக் கடமைப்பட்டிருக்கிற நவீன அவதார புருஷர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களும் வனங்களை அழித்து ஆஸ்ரமம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்! அங்கே ஆடலும், பாடலும் நடத்திக் களிக்கிறார்கள்.


மேற்குத் தொடர்ச்சி மலையை, உலகின் ஆதி மலையாக யுனெஸ்கோ மாதிரியான அமைப்புகள் அறிவித்து, பாதுகாக்குமாறு கெஞ்சுகின்றன. இமயமலையைக் காட்டிலும், வயதிலும் அனுபவத்திலும், ஆற்றலிலும் வல்லது மே.தொ.மலை. இதை நாம் எப்படி கட்டிக் காக்கிறோம்?

கடவுளின் ஏஜென்ட்...?

ந்தத் தொடரை, கோவை மாவட்டத்தில் இருந்து ஆதியோகி சுழி போட்டு ஆரம்பிக்கலாம்.


கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதியை வளைத்துப் போட்டு ஈஷா, காருண்யா, அமிர்தானந்த மயி, சின்மயா என்று ஏராளமான கடவுளின் ஏஜென்ட்டுகள் ஆஸ்ரமம் அமைத்து, மானுட சேவையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது ஹைடெக் ஆஸ்ரமங்களுக்குள் நுழைந்து ஒரு ரவுண்ட் அடித்து விட்டு, வெளியே வந்தால்... தலைசுற்றி விடுகிறது.

ட்டுரையின் முதல் பாராவில் பார்த்த மருத்துவமனை டாரிஃப் போல, இங்கும் எல்லாமே பேக்கேஜ் தான்.
* ஆழ்நிலை மெடிடேஷன் பண்ணி டென்ஷனை ஆல் அவுட் பண்ணுமா?
* பிபி, சுகர், கொலஸ்ட்ரால் எக்கச்சக்கமாக ஏறி, உடம்பு உங்க கன்ட்ரோலுக்குள்ள வர மறுக்குதா?
* கிரவுண்டை சுத்திச் சுத்தி, சுத்தச் சுத்தி நடந்தும் வெயிட் லாஸ் ஆகலையா?
* அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அல்சேஷன் போல அடித் தொண்டையில் இருந்து கத்திக் குவிக்கிற அளவுக்கு நான் ஸ்டாப் ஸ்ட்ரெஸ்ஸா?
ஆவியா, பேயா, ஷைத்தானா, பில்லியா, சூனியமா, செய்வினை, செயப்பாட்டு வினை பிரச்னைகளா?

- நோ ப்ராப்ளம். ‘நாங்க இருக்கோம்’ என்று கண் மருத்துவமனை காரர்கள் போல வரவேற்கிறார்கள்.

காட்டுப்பூ... பூக்குமா?

கிழ்ச்சி. நல்லதே செய்யட்டும். அதை, ஊர்ப்பக்கமாக செய்ய வேண்டியதுதானே? ஆதி மலையான, உலகின் பல்லுயிர் பெருக்க சக்கரத்தின் மிக முக்கிய கண்ணியான... மேற்குத் தொடர்ச்சி மலையின் வேரறுத்துத்தான் செய்ய வேண்டுமா? காடழித்து, கரையழித்து... மலையழித்து, விலங்குகளின் வசிப்பிடம் அழித்து... இயற்கைக்கு சமாதி கட்டி.... அதன் சாம்பலின் மீதா ஆதியோகிக்கு சிலை வடிப்பீர்கள்?

வேடிக்கையான ஒரு விஷயத்தைக் கேளுங்கள். தனது கொள்கை, கோட்பாடுகளை பரப்புவதற்காக (!!??) குருஜி ஒரு புத்தகம் நடத்திக் கொண்டிருக்கிறார். புத்தகத்தின் பெயர் - காட்டுப்பூ. காடெல்லாம் அழித்து கட்டிடம் கட்டியப் பிறகு, பூ எப்படிப் பூக்கும்.... சொல்லுங்கள் எல்லாம் அறிந்த குருஜி....!

( அடுத்தவாரம் )

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

5 கருத்துகள்:

  1. காட்டுவது, மாட்டுவது எதைப்பற்றியும் எங்களுக்கு கவலையில்லை பணம் பணம், இவர்களை குறைசொல்லி பயனில்லை இவர்களை நம்புவர்களைத்தான் குறைசொல்லவேண்டும் இவர்கள் ஆறறிவு அற்றவர்கள்

    பதிலளிநீக்கு
  2. ஆரம்பம் ஆனதும்
    முடிந்து விட்டது
    அடுத்த வாரம் வரை காத்து இருக்கனுமா
    .....

    பதிலளிநீக்கு
  3. சங்கரசுப்பிரமணியன், கோவைபுதூர்4 டிசம்பர், 2017 அன்று PM 4:15

    இந்தக் கட்டுரைக்கு மிக நெருக்கமான இடத்தில் நான் வசிக்கிறேன். மிகப் பெரிய தொடர் என்று படிக்க ஆரம்பித்தேன். ஆனால் ஆரம்பித்த முதல் பகுதியுடன் முடிந்து விட்டது. ஏன் ஈஷா பற்றி எழுத பயமா? அல்லது பூனைக்குட்டிக்கு அச்சுறுத்தல் ஏதாவது வந்ததா?

    பதிலளிநீக்கு
  4. உண்மையை உரக்க சொல்கிறீர்கள். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...