திங்கள், 27 மார்ச், 2017

எனக்கு இன்னோரு பேர் இருக்கு!

நெத்திலி மீன் பொரியல், அயிரை மீன்  குழம்பு, வஞ்சிரம் வறுவல், சுறாப் புட்டு, கருவாட்டு கூட்டு, இறால் தொக்கு, கெழுத்தி மசாலா... - என்.வி பிரியர்களுக்கு, படிக்கும் போதே ஜிலுஜிலுத்திருக்கும். இன்னும் நிறைய, நிறைய மீன் உணவுகள் சகாயமாக கிடைப்பதால், ஐந்து திணைகளில் அவர்களுக்குப் பிடித்தது நெய்தலாகவும் இருக்கலாம். மீன் உணவு என்பது நம்மூரில் தினமும் சாத்தியப்படாது. ஞாயிற்றுக்கிழமையானால், மார்க்கெட்டில் வந்திறங்கியிருப்பதை நல்லதாய் பார்த்து வாங்கி, பொரியல் போடலாமே தவிர, மற்ற நாட்களில் ஹோட்டலை விட்டால் வழியில்லை. கடல்புரத்துக்காரர்கள் அந்த விஷயத்தில் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு தினமும் உணவில் அது இருக்கும். இலக்கியங்களைப் புரட்டிப் பார்க்கையில் அவர்கள் வகை, வகையாக சமைத்துச் சாப்பிட்டிருக்கிற குழம்பு, வறுவல், பொரியல்களின் மெனு கார்டு பார்வைக்குக் கிடைக்கிறது.

வியாழன், 23 மார்ச், 2017

இரட்டை.... இ(ல்)லை!

பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தை ஆளுகிற மிகப்பெரிய ஒரு கட்சி... அடுத்து நடக்கிற ஒரு இடைத்தேர்தலில் நிற்க முடியாத அவமானத்தை சந்திக்க நேரிடும் என்பது... ஆற்காடு பஞ்சாங்க கணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட ஆச்சர்யமே. இரட்டை இலை... இல்லை. மட்டுமல்ல. அதிமுக என்கிற கட்சியே இந்த இடைத்தேர்தலில் இருக்காது. ஆம். ‘அதிமுக’ என்கிற தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அந்தப் பெயரை பயன்படுத்தவும் கூட தேர்தல் கமிஷன் தடை விதித்திருக்கிறது. தமிழக அரசியல் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது??

புதன், 22 மார்ச், 2017

யவன ராணி... எந்த நாட்டுக்கு ராணி?

து மழைகாலம்தானே? தோட்டத்தில் செடி நடுவதற்காக குழி தோண்டுகிறீர்கள். கடப்பாரையை அழுத்தி இறக்குகிற போது, ‘டங்ங்ங்’ என்று ஒரு தினுசான சத்தம். கொஞ்சம் ஜாக்கிரதையாக சுற்றியிருக்கிற மண்ணை கொத்தி எடுத்து பார்த்தால்... ஒரு பானை. சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட பானை. அதன் தோற்றத்தை பார்க்கும் போது... பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று தெரிகிறது. பொன்னா, மணியா...? பானைக்குள் என்ன இருக்கிறதோ... உடலில் லேசாக உற்சாக மின்சாரம் பரவுகிறதா? பாதுகாப்பாய் எடுத்துப் பார்த்தால்... ஓரிரு உலோகப் பொருட்கள் தவிர ஒன்றும் இல்லை. கோபத்தில், ஏமாற்றத்தில் உடைத்துத் தள்ளி விடாதீர்கள். நாம் கடந்து வந்த பல ஆயிரம், ஆயிரம் ஆண்டுகால வரலாறு, படு பத்திரமாக அந்தப் பானைக்குள் பதுங்கியிருக்கலாம்!

திங்கள், 20 மார்ச், 2017

ராஜா நோட்டீஸ்... (காப்பி)ரைட்டா?


ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித்தகர்களும் ஒரு மெடிஸின் சிபாரிசு செய்வார்களேயானால்... அது, ராஜா பாடல்கள். தொலைதூரப் பயணங்கள் செல்கிறவர்கள், வாகனங்களில் எரிபொருள் இருப்புக்கு அடுத்தபடியாக சரிபார்க்கிற விஷயம்... ராஜா பாடல்கள். காதலில் தோற்றவர்கள் தாடி வளர்த்தபடி ஆறுதல் பெறவும், வென்றவர்கள் கன்னம் மழித்து விட்டு கொண்டாடவும் பக்கபலமாக இருப்பது... ராஜா பாடல்கள். இந்தப்பட்டியல் இன்னும் மிக நீ.....ளமானது. பல கோடி மக்கள், தங்கள் நெருக்கடிகள் மிகுந்த தினப்பொழுதுகளை ராஜா பாடல்களுடன் இணைந்தே நகர்த்தி வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது சாமி சத்தியமான உண்மை. ரைட்டு. ராஜா பற்றி ஏதோ இப்போது பரபரப்பாக ஒரு சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறதாமே... அது என்னா?

சனி, 18 மார்ச், 2017

பாகுபலியை ‘சுட்டது’ யார்?

காலத்திற்கேற்ப அப்டேட் ஆகிக் கொள்வதில், தொழில்நுட்பக்காரர்களை விடவும், திருடர்கள் வல்லவர்கள். செல்போன் சாப்ட்வேர் அப்டேட் செய்வது போல, தொழில் சூட்சுமங்களை உடனுக்குடன் அப்டேட் செய்து, கலங்கடிப்பார்கள். மற்ற திருடர்கள் எப்படியோ... சினிமாத் திருடர்கள் செம! ஒரு காலத்தில் மலையாளத்தில் இருந்தும், ஹிந்தியில் இருந்தும் ‘சுட்டார்கள்’. குட்டு வெளியாகி கேவலப்படுகிற நிலைமை வந்ததும், வெளிமாநிலங்களில் கைவைக்கிற வேலையை விட்டு உகாண்டா, எத்தியோப்பியா நாடுகளில் இருந்து கதை, இசை ‘சுட்டார்கள்’. முகேஷ் நான்காவது தலைமுறையை அறிமுகப்படுத்தி விட்ட இந்தக்காலத்தில், திருடர்கள் துளியாவது மனக்கிலேசம் அடைந்திருக்கிறார்களா என்று பார்த்தால்... நெவர்!

புதன், 15 மார்ச், 2017

அகநானூறும்; ஆன்ட்ராய்ட் போனும்!

டலை காணவும், அதில் கால் நனைக்கவும் பிடிக்காதவர்களும் உண்டோ? ராமநாதபுரத்தில் இருந்து தீவு திசையில் செல்கையில், கருப்பு நிற தார்ச்சாலையின் இரு மருங்கும் திடீரென பளீர் வெள்ளை மணல் பரப்பு ஆக்கிரமிக்கும். அடுத்த சிறிது நேரத்தில் முகத்தில் மோதுகிற உப்புக்காற்றுடன் இடது, வலது இருபுறமும் நீல நிறக் கடல், அடுக்கடுக்கான அலைகளுடன் வந்து சுகம் விசாரித்து நிற்பதை வேடிக்கை பார்ப்பது எத்தனை சுகம்? இரவும், பகலும் உரசிக் கொள்கிற வேளைகளில் கடற்கரைகள்... சந்தேகமின்றி சொர்க்கங்கள். இல்லையா...? ஆனால், இந்தப் பரப்புகளில் நிலவுகிற பிரச்னைகள் அதிகம் வெளியில் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும்... கடலில் மூழ்கியிருக்கிற பனிப்பாறையின் நுனிப்பரப்பு போல சிறிதளவே அறியமுடிகிறது. நெஞ்சில் கள்ளமில்லா, வெள்ளை மனிதர்கள் நிறைந்திருக்கிற இடம் நெய்தல்.

ஞாயிறு, 5 மார்ச், 2017

பெருமணல் உலகம்!

முதல் வரியை டச்சிங் டச்சிங் செய்வதற்கு முன்பாக ஒரு கேள்வி. படகோட்டி, மீனவ நண்பன், கடல் மீன்கள், அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், சுறா - எல்லாமே தமிழ் சினிமாக்கள் என்பதை கடந்து, இந்தப் படங்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்ன? ‘What is your name?’ என்பது போல படு ஈஸியான கேள்வி. அத்தனையும் கடலும், கடல் சார்ந்த நெய்தல் நிலப்பரப்பில் உருவான சினிமாக்கள். நெய்தல் மண்ணில் படம் பிடிக்கப்பட்டிருந்தாலும் கூட, அந்த மண்ணையோ, இடர்களையும், புயல்களையும் கடந்து அங்கு வேர்பிடித்து நிற்கிற எளிய மனிதர்களின் வாழ்க்கையையோ எந்த சினிமாவும் இதுவரை நெருக்கத்தில் நமக்கு அறிமுகம் செய்ததில்லை. அதிகம் அறிந்திராத நெய்தல் மணல் பரப்பின் இன்னொரு பக்கத்துக்குள் துவங்குகிறது நமது பயணம்.

வெள்ளி, 3 மார்ச், 2017

இயற்கை மீது ஏனிந்த வன்மம் குருஜி...? - 1

டம்பு சுகமில்லாத நண்பரைப் பார்ப்பதற்காக கடந்தவாரம் மருத்துவமனை சென்றிருந்தேன். பிரபலமான மருத்துவமனை. மிகப் பெரிய அரசியல் தலைவரை சமீபத்தில் நல்லபடியாக ‘வழியனுப்பி’ வைத்ததே... அந்த மருத்துவமனை. நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, ‘‘த்ரீ ஸ்டார் பேக்கேஜ்ல ட்ரீட்மென்ட் எடுக்கிறேன் சார்...’’ என்றார். அதென்ன த்ரீ ஸ்டார் பேக்கேஜ்? மொத்தமாக ஒரு அமவுண்ட்டை அடித்து விட்டு, உள்ளே போய் கட்டிலேறிப் படுத்துக் கொண்டால் ஆச்சு. சாப்பாடு போட்டு, காபி கொடுத்து, டிவி காண்பித்து, இடையிடையே மருந்து, மாத்திரையும் புகட்டி... (75 நாள் முடிந்ததும்) இரவில் ஏற்றி அனுப்பி வைத்து விடுவார்கள். இதுதான் *** பேக்கேஜ்! இன்றைக்கு கார்ப்பரேட் சாமியார்கள் பலரும் நடத்துகிற ஆஸ்ரமங்களுக்கும், மேற்படி மருத்துவமனைகளுக்கும் பெரிதாக யாதொரு வித்தியாசமும் என்னால் காண இயலவில்லை என்பதே... இந்த கட்டுரை உருவாகக் காரணமான சிறு பொறி!

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...