சனி, 20 ஆகஸ்ட், 2016

நானும் உங்க சொந்த பந்தந்தேன்...!

சினிமா நட்சத்திரங்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிற அளவுக்கு நம்மவர்கள் நிறையப் பேர், வானத்து நட்சத்திரங்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதில்லை. ‘அதெல்லாம் சயின்ஸ் சார். நான் தமிழ் லிட்ரேச்சர் ஸ்டூடண்ட்டாக்கும்...’ என்று அவர்கள் சொல்வார்களானால்... ‘ஸாரி சகோஸ். தமிழ் இலக்கியம் கூட நீங்கள் ஒழுங்காக படித்திருக்கவில்லை’ என்று தமிழ்கூறும் நல்லுலகம் சிரித்து விடும். காரணம், நட்சத்திரங்களை, கோள்களை, சூரியனை, சந்திரனை, அவற்றின் இயக்கங்களைப் பற்றி நமது இலக்கியங்களில் இருக்கிறதைப் படித்தாலே போதும்... ‘ஆத்தா நான் பாசாயிட்டேன்...’ என்று அறிவியல் எக்ஸாம் முடிந்ததும் சினிமா போல கூவிக் கொண்டே அறையில் இருந்து வெளியே ஓடி வரலா
ம்!


சூரிய நட்சத்திரம்!

ன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகள் என்று கிரேக்கத்தையும், கிரேக்க அறிஞர்களையும் நாம் உதாரணம் காட்டிக் கொண்டிருக்கிறோம். உண்மையில், அறிவியல், தத்துவ விஷயங்களில் கிரேக்கத்துக்கு மிக, மிக, மிகவும் தொன்மையானது நமது தமிழ். ஒரு ‘சூரிய உதாரணம்’ பார்க்கலாம்.


சூரியன் என்பதும் ஒரு நட்சத்திரமே. அதாவது G2V வகையைச் சேர்ந்த நட்சத்திரம். அதென்ன G2V ? ஒரு நட்சத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலை சுமாராக 5 ஆயிரத்து 500 டிகிரி செல்ஷியஸாக இருந்தால், அது G2V நட்சத்திரம். ரைட்டா? நமது பால்வெளி மண்டலத்தில் (Milky way) குறைந்தது 100 மில்லியன் (ஒரு மில்லியன் = 10 லட்சம். தெரியும்தானே?) G2V நட்சத்திரங்கள் இருக்கலாம் என்று நவீன அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது. 100 மில்லியனில் ஒருத்தராக்கும் நம்ம சூரியன்!

குடும்ப மெம்பர்ஷிப் கூடுமா?
ந்த சூரியனை குடும்பத் தலைவராகக் கொண்டு பல கோள்கள் இயங்கி வருகின்றன. நமது சூரிய மண்டத்தில் இப்போதைக்கு 9 கோள்கள் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள் (புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ). ‘ரொம்பத் தொலைவு தள்ளி இருந்தேன்... தகவல் கேள்விப்பட்டு இப்பத்தேன் வர்றேன்... நானும் உங்க சொந்த பந்தந்தேன்...’ என்று புதிதாக ஒரு உறுப்பினர் என்றைக்காவது வந்து என்ட்டர் ஆகலாம். அப்படி ஆனால், குடும்ப மெம்பர்ஷிப் எண்ணிக்கை ஒன்பதில் இருந்து பத்தாகவோ, அதற்கும் மேலாகவோ உயரலாம்.

ரி. மேட்டருக்கு வரலாம். சூரியக்கடவுளைப் பற்றி கிரேக்க இலக்கியம் என்ன சொல்கிறது என்று தெரிஞ்சுக்கலாம். சூரியனை நாம் சூரியன் என்று சொல்வது போல, கிரேக்க மக்கள் அப்பல்லோ என்று சொல்கிறார்கள். ஜீயஸ் (Zeus) என்கிற சாருக்கும், லெட்டோ (Leto) என்கிற மேடத்துக்கும் பிறந்த குழந்தை தான் அப்பல்லோ; அதாவது நம்ம சூரியன். ஜீயஸ் சார் முறுக்கிக் கொண்டு போய் விட... லெட்டோ மனம் வெறுத்து, பல இடங்கள் அலைந்து, திரிந்து... கடைசியாக கிரீஸ் நாட்டின் டெலோஸ் (Delos) தீவில் சூரியக் குழந்தையை (கடவுளை!) பெற்றெடுக்கிறார். இவர்தான் அப்பல்லோ. இந்த அப்பல்லோவின் அக்கா அர்டிமிஸ் (Artemis). இவங்கதான் நிலா - இப்படியாகப் போகிறது கிரேக்கக் கதை!

கண்ணுக்கு தெரியாத நட்சத்திரம்!

தற்கும் காலத்தில் முந்தைய நமது சங்க இலக்கியங்கள் இந்த மாதிரி கப்சாக்கள் விடவில்லை. மாறாக, இன்றைக்கு சயின்ஸ் புத்தகத்தில் படிக்கிறது போல, அறிவியல் பூர்வமாக சூரியனைப் பற்றியும், சூரிய மண்டலம் பற்றியும் மிக விரிவாக எடுத்துரைக்கின்றன. அகநானூறு, புறநானூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து... என்று ஒன்று விடாமல், ஏறக்குறைய எல்லா சங்க இலக்கியங்களிலும் சூரியக்குடும்பம் பற்றிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

ங்களிடம் இருந்து இப்போது ஒரு கேள்வி வரலாம். ‘சூரியனும் ஒரு நட்சத்திரம் என்கிறீர்களே சார். அப்படினா, பகல் நேரத்தில ஏன் சூரியன் போல, மத்த நட்சத்திரங்களும் கண்ணுக்கு தெரியலை?’ - நியாயமான கேள்வி. இதற்கு நான் சயின்ஸில் இருந்து பதில் சொல்லப் போவதில்லை. சங்க இலக்கியத்தில் இருந்து!

‘‘மாஇரு விசும்பின் பல் மீன் ஒளி கெட
ஞாயிறு தோன்றியாங்கு...’’ ( பதி. 64)

பதிற்றுப்பத்து கூறுகிற இந்தப் பாடலில் மிகத் தெளிவான விளக்கம் இருக்கிறது. சூரியனின் ஒளி மற்ற நட்சத்திரங்களை விடவும் பிரகாசமானது (சில பாராக்களுக்கு முன் G2V படித்தோம்... நினைவில் இருக்கிறதுதானே?). சூரியனின் படு பிரகாசமான ஒளியால், பிற நட்சத்திரங்கள், தங்கள் தோற்றப் பொலிவை இழந்து, வெளியே தென்படுவதில்லையாம். இரண்டாயிரம் ஆண்டு பழமையான பதிற்றுப்பத்து சொல்கிறது. சந்தேகம் கிளியர் ஆகிடுச்சா? சூரியக் குடும்பத்தோட எல்லா உறுப்பினர்களும் நமக்காக வெயிட்டிங். அடுத்தடுத்த வாரம் அத்தனை பேரையும் பார்த்து அறிமுகம் ஆகிக்கலாம். ஓகே?

‘பறந்து போன’ கிங்பிஷர்!


‘‘பறவைகள், விலங்குகளுக்கான தமிழ் பெயர்கள் மேட்டர் வந்து ரொம்ப நாளாச்சே சார். அவ்ளதானா? முடிஞ்சிருச்சா?’ என்று கம்பத்தில் இருந்து ஹக்கீம் கடிதம் போட்டிருந்தார். அதெப்பிடி சார் முடியும்? இன்னும் நிறையப் பறவை இருக்கே!

 9 ஆயிரம் கோடி ரூபாயோட ‘கிங்பிஷர்’ பறந்து போன விஷயம்தான் இப்ப ஹாட் டாபிக். King Fisher எனப்படுகிற இந்த அழகான, குட்டிப் பறவை தமிழில் மீன்கொத்தி என அழைக்கப்படுகிறது. தித்திரி, சிநல், கிச்சிலி, பொன்வாய்ப்புள் என்றாலும் கூட, ‘பறந்து போன’ அதே கிங் பிஷர் என்றுதான் அர்த்தம்.

‘மைனாவே... மைனாவே...’ என்று பஸ் ஸ்டாப்புகளில் நீங்கள் ராகம் போட்டு பாட்டுப் பாடி சிக்னல் கொடுத்திருக்கலாம். அந்த மைனாவுக்கு நாகணவாய்ப்புள், சாரிகை, பூவை என்று தமிழில் பெயர் இருக்கிறதாக்கும். ‘என்னடா ஆந்த மாதிரி முழிக்கிற’ என்று டோஸ் வாங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த ஆந்தை அண்ணனுக்கு கின்னரம், பிங்கலை, இருடி என தமிழ் இலக்கியங்களில் பெயர்கள் இருக்கின்றன.... என்கிற தகவல்களோடு இந்த வாரத்தை நிறைவு செய்யலாமா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...