வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

பாவம் கோட்டான்... பழியைப் போட்டான்!

‘‘இன்னிக்கு எல்லாமே ஏட்டிக்குப் போட்டியா நடக்குதே; காலையில எந்தக் கோட்டான் முகத்துல முழிச்சமோ...’’ என்று அலுவலக டார்ச்சர் தருணங்களில் அலுத்துக் கொண்டிருப்பீர்கள். அதென்ன கோட்டான்? அதற்கு அப்படி என்ன அமானுஷ்ய வல்லமை? கோட்டானைப் பார்த்தால், குளறுபடிகள் கன்ஃபார்மா? தமிழ் இலக்கியம் கோட்டான் பற்றி எதுவும் குறிப்பு வைத்திருக்கிறதா? தெரிஞ்சுக்க வேணாமா?

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஜல்லிக்கட்டும், சர்வதேச அரசியலும் - 2


ல்லிக்கட்டு கூடவே கூடாது என்று நாட்டின் வடபுலத்தில் இருந்து நிறைய, நிறைய குரல்கள் பெரும் பெரும் புள்ளிகளிடம் இருந்து வருகின்றன. காளைகளுக்காக கண்ணீர் வடிப்பவர்கள் எண்ணிக்கை ஒரே இரவில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இவர்களது திடீர் பாசம், அலங்காநல்லூர் பக்கம் மேய்ந்து கொண்டிருக்கிற பொலி காளைகளுக்கு தீராத விக்கலை ஏற்படுத்தியிருக்கலாம். எதனால் இந்தப் பாசம்? எலி ‘ஏதோ மாதிரி’ ஓடுகிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கும்தானே? இவர்களது காளைப் பாசத்துக்கு பின்னணியில் என்னதான் இருக்கிறது? ‘‘ஜல்லிக்கட்டு என்று இன்றைக்கும், ஏறுதழுவுதல் என்று அன்றைக்கும் அழைக்கப்பட்ட இந்த வீர விளையாட்டு பிறந்து, வளர்ந்து, திசைகளெங்கும் புகழ் சேர்த்த இடம், ஐந்து திணைகளில் ஒன்றான முல்லை நிலப்பரப்பு. இன்றைக்கு சதியின் பிடியில் சிக்கி நிற்கிற அந்த முல்லை விளைச்சலை... பேசாது நாம் மவுனித்துக் கடந்தால்... உலகம் வியக்கிற நம் முல்லை பண்பாடு பாலையாக திரிந்து விடாதா...?

சனி, 20 ஆகஸ்ட், 2016

நானும் உங்க சொந்த பந்தந்தேன்...!

சினிமா நட்சத்திரங்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிற அளவுக்கு நம்மவர்கள் நிறையப் பேர், வானத்து நட்சத்திரங்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதில்லை. ‘அதெல்லாம் சயின்ஸ் சார். நான் தமிழ் லிட்ரேச்சர் ஸ்டூடண்ட்டாக்கும்...’ என்று அவர்கள் சொல்வார்களானால்... ‘ஸாரி சகோஸ். தமிழ் இலக்கியம் கூட நீங்கள் ஒழுங்காக படித்திருக்கவில்லை’ என்று தமிழ்கூறும் நல்லுலகம் சிரித்து விடும். காரணம், நட்சத்திரங்களை, கோள்களை, சூரியனை, சந்திரனை, அவற்றின் இயக்கங்களைப் பற்றி நமது இலக்கியங்களில் இருக்கிறதைப் படித்தாலே போதும்... ‘ஆத்தா நான் பாசாயிட்டேன்...’ என்று அறிவியல் எக்ஸாம் முடிந்ததும் சினிமா போல கூவிக் கொண்டே அறையில் இருந்து வெளியே ஓடி வரலா
ம்!

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஜல்லிக்கட்டும், சர்வதேச அரசியலும் - 1

‘அய்யா... மாடு குத்திபுடுச்சுய்யா... கொடலு சரிஞ்சி மயங்கிக் கெடக்கறாருய்யா...’ - ஜல்லிக்கட்டு தினத்தின் மாலைநேரங்களில், அரசு மருத்துவமனை வராண்டாக்களில் இந்த கதறல் ஒலி கேட்டிருக்கலாம். ‘இன்னும் எத்தனை நாள் சார், இந்த ரத்தக்களறி...?’ - மனிதநேயத்தில் அக்கறை கொண்டவர்கள், ஜல்லிக்கட்டை எதிர்க்க எடுத்து வைக்கிற வாதம் இது. ‘காளைகளுக்கும் நம்மைப் போல உணர்வுகள் இருக்கு சார். ஜல்லிக்கட்டுங்கிற பேர்ல அதை கொடுமைப்படுத்துறோம். வாலை கடிச்சு காயப்படுத்துறாங்க. சாராயத்தை குடிக்க விட்டு மூர்க்கமாக்குறாங்க. சுத்த காட்டுமிராண்டித்தனமான செயல் சார் இது...’ - மிருகநேயத்தில் அக்கறை கொண்டவர்கள் வைக்கிற வாதம் இது. இரண்டும் எந்தளவுக்கு சரி? இவர்கள் சொல்வதில் நியாயம் இருப்பது போல தெரிகிறதே... நியாயம் இருக்கிறதா? ஜல்லிக்கட்டை தடை செய்து விடலாமா?

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்!

‘சூரியன் உதிக்கும் திசை கிழக்கு; மறையும் திசை மேற்கு...’ என்றுதானே இன்றைக்கும் பாடப்புத்தகத்தில் படித்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில், சூரியன் உதிப்பதும் இல்லை; மறைவதும் இல்லை. அது நிரந்தரமானது. நிலைத்து நிற்கிறது. அதை மையமாகக் கொண்டுதான் பூமியும், அதன் சகாக்களும் சுற்றிச் சுற்றி வட்டமடித்து வருகின்றன. பூமியின் இந்த நாலுகால் பாய்ச்சல் ஓட்டம்தான், நமக்கு சூரியனின் நகர்வாகத் தெரிகிறது. தூரத்தில் இருப்பதை பக்கத்தில் காட்டுகிற டெலஸ்கோப்புகள், கோயில் கடைகளில் கூட விற்கிற இந்தக்காலத்திலேயே நமது ‘அறிவியல் அறிவு’ இப்படி என்றால்... 2 ஆயிரம், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலைமை எப்படி இருந்திருக்கும்? யோசித்துப் பாருங்கள்!

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

அன்பு.. காதல்... மோகம்.... தப்பேயில்ல!

ந்த, கூகுள் இருக்கிறதே... கூகுள், அதை திறந்து உலகில் அதிக மொழிபெயர்ப்புகள் கண்ட நூல் எது என்று தட்டச்சு செய்து, தேடிப் பாருங்கள். வந்து விழுகிற பட்டியலில், உங்களுக்கு ஒரு பிரமிப்பு காத்திருக்கும். ஆச்சர்யப்படாதீர்கள் சகோஸ். பைபிள், குர்ஆன் தவிர்த்து, உலகின் அதிக மொழிகளை / மக்களை / இலக்கியக்காரர்களைச் சென்று சேர்ந்த அந்த மூன்றாவது நூல்.... நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு சொந்தமான, சமய போதனை புத்தகம் அல்ல. சிறுவர்களும், பெரியவர்களும் விரும்பி, விரும்பிப் படிக்கிற கதைப்புத்தகமும் அல்ல. அப்புறம்...? மனித வாழ்வின் சகல தரப்பினருக்குமான ஒழுக்க விழுமியங்களை விவரித்து நேர்படுத்துகிற புத்தகம். அந்தப் புத்தகம்... அலையடிக்கிற குமரிமுனை கடலின் நடுவே, ஓங்கி உயர்ந்து,கம்பீரமாக நிற்கிறாரே... அவர் எழுதிய  திருக்குறளேதான்!

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

வாக்ரிபோலியும், ஒரு தங்க நாணயமும்!

ரு ஜெனரல் நாலெட்ஜ் கேள்வியுடன் இந்த வாரத்தை ஆரம்பிக்கலாம். ‘வாக்ரிபோலி (Vagriboli)’ என்று ஒரு மொழி இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ் இலக்கிய நூல் ஒன்று, இந்த மொழியில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. வாக்ரிபோலியில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த மகத்தான பெருமையுடைய இலக்கியம் எது? ஆன்ஸர் யோசித்து வையுங்கள். நான்கு பாராக்கள் கழித்து பதில் பார்க்கலாம்.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...