சனி, 5 மார்ச், 2016

π.. பை... π... கலாய்ச்சி பை!

றிவியல், கணித விஷயங்களை படிப்பதற்கு பதமாக, இதமாக, எளிமையாக, எக்கச்சக்கமாக எழுதி வைத்திருக்கும் காரிநாயனார் மட்டும் இன்றைக்கு இருந்திருந்தால்... நோபல் பரிசுகளை அன் அப்போஸ்டாக அள்ளியிருப்பார் என்று கடந்தவாரம் எழுதியிருந்த கருத்தை நிறையப் பேர் ஆமோதித்திருந்தார்கள். அந்தக் கருத்துக்கு கூடுதல் வலு சேர்க்கிற விதமாக கவிஞரும், எழுத்தாளருமான பாடுவாசி ரகுநாத், மின்னஞ்சல் மூலமாக நமக்கு ஒரு கணித மேட்டர் தட்டி விட்டிருக்கிறார். அது இங்கே:


‘பை’ எப்படி வந்தது?

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்  போது எனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது, வட்டத்தின் சுற்றளவு = 2 * Pi (பை) * R அல்லது  Pi * D எனக்கூறி Pi (π) என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D - விட்டம், R - ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.

எனது கேள்விகளும் ஆசிரியரின் பதில்களும்... 

நான்: ஐயா, இந்த Pi (π) என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம் என்ன?
ஆசிரியர்: அதுதான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே?
நான்:  சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே.
ஆசிரியர்: இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றித்தானே பாடம் நடத்துகிறேன். நீ எதற்காக சதுரம், செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கிறாய்.
நான்ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும், A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள். செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும், L = நீளம் எனவும், B = அகலம் எனவும் கூறினீர்கள். அதுபோல Pi (பை) என்பது என்ன சற்று தெளிவாக கூறுங்களேன்.
ஆசிரியர்: அதுவா, Pi is a constant value.

இருப்பினும் நான் கேட்ட 22/7 என்பது எப்படி வந்தது என அவரால் விளக்கமளிக்க முடியவில்லை. எனக்கும் விளங்கவில்லை.

சக்கரம் செய்த தாத்தா!

ந்த ஆண்டு கால் பரிட்சை விடுமுறையில் கிராமத்தில், தாத்தா வீட்டுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. தாத்தாவுக்கு எழுதப்படிக்க தெரியாது. ஆனால்,  அவர்தான் ஊரின் மிகச்சிறந்த தச்சர். ஊர் கோயிலில் பழுதுபட்டிருந்த தேர் சக்கரங்களை மாற்றும் பணி தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கிராமத்தில் பொழுது போகாததால், அவருடன் நானும் போயிருந்தேன்.  தேர் சக்கரம் செய்யும் பணியின் போது, அவர் கூறிய ஒரு தகவல் என்னை நெருடியது. ‘‘ஐந்தடி உயர சக்கரத்திற்கு 15 அடி 9 அங்குல நீள இரும்பு பட்டை (மரக்கட்டை தேயாமல் இருக்க சக்கரத்தில் ஒட்டப்படுவது ). 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி நீள இரும்பு பட்டை....’’

தில் வந்த 7 அடிக்கு 22 அடி என்பது எங்கோ கேட்டதாக நினைவுக்கு வர, தாத்தாவிடம் ‘எப்படி 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி என கணக்கிட்டீர்கள்’ என்று கேட்டேன்.

ழைய சக்கரங்கள் இருந்த இடத்திற்கு அழைத்துப் போனார். ஏழடி உயர சக்கரத்தின் ஒரு இடத்தில் குறியிட்டு அக்குறிக்கு நேராக மண்ணிலும் குறித்துக் கொண்டார். சக்கரத்தை ஒரு முழு சுற்று வரும் வரை தள்ளிக்கொண்டு வந்து மீண்டும் சக்கரத்தில் குறியிட்ட பகுதி மண்ணை தொட்ட இடத்தில் குறியிட்டார். மண்ணில் முதலில் குறியிட்ட இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்குமான தூரத்தை அளந்தால்... சரியாக 22 அடி வந்தது.

ரகசியம் எங்க போச்சு?

தாவது சக்கரத்தின் விட்டம் 7 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 22 அடி. சக்கரத்தின் விட்டம் 1 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 3 அடி 1.7 அங்குலம் (3.142) என விளக்கினார். இந்த விளக்கம் என் தாத்தாவுக்கு எப்படி தெரிந்தது? அவருடைய அப்பா சொல்லிக் கொடுத்தாராம். அவருக்கு எப்படித் தெரியும்?
ஒரு தச்சு தொழிலாளியிடமிருந்து கடினமானதொரு கணித சூத்திரத்திற்கு விளக்கம் கிடைக்குமானால், மற்ற மரபு வழி தொழிலாளர்களிடம் இருந்து ரகசியங்களும் நுணுக்கங்களும் எவ்வளவு கிடைக்கும்? அவை எல்லாம் என்ன ஆனது?

- இப்படியாக கேள்விக்குறி போட்டு கடிதத்தை முடித்திருந்தார் ரகுநாத்.

நொடி நேரத்துக்குள், மனக்கணக்காகவே மேட்டர்களை முடித்து விடும் வல்லமையை கணக்கதிகாரம் போன்ற எண்ணற்ற தமிழ் நூல்கள் நமது முன்னோர்களுக்குக்  கற்றுக் கொடுத்திருந்தது. சூழ்ந்து வந்த சூழ்ச்சிகளில் இருந்து அதை தக்க வைத்து, பாதுகாக்கத் தெரியவில்லை. பழம்பெருமைகளை பாழடித்து விட்டு, மெக்காலேவிடம் சிக்கி உடம்பில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டிருக்கிறோம்.

ஒட்டக பிரியாணி சூப்பரா?

ரெகுலர் மேட்டர் மிஸ்சாகிடக் கூடாதே. சப்ஜெக்ட்டுக்கு வரலாம். இப்போதெல்லாம் பக்ரீத், ரம்ஜான் பண்டிகைகளுக்கு ராஜஸ்தான் பக்கமிருந்து ஒட்டகங்கள் அழைத்து வருகிறார்கள். டேஸ்ட் எப்படி என்று தெரியவில்லை. ஆனால், மேட்டர் அதுவல்ல. இந்த ஒட்டகங்களுக்கு தமிழில் பெயர் இருக்கிறதா என்ன? கழண்டு விழுந்து விடுமோ என்று பயப்பட வைக்கிற அளவுக்கு தொங்கு கழுத்து வைத்திருக்கிற ஒட்டகங்களுக்கு நெடுங்கழுத்தல், தாசேரம், அத்திரி என தமிழில் பெயர்கள் இருக்கின்றன. தமிழ் வளர்த்த வெளிநாட்டு பெரியவர்களை அடுத்தவாரம் பார்த்துக் கொள்ளலாம். ஓ.கே.தானே?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

4 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா. இப்பதிவில் உள்ள மாணவன் நானே! எனது பாட்டனாரே அந்த தச்சர்.

    என் பதிவில் சில திருத்தங்களும், படங்களும் இணைத்துள்ளீர்கள்.

    அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. π.. பை... π... கலாய்ச்சி பை!.....
    ஐயா வணக்கம் நீங்கள் தொகுத்துத் தந்துள்ள இந்தக் கட்டுரை உண்மையில் யாரால் எழுதப்பட்டது என்பதை உங்களுக்கு இக்கட்டுரையை அனுப்பிய நண்பரிடம் கேட்டு அவரின் பெயரோடு இதை பதிவிட்டிருந்தால் அவருக்கும் சிறப்பு செய்ததாக இருக்கும்.உங்களுக்கும் பெருந்தன்மையாக இருந்திருக்கும்...இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காதவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி!
    இக்கட்டுரையை எழுதியவர் தமிழர் மரபு ஆர்வலர் அ.ச.குமார் என்பவர்!

    பதிலளிநீக்கு
  3. மரியாதைக்குரிய அன்பு பாவாணர் அய்யாவுக்கு,

    வணக்கம்.

    உங்கள் கடித வரிகள் சரியாக புரியவில்லை.

    * நீங்கள் தொகுத்துத் தந்துள்ள இந்தக் கட்டுரை உண்மையில் யாரால் எழுதப்பட்டது?

    பதில்: என்னால் தான் எழுதப்பட்டது. அதில் என்ன சந்தேகம்?

    * உங்களுக்கு இக்கட்டுரையை அனுப்பிய நண்பரிடம் கேட்டு அவரின் பெயரோடு இதை பதிவிட்டிருந்தால் அவருக்கும் சிறப்பு செய்ததாக இருக்கும்.உங்களுக்கும் பெருந்தன்மையாக இருந்திருக்கும்...

    பதில்: கட்டுரையின் முதல் பாராவிலேயே ‘‘கவிஞரும், எழுத்தாளருமான பாடுவாசி ரகுநாத், மின்னஞ்சல் மூலமாக நமக்கு ஒரு கணித மேட்டர் தட்டி விட்டிருக்கிறார். அது இங்கே...’’ என்று கொடுத்திருக்கிறோமே... கவனிக்கவில்லையா?

    - அடுத்தவர்கள் எழுத்தை எடுத்து எனது பெயர் போட்டு வெளியிட்டுக் கொள்கிற அளவுக்கு தவறான நபர் நான் அல்ல. கவிஞரும், நண்பருமான திரு.பாடுவாசி ரகுநாத் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்த கருத்து அது. அந்தக் கருத்து, தமிழர்களின் கணித அறிவை உலகறியச் செய்யும் என்று நம்பியதால், எடுத்து வெளியிட்டேன். எனக்கு அனுப்பித் தந்தவரின் பெயருடன்தான் வெளியிட்டிருக்கிறேனே தவிர... ஏதோ, நானே புலனாய்வு செய்து கண்டறிந்தது போல எழுதவில்லை.

    ஒருவேளை, அந்தக் தாத்தா - பேரன் குறித்த விபரங்கள் - உண்மையான விபரங்கள் - உங்களிடம் இருக்குமேயானால், எனக்கு தந்து உதவுகள். படத்துடன் பிரசுரித்து, மரியாதை சேர்க்க நான் தயாராகவே இருக்கிறேன்.

    நம்மொழி செம்மொழி தொடரைப் படித்துப் பார்த்து, மதிப்பான கருத்துச் சேர்த்ததற்கு நன்றி. தொடர்ந்து இந்தத் தொடரைப் படித்துப் பார்த்து, உங்களைப் போன்ற மரியாதைக்குரிய அறிஞர்கள் கருத்துச் சேர்த்தால், நன்றியுடையவனாக இருப்பேன்.

    நன்றி.

    - திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

    பதிலளிநீக்கு
  4. அன்பு பாவணர் ஐயா அவர்களுக்கு வணக்கம். நான் பாடுவாசி ரகுநாத். இந்த தகவல் என் மூலமாகவே அண்ணன் கிருஷ்ணக்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கான தகவல்கள் இணையங்களில் வாசிக்கையில் கிடைக்கப் பெற்றேன். அங்கு அதன் உரிமையாளர்கள் பெயர் இருக்கவில்லை. அது போக அந்த தகவலை சரியா என உறுதி செய்து அண்ணன் அவர்களுக்கு அனுப்பி, அவர்களும் அதனை ஆராய்ந்து சரி என்பதாலேயே பதிவிட்டுள்ளார். இங்கு யாருடைய கண்டுபிடிப்புகளையும் அபகரித்துக் கொள்ளும் எண்ணம் இல்லை. தவிர இது மர ஆசாரிகள் அனைவருக்கும் உண்டான தொழில் அறிவு தான். இதனை யார் ஒருவரது தனி கண்டுபிடிப்பும் அல்ல. கிடைத்த தகவல்களை வைத்து கட்டுரை எழுதுவது இங்கு நமது பாரம்பரிய அறிவியல், கணித அறிவை பறைசாற்றும் நோக்கமே தவிர தாங்கள் தவறாக எண்ணும் அளவுக்கு ஏதும் இல்லை. தங்களின் மேலான கருத்திற்கு நன்றி ஐயா. தொடர்வோம் நட்பினை. நன்றி

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...