வியாழன், 14 ஜனவரி, 2016

‘சுட்ட’ தேற்றமா பிதாகரஸ்?

‘சிவபூஜையில் நுழையுமே... அந்த ‘கரு கரு’ விலங்குக்கு தமிழில் என்னென்ன பெயர் இருக்கு சார்? தெரிஞ்சு வெச்சுகிட்டா, நமக்கு புடிக்காதவங்கள, அந்தப் பெயர் சொல்லி கூப்பிடலாம் பாருங்க...’ தொடரை ரெகுலராக படிக்கிற நண்பர், படு ஆர்வமாகக் கேட்டார். சிவபூஜையில் நுழைகிற ‘கரு கரு’ விலங்காகிய கரடிக்கு, தமிழ் மொழியில் குடாவடி, உளியம், பல்லுகம், எண்கு, பல்லம், எலு ஆகிய பெயர்கள் இருக்கின்றன. ‘அடாவடி பண்ணாதடா குடாவடி’ என்று உங்கள் நண்பர் உங்களைப் பார்த்துச் சொன்னால், ஏதோ எதுகை, மோனையாக பேசுகிறார் என நினைத்து சும்மா இருந்து விடவேண்டாம். கரடி என்று உங்களைத் திட்டுகிறாராக்கும்!


மதுரையில் நோபிலி

மயப்பணிக்காக கப்பலேறி வந்து, இங்குள்ள மொழி வளம் பார்த்து மனம் மயங்கி, உருகி தமிழின் உயர் பெருமைகளை உலகிற்கு கொண்டு சேர்த்த வெளிநாட்டு அறிஞர்களை இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் ராபர்ட் டி நோபிலி (Roberto de Nobili). இத்தாலி காரர். 26 வயதிலேயே இயேசு சபையில் சேர்ந்து, சமயப்பணிக்காக தமிழகம் வந்தார். ‘நம்ம’ மதுரையில் தங்கி ஏறக்குறைய தமிழ் துறவியாகவே வாழ்ந்தவர் நோபிலி.

மிழ் மட்டுமல்லாது, வடமொழி, தெலுங்கு ஆகியவற்றிலும் சார் எக்ஸ்பர்ட். தமிழில் ஞான உபதேச காண்டம், மந்திரமாலை, ஆத்ம நிர்ணயம், சத்திய வேத லட்சணம், சகுண நிவாரணம், பரம சூட்கம அபிப்ராயம், கடவுணிருணயம், புனர் ஜென்ம ஆட்சேபம், நித்திய ஜீவன் சல்லாபம், தத்துவக் கண்ணாடி, இயேசுநாதர் சரித்திரம், தவகச் சதம், ஞான தீபிகை, நீதிச் சொல், அநித்திய நித்திய வித்தியாசம், பிரபஞ்ச விரோத வித்தியாசம் உள்ளிட்ட 40 உரைநடை நூல்கள், மூன்று கவிதை நூல்கள் எழுதியிருக்கிறார். தமிழ் - போர்ச்சுக்கீசிய அகராதி இவரது முக்கிய பங்களிப்பு.

பைபிள் உபதேசங்களை எளிய மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, அவர்களுக்கேற்ற சொற்களை உருவாக்கினார். பைபிளை வேதம் என்றும், சர்ச்சை கோயில் என்றும், அங்கு நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தை (Mass) பூசை என்றும் சுலப சொற்களைப் போட்டு மக்களிடம் விளங்க வைத்தார். அருள், குரு, பிரசாதம் போன்ற சொற்களை கிறித்துவ பொருளில் அறிமுகப்படுத்திவர் இவர். தமிழ் தவிர, சம்ஸ்க்ருதத்தில் 8, தெலுங்கில் 4 நூல்களும் எழுதியவர். இத்தாலியில் மான்டீபல்ஸியானோ பகுதியில் (Montepulciano, Tuscany) 1577 செப்டம்பரில் பிறந்த இவர், 1656ல் மயிலாப்பூரில் காலமானார். தமிழ் உரைநடை எழுத்துக்கு இவர் அளித்த பங்களிப்பு இன்றும் நன்றியோடு நினைவு கூரப்படுகிறது.

தினசரி தமிழா?


‘‘மனிதனா பிறந்திட்டா, ஏதாவது சேவை செய்யணும். தினசரி ஒண்ணாவது செஞ்சிடணும். ரத்த தானம் செய்யறது ரொம்ப நல்லது. எத்தனையோ ஆன்மாக்களோட ஆசிர்வாதம் கிடைக்கும், இல்லையா?’’ என்றார் அலைபேசி தொடர்பில் வந்த நண்பர். கூடவே, ‘இப்பெல்லாம், முடிந்த மட்டும் பிறமொழி கலப்பில்லாமல், தூய தமிழில் பேச ஆரம்பிச்சிட்டேன் தெரியுமில்ல?’ என்றார்.
அவர் பேசியதில் சேவை, தினசரி, ரத்தம், ஆன்மா, ஆசிர்வாதம் ஆகியவை தமிழ் சொற்கள் அல்ல என்றால், அவர் மட்டுமல்ல, நிறையப்பேர் ஷாக் ஆகிப் போகலாம். நிஜம்தான். இவை வடமொழி சொற்கள். அந்த சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்: சேவை - தொண்டு, தினசரி - நாள்தோறும், ரத்தம் - குருதி, ஆன்மா - உயிர், ஆசிர்வாதம் - வாழ்த்து.

செம்மொழி பட்டியலில், தமிழ் போலவே, காலத்தால் மிகவும் பழமையானது கிரேக்க மொழி. உலக நாகரிகத்துக்கு கிரேக்கமும், கிரேக்க மொழியும் ஆற்றிய தொண்டு அளப்பரியது. நிறைய கண்டுபிடிப்புகள் அங்கிருந்துதான் உலகின் திசைகளுக்குச் சென்றிருக்கின்றன. நாமெல்லாம் இன்றைக்கு கணக்குப் பாடத்தில் (முடியை பிய்த்துக் கொண்டு) மனப்பாடம் செய்கிற பிதாகரஸ் தேற்றம் (Pythagorean theorem) கிரேக்கம் தந்த கொடை என்றுதானே படித்திருக்கிறோம். அந்த கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பிதாகரஸ் தேற்றம் கூறுகிற கணிதவியல் கோட்பாட்டை நம்மொழி மிகவும் தெளிவாக வரையறை செய்து வைத்திருக்கிறது என்று தமிழறிஞர்கள் சத்தியமடிக்கிறார்கள்.


‘சுட்டாரா’ பிதாகரஸ்?

முதலில் பிதாகரஸ் தேற்றம் பற்றி தெரிஞ்சுக்கலாம். ஒன்பதாம் வகுப்பில் கணக்கு சார் சொல்லிக் கொடுத்த விஷயம்தான். ‘‘ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கம் அதன் பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்குச் சமம். (The sum of the areas of the two squares on the legs (a and b) equals the area of the square on the hypotenuse (c).’’ - சுருக்கமாகச் சொல்வதானால், A² + B² = C².

தாகப்பட்டது, செங்கோண முக்கோணத்திற்கு மூன்று பக்கங்கள் இருக்கும்தானே? அடிப்பக்கம், குத்துயரம் மற்றும் கர்ணம். சரியா? இந்த செங்கோண முக்கோணத்தின் கர்ணம் என்பது, அடிப்பக்கம் மற்றும் குத்துயரத்தின் வர்க்கங்களை கூட்டி, வருகிற எண்ணின் வர்க்க மூலம் (A² + B² = C²). இது, பிதாகரஸ் சொல்லி வைத்திருக்கிற தியரி. இந்த கணித முறையை கிரேக்க நாட்டு பிதாகரஸ் சார் (கிமு 569 - 475) கண்டுபிடித்துச் சொல்கிற காலத்துக்கு மிக முன்பாகவே, அதாவது கிமு 2 ஆயிரமாவது ஆண்டுகளிலேயே நம்ம தமிழ் புலவர் போகிற போக்கில் போட்டு தாக்கியிருக்கிறார் என்றால், உங்களுக்கு நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். ஆனால், நம்பித்தான் ஆகவேண்டும். ஆணித்தரமான ஆதாரங்களுடன்... அடுத்தவாரம்! சரியா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...