புதன், 16 டிசம்பர், 2015

நியாயமாரே... இந்த ‘பீப்’ பயலுவல என்ன செய்யப் போறீக?

வரது பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள். என்பதால், அவர்களிடம் கேட்டிருந்தாலே விளக்கம் கிடைத்திருக்கும். ‘இன்னின்ன காரணத்துக்காகத்தான் லவ் பண்றோம்... ஆ, டண்டணக்கா!’ என்று அடுக்குமொழியில் அழகான விளக்கத்தை அப்பா கொடுத்திருப்பார். அதற்கும் மேலாக, ‘இணையத்தில வேண்டாண்டா தம்பு; விபரீதம் ஆயிருச்சினா வம்பு’ என்று எதுகை மோனையாக அட்வைஸூம் பண்ணியிருப்பார். இணையப் பொதுவெளிக்கு வந்து சந்தேகம் கேட்டிருக்க தம்புவுக்கு அவசியமே ஏற்பட்டிருக்காது.


‘பீப்’ பாடல் பற்றி இப்போது எழுதி உங்களது / எனது நேரத்தை வீணடிக்கப் போவதில்லை என இங்கு உறுதிமொழி கொடுக்கிறேன். ஏனென்றால், இணையதளங்களில் எக்கச்சக்கமாக எழுதி, எழுதி, எழுதி, எழுதி, எழுதி... தமிழகத்தின் சந்து பொந்துக்கெல்லாம் அந்தப் பாடலை கொண்டு சென்று சேர்த்து விட்டார்கள். அந்த இசைச் சேவையை பூனைக்குட்டியும் செய்வதாக இல்லை. மாறாக, அதன் அரசியல் பின்புலங்கள் பற்றி வெகு சுருக்க்க்க்க்க்க்க்கமாக இங்கே பேசலாமே!

பெண்களை இழிவுபடுத்தி இவர்கள் மட்டும்தானா பாடியிருக்கிறார்கள்? கடந்த காலங்களில் ம. திலகம், ந. திலகம், அதற்கப்புறம் உ. நட்சத்திரம், உ. நாயகன், தலை, தளபதி... என்று சகல பட்டக்காரர்களும் தங்கள் படங்களில் பெண்ணடிமைத் தனத்தை காட்சிப்படுத்தியே கைதட்டல் வாங்கியிருக்கிறார்கள். ‘‘சண்டி ராணியே நீ எனக்கு கப்பம் கட்டடி...’’ என்று திரையில் உ. நட்சத்திரம் பாடிய போது ரசிகர்கள் அடித்த விசில் சத்தம், 108 ஆம்புலன்சின் அலாரம் சத்தத்தை விடவும் அபாயகரமானது என்பது இன்றைக்கு ‘பீப்’ சத்தத்தை கேட்கும் போது புரிகிறது. பரிணாம வளர்ச்சி...?

ரி. மேட்டருக்கு வருவோம். முதலில், பாடல் சர்ச்சையில் சிக்கிய இரு தம்பிமார்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல. இருவரது குடும்பப் பின்னணியும் பிரம்ம்ம்மாண்டமானது. பாடியவரின் தந்தை சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்டவர். அரசியல் பலம் கொண்டவர். அதற்கும் மேலே, எதுகை மோனையாக அவர் பேச ஆரம்பித்து விட்டால், அரெஸ்ட் வாரண்ட்டுடன் வந்திருக்கும் போலீசார் ஐசியுவில் அட்மிட் ஆகிற அளவுக்கு கோமா நிலைக்கு போய் விடலாம். மகன் தப்பித்து விடலாம். பாட்டுக்கு மெட்டு போட்டு பக்க பலம் சேர்த்தவர் உ. நட்சத்திரத்தின் மிகுந்த நெருங்கிய உறவினர் (உ. நட்சத்திரத்தின் மனைவியின் உடன்பிறந்த சகோதரர் மகன். அவரது உறவினர்கள் அரசியலில் நேரடி தொடர்புடையவர்கள்). ஆகவே, அவரும் கூட தப்பித்துக் கொள்ளலாம்.

மிழக அரசியல்காரர்களும் இதை அவ்வளவு சீரியஸாக எடுத்தார்களில்லை. தப்படித்துக் கொண்டு தெருமுனையில் சக தோழர்கள் சூழ பாட்டுப் பாடிய ஒரு தெருப்பாடகரை சில சமயம் முன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில், ஒரே இரவில் கைது செய்து உள்ளே தள்ளினார்கள். தமிழகம் முழுவதும் உள்ள இளம் பெண்கள், ஆண்கள், மாணவர்கள், மாணவிகள் மனதைப் பாழ்படுத்தி விடுகிறது போல, டாஸ்மாக் தேவையா என்று அவர் பாட்டுப் பாடியது சகிக்க முடியாத குற்றம்தான். அதோடு ஒப்பிடுகையில், தம்பிகள் பாடியது ஒன்றும் பிரச்னை இல்லை. அதான் ‘பீப்’ போட்டு மறைத்து விட்டார்கள்தானே? அந்தளவுக்கு அவர்களுக்கு சமூக அக்கறை இருக்கிறதே. அப்புறம் என்ன பிரச்னை என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்திருக்கலாம்.

என்றால், இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

வ்வளவோ சகித்து வாழப் பழகியாச்சு. இதையும் கேட்டு்க் கொண்டு போய் விடவேண்டியதுதானா? பாட்டுப் பாடிய தம்பி சொல்வது போல, ‘பிடித்தால் கேளுங்கள். இல்லை, மூடி விட்டு போங்கள்...’ என இருந்து விடவேண்டியதுதானா? தொடர் போராட்டம் நடத்துபவர்கள் இன்னொரு திசையிலும் இந்தப் பிரச்னையை அணுகலாம். இந்தப் பிரச்னையில், தம்பிகள் உறுப்பினர்களாக இருக்கிற சினிமா சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவரைக்கும் வாயாவது திறந்தார்களா? கண்டித்தார்களா? அல்லது நியாயப்படுத்தியாவது அறிக்கை விட்டார்களா? எதுவும் இல்லாவிட்டால் எதற்காக சங்கம் நடத்தவேண்டும்? புதிதாக பொறுப்புக்கு வந்திருக்கிற சண்டைக்கார நடிகர், வில்லன் நடிகர்கள் எல்லாம் உடனடியாக உட்கார்ந்து பேசி ஒரு உறுதியான முடிவுக்கு வரவேண்டும். வெள்ள நிவாரணப்பணிகளில் ஆழ்ந்து கிடக்கிற தமிழக அரசும், ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான தமிழக போலீசும் களத்தில் இறங்கி கைதட்டல் வாங்குவதற்காக முன்பாக, சங்கங்கள் ஒரு முடிவெடுக்கவேண்டியது அவசியம். காரணம், சம்பந்தப்பட்ட இருவரும் சினிமா காரர்கள். சினிமா சங்கங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்.

டிகர் சங்கம், தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர் சங்கம், பெப்சி சங்கம், கொக்ககோலா சங்கம்... என்று சங்கங்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், யாரும், எதுவும் பேச வில்லை. அவர்கள் கூடி தங்கள் முடிவை அறிவிக்கவேண்டும். தம்பிகள் செய்தது தவறு என்று அறிவிக்கவேண்டும். அல்லது சரி என்றாவது அறிவிக்கட்டும். முதலில் தங்கள் முடிவை அவர்கள் வாய் திறந்து அறிவிக்கவேண்டும். அதையெல்லாம் கடந்து, அந்தச் சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளை வகிப்பவர்கள் கொஞ்சமாவது நியாயமார்களாக இருப்பார்களேயானால் / சமூக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்களேயானால் / அந்தப் பாடலை தங்கள் மகனோ, மகளோ ‘பீப்’புடனோ, ‘பீப்’ இல்லாமலோ பாடினால் தப்பு என்று கவலைப்படுபவர்களாக இருப்பார்களேயானால் / எதிர்கால இளைய சமுதாயத்தின் மனதில் விஷம் விதைக்கப்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்களேயானால்.... உடனடியாக எடுக்கவேண்டிய ஆகப்பெரிய முடிவு ஒன்று இருக்கிறது.

ம்பிகள் இருவரையும் கூப்பிட்டுப் பேசி, ‘சினிமாவுக்கு நீங்கள் ஆற்றிய சேவை போதும் கண்ணுங்களா...’ என்று, எடுத்துச் சொல்லி அவர்களுக்கு தடை விதிக்கவேண்டும். குறைந்தபட்சம், ஒரு இரண்டாண்டுகளாவது சினிமாவில் அவர்கள் செயல்பட தடை விதிக்கவேண்டும். இந்தத் தடையால் அவர்கள் இருவரும் தெருவோரத்தில் நின்று கையேந்தி பிச்சையெடுக்கிற நிலைக்குப் போய் விடப் போவதில்லை. இந்தத் தடை, இந்த இருவருக்கும் கொடுக்கிற தண்டனை அல்ல. மாறாக, எதிர்வரும் காலங்களில், இனி யாரும் இப்படி செய்து விட துணிச்சல் கொண்டு விடக்கூடாது என்பதற்கான எச்சரிக்கை.

செய்வீர்களா நியாயமாரே!பின்குறிப்பு:

பெரியாறு அணை பிரச்னை போன்ற சமூக அக்கறையுடன் கூடிய கட்டுரைகள் (பெரியாறு உடையுமா; கேரளா அழியுமா?) இந்தத் தளத்தில் இருக்கும் போது, இதுபோன்ற பீப் கட்டுரைகளை பூனைக்குட்டியின் MOST POPULAR POST பகுதிக்கு கொண்டு வந்து விடவேண்டாம் என்று மெய்யாகவே மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -3 கருத்துகள்:

  1. எனக்கு தெரிந்து எக்கட்டுரையாளனும் தனது கட்டுரைக்கு முக்கியதுவம் தரவேண்டாம் என கேட்டதாக தெரியவில்லை. ஆனால் உண்மையில் நியாயம் கேட்கும் இடம் தான் இங்கு சரியில்லை. தாங்கள் எப்படிப்பட்ட நியாயவான்கள் எனபொறுப்புக்கு வந்த அன்றே நிருபித்தவர்கள் இவர்கள். தமிழர் பிரச்சனைகளில் தலையிட மாட்டோம் என கூறியவர்கள் ஆயிற்றே இவர்கள்.சரி விடுங்கள் மதுரையிலிருந்து நியாயம் கேட்கிறீர்கள். கொடுக்கவில்லை என்றால் இருவரையாவது எரிப்பீர்கள் அல்லவா எதிர்பார்க்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  2. அப்படியான தடை இதுவரை யாருக்கும் விதிக்கப்படாததால் தான் இப்படியான தறுதலைகள் தலையெடுத்துள்ளனர். குறிப்பாக, இப்பிரச்னையை அணுக வேண்டிய காவல்துறை மிக மிக மென்மையான போக்கை கடைபிடிக்கிறது.சிக்கிய 2 கைகளும் பெரிய இடத்து ஆளுக.. அரண்மனை கோழி முட்டைகள்.அம்மிகளைத்தான் உடைக்கும். என்னைப் பொறுத்தவரை, தடை, பகிஸ்கரிப்பு என்பதையெல்லாம் தாண்டி, எந்த பெண்ணாவது ஒருத்தி, தன் செருப்பைக் கழட்டினால் தான் இந்த ஜென்மங்கள் திருந்தும்.

    பதிலளிநீக்கு
  3. சினிமா சார்ந்தவர்கள் சிம்மு அனிருத்தை முழுமையாக கண்டிக்க முன்வர மாட்டார்கள். அப்படி யாரேனும் சொல்ல மாட்டாகளா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களின் பல படங்களும் கண்டனத்துக்குரியவை என்ற பட்டியல் போட. சினிமா பெண்களை போகப் பொருளாகக் காட்டித் தானே பிழைத்துக் கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...