திங்கள், 27 ஜூலை, 2015

பாகுபலி - காட்சி பிரமாண்டத்தின் உச்சம்!

முன்குறிப்பு: இது வழக்கமான, சினிமா விமர்சனக் கட்டுரை அல்ல.
மிழில் வெளிவருகிற பிரமாண்ட சினிமாக்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். தெய்வப்புலவராவது ஒன்றரை அடியில் எழுதினார். அவருக்கு சவால் விடுகிறது போல, ஒற்றை வரியில் கதை தயார் செய்து கொண்டு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துணையுடன் காட்சிகளைக் கோர்த்து தைப்பது முதல் வகை. வலுவான கதைக் களத்தை கையில் எடுத்துக் கொண்டு, கதையின் பயணத்துக்கு கூடுதல் பலம் / வேகம் சேர்க்க, கம்ப்யூட்டர் வரைகலையை வெளியில் தெரியாத, கண்களை உருத்தாத வகையில் இழையோட விடுவது இரண்டாவது வகை. ராஜமவுலியின் பாகுபலி... இரண்டாவது வகை!

சனி, 25 ஜூலை, 2015

ஓ மானே! ஓ குயிலே!! ஓ குரங்கே!!!

ந்த பட்ஜெட்டிலாவது இரட்டை ரயில்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வருமா? என தென்மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்...’ என்று நடுவில் ஒரு கேள்விக்குறி போட்டு எழுதினால், வெட்கக்கேடு என்று கடந்தவாரம் பார்த்தோம். ‘அடடா, இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே...’ என்று நிறைய நண்பர்கள் அலை / தொலைபேசியிருந்தார்கள். என, என்று, என்ற ஆகிய மூன்று சொற்களுக்கு முன் கேள்விக்குறி (கேள்விக்குறிக்கான தேவை இருப்பது போல பட்டாலும் கூட) கூடாது சகோஸ். ஒருவேளை மேற்கோள் குறி போட்டு வினா வாக்கியம் எழுப்பப்பட்டிருந்தால் ‘?’ போட்டுக் கொள்ளலாம்.
 ‘‘இந்த பட்ஜெட்டிலாவது இரட்டை ரயில்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வருமா?’’ என்று மக்கள் கேள்வி எழுப்பினார்கள். - இந்த இடத்தில் ‘?’ சரி. அதாவது, முற்றுப்புள்ளி, கேள்விக்குறி, ஆச்சர்யக்குறி இதெல்லாம், வாக்கியம் முடிகிற இடத்தில் மட்டும்தான் வரணும். சரியா?

வெள்ளி, 10 ஜூலை, 2015

மாதர் தம்மை இழிவு செய்யும்...

புள்ளிராஜா மேட்டர் நிறையப் பேருக்கு நிறைய சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. சந்தேகமும், சந்தோஷமே. தீர்வு கிடைத்து விடும் இல்லையா? ஒருவரது பெயரை, ஒரு அமைப்பின் பெயரைச் சுருக்கிச் சொல்கிற போது (ஐக்கிய நாடுகள் சபை - ஐ.நா. சபை, எம்.ஜி.ஆர்) முற்றுப்புள்ளி அவசியம் என்று கடந்தவாரத் தொடரில் பார்த்தோம். எழுத்துக்கு நடுவில் வருவது எப்படி முற்றுப்புள்ளியாக (Full Stop) இருக்கமுடியும் என்று நண்பர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். நிஜம்தான். கால்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி என்கிற நான்கே விஷயங்களுடன் புள்ளி மேட்டர் முடிந்து விடவில்லை. இன்னும் ரெண்டு பாக்கி இருக்கிறது. புள்ளி (Point), முப்புள்ளி (Ellipsis).

சனி, 4 ஜூலை, 2015

புள்ளிராஜாவுக்கு எத்தனை புள்ளி?

‘நீ புள்ளி வெச்சா... நான் கோலம் போடுவேன்...’ என்று ஒரு விசேஷமான வசனம் (சினிமா பெயர் ஞாபகத்தில் இல்லை) கேட்டிருப்பீர்கள். தத்துவம் படிக்கிறவர்களிடம் பேசினால், ‘உலகத்தின் சகல விஷயங்களுமே ஒரு புள்ளியில் இருந்து துவங்குகின்றன...’ என்பார்கள். தத்துவம், சினிமா இரண்டுமே புள்ளியின் மகத்துவம் பற்றி மேலதிகம் பேசுவதால், நாமும் அதுபற்றி அதிகம் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. முதலில் காற்புள்ளி என்கிற கமாவும், அடுத்ததாக அரைப்புள்ளி என்கிற செமிகோலனும் பார்த்தோம். இனி, முக்காற்புள்ளி எனப்படுகிற கோலன் (Colon), முற்றுப்புள்ளி என்கிற ஃபுல் ஸ்டாப் (FUll Stop) மட்டும் பார்த்து விட்டோமேயானால், புள்ளி சப்ஜெக்ட்டை தள்ளி வைத்து விடலாம். சரியா?

வெள்ளி, 3 ஜூலை, 2015

காரணம் இதுதானா கமல் சார்?

த்தமவில்லன் சினிமாவின் தோல்விக்கு என்ன காரணம்? ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். ‘பூனைக்குட்டி’ கூட, தோல்விக்கான காரணம் விளக்கி ஒரு விரிவான கட்டுரை (உத்தமவில்லனா... இம்சை அரசனா? படிக்க, க்ளிக் செய்யவும்:  http://poonaikutti.blogspot.com/2015/05/blog-post_12.html) எழுதி வெளியிட்டது. படம் வெளியாகி ரொம்ப, ரொம்ப நாள் கழித்து, தோல்விக்கான காரணத்தைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்திருக்கிறார் உலகநாயகன்.
 அவரது லேட்டஸ்ட் சினிமா ‘பாபநாசம்’ திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியின் போது, உ.வி. தோல்விக்கான காரணத்தை அவரே அறிவித்தார். என்னதான் காரணமாம்?

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...