ஞாயிறு, 28 ஜூன், 2015

கண்களை பார்க்காதீர்கள்; ஏனென்றால்...

வாக்கியத்தின் வகைகள் பற்றிய சப்ஜெக்ட் ஜோராகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் ‘கமா, ஃபுல் ஸ்டாப்’ வந்து திசையை மாற்றி விட்டது. என்ன செய்ய..? பாதை மாறி பயணம் செய்வதும், அப்புறம் ரிவர்ஸ் கியரடித்து பழைய இடத்துக்கு வருவதும் இந்தத் தொடரைப் பொறுத்தவரை, ஏறக்குறைய பழகிப்போன விஷயமாகி விட்டதே? ஒரு வாக்கியத்தின் அமைப்பு முறைகளை கொண்டு, அதை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கமுடியும் என்றும், அதில் தனி வாக்கியம் (Simple sentence) பற்றியும் கடந்த வாரங்களில் பார்த்தோம். நமது அன்றாட எழுத்துக்கள் முழுமையாக தனி வாக்கியங்களையே சார்ந்திருக்கின்றன.

சனி, 27 ஜூன், 2015

ஆஹா... இது, யோகா!

‘தலைவலியா, இடுப்பு வலியா, மூச்சிரைப்பா, நாள்பட்ட இருமல், தும்மலா...?’
‘ஆமாம்பா... ஆமாம். அதுக்கென்ன இப்போ?’
‘அட! யோகா இருக்க, எதுக்குங்க டென்ஷன்? டெய்லி அரை மணிநேரம் பண்ணுங்க. எல்லாமே போயே போச்சு. போயிந்தே...’
- இன்னும் கொஞ்ச நாளில் இப்படி விளம்பரம் வந்தால் - அதில் அமிதாப் பச்சனே நடித்திருந்தாலும் கூட - நீங்கள் சந்தேகங்கொள்ள அவசியமில்லை. சர்வரோக நிவாரணி அவதாரம் பூண்டிருக்கும் யோகா கலைக்கு அந்த வல்லமை இருக்கிறது என்பது மெய்படுத்தப்பட்ட உண்மை. என்பதால், சர்வதேச யோகா தினமாக ஜூன் 21ஐ அறிவித்து அங்கீகரித்திருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை. டெல்லி ராஜ்பாத்தில் (ராஜபாதை) பிரதமர் மோடியுடன் சேர்ந்து 35 ஆயிரத்து 985 பேர், அன்றைய தினத்தில் யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள். அந்த தினத்தன்று நடந்த உலக நிகழ்வுகளை படம் பிடித்து இங்கே பதிவு செய்கிறது பூனைக்குட்டி (பாருங்க, லேட்டானாலும்... லேட்டஸ்ட்டுதான்!).

சனி, 20 ஜூன், 2015

டோனி, கோலியை பிரிக்காதீங்க!

‘‘கமா, புல் ஸ்டாப் போடறதுல, இவ்வளவு விஷயம் இருக்கா? உயிரை பறிச்சிடுது; குடும்பம் கொலாப்ஸ் ஆகிடுதுனா... ரியலி ஷாக்கிங். இதுக்கு எதாவது விதிமுறை இருந்தா சொல்லுங்க சார்...’’ - இப்படி நிறைய கடிதங்கள், அழைப்புகள். ஒரு கமா இடம் மாறியதால் என்னென்ன பிரச்னை வருகிறது என விளக்கிய கடந்தவார கட்டுரைக்கான எதிர்வினைகள் இவை என புரிந்து கொள்ளமுடிந்தது. நிறுத்தக்குறிகளை எங்கு பயன்படுத்தவேண்டும், எப்படிப் பயன்படுத்தவேண்டும்  / எங்கு பயன்படுத்தக்கூடாது, எப்படி பயன்படுத்தக்கூடாது என்று தமிழறிஞர்கள் நெறிமுறைகள் வகுத்துத் தந்திருக்கிறார்கள். விதிமுறைகளையும், இன்னும் பார்க்கவேண்டிய விஷயங்களையும் விறுவிறுவென அடுத்து வருகிற வாரங்களில் பார்த்து முடிக்கலாம். உங்களது மேலான சந்தேகங்களையும் தெரியப்படுத்தினால்... தெளிவுபெறலாம். சரியா?

ஞாயிறு, 14 ஜூன், 2015

வாட்டாள் நாகராஜ்... யாருடைய எதிரி?

பொதுமக்கள் நலனுக்காக, ரத்தம் சிந்தி தங்கள் சுயநலனை தியாகம் செய்த தலைவர்களை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். காந்தி, நேரு, காமராஜ் என்று உதாரணங்களும் வைத்திருக்கிறோம். சுயநலனுக்காக பொதுமக்களை ரத்தம் சிந்த வைத்து, அந்த ரத்தத்தின் கதகதப்பில் ஏறி அமர்ந்து குளிர் காய்கிறவர்களை இன்றைய அரசியலில் பார்க்கிறோம். முன்னதை விட, பின்னதில் உதாரணம் காட்ட நபர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சட்டென்று சொல்லவேண்டுமென்றால், வாட்டாள் நாகராஜ் பெயரை தேர்ந்த உதாரணமாகச் சொல்லலாம்.

சனி, 13 ஜூன், 2015

ஒரு ரன்னுல... இந்தியா தோத்துடுச்சே!

ங்கிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சமாச்சாரம் என்றாலும் கூட, நிறுத்தக் குறி அடையாளங்கள் இன்றைக்கு நமது மொழியில் (ஏன்... இந்திய மொழிகள் எல்லாவற்றிலும்தான்!) முக்கிய இடத்தைப் பிடித்து விட்டன. தப்புத் தாண்டா நடந்தால்... மேட்டர் செம சிக்கலாகி விடும்.

ஒரு கமாவை (,) எங்கே போடவேண்டும், எங்கே போடக்கூடாது என்று எழுதுகிறவர்களுக்கு தெரிந்திருக்கவேண்டியது மிக முக்கியம். நிறுத்தக்குறியீட்டு தவறால், வாக்கியத்தின் பொருள், அர்த்தமே மாறி விடும். கமாவை மாற்றிப் போட்டதால், உயிரே போன கதையை தெரிந்து கொள்ளலாம்!

வெள்ளி, 12 ஜூன், 2015

யோகா... நல்லது?


பாரதிய ஜனதா பார்ட்டி காரர்களுக்கு ஆதரவாக ‘பூனைக்குட்டி’யில் ஒரு கட்டுரை எழுதவேண்டியிருக்கும் என எதிர்பார்க்கவே இல்லை - அதுவும், இவ்வளவு சீக்கிரம். நல்லவேளை, அவர்களது கொள்கை, கோட்பாட்டுச் சித்தாந்தங்களுக்கு அன்னப்போஸ்டாக இங்கு ஆதரவு தெரிவித்து நான் எழுதப்போவதில்லை.
இது, ஆஹா மேட்டர். அதாவது யோகா மேட்டர்!

சனி, 6 ஜூன், 2015

ரஜினியும் கமலும்... நடுவில் ஒரு கமாவும்!

டந்தவாரத்தில் ஒரு நண்பர் அலைபேசியில் தொடர்புக்கு வந்தார். ‘வாக்கியங்கள் பற்றி எழுதுறீங்க. சரி. வாக்கியத்தில கமா, புல் ஸ்டாப், ஆச்சர்யக்குறி... இப்படி நிறைய பங்ச்சுவேஷன் மார்க் போடறமே... இதுபத்தி நம்ம இலக்கணம் எதாவது சொல்லுதா சார்?’ - சபாஷ். சரியான கேள்வி. வாக்கியங்கள் பற்றி பேசுகிற இந்தத் தருணத்திலேயே, இதையும் ஒரு கை பார்த்து விடுவது நல்லது. தொல்காப்பியம், நன்னூல் போன்ற மூத்த தமிழ் இலக்கண நூல்களை தலைகீழாகப் புரட்டிப் பார்த்தாலும், இந்த நிறுத்தக்குறிகள் பற்றி சிங்கிள் வார்த்தை இல்லை. அப்படியானால், நமது பாடல்களிலும், செய்யுள்களிலும் எப்படி இவை வந்தன? ‘ஓ... மானே! ஓ... தேனே!’ என்று எழுதி ஆச்சர்யக்குறி போட்டு நிறுத்துகிறோமே, இது எப்போது பழக்கத்துக்கு வந்தது?

வியாழன், 4 ஜூன், 2015

விஜய்ண்ணா... இப்போ கோக் குடிக்கலாம்களாண்ணா?

சினிமாக்காரர்கள் விளம்பரப்படுத்தி விற்கிற பண்டம் என்றால்... அது என்ன கழிசடையாக இருந்தாலும் கூட வாங்கி மேய்கிற சமூகம் வசிக்கிற நாடு என்ற பெருமை மோகன் ஆண்ட / மோடி ஆள்கிற இந்திய திருநாட்டுக்கு உண்டு. உழைத்துக் களைத்துச் சலித்து அமர்கிற நேரத்தில் நமது பொழுதை இனிமையாகப் போக்குகிற கலைஞர்கள் என்கிற எல்லையைக் கடந்து, ஒப்பாரும், மிக்காருமற்றவர்களாக சினிமாக்காரர்களை நாம் மாற்றி வைத்திருக்கிறோம்.
அமிதாப்பும், மாதுரியும் நம்ப வைத்துக் கொடுத்த நூடுல்ஸை தின்ற குழந்தைகள், டோக்கன் வாங்கி விட்டு மருத்துவமனை பெஞ்ச்சுகளில் காத்துக் கிடப்பது, எல்லாம் கொடுத்த சமூகத்துக்கு சினிமாக்காரர்கள் செய்கிற கைமாறு!

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...