புதன், 13 மே, 2015

அம்மா வந்தாச்சு...!

மே 10ம் தேதி அன்னையர் தினம் என்று குறிப்பிடும் காலண்டர் காரர்கள் இனி, மே 11ம் தேதி அம்மா தினம் என அச்சடிக்கலாம். ஒன்றும் தப்பில்லை. கடைசி பாலில் சிக்ஸ் அடித்து ஜெயிக்க வைத்தது போல, தீர்ப்பு தந்த திகைப்பில் இருந்து பல கோடி தமிழினம் இன்னும் வெளிவந்த பாடில்லை. தீர்ப்பைக் கேட்டதும் அம்மாவுக்கு அடுத்தபடி அதிக சந்தோஷப்பட்டிருப்பார் ஓ.பி.எஸ். எவ்வளவு நாள்தான் முதலமைச்சர் மாதிரியே நடிக்க முடியும்? தீர்ப்பு வந்த சிறிதுநேரத்தில் போயஸ் கார்டனுக்கு காரில் வந்த ஓ.பி.எஸ். முகத்தில் ஒரு ‘அப்பாடா’ (அம்மாடா?!) தெரிந்தது. உலகத்திலேயே, அழுதபடி பதவியேற்று, சிரித்தபடி ராஜினாமா செய்கிற ஒரே முதல்வர் இவர்தான் என்று வந்த கமெண்ட்களில்... சத்தியம் இருக்கிறது! இனி, அணிவகுக்கின்றன அம்மா கொண்டாட்டங்கள்...


பிதாவே... தாங்கள் செய்வது இன்னதென்று!


‘ஓவர் குஷியில், என்ன செய்யறோம்னே தெரியாம திரும்பவும் சிலுவையில் கொண்டு போய் அடிச்சிராதீங்கப்பா...’ - சென்னை, அதிமுக தலைமை அலுவலகம் முன் ‘சிலுவையடி புகழ்’ ஹூசைனியை தூக்கி வைத்துக் கொண்டாடும் அதிமுக தொண்டர்கள்.
சிங்கம் போலே... ஏ சிங்கம் போலே...!

டான்ஸ் மாஸ்டர் கலாவுக்கு கூட இந்த மாதிரி ஸ்டெப் கிடைக்காது. அதிமுக தலைமை அலுவலகம் முன் பல்லெல்லாம் வாயாக... ஸாரி, வாயெல்லாம் பல்லாக... அதிமுக பெண் தொண்டர்களின் பரதநாட்டியமா, குச்சிப்புடியா, கதக்களியா... இது என்ன வகையான நாட்டியம் என்று  மக்களே சொல்வீர்களா... நீங்கள் சொல்வீர்களா?
விநாயகனே... வினை தீர்ப்பவனே!


லகு குத்துவது, அங்கப்பிரதட்சணம் செய்வது, மண் சோறு சாப்பிடுவது... என்று இருக்கிற தெய்வங்களையெல்லாம் இந்த ஆறு மாதத்தில் உண்டு, இல்லையென்று ஒரு வழி பண்ணி விட்டார்கள் அதிமுக தொண்டர்ஸ்.
இந்தக் கொடுமையில் இருந்து தப்பிக்க, குமாரசாமியின் கனவில் தோன்றி, அந்த அம்மாவை ரிலீஸ் பண்ணச் சொல்லிடலாம் என்று தெய்வங்கள் கூட்டமைப்பில் ஒருவேளை தீர்மானம் நிறைவேற்றி முடிவெடுத்திருக்கலாம்.
கேட்டது கொடுத்த புளியங்குளம் கணபதி கோயிலுக்கு சிதறச் சிதற சிதறுதேங்காய் உடைக்கப்படுகிறது. இடம்: கோவை.

இந்த போஸ்... நல்லாயிருக்கா?

லைநகர் டில்லியின் பார்லிமென்ட் வளாகம். பெங்களூரில் தீர்ப்பு வெளியான சில நொடிகளில், செல்போன் மூலம் ‘ஜெ’யச் செய்தி கேட்டதும், அதிமுக ராஜ்யசபா எம்பி விஜிலா சத்யானந்த் கொடுக்கும் டீ....ப் எமோஷனல் ரியாக்‌ஷன்! (ஜெயா டிவில அம்மா பாத்திருப்பாங்கள்ல?)மைசூர்பாக் இல்ல.... பெங்களூர் பாக்!‘‘குன்ஹா தீர்ப்புலயே தப்பிச்சிடலாம்கிற நம்பிக்கையில, அப்போ வாங்கின மிட்டாய். ஆறு மாசமாக சும்மா இருந்துச்சு. எக்ஸ்பயரி டேட் இன்னும் முடியல. அட சும்மா வாங்கிக்கங்க சார்...’’ - டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் பார்க்கிற வர்களையெல்லாம் இனிப்பில் குளிப்பாட்டுகிற அதிமுக எம்பி.ஸ்.
‘108’க்கு ஒரு போன் போடுங்க!

யார் வைக்கிற வெடிக்கு எந்தப்பக்கம் திரி இருக்கிறது என்றே குழம்பி தலைசுற்ற வைக்கிற அளவுக்கு ஓவர் உணர்ச்சி வசப்பட்டு அதகளம் பண்ணி விட்டார்கள் கோயம்புத்தூர் ரத்தத்தின் ரத்தங்கள். அங்கு நடந்த மே 11 கொண்டாட்டத்தைப் பார்த்து... தீபாவளி வெட்கப்பட்டிருக்கும்.

போடுறா வெடிய... ராமேஸ்வரம் வரைக்கும்!

மினி வேன் டயர் சைஸூக்கு இம்மாம் பெரிய சரவெடிச் சரம். ராமநாதபுரம் தொண்டர்களின் ஆனந்த வெளிப்பாடு இது. ராமநாதபுரத்தில் துவக்கி... ராமேஸ்வரம் வரைக்கும் இழுத்துச் செல்கிற அளவுக்கு எவ்வளவு சரம் பாருங்கள். சிவகாசி குடோனை அப்படியே நகர்த்திக் கொண்டு வந்திருப்பார்களாக இருக்கும். போலீஸ் ரெய்ட் அடித்திருந்தால்... வெடிபொருள் பதுக்கிய வழக்கில் புக் பண்ணியிருப்பார்கள்.ஆடுங்கடா... என்னச் சுத்தி; நான் அம்மாவோட வெட்டுக்கத்தி!

கோயில் திருவிழாவில் மேடை நடனமாட கலைக்குழுக்கள் கடைசிநேரத்தில் சிக்காவிட்டால், இனி டோண்ட் வொர்ரி. அவர்களையெல்லாம் ‘பீட்’ பண்ணி விடுகிற அளவுக்கு ஒரே ரிதத்துடன் அபிநயம் பிடித்து குத்தாட்டம் போட்டு கலக்குகிறார்கள் பாருங்கள். இடம்: காரைக்குடி.
அம்மா பேரச் சொல்லி சாப்புடு!

ம்மா தீர்ப்பால் அதிகம் சந்தோஷப்பட்டவர்கள் பட்டியலில், இனிப்பு பலகாரக்கடைக்காரர்களும் கட்டாயம் இருப்பார்கள். தீர்ப்பு வெளியாகும் தேதி தெரிந்ததுமே, முந்தின மாதம் போட்டு மீந்து போயிருந்த பணியாரம், ஜாங்கிரிகளை பாலீஷ் போட்டு அடுக்கி வைந்திருந்தாலும், அள்ளிக் கொண்டு போக ஆள் ரெடி. லேசா ஸ்மெல் வருதே... என்று கண்டுபிடிக்க அன்றைய தேதிக்கு யாருக்கும் நேரம் இருக்காது. மதுரை அரசு மருத்துவமனை முன் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ்காரர்களுக்கும் இனிப்பு விநியோகம் செய்தார்கள் அதிமுக காரர்கள். பகிர்ந்து சாப்பிடும் போலீசார்.

- பூனைக்குட்டி -

2 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...