வெள்ளி, 1 மே, 2015

என்று தீரும் இந்த அவலம்...?

யிரம் வார்த்தைகள் தருகிற அழுத்தத்தை விடவும், ஒரு புகைப்படம் தருகிற தாக்கம்... மிக அதிகமானது. மிக, மிகவும் அதிகமானது. தேர்ந்த சில புகைப்படக்காரர்கள், ஒரே ஒரு புகைப்படம் மூலமாக உலக சரித்திரத்தில் மாற்றம் தந்திருக்கிறார்கள். புகைப்படங்களின் மதிப்பு பூனைக்குட்டிக்கும் மிக நன்றாகவே தெரியும். உலகின் ஆகச்சிறந்த புகைப்படங்களை தொகுத்து தோரணம் கட்டுவதற்காகவே ‘பேசும்படம்’ என்கிற பகுதியை அது தொடர்ச்சியாக வெளியிட்டு வருவது நீங்கள் அறிந்ததே. பேசும்படத்தில் இம்முறை என்னென்ன ஸ்பெஷல்....?


என்று தீரும் இந்த அவலம்...?


டத்தைப் பார்த்ததும் பதற்றம் வருகிறதுதானே...? ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். வெறும் நாடகம்தான். ஆனால், இந்த நாடகத்துக்கு பின்னணியில், நீங்கள் பார்க்கிற இந்தக் காட்சியை விடவும் கொடூரமான ஒரு உண்மைச் சம்பவம் ஒளிந்திருக்கிறது. ஆப்கன் தலைநகர் காபூலில் கடந்த மார்ச்  மாதம், தவறான குற்றச்சாட்டின் பேரில் ஃபர்குந்தா என்ற 27 வயது பெண் வன்முறைக் கும்பலால் கொடூரமாக தாக்கிக் கொல்லப்பட்டார். அதற்குக் கண்டனம் தெரிவித்து, வீதி நாடகம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள் இந்த மக்கள் குழுவினர். ஆப்கன் என்று அமைதிப்பூங்காவாக மாறும்...?

ஊதா... கலரு வெப்பன்!


கொள்ளையடிக்கவோ... குண்டு வைக்கவோ முஸ்தீபு செய்து இவர்கள் கிளம்பிச் செல்வதாக நினைத்து விடவேண்டாம். உங்களுக்கும், எனக்குமான அதே பிரச்னைதான். உஷ்ஷ்ஷ்... அப்பாடா என்று நெற்றியைத் துடைக்க வைக்கிற வெயில்! அடிக்கிற ‘அக்னி’யில் கலந்து வரும் அக ஊதா / புற ஊதா கதிர் வெப்பன்கள், இந்த ஊதா கலர் ரிப்பன்களின் முகப் பொலிவை டிஸ்டர்ப் பண்ணி விடக்கூடாதில்லையா? அதான் இப்படி, பூலான்தேவி வேஷம்! இடம்: அலகாபாத்.

ஆதார் மாதிரி எடுத்திறக் கூடாது, கேட்டியா?


கைக்கடை திறக்க வந்த நட்சத்திரங்களை பார்க்கக் கூடிய கூட்டத்துக்கு தகவல் போனால்... இங்கும் திரண்டு வந்து விடும். நீங்கள் பார்க்கிற இந்த இரண்டு நாய்களும் லேசுப்பட்டதில்லை. நிறைய சினிமா, டிவி தொடர்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்துடன் திரிபவை. படம் பிடிக்க ஆயத்தமாகிறாரே... சார் பெயர் டாம் டாம். அப்பிராணியாக போஸ் கொடுப்பவர் ஜோ ஜோ. ஜெர்மனியின் டார்மண்ட் நகரில் நடந்த ஒரு ஷோவில் பங்கேற்க வந்த இடத்தில், திடீர் மூடு வந்து இப்படி படம் பிடிக்க உட்கார்ந்து விட்டார்கள். ஆவணப்படம் எதுவும் எடுக்கிற திட்டமிருக்குமோ...?

இயற்கை... இன்னமும் செய்யும்!


கிரானைட் குவாரி, தாது மணல், குளிர்பான நிறுவனங்களுக்காக நிலத்தடி நீர்... இப்படி இன்னும், இன்னும் எக்கச்சக்கமான வழிகளில் இயற்கையை முடிந்த மட்டும் சூறையாடிச் சுரண்டிக் கொண்டிருக்கிறோம். எந்த ஒரு வினைக்கும், அதற்குச் சரி்க்கு சமமான எதிர்வினை உண்டு என்பதுதானே இயற்கையின் நியதி? அப்புறம், புயல் வருகிறது, பூகம்பம் வருகிறது என்று புலம்பி ஆவதென்ன...? இது நேபாள பயங்கரம். 10 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர் குடித்த பயங்கர பூகம்பத்தின் சேத கோரங்களுக்கு இது ஒரு சிறிய சாட்சி. நேபாளம் - தென் மேற்குச் சீன எல்லைப்பகுதியில் மலைச்சாலையை அடியோடு நிர்மூலமாக்கி விட்டது பூகம்பத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு.

என்னய அந்த லிஸ்ட்ல சேர்த்திராதீங்க!


லையும், மலை சார்ந்த பச்சைப்பசேல் பகுதி. மலைக்குக் கீழே பரந்து விரிந்த புல்வெளி. பண்ணைத் தோட்டங்கள். செம்மறி ஆட்டுப்பண்ணைகளே அதிகம். இது பிரான்ஸ் தேசத்தின் தென்மேற்குப் பகுதியான அன்ஹாக்ஸ் கிராமம். ஆடு மேய்த்தாலே போதும்... சாப்ட்வேர் காரர்களை விடவும் அதிகச் சம்பளம் உத்தரவாதம். சுத்தமான காற்று. சுகாதாரமான சூழல். நோய் நொடிகள்... தேடிப் போனாலும் அண்டாது. அதிருக்கட்டும். படத்தைப் பாருங்க. நம்மளயும் செம்மறியாடு லிஸ்ட்டுல சேர்த்து, இருக்கிற முடியையும் பறிச்சிடுவாங்களோ... என்ற பயத்தில் தாவிக் குதித்து தள்ளி ஓடுகிறது குட்டி நாய்.

இது நம்மூரு சாமீய்ய்!


பூனைக்குட்டி பேசும்படத்தில் எல்லாமே நேஷனல்... இன்டர்நேஷனல் படங்கள்தான் வருமோ... என்று நீங்கள்  ரிட் பெட்டிஷன் போட்டு விடக்கூடாதில்லையா? ஸோ... இது நம்மூரு. தேனி மாவட்டம் போடியில் இருந்து ஜில்ஜில் மூணாறுக்குப் போகிற போடிமெட்டு மலைச்சாலையைப் பாருங்கள்... கொள்ளை அழகுதானே? மதிய உணவு முடித்து விட்டு மயங்கிக், கிறங்கிச் சரிந்து உறங்குகிற மலைப்பாம்பு மாதிரி...!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...